Friday, March 23, 2007

சுவாமி விவேகானந்தருக்கு எதிராக இஸ்லாமிய ஃபத்வா வருமா?

… இந்த உணர்வு நிலையில் தற்செயலாகச் சென்று விழுவதில் பெரும் அபாயம் உள்ளது என்று யோகி சொல்லுகிறான். பெரும்பாலானவர்கள் விஷயத்தில் மூளை முழுவதுமாக மிக மோசமாக பாதிக்கப் படும் அபாயம் உள்ளது. அதனால், தவறாமல் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருந்தாலும் இந்த பரவச நிலையைப் பற்றிப் புரிந்து கொள்ளாமல் அதில் தற்செயலாகத் தடுக்கி விழுந்தவர்கள் இருளில் தடுமாறுபவர்களாக இருப்பதை நீங்கள் பார்க்கலாம். அவர்களிடம் அறிவாற்றலோடு கூடவே சில நேர்த்தியாகத் தோன்றும் ஆனால் பெரும் தீமை தரும் மூடநம்பிக்கைகளும் இருக்கும். நரம்புத் தளர்ச்சியால் ஏற்படும் பலவிதமான மனப்பிராந்திகளுக்கு அவர்கள் ஆட்படுவார்கள்.

ஒருநாள் கேப்ரியேல் தேவதை ஒரு குகையில் தம்மிடம் வந்ததாகவும், தன்னை ஹரக் என்ற தேவலோகக் குதிரையில் சுவர்க்கத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் முகமது கூறினார். இதை வைத்துக் கொண்டு, பின்னர் முகமது சில ஆச்சரியகரமான உண்மைகளைப் பற்றிப் பேசினார். நீங்கள் குரானைப் படித்தால் அதில் உள்ள பெரும்பாலான ஆச்சரியகரமான உண்மைகள் மூடநம்பிக்கைகளுடன் கலந்திருப்பதைப் பார்க்கலாம். அந்த மனிதர் உணர்ச்சி பெற்றார், வாஸ்தவம் தான், ஆனால் அந்த உணர்ச்சி தடுக்கி விழுந்ததால் ஏற்பட்டது. அவர் பயிற்சியடைந்த யோகி அல்லர், தான் என்ன செய்கிறோம் என்றே அவர் அறிந்திருக்கவில்லை. உலகத்திற்கு முகமது செய்த நன்மையை நினைத்துப் பாருங்கள், அவரது வெறித்தனத்தால் செய்யப் பட்ட மிகப்பெரும் தீமைகளையும் எண்ணிப் பாருங்கள். அவரது போதனைகளால் படுகொலை செய்யப் பட்ட லட்சக் கணக்கானவர்களை எண்ணிப் பாருங்கள்: குழந்தைகளை இழந்த தாய்மார்கள், அநாதைகளாக்கப் பட்ட குழந்தைகள், முழுவதுமாக அழிக்கப் பட்ட தேசங்கள், லட்ச லட்சமாகக் கொல்லப் பட்ட மக்கள் ! [1]

யோக உளவியல் அடிப்படையில் முகமது நபியின் வஹி எனப்படும் பரவச அனுபங்களை இன்று விளக்க முயலும் எல்லா அறிஞர்களுக்கும் ஒருவகையில் முன்னோடி சுவாமி விவேகானந்தர் தான் என்று எண்ணத் தோன்றுகிறது. இதே கருத்தைத் தான் பேராரியர் கொய்ன்ராட் எல்ஸ்ட், டாக்டர் டேவிட் ஃப்ராலி இவர்கள் ஆங்கிலத்திலும், நேசகுமார் தமிழிலும் மிக விரிவாக விளக்கியிருக்கின்றனர்.

இஸ்லாமின் சமயக் கோட்பாடாகவே ஆகி விட்ட மட்டற்ற மதவெறி சார்ந்த வன்முறை உணர்வையும் சுவாமி விவேகானந்தர் சுட்டிக் காட்டுகிறார்.

