Thursday, December 21, 2006

போப் வாயாலேயே பொய்த்துப் போன புனித தோமையார் கதை

“நான் ஏசுவினிடத்தில் சத்தியத்தைச் சொல்லுகிறேன். நான் பொய்யுரைக்கவில்லை. புனித ஆவி என் மனச்சாட்சிக்கு நிரூபணம்”
ரோமன்ஸ் 9:1, விவிலியம்

"புனித தோமையார் (செயின்ட் தாமஸ்) அதிக பட்சம் இன்று பாகிஸ்தான் என்றழைக்கப் படும் மேற்கு இந்தியா வரைக்கும் போயிருக்கலாம். அதற்கு மேல் அவர் போனதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை. வெகுகாலம் பின்னர் தென்னிந்தியா மற்றும் பல பகுதிகளில் கிறித்தவம் பரவியது, ஆனால் கண்டிப்பாக புனித தாமஸ் அங்கு போகவில்லை", வாடிகனில் தான் சமீபத்தில் ஆற்றிய உரை ஒன்றில், போப் பெனடிக்ட் XI இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார் (பார்க்க [1], [2]).

இதைக் கேட்டு பல இந்திய திருச்சபைகள் துணுக்குற்றன. இந்த செய்திக்கு ரொம்ப விளம்பரம் தராமல் அமுக்கியும் விட்டன. இஸ்லாம் பற்றிய போப்பின் உரையை முந்திக் கொண்டு வெளியிட்ட இந்தியப் பத்திரிகைகளும், ஊடகங்களும் இந்திய வரலாறு தொடர்பான போப்பின் இந்த முக்கியமான கருத்தைப் பெரிதாக வெளியிடவே இல்லை! கேரள ஒய்.எம்.சி.ஏ. தலைவர் சன்னி பரியாரம் “போப் தெரியாமல் சொல்லிறார். மிளகு, ஏலக்காய், முந்திரி வாணிகக் கப்பல்கள் அந்தக் காலத்தில் மேற்கிலிருந்து கேரளாவிற்கு நிறைய வந்து கொண்டிருந்தன. அதில் ஒன்றில் ஏறி புனித தாமஸ் வந்தார்” என்று தன் ஆழமான சரித்திர அறிவை வெளிப்படுத்தியயுள்ளார். கேரள பாதிரியார்கள் சங்கத் தலைவர் மறைதிரு. ஸ்காரியா வர்கீஸ் போப்புக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இருக்காதா பின்னே? “புனித தோமையார் கி.பி. 52 லேயே (வாஸ்கோடகாமா இந்தியாவிற்குக் கடல் வழி கண்டுபிடிப்பதற்கு 1400 ஆண்டுகள் முன்பு) கடல் மார்க்கமாக கேரளா வந்தார். அங்கிருந்த நம்பூதிரிகள் உட்பட பல பேரை மதம் மாற்றினார். பின்னர் அப்படியே பொடி நடையாக சென்னை மயிலாப்பூர் வந்து ஏசுவின் நற்செய்தியை வழங்கினார். சின்னமலையில் வாழ்ந்தார். பக்கத்தில் இருந்த பரங்கி மலையில் சில வெறியர்களால் கொல்லப்பட்டார்” இப்படியாக தோமையார் பற்றிய நவரசங்களும் நிறைந்த ஒரு கற்பனைக் கதையை இந்தியா முழுவதும், குறிப்பாக தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் கிறிஸ்தவ மிஷநரிகள் காலம் காலமாகப் பரப்பி வந்துள்ளனர். வரலாற்று ஆதாரங்கள் படி, கிபி. 345-ல் தாமஸ் கானானியஸ் (Thomas Cananeus) என்ற வணிகர் தான் முதன்முதலில் கேரளத்தில் ஒரு சிறிய கிறிஸ்தவ சமூகத்தை ஏற்படுத்தினார். பின்னர் 14-15 ஆம் நூற்றாண்டுகளில் போர்ச்சுகீசியப் படையெடுப்பின் வன்முறைகள், கொள்ளைகளுடன் தான் கிறித்தவம் தமிழகத்தில் பெருமளவில் அறிமுகமாயிற்று. ஆனால், அதற்கு ஒரு தொன்மை வாய்ந்த வரலாறு இருப்பது போலக் காண்பிப்பதற்காக மிக நேர்த்தியாகச் செய்யப் பட்ட புரட்டு இது. இந்தப் புளுகு மூட்டையைப் போட்டு உடைத்து விட்டார் போப்!








சொல்லப் போனால் ஆதாரபூர்வமான வரலாற்று ஆய்வுகள் புனித தாமஸ் இந்திய வருகையை ஒரு போதும் ஏற்றுக் கொண்டது கிடையாது. இது பற்றி ஈஷ்வர் சரண் மிகத் தெளிவான விளக்கங்களுடன் “The Myth of St. Thomas and the Mylapore Siva Temple” என்ற நூலை எழுதியிருக்கிறார். 24 பகுதிகளைக் கொண்ட இந்த நூலில் ஆர்ச்பிஷப் அருளப்பா, ஆச்சார்யா பால், டாக்டர் தெய்வநாயகம், எஸ்.ஏ.சைமன் போன்றோருடைய புனித தோமையார் கதை பற்றிய ஒவ்வொரு பொய் வாதத்திற்கும் திட்டவட்டமான பதில் அளித்துள்ளார்.