.. பல முகமதியர்கள் இந்த விஷயத்தில் மிக வக்கிரமானவர்கள், மிக குழுவெறி கொண்டவர்கள். அவர்களது மந்திரம்: ஒரே கடவுள், முகமது அவரது இறைத்தூதர். இது அல்லாத மற்ற விஷயங்கள் எல்லாம் மோசமானவை மட்டுமல்ல, உடனே அழித்து ஒழிக்கப் படவேண்டியவை. ஒரு கண நேர முன்னறிவிப்பில் இதை முழுவதும் நம்பாத ஒவ்வோர் ஆணும், பெண்ணும், கொல்லப் படவேண்டும். இந்த வழிபாட்டு முறை இல்லாத மற்ற எல்லாம் உடனடியாக உடைத்து நொறுக்கப் படவேண்டும். இது தவிர வேறு எதையாவது கற்பிக்கும் எல்லா புத்தகங்களும் எரிக்கப் படவேண்டும். பசிபிக்கில் இருந்து அட்லாண்டிக் வரை 500 வருடங்கள் உலகம் முழுவதும் ரத்த ஆறு ஓடியது: அது தான் முகமதியம்! [2]




ஆனால் சுவாமிஜி குருட்டுத்தனமான இஸ்லாமிய வெறுப்பாளர் அல்ல (கொய்ன்ராய்ட் எல்ஸ்டும், நேசகுமாரும் கூட இவ்வகையானவர்களே என்பது என் கருத்து). பொதுவாக ஒப்பிடுகையில், இஸ்லாம் என்ற தங்கள் குழுவுக்குள் இணைந்தவர்களை முஸ்லீம்கள் எப்படி சமமாகவும், சகோதரத்துவத்துடனும் நடத்தினர் என்பதை சுவாமி சுட்டிக் காட்டுகிறார். புகழ்ந்துரைக்கவும் செய்கிறார். வெள்ளை அமெரிக்கர்கள் கறுப்பர்களை நடத்தும் விதத்தை இஸ்லாமியரின் குழு சகோதரத்துவத்தோடு ஒப்பிட்டுக் காட்டவும் சுவாமிஜி தயங்கவில்லை.

.. மற்ற சமயங்கள் போலன்றி ஒரு மனிதன் முகமதியன் ஆன உடனேயே இஸ்லாம் அவனை திறந்த கரங்களுடன் வரவேற்கிறது. உங்கள் அமெரிக்க செவ்விந்தியர்களில் ஒருவன் முகமதியன் ஆகிவிட்டால் துருக்கி சுல்தான் அவன் கூட உட்கார்ந்து சாப்பிடுவதற்குக் கூட ஆட்சேபம் இருக்காது. அவனுக்கு மூளையும் இருந்தால், எந்த நிலையிலும் அவனுக்குத் தடங்கல்கள் இருக்காது. ஆனால் இந்த தேசத்தில் வெள்ளையனும், கருப்பனும் அருகருகே மண்டியிட்டு பிரார்த்தனை செய்யும் எந்த தேவாலயத்தையும் நான் பார்த்ததில்லை. [5.1]

தனது முஸ்லீம் நண்பரும் சீடருமான முகமது ஸர்ஃபராஜ் ஹுசைன் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் இதே கருத்தை மீண்டும் கூறுகிறார் -

… சமய உலகின் முடிந்த முடிபான தத்துவம் அத்வைதம். ஏனென்றால் அத்வைதம் என்ற நிலையில் இருந்து தான் ஒருவர் எல்லா சமயங்களையும், எல்லா இனங்களையும் அன்போடு நோக்க முடியும். வருங்காலத்தின் அறிவொளி பெற்ற மனித சமுதாயத்தின் சமயம் இதுவே என்று நான் கருதுகிறேன். இந்த தத்துவத்தை மற்ற எல்லா இனங்களுக்கும் முன்பு முதலில் கண்டடைந்த பெருமை இந்துக்களைச் சாரும், அவர்கள் யூத, அரபிய இனங்களை விடப் பழமையானவர்கள் என்பதால். ஆனால் மனிதகுலம் முழுவதையும் தன் ஆன்மா போலக் கருதும் நடைமுறை அத்வைதம் அதன் முழுமையான அளவில் இந்துக்களால் வளர்க்கப் படவில்லை. என் அனுபவத்தில், இந்த சமத்துவம் என்ற விஷயத்தை ஓரளவு பாராட்டத் தக்க வகையில் அணுகிய ஒரு மதம் இருக்குமென்றால், அது இஸ்லாம். [3.1]