இதன் உச்சமாக புனித தோமையரை திருவள்ளுவருடன் தொடர்பு படுத்தும் பெரிய ஊழல் 80களில் நடந்தது. தெய்வப் புலவர் திருவள்ளுவரின் குறள் “உலகப் பொதுமறை” என்று அறியப் பட்டதும் இதற்குத் தோதாகப் போயிற்று. அவர் சைவரா, வைணவரா, சமணரா என்ற உண்மையான, இலக்கியத் தனமான வாதங்களின் நடுவில் இப்படி ஒரு விஷயம் நுழைக்கப் பட்டது. “தோமையரு சாந்தோம்ல இருந்தாரு, வள்ளுவரு மயிலாப்பூர்ல. இரண்டு பேரும் கடற்கரையோரமா அப்படியே பேசிகிட்டே போவாங்க ! தோமயரு ஏசு பிரான் பத்தி வள்ளுவருக்கு சொன்னாரு, பைபிள்ள இருக்கறத அப்படியே வள்ளுவரு எழுதிப்புட்டாரு” என்று ஒரு கிறித்தவத் தமிழாசிரியர் காட்டுக் கத்தல் கத்திச் சொன்னது இன்றும் என் நினைவில் நிழலாடுகிறது ! இதற்காகப் பல வரலாற்று ஆதாரங்களைத் திரிக்கவும், புரட்டவும் தமிழ் அறிஞர் என்று அறியப் பட்ட கணேச அய்யருக்கு ரூ. 14 லட்சம் லஞ்சம் மறைதிரு. அருளப்பா குழிவினரால் வழங்கப் பட்டதும் 1986ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் (வழக்கு எண்:100087/82) அம்பலப் படுத்தப் பட்டது. தமிழரின் பண்பாட்டுப் பெட்டகமான திருக்குறளை கூசாமல் கிறிஸ்தவத்திலிருந்து காப்பியடித்தது என்று நிறுவ முயன்ற மிஷநரி கயமைத் தனம் இதில் வெளியாயிற்று. (பார்க்க: [3])

இன்று பரங்கி மலை என்று அழைக்கப் படும் இடம் 1910களில் கூட “பிருங்கி மலை” என்று அழைக்கப் பட்டதற்கான கல்வெட்டு ஆதாரம் உள்ளது. புனித தோமையார் தன் கையாலேயே உருவாக்கிய சிலுவை என்று காட்டப்படும் அழகிய சிலுவை உருவம் விஜயநகர காலத்திய தமிழர் சிற்பக்கலையுடன் வடிவமைக்கப் பட்டது என்று நிறுவப் பட்டு விட்டது (பார்க்க [4]). சாந்தோம் மாதா கோவில் சுற்றுப் புறத்தில் 11-ஆம் நூற்றாண்டு சோழர் காலக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. திருஞான சம்பந்தரின் பூம்பாவைப் பதிகத்தில்

'மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான்'

என்ற குறிப்புப் படி கடற்கரையில் இன்றைய சாந்தோம் சர்ச் இருக்கும் இடத்தில்தான் அன்றைய கபாலி கோயில் இருந்தது,16'ம் நூற்றாண்டில் (1566 ல்) இது இடிக்கப்பட்டு சர்ச் கட்டப்பட்டது என்பதற்கான பல ஆதாரங்களையும் ஈஷ்வர் சரண் தன் நூலில் தருகிறார்.








“புனித தோமையரை வெறியர்கள் ஈட்டியால் குத்திக் கொன்றனர்” என்பது இந்துக்களின் மீது வேண்டுமென்றே துவேஷத்தையும், வெறுப்பையும் உருவாக்குவதற்காகப் புனையப் பட்ட கதை என்று சென்னை ராமகிருஷ்ண மடத் துறவி சுவாமி தபஸ்யானந்தர் இது தொடர்பாக எழுதிய இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையில் குறிப்பிடுகிறார். (பார்க்க [5]). “The Legend of a Slain Saint to Stain Hinduism” என்ற அந்தக் கட்டுரையில் இவ்வளவு நூற்றாண்டுகளுக்குப் பிறகும் தோமையார் பயன்படுத்திய கைத்தடி, அவரைக் கொன்ற ஈட்டி இவையெல்லாம் செல்லரித்துப் போகாமல் இருப்பது எப்படி என்று? என்று எழுப்பிய சாதாரணக் கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை. இந்தக் கொலையைப் பற்றி ஒவ்வொரு முறையும் சொல்லும்போதும், உணர்ச்சியையும், அனுதாபத்தையும் கிளப்பி இந்துக்களை சாத்தானின் தூதுவர்கள் என்று சித்தரிக்கிறார்கள். பரங்கி மலையில் புனித தாமஸை நாமம் போட்ட அந்தணர் ஈட்டியால் குத்திக் கொல்வதாக ஒரு சித்திரம் உள்ளதாம். சைவத்தையும், வைணவத்தையும் ஒரே அடியில் சாத்தானாக்க நல்ல யுக்தி இது! இதற்கு முந்தைய புராணத்தில் தோமையாரை டோபிக்கள் கொன்றுவிட்டதாகவும் எனவேதான் அவர்கள் கால் வீங்கிவிட்டதாகவும் இந்த கால்வீக்கத்துக்கு பெயரே தோமை வீக்கம் என்றும் கதை விட்டுக் கொண்டிருந்ததாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன்.

வாடிகனிடம் இது பற்றி 1996ல் ஈஷ்வர் சரண் விசாரித்தபோது புனித தாமஸ் தொடர்பான எந்த வரலாற்று ஆவணமும் தங்களிடம் இல்லை என்று அவருக்கு வாடிகன் திருச்சபை அதிகாரபூர்வமான கடிதம் அனுப்பியது
(பார்க்க [6]). என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா அவரது ஆதாரங்களை ஏற்றுக் கொண்டு, தங்களது அடுத்த பதிப்புகளில் புனித தாமஸ் பற்றிய தகவல் வெளியாகும்போது இந்த விவரங்களும் சேர்க்கப் படும் என்று அறிவித்துள்ளது [7]. ஆனால், இந்தியாவில் புனித தோமையார் பற்றிய இந்த பொய்க்கதை பாடப் புத்தகங்களிலும், வெகுஜன ஊடகங்களிலும் ஆணியடித்தது போல பரப்பப் பட்டு விட்டது. சென்னை பற்றிய எல்லா “டூரிஸ்ட்” புத்தகங்களிலும் செயின்ட் தாமஸ் மவுன்ட், சின்னமலை இவை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்கள் என்ற பட்டியலில் இடம் பெற்று, இந்தக் கதை வரலாறாகவே சொல்லப் படுகிறது. போப் அறிக்கை வந்த நவம்பர் 22 க்கு அடுத்த வாரமே, ஜூனியர் விகடனில் (6/12/06 - பக்கம் 42) முடிந்த முடிபாய் இப்படி எழுதியிருக்கிறார்கள்:

“கிபி.52'ம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை புரிந்த ஏசுவின் நேரடிச்சீடர் புனித தோமையார் இந்த மலையில் (St.Thomos Mount) வைத்துதான் கிபி.72'ம் ஆண்டு வெறியன் ஒருவனால் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டார்”

“வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி” என்று போப்பே இந்தக் கதை பொய் என்று சொல்லியும், இந்த வரலாற்றுத் தவறுக்கு மன்னிப்புக் கோரும் வாய்ப்பாக இதைக் கருதாமல் போப் சொன்னது தவறு என்று சொல்லும் போக்கு தான் இங்குள்ள மிஷநரிகளிடம் இருக்கிறது, இது துரதிர்ஷ்டவசமானது.

தோமையார் மரணத்தை மட்டுமல்ல, ஏசுவின் மரணம், ரத்தம் இவற்றைக் குறியீடுகளாக்கும் இறையியலிலேயே அதற்கு ஒரு கொலையாளியைக் காரணமாக்கும் துவேஷம் கலந்திருக்கிறது. இந்து ஆன்மிக நோக்கில் பார்த்தால் இது இன்னும் தெளிவாகத் தெரிகிறது. இது தொடர்பாக சுவாமி ரங்க நாதானந்தா “நாங்கள் போற்றும் ஏசு” (“The Christ We adore”, Swami Ranganathananda, Sri Ramakrishna Math) என்னும் நூலில் கூறுகிறார் :

“தெய்வ அவதாரங்களில் ஒருவர் என்று இந்துக்கள் கண்டுணர்ந்து போற்றத் தகுந்த பல அம்சங்கள் ஏசு கிறிஸ்துவின் வாழ்விலும், உபதேசங்களிலும் உள்ளன. அவரது வாழ்வு இனிமையும், மென்மையும், துயரமும், சோகமும் இழைந்து ஆன்மீகத்தால் நிரம்பியது. ஆனால், இந்துக்களாகிய நமக்கு அவரது முடிவு என்பது ஒரு சோகம், அவ்வளவு தான். ஆன்மிகம் ததும்பும் அழகுணர்ச்சி எதுவும் அதில் இல்லை. நமது தெய்வ அவதாரங்களான ஸ்ரீராமன், ஸ்ரீகிருஷ்ணன் இவர்களது வாழ்க்கை முடிவுகளும் பெரும் சோகம் ததும்பியதாகவே இருந்தன. ஆனால் அந்த முடிவுகள் மீது நாம் சமயத்தைக் கட்டமைக்கவில்லை. இந்த மரணங்களை இயற்கை நியதியாக ஏற்றுக்கொண்டு அவர்களது வாழ்வின் அற்புதமான தருணங்களின் மீதே நம் சமயம் கட்டப் பட்டிருக்கிறது. ஏசு என்பவர் சிலுவையில் அறையப் படாமலே இருந்தாலும், அவரது வாழ்வும், உபதேசமும் இந்துக்களுக்குப் பிரியமானதாகவே இருக்கும். ஆனால் கிறிஸ்தவ மதத்திற்கும், மேற்குலகிற்கும், இந்த சிலுவையில் அறைதல் என்ற துன்பியல் நிகழ்வு இல்லாமல், “ரத்தம் தோய்ந்த” தியாகம் இல்லாமல், ஏசுவின் வாழ்க்கை சாதாரணமானதாகவும், சக்தியற்றதாகவுமே தோற்றமளிக்கிறது. கிரேக்க துன்பியல் காவியங்களின் மரபில் தோய்ந்த மேற்குலகம் கிறிஸ்தவத்திற்கு இந்தத் தன்மை அளித்தது போலும்! ஆனால் இந்து மனத்திற்கோ வாழ்வு முழுவதும், உலகம் முழுவதுமே பிரபஞ்ச வடிவிலான இறைவனின் தெய்வ லீலை என்பதாகவே தோன்றுகிறது”.

போப்பே சொன்னபிறகு, இனிமேலும், கொலைக்கதை கலந்த இத்தகைய துவேஷப் பிரசாரம் தேவை தானா? இந்திய கிறிஸ்தவ போதகர்கள் தான் சொல்ல வேண்டும்.

20 comments:

Anonymous said...

மிக அருமையான ஆவணம் இது. வாழ்த்துக்கள் அய்யா! அப்படியே கடற்கரை அருகே இருந்த பழைய கபாலி கோயிலில் பாடப்பட்ட அருணகிரிநாதரின் இந்தத் திருமயிலைத் திருப்புகழ்ப் பாடலையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கயிலைப் பதியரன் முருகோனே
கடலக்கரைதிரை அருகே - சூழ்
மயிலைப் பதிதனில் உறைவோனே

மகிமைக் கடியவர் பெருமாளே!