வேதாந்த மனமும், இஸ்லாம் உடலும் கொண்டு, இந்தக் குழப்பங்கள் மற்றும் மோதல்களில் இருந்து மீண்டெழும் புகழ்மிக்க, அசைக்க முடியாத வருங்கால பாரதம்.. இதை என் மனக்கண்ணில் பார்க்கிறேன். [3.2]

இந்த சந்தர்ப்பத்தில் "இஸ்லாமிய உடலும்" என்று கூறுகையில் இந்த குழு சார்ந்த சகோதரத்துவம் தேசிய அளவிலான சகோதரத்துவமாக மாற வேண்டும் என்பதையே சுவாமிஜி குறிக்கிறார் என்பது புலனாகும்.

மதவெறியர்களான இஸ்லாமியர்களுக்கு நடுவிலும் இந்த வெறியில்லாத, ஆன்மிகத்தில் ஈடுபட்ட மனிதர்கள் இருந்தனர் என்பதை சுவாமிஜி மறுக்கவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரையில் இவர்களை இப்படி மாற்றியது இந்து ஆன்மிகத்தின் வலிமை தான் என்றும் அவர் கூறுகிறார் -

(சீடர்): இறுதியில் இந்தியா தன்னை வென்றவர்களையும் வென்றுவிடுமா??

ஆம். கருத்துக்களின் உலகில். இன்று இங்கிலாந்திடமும் வாள் இருக்கிறது, பௌதிக உலகம் என்கிற வாள், நம்மைத் தோற்கடித்த முகம்மதியர்கள் போலவே. ஆனால் மாமன்னர் அக்பர் நடைமுறையில் ஒரு இந்துவாகவே ஆகிவிட்டார். கற்றறிந்த முகமதியர்களும், சூபிக்களும் இந்துக்களிடமிருந்து வேற்றுமை காண முடியாதவர்களாகவே உள்ளனர். இவர்களில் பலர் பசு மாமிசத்தைத் துறந்து விட்டவர்கள், அவர்களது நடைமுறைகள் அனைத்தும் நம்மைப் போலவே உள்ளன. அவர்களது சிந்தனைகள் முழுதும் நம் தர்மத்தினுடையவையே நிரம்பியிருக்கின்றன. [4]

சுவாஜியின் லட்சியம் புற அளவிலான சமயக் கோட்பாடுகள் அனைத்தையும் கடந்த அத்வைத வேதாந்தம் தான். இதை மீண்டும் மீண்டும் அவர் உறுதி செய்கிறார் -

வேதங்களைக் கடந்த, பைபிளைக் கடந்த, குரானைக் கடந்த ஓர் இடத்திற்கு மனிதகுலத்தை இட்டுச் செல்லவே நாம் விழைகிறோம். ஆனால் இதைச் செய்வதற்கு வேதங்களுக்கும், பைபிளுக்கும், குரானுக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தியாக வேண்டும். ஒருமை என்ற ஒரே மதத்தின் பல்வேறு மாறுபட்ட வெளிப்பாடுகளே இந்த மதங்கள் எல்லாம் என்று மனிதகுலத்திற்குக் கற்றுக் கொடுக்க வெண்டும். தனக்குப் பொருத்தமான வழியை ஒவ்வொருவரும் தேர்ந்தெடுக்க அது வழிசெய்யும். [5.2]

மொத்தத்தில் சுவாமிஜி இஸ்லாத்தின் சில அம்சங்களைப் புகழ்ந்தும், அதே சமயம் அதன் அங்கமாகவே ஆகி விட்ட குருட்டு மதவெறி மற்றும் ஜிகாத் வன்முறை மீது மிகக் காட்டமான விமரிசனங்களை வைத்தும் இருக்கிறார்.
குறிப்பாக, முகமது நபியைப் பற்றிக் கூறியுள்ளவற்றைப் படிக்கையில் சிலகாலம் முன்பு இஸ்லாமியர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பைக் கிளப்பிய டேனிஷ் கார்ட்டூன்கள் சுவாமிஜியின் கருத்தை விட மென்மையானத் தான் இருந்தன என்று தான் தோன்றும்! ஆனால், அந்த கார்ட்டூன் கலைஞரையும் அதை வெளியிட்ட பத்திரிகையை அதிபர்களையும் கூட கொன்று ஒழிக்க வேண்டும் என்று உலகெங்கும் முல்லாக்கள் ஃபத்வாக்கள் விட்டனர். பல தூதரகங்கள் தாக்கப்பட்டு, பொது சொத்துக்கள் நாசம் செய்யப் பட்டன. இந்தியாவிலும் கடும் கண்டன ஊர்வலங்கள் நடந்தன.