அசைக்க முடியாத ஆதாரம் இது. அருணகிரிநாதர் காலத்திற்குப் பின்னர் 1566'ம் ஆண்டு இன்றைய சாந்தோம் இருக்கும் இடத்தில் இருந்த கபாலிச்சுரம் ஆலயம் கிறுத்துவ மதவெறியர்களால் உடைக்கப்பட்டுப் பின்னர் தற்போது இருக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டது.
- முருகானந்தம்

Anonymous said...

புனித தாமஸ் விவகாரம் உண்மை அல்ல என்றூ கேட்டிருக்கிறேன். இவ்வளவு தெளிவாக அடஹி விளக்கியதற்கு நன்றி.

// ஏசு என்பவர் சிலுவையில் அறையப் படாமலே இருந்தாலும், அவரது வாழ்வும், உபதேசமும் இந்துக்களுக்குப் பிரியமானதாகவே இருக்கும். //

அருமையான கருத்து. ராமகிருஷ்ணரின் வழி வந்த சுவாமி ஆன்மீகத்தில் எவ்வளவு பக்குவம் அடைந்தவர் என்பதை இந்தச் சொற்கள் பறைசாற்றுகின்றன.

நன்றி.

Krishna (#24094743) said...

ஜடாயு அய்யா: மிகப் பெரும்பாலோனோருக்குத் தெரியாத பல விஷயங்களை துகிலுரித்துக் காட்டியுள்ளீர்கள். இந்த மிஷனரி கூத்துக்கள் எப்போதையும் விட இப்போது 'அன்னை'யின் பரிபூரண ஆசியுடன் ஹிந்து மத 'மாஸ்' வழிபாட்டுத் தலங்களை 'புனிதப்' படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே - பாடத்தான் தோன்றுகிறது. அற்புதமான பதிவு.

Anonymous said...

ஜடாயு ஐயா,

போப் சொன்னதை நீங்கள் கூர்ந்து கவனித்தீர்களா? அவர் தென்னிந்தியாவிற்கு வரவில்லை ஆனால் பாகிஸ்தானுக்குப் போயிருக்கலாம் என்று சொல்லியிருக்கிறார் ! இதன் பொருள் என்ன?

தென்னிந்தியாவில் தாமஸ் பொய்க்கதைக்கு வேலை முடிந்து விட்டது. மதமாற்ற அறுவடை ஓரளவுக்கு செய்தாயிற்று. அதனால் இந்தப் பொய்க்கதையின் களத்தைக் கொஞ்சம் வடமேற்கே தள்ளுகிறார். அங்கே செல்லுபடியாகுமா என்று பார்க்கிறார். அவ்வளவு தான்.

இயேசு வாழ்ந்த அந்த காலகட்டத்தில் பாரசீகம், அரேபியா, மத்தியக் கிழக்கு நாடுகள், ஆப்கானிஸ்தான், பாரதம் இவை எல்லாவற்றையுமே ஒரு விதமாக "இந்தியா" (அல்லது கிழக்கு) என்பதாக அழைக்கும் ஒரு பழக்கம் இருந்தது. இந்தக் குழப்பத்தை வைத்து இந்த எல்லா நாடுகளிலும் தாமஸ் வந்தார் என்று கதை அடிக்க வாய்ப்பு இருக்கிறது.

எதுவானாலும், இதற்குப் பிறகு இந்தியாவில் இந்த வரலாற்றுப் பொய் தொடரக் கூடாது.

Anonymous said...

Dear Mr. Jadayu,

The existence of St. Thomas in itself is a matter of dispute among Historians (just like the historicity of Christ himself). Many myriad stories are told about his life and times which are even named as "Thomas Romances"!

That is another matter. Still he is a much revered figure in Christian religion, just like many revered Hindu sages whose historicity can be doubted. The historical disputes are the least concern for a true worshipper, you as a Hindu know that more than anyone else.

But the legend of "slain saint" was probably done in bad taste deliberately, to paint Hindus "Satanic" as you have rightly observed. At least this part of the legend should be removed, since this martyrdom is not historical.

- Benjamin, Chennai

கூத்தாடி said...

ஜடாயு
இதே விசயத்தை ஒரு இரண்டு வருடம் முன்பு நான் ஒரு விவாதத்தில் சொல்லி ,அதற்கான ஆதாடங்கள் அப்போது வலுவானதாக இல்லை என்பதால் இணையப் பக்கங்களில் தேட ஆரம்பித்தேன் ,படித்து பல விசயங்களைப் புரிந்தும் கொண்டேன் .ஆனால் இந்த மாதிரியான பொய்யான நம்பிக்கைகள் எங்கு தான் இல்லை என்று விட்டு விட்டேன் ,நம் புராணக் கதைகளில் பாதிக்கு மேல் இப்படித் தானே ? உதாரணம் "ராம ஜென்ம பூமி" ..அது ஒரு வெற்று நம்ப்பிக்கையோ அது மாதிரி இதுவும் ஒரு முட்டாள்தனமான நம்ப்பிக்கை ..அதுவும் அரசியல் இதுவும் அரசியல்..

ஆனால் ஒரு கேள்வி ,படித்த கிருத்துவர்கள் இதை நம்புவதில்லை என்று எண்ணியிருந்தேன் ..நிஜமாகவே நம்புகிறார்களா என்ன ? மதப்பிரச்சாகர்களைக் கேட்க வில்லை ..

வரலாறு என்பதே ஒரு வைகையில் பொய் தான் ..எது சரியான வரலாறு ..நமக்கு சாதகமானது வரலாறு இல்லை எனில் பொய் என்றப் பார்வையில் தான் பார்க்கிறோம்

ஜடாயு said...

முருகானந்தம், கங்காதரன் நன்றி.

// மதமாற்ற அறுவடை ஓரளவுக்கு செய்தாயிற்று. அதனால் இந்தப் பொய்க்கதையின் களத்தைக் கொஞ்சம் வடமேற்கே தள்ளுகிறார். அங்கே செல்லுபடியாகுமா என்று பார்க்கிறார். அவ்வளவு தான். //

அனானி, இது கொஞ்சம் ஓவராக இருக்கிறது - You are reading too much into Pope's words!

முதலில் இருந்தே வாடிகன் இந்த விஷயத்தில் நியூட்ரல் ஆகத் தான் இருந்திருக்கிறது. இப்போது வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்கள். ஈஷ்வர் சரண் நூலில் கூட வாடிகனிலிருந்து அவருக்கு வந்த கடிதத்தைக் கொடுத்திருக்கிறார்.

பல கடந்த காலத் தவறுகளுக்கு வாடிகன் மன்னிப்பு கேட்டிருக்கிறது. அதனால் இதில் ஏதும் சூது இருப்பதாகத் தோன்றவில்லை.

ஜடாயு said...

// That is another matter. Still he is a much revered figure in Christian religion, just like many revered Hindu sages whose historicity can be doubted. The historical disputes are the least concern for a true worshipper, you as a Hindu know that more than anyone else. //

பெஞ்சமின், நன்றி. தாமஸ் புனிதர் எனதற்கோ ஏசுவின் நேரடி சீடர் என்பதற்கோ வரலாற்று ஆதாரங்களை இங்கு பேச வரவில்லை. சமய அளவில் அதற்கு நம்பிக்கை மட்டும் போதும்.

ராமன், கிருஷ்ணன் போன்ற அவதாரங்களின் வாழ்க்கையும் முழுதும் சரித்திரம் என்று நான் சொல்லவில்லை, இவற்றில் இருக்கும் சில விஷயங்கள் கண்டிப்பாக சரித்திரத்தின் அடிப்படையில் இருக்கலாம், அவ்வளவு தான்.

// But the legend of "slain saint" was probably done in bad taste deliberately, to paint Hindus "Satanic" as you have rightly observed. At least this part of the legend should be removed, since this martyrdom is not historical. //

சரியாகச் சொன்னீர்கள். அவரது இந்திய வருகை மற்றும் இங்கு கொலையுண்டது பற்றிய உள்நோக்கம் கொண்ட விஷயங்கள் வரலாறு போல இங்கே பரப்பப் படுவதைத் தான் கண்டிக்கிறேன்.

ஜடாயு said...

// ஆனால் இந்த மாதிரியான பொய்யான நம்பிக்கைகள் எங்கு தான் இல்லை என்று விட்டு விட்டேன் ,நம் புராணக் கதைகளில் பாதிக்கு மேல் இப்படித் தானே ? //

கூத்தாடி, இங்கு ஒரு பெரிய வித்தியாசம் உள்ளது.

புராணங்களில் உள்ளது எல்லாமே அமானுஷ்யம். அது சரித்திரம் என்று விவேகானந்தர் உட்பட யாருமே வாதிடவில்லை. பல ஆன்மீகவாதிகள் இவற்றைக் குறீயீடுகளாகத் தான் பார்த்தனர் - "முப்புரம் செற்றனன் என்பர் மூடர்கள்" என்று திருமூலர் சொன்னது போல.

ஆனால், இந்த விஷயம் பைபிளில் உள்ள ஒரு நீதிக்கதை போல அல்ல, ஒரு "நம்ப்பிக்கையால அல்ல" இந்தியாவில் கிறிஸ்தவம் பரவிய வரலாறாக, கி.பி. 52 என்றெல்லாம் வருடக் கணக்கு கொடுத்து மறுபடி சொல்லப் படுகிறது!

// உதாரணம் "ராம ஜென்ம பூமி" ..அது ஒரு வெற்று நம்ப்பிக்கையோ அது மாதிரி இதுவும் ஒரு முட்டாள்தனமான நம்ப்பிக்கை ..அதுவும் அரசியல் இதுவும் அரசியல்.. //

ராமஜன்ம பூமி வாதத்தில் உறுதியாக எடுத்து வைக்கப் பட்ட சரித்திர ஆதாரம் அங்கு மிகப் புனிதம் வாய்ந்த கோவில் இருந்தது, பாபரின் தளபதியால் இடிக்கப் பட்டது என்பது தான். "ராமர் அங்கு பிறந்தார்" என்பதல்ல! பிரசினையை திசை திருப்புவதற்காக இந்து விரோதிகள் செய்த குயுக்தி தான் "அவர் பிறந்ததற்கு என்ன ஆதாரம்?" என்ற சம்பந்தமில்லாத கேள்விகள் எல்லாம்.

இரண்டாவது நம்பிக்கை. முதலாவதற்கு நூற்றுக் கணக்கான தொல்லியல் மற்றும் இலக்கிய ஆதாரங்கள் உள்ளன. நூல் ஆதாரங்கள் ஹிந்தி, அரபு, பாரசீகம் எல்லா மொழிகளிலும் உள்ளன.

எல்லாவற்றையும் ஒரே குப்பிக்குள் அடைப்பது தவறு அல்லவா?

// ஆனால் ஒரு கேள்வி ,படித்த கிருத்துவர்கள் இதை நம்புவதில்லை என்று எண்ணியிருந்தேன் ..நிஜமாகவே நம்புகிறார்களா என்ன ? //

ஆம், நானும் படித்த கிறித்தவர்கள் நம்ப மாட்டார்கள் என்றே நினைக்கிறேன்.