இஸ்லாம் பற்றிய சுவாமிஜியின் கருத்துக்கள் இவை. இந்திய தேசிய எழுச்சியின் நாயகரும், சென்ற நூற்றாண்டின் தலைசிறந்த உலக சிந்தனையாளர்களில் ஒருவருமான சுவாமிஜியைப் பற்றிய இஸ்லாமிய சமயக் கருத்து என்னவாக இருக்கும்? சுவாமி விவேகானந்தருக்கு எதிராக இஸ்லாமிய ஃபத்வா வருமா?

பின்குறிப்பு:

இங்கே எடுத்தாளப் பட்டுள்ள மேற்கோள்கள் அனைத்தும் அத்வைத ஆசிரமம், கல்கத்தா வெளியிட்டுள்ள "சுவாமி விவேகானந்தரின் முழுப் படைப்புக்கள்" நூலில் இருந்து நேரடியாக மொழிபெயர்க்கப் பட்டவை.

[1] : Volume 1 - Raja Yoga - Dhyana and Samadhi
[2] : Volume 4 - Lectures and Discourses - The Great Teachers of the World
[3.1],[3.2] : Volume 6 - Epistles Second Series - CXLII
[4] : Volume 5 / Interviews / << INDIA AND ENGLAND
[5.1],[5.2] : Volume 2 - Practical Vedanta and other lectures - The Way to the realization of Universal religion

9 comments:

Anonymous said...

சுவாமி விவேகானந்தருக்கு எதிராக இஸ்லாமிய ஃபத்வா வருமா?

Are you asking for one :).Dont be surprised if any muslim fanatic issues one to kill him, thinking that he is alive.

Anonymous said...

//Are you asking for one :).Dont be surprised if any muslim fanatic issues one to kill him, thinking that he is alive. //

repeataeeeeeeeee

Anonymous said...

ஜடாயு, பல விவேகானந்தர் மேற்கோள்கள் தந்து இந்தப் பதிவை எழுதியிருக்கிறீர்கள். நன்று. அவர் கருத்துக்களை மிக ஆழமாகப் படித்திருக்கிறீர்கள் என்பது தெரிகிறது.

விவேகானந்தர் மறைந்துவிட்டார்.
ஸோ ஃபத்வா வருமா என்ற கேள்விக்கு அர்த்தம் என்ன?
முஸ்லிம்கள் அவரையும் தூற்றத் துணிவார்களா என்று கேட்கிறீர்களோ?

Anonymous said...

THanks Jadayu.

Very Interesting to know that Swami Vivekananda was the first to propose "Mohamed was a crack" theory.

ஆதி said...

ஜடாயு,

தகுந்த ஆதாரங்களுடன் விளக்க மாக எழுதி இருக்கிறீர்கள். இதுபோன்ற கட்டுரைகளை இன்னும் நிறைய எழுதுங்கள்.

அரவிந்தன் சார் போல நீங்களும் நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

Anonymous said...

I am shocked to read all this. Could this be true? If it is true, then .... I am sorry for our islamiya sagothararkal.

ஐயன் காளி said...

நாற்ற குணமுடை துருக்கரிடையேயும் நற்குணம் தேடிக்கூறியவராய் வீரத்துறவி விளங்குவது விஞ்ஞானத்திற்கு விழி திறக்கத் துவங்கிய வெள்ளையரிடையே. யூரோப்பியரின் மதத்தின் தாழ்வை வெள்ளையரே வெறுக்கும் மதத்தோடு அருள்முகத்தார் சுட்டி, வேறுபாடு அதிகம் இலை என விளக்கச் சொன்ன விடயம் இது.

அகவை முப்பத்தொன்பதற்குள் அகிலம் அளந்த அவதாரத்திற்கு அல்லா எனும் பெயரை வைத்து அடிமைகளை அகிலம் முழுக்கத் தேடும் அழுக்கு மனத்தாரின் அகவறுமையும் தெரியும்.