// மதப்பிரச்சாகர்களைக் கேட்க வில்லை ..//

அவர்கள் நம்பவில்லை என்றால் இந்தப் பொய் சொல்வதை நிறுத்த வேண்டும்.

ஜடாயு said...

// இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே - பாடத்தான் தோன்றுகிறது. அற்புதமான பதிவு. //

மிக்க நன்றி கிருஷ்ணா.

அரவிந்தன் நீலகண்டன் said...

படித்த கிறிஸ்தவர்கள் நம்புவதில்லை என்பது தவறு. படித்த கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல இப்போது இந்துக்களே இந்த கூத்தை நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். குறிப்பாக போலியாக தன்னை மதச்சார்பற்றதாக காட்ட நினைக்கும் அஃறிணைகள். எடுத்துக்காட்டாக ஜூனியர்விகடன். விரைவில் பாட நூல்களில் இது வரலாற்று தகவலாகவும் இடம் பெறலாம். தாமஸ் சிலுவையை வடித்தாராம். முட்டாள்தனமான கற்பனை. அண்மையில் ஒரு மலையாள எழுத்தாளர் அருமையான குறுநாவல் எழுதியிருந்தார். அதில் ஏசுலொரு நாடோ டிக் கொல்லனை சந்திக்கிறார். அந்தக் கொல்லனின் நாடோ டி சமுதாயம் ஏசுவை அறைய ஆணி செய்து கொடுத்ததாகக் கூறப்பட்டு விரட்டியடிக்கப்பட்டு வதைக்கப்பட்டு சுரண்டப்படுகிற சமுதாயம். அந்த கொல்லனிடம் ஏசு கூறுகிறார்: "தொலைவில் எங்காவது ஒரு தேசம் இருக்கலாம். தீட்சண்யமுடைய ஒரு கடவுள் அல்ல பல கடவுள்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாது வாழ்ந்துவரும் தேசம். ஆகவே மனிதர் தங்களுக்குள்ளே வேட்டையாடுவதோ கொல்லுவதோ இல்லாத தேசம். ஹீதேன்களும் பேகன்களும் பூமியில் மீதமிருக்கிற அந்த தேசத்தில் மனதில் சந்தேகத்துடன் என்னிடம் விடை பெற்றுக்கொண்டுள்ள தோமாஸ் அலைந்து கொண்டிருப்பான். என் சிலுவை அணையப்போகிறது. டோ ம்பா, இனி நான் அவனைத் தேடி போகிறேன்.சந்தேகத்தில்தானே விவேகத்தின் வேர்கள் இருக்கின்றன." (மலையாள மூலம்: ஆனந்த் தமிழில்: டி.ஜி.ஆர்.வசந்தகுமார்., நான்காவது ஆணி காலச்சுவடு மார்ச்-ஏப்ரல் 2001)

ஆனந்தின் நாவலும் சரி சர்ச் கூறும் தோமையின் 'வரலாறும்' சரி புனைவுகள்தாம். சர்ச்சின் புனைவு வரலாறு என எவ்வித ஆதாரமும் இன்றி முன்வைக்கப்படுகிறது. இந்த தோமையின் வேர்கள் இனவெறி மனப்பான்மை கொண்ட மூலங்களிலிருந்து பெறப்பட்டவை (கறுப்பான இந்தியாவிற்கு கர்த்தரின் ஒளியை கொண்டு வரச் செல்லும் தோமையை புகழும் பழைய கிறித்தவ பாடல்களில் இந்தியர்களின் தோல் நிறத்தை விமர்சிக்கும் வெள்ளை மேன்மைத்தன்மை இருப்பதை பலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.) மாறாக ஆனந்த் முன்வைக்கும் தோமை தேடுதலுடன் பாரதம் வருகிறான். Most probably ஒரு இந்து குருவின் பாதங்களில் அமர்ந்து ஏசுவால் தீர்த்திட முடியாமல் தவிக்கும் தன்னை அழித்து தானாகிட. ஒருமுறை செமினரி நண்பர் ஒருவர் தோமை புனைவை வரலாற்று உண்மையாக கருதுகிறவரிடம் சொன்னேன்: "சரி தோமை வந்ததாக நீங்கள் நம்பினாலும் ஏன் அவர் இங்கே மதம் பரப்ப வந்ததாக கொள்ள வேண்டும்? ஒரு வேளை ஹுவான் சுவாங் போலவோ பாஹியான் போலவோ சத்திய தேடலுடன் யோகம் பயின்று ஞானம் பெற்றிட இங்கே வந்திருக்கலாம் அல்லவா?" சில நாட்களுக்கு பின் அவரை சந்தித்த போது தோமை குறித்து பேச்சு வந்தபோது அவரே தோமை இங்கே வந்திருக்க சாத்தியம் இல்லை என்றார். :) ஆனந்த்தின் குறு நாவலில் மற்றொரு உண்மையும் அடங்கியுள்ளது. Gnostic Gospels வேதாந்த-பௌத்த தாக்கம் அதிகமாக கொண்டவை. கிறிஸ்தவ இயக்கத்தின் வேர்களில் இந்திய சமயத் தாக்கம் இருந்தமைக்கான தெளிவான ஆதாரங்கள் அவை. இவற்றில் முக்கியமானதாக கருதப்படுவது Thomas Gospel என்பதாகும். ஆக தாமஸ் இந்தியாவுடன் இணைத்து பேசப்படுவதற்கான மூல காரணம் அவர் (அல்லது அந்த கற்பனை பாத்திரம்) இந்திய ஞானத்துடன் சீடராக தொடர்பு கொண்டிருந்த காரணத்திலாக இருக்கலாம். பின்னாளில் ரோம சர்வாதிகாரம் மற்றும் சாம்ராஜ்ஜியவாதத்தின் ஆதிக்க கருவியாக கிறிஸ்தவம் மாறியபோது தோமையின் பாரதத்துடனான சீடத்தன்மை உறவு, மதமாற்ற பிரச்சாரகனின் உறவானதாக கொண்டதொரு கதையாடல் உருவாகியிருக்கலாம். இந்திய சூழலில் அந்தண வெறுப்புவாதத்துடன் இந்த கதையாடலை இணைத்தது சர்ச்சிக்கே உரிய வெறுப்பியல் மேதமை.

ஜடாயு said...

நீலகண்டன்,

// "தொலைவில் எங்காவது ஒரு தேசம் இருக்கலாம். தீட்சண்யமுடைய ஒரு கடவுள் அல்ல பல கடவுள்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாது வாழ்ந்துவரும் தேசம். ஆகவே மனிதர் தங்களுக்குள்ளே வேட்டையாடுவதோ கொல்லுவதோ இல்லாத தேசம். ஹீதேன்களும் பேகன்களும் பூமியில் மீதமிருக்கிற அந்த தேசத்தில் மனதில் சந்தேகத்துடன் என்னிடம் விடை பெற்றுக்கொண்டுள்ள தோமாஸ் அலைந்து கொண்டிருப்பான். என் சிலுவை அணையப்போகிறது. டோ ம்பா, இனி நான் அவனைத் தேடி போகிறேன்.சந்தேகத்தில்தானே விவேகத்தின் வேர்கள் இருக்கின்றன."//

அருமையான வரிகள் இவை.
இந்த நாவல் பற்றிய தகவலுக்கு நன்றி.

// இவற்றில் முக்கியமானதாக கருதப்படுவது Thomas Gospel என்பதாகும். ஆக தாமஸ் இந்தியாவுடன் இணைத்து பேசப்படுவதற்கான மூல காரணம் அவர் (அல்லது அந்த கற்பனை பாத்திரம்) இந்திய ஞானத்துடன் சீடராக தொடர்பு கொண்டிருந்த காரணத்திலாக இருக்கலாம் //

நானும் இது பற்றிப் படித்திருக்கிறேன். Christianity : A Man-made religion indebted to India என்ற கொய்ன்ராட் எல்ஸ்ட் அவர்களின் கட்டுரையில்.

Krishna (#24094743) said...

//இன்று பரங்கி மலை என்று அழைக்கப் படும் இடம் 1910களில் கூட “பிருங்கி மலை” என்று அழைக்கப் பட்டதற்கான கல்வெட்டு ஆதாரம் உள்ளது//
இது மிகவும் உண்மை. சமஸ்க்ருதத்தில் 'ப்ருங்க' என்றால் 'மான்' என்று அர்த்தம். இந்த பகுதியே மான்கள் நிரம்ப வாழ்ந்த/வாழ்கின்ற இடம். இன்றளவும், மவுண்ட் மற்றும் கிண்டி, அதன் சுற்றுப் புறத்தில் மான்களை வெகு எளிதாகக் காணக் கிடைக்கலாம். பெரும்பாலானவை இப்போது ராஜ்பவன் உள்ளடக்கிய காட்டிற்குள் சுருங்கி வாழப் பழகிவிட்டன.

Anonymous said...

இயேசு என்று ஒருவர் பிறந்தார் என்பதும், இருந்தார் என்பதுமே கேள்விக்குறியாக மேற்கத்திய மக்களால் இப்போது ஆராயப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த வேளையில்( உதாரணம்: தி டாவின்ஸி கோட் போன்ற பல புத்தகங்கள்) ஏசுவுக்கு சீடர்கள் இருந்தனர் என்பது போலவும் அவர்களுள் ஒருவர் தமிழகம் வந்தார் என்பது போலவும் புனையப்பபடுவது கற்பனையின் உச்சகட்டம். படிப்பறிவில்லாத பாமரன்கூட இதை ஏற்கமாட்டான். அப்படியிருக்க இந்த படித்த மேதாவிகளும், மிஷனரி என்னும் நிறுவனத்தின் ஊழியர்களும் தொடர்ந்து இந்த கட்டுக்கதையை பரப்பி வருவது ஏன் என்று அறிவுள்ள ஒவ்வொரு ஹிந்துவும்(பகுத்தறிவுவாதியும்) யோசிக்க வேண்டும். அப்படி யோசிக்க உதவும் இந்த கட்டுரை வரவேற்கத்தக்கது. பல ஆதாரங்களுடன் இதை விளக்க முற்பட்ட உங்களுக்கு எமது பாராட்டுக்கள். இது போன்ற வரலாற்று உண்மைகளை கூறும் கட்டுரைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

ஜடாயு said...

// அப்படியிருக்க இந்த படித்த மேதாவிகளும், மிஷனரி என்னும் நிறுவனத்தின் ஊழியர்களும் தொடர்ந்து இந்த கட்டுக்கதையை பரப்பி வருவது ஏன் என்று அறிவுள்ள ஒவ்வொரு ஹிந்துவும்(பகுத்தறிவுவாதியும்) யோசிக்க வேண்டும் //

நன்று சொன்னீர்கள் திருநாவுக்கரசு அவர்களே.

தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

தர்மம் காக்கும் தங்கள் பதிவுகள் மேலும் வளர வாழ்த்துக்கள்.

ஜடாயு said...

// இது மிகவும் உண்மை. சமஸ்க்ருதத்தில் 'ப்ருங்க' என்றால் 'மான்' என்று அர்த்தம். இந்த பகுதியே மான்கள் நிரம்ப வாழ்ந்த/வாழ்கின்ற இடம்.//

கிருஷ்ணா, இது புதுசா இருக்கே! நான் கொடுத்த சுட்டிகளின் படி பிருங்கி முனிவருடன் தொடர்புடைய தல புராணத்தால் இந்தப் பெயர் வந்தது இன்று இருந்தது. இந்த ஊரில் இன்னும் பழமையான சிவன் கோவில் உள்ளது. 'பிருங்கி மலை' எனூ கூறூம் கல்வெட்டின் புகைப் படமும் இருந்தது.

// இன்றளவும், மவுண்ட் மற்றும் கிண்டி, அதன் சுற்றுப் புறத்தில் மான்களை வெகு எளிதாகக் காணக் கிடைக்கலாம் //

உண்மை. ஆனால் பிருங்கி மலை என்ற பெயர் இதனால் வந்திருக்கிறது என்பதற்கு ஆதாரம் இல்லை என்றே தோன்றுகிறது.

ஜடாயு said...

ஜெயா டி.வி.யில் வரும் புகழ்பெற்ற நிகழ்ச்சி "ஜாக்பாட்". குஷ்பு நடத்தி மகளிர் பங்கு பெறும் கேம் ஷோ. இன்றூ (24-12-2006) கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் எபிசோட். எல்லா கேள்விகளும் கிறிஸ்தவத்தைப் பற்றித் தான். கிறித்த மதப் பரப்புத் திட்டங்களில் உள்ள "புதிய" ஏற்பாடுகளில் ஒன்று போலும் இது!

பரவாயில்லை. ஆனால் நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இந்த புனித தாமஸ் சமாசாரத்தை சுமார் 8 நிமிடங்களுக்கு சொன்னார்கள். சென்னை சாந்தோம் சர்ச் அவரது கல்லறைத் தோட்டத்தின் மீது கட்டப் பட்டது உட்பட !

இந்தப் பொய் வரலாறு மீண்டும் மீண்டும் எப்படி வலிந்து பரப்பப் படுகிறது என்பதற்கு இன்று ஒரு நேரடி உதாரணம் ! பொய் என்று தெளிவாகத் தெரிந்த பின்னும் இதைத் தொடரும் மிஷநரித் தனம் - என்னத்தைச் சொல்ல?

VSK said...

பதிவின் தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு மட்டுமே இந்தப் பின்னூட்டத்தை இடுகிறேன்.

தயவு செய்து, மற்ற மதங்களின் செயல்களைக் குறைத்து மதிப்பிடும், பழிக்கும் பதிவுகளை இடாமல் இருக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

"அவனை முதலில் நிறுத்தச் சொல்" எனும் வழக்கமான பல்லவியைப் பாடாமல், அனைவரும்....அனத்து மதத்தினரும்... இதனைச் செய்தால் மட்டுமே போதும்.... மத நல்லிணக்கம் வளர!

இந்தியா போன்ற பல மதங்களும், பல்வேறு காலகட்டத்தில் ஆளுகை புரிந்த நாடுகளில் ஒவ்வொரு சமயங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றிருப்பது ஒரு தவிர்க்கப்பட முடியாத செயல் என்பதை அனைவரும் புரிந்து, இவற்றைப் பெருந்தன்மையுடன் ஒதுக்க வேண்டுமாய் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்மணம் நிர்வாகம் சொல்லியிருப்பது போல, இவையெல்லாம் நம்மிடமிருந்தே நிகழவேண்டும்.

இந்தப் பின்னூட்டம் இன்னும் சில பதிவுகளிலும் வரும்!

அனைவருக்கும் நன்றி.

புத்தாண்டு வாழ்த்துகள்!

கால்கரி சிவா said...

ஜடாயு, ஒரு நல்ல பதிவு. பொய்யை மீண்டும் மீண்டும் சொல்லி உணமையாக்க முனவர்களின் மத்தியில் உங்களைப் போன்ற உண்மை விளம்பிகளின் சேவை மிகத்தேவை.

ஜடாயு said...

// பதிவின் தலைப்பை மட்டும் பார்த்துவிட்டு மட்டுமே இந்தப் பின்னூட்டத்தை இடுகிறேன். //

எச்.கே ஐயா, இது நியாயம் இல்லை.

// தயவு செய்து, மற்ற மதங்களின் செயல்களைக் குறைத்து மதிப்பிடும், பழிக்கும் பதிவுகளை இடாமல் இருக்குமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.//

இதில் பழிப்பு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. நான் எழுதிய எல்லா விவரங்களுக்கும் ஆதாரங்கள் அளித்திருக்கிறேன்.

புனித தாமஸ், ஏசு கிறிஸ்து இவர்களை அவமதிப்பது போல எதுவும் கூறவில்லை. இந்தப் புரட்டைப் பரப்பும் ஆட்களை, நிறுவனங்களைத் தான் சாடி இருக்கிறேன்.

// இந்தியா போன்ற பல மதங்களும், பல்வேறு காலகட்டத்தில் ஆளுகை புரிந்த நாடுகளில் ஒவ்வொரு சமயங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றிருப்பது ஒரு தவிர்க்கப்பட முடியாத செயல் என்பதை அனைவரும் புரிந்து, இவற்றைப் பெருந்தன்மையுடன் ஒதுக்க வேண்டுமாய் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். //

ஐயா, இது ஒரு அபாயகரமான பொதுமைப் படுத்துதல் என்று நினைக்கிறேன். இத்தகைய பொதுப் புத்தியால் இந்து சமயத்திற்கும், இந்திய தேசியத்திற்கும் கேடுகள் தான் ஏற்படிருக்கின்றன.