பொல்லாக் கூட்டத்திற்கும் பொருந்திவருவது அவரவர் குழுவிற்கு அணுக்கமாய் இருப்பதே. கழுதைப்புலி கூட்டத்திலும் கணக்கற்று காணலாம் கட்டுப்பாடு தேடும் ஒற்றுமை உணர்வை.

அம்மிருகக்கூட்டத்தோடு, அருள்தரு சிவத்தின் அவதாரமும் தன் அளப்பரிய கருணையால் அல்லாவை வணங்கும் அல்லவற்றில் தேடிய நல்லகுணத்திலும் நவிலும்படி சொல்ல நல்ல வேறுபாடு ஏதும் இல்லை.

மனிதரை மற்றவர் தன்னவர் எனப்பிரிக்கும் தருக்கம் ஒன்றே தர்மமானவர்க்குள்ளும் உன்னதம் தேடும் உயர் ஆன்மீகத்தின் அன்பு மனமே அனைவருக்கும் தெரிவது. இந்த மனமே இந்துப் பண்பு. இதுவே
இந்தியப் பண்பு.

காபா கட்டிடத்தை கடவுளாய் கொண்டு கற்காலத்து கயமை வணங்கும் கழுதைப்புலிகளின் மாண்பு ஆழியுள் சர்க்கரை. இக்காலத்திலும், எக்காலத்திலும்.

ஐயன் காளி said...

நற்கருத்து நெற்மணிகளை விளைநிலங்களில் இட்டாலே விளைச்சல் கிட்டும். பூமியை அரிக்கும் கடலாய் மனிதத்தை அழிக்கும் மார்க்கம் பிறந்த மண்ணும் பாலை. அவர் குணமும் பாலை.

Anonymous said...

யார் எதிரி ?

இந்து மத்துக்கு இஸ்லாமும், கிறித்துவமுமே முதல் /அ/ முக்கிய எதிரி என்று சொல்பவர்களுக்கு சில கேள்விகள்

முன்னுரை

நான் சரித்திரத்தை குறை கூறவில்லை. ஒப்புகிறேன். நான் அவ்ரங்கசீபுக்கோ, மற்ற மதங்களுக்கோ சப்பை கட்டு கட்ட இங்கு வரவில்லை

எனினும் இஸ்லாமே இந்துக்களுக்கு முதல் எதிரி, எனும் வாதத்தை மறுக்கிறேன் ... ஆகவே மதச்சண்டைக்கு விருப்ப்மோ, நேரமோ இல்லையென்றாலம், உண்மை நிலை அறிய சில கேள்விகளை கேட்கவேண்டியுள்ளது

கேள்விகள் :


1. நாம் சரித்திரத்தில் படிப்பது என்ன ? அவுரங்கசீப் இந்தியாவில் பல பாகங்களை ஆண்டான். பல ஊர்களில் கண்மூடித்தனமாய் மதமாற்றம் செய்தான். அல்லவா ?

அவுரங்கசீப் காலத்தில் நடந்த கட்டாய மத மாற்றத்தை விட இன்று இந்தியாவில் அதிக மதமாற்றம் நடந்துவிடவில்லை... பெரும் அளாவில் கட்டாய மதமாற்றம் நடக்கவும் இயலாது

அவுரங்கசீப் வாழ்ந்து சுமார் 300 வருடங்களுக்கு பின்னும் .. சமீபத்திய காலம் வரை, 1950களிலும், இந்தியாவில், இந்து மதம் பெரும்பான்மை மதமாக இருந்தது ... அது எப்படி ?

அவ்ரங்கசீப் (மாலிக்காபூர்.. சரித்திரத்தில் இடம் பெற்ற ..பெறாத இன்ன பிற இஸ்லாமிய மன்னர்கள் ) காலத்தில் பிழைத்த இந்து மதம் எப்படி (எதனால்) பிழைத்தது ??

அன்று பிழைத்த இந்து மத்துக்கு .. இன்று சுதத்திர இந்தியாவில், 21ஆம் நூற்றாண்டில், இஸ்லாம் [அல்லது கிறித்துவம்] அப்படி என்ன ஊறு விளைவிக்க முடியும் ?

2. இன்று இருப்பதை காட்டிலும், கிறித்துவத்துக்கு, வெள்ளையர் ஆட்சியில் செல்வாக்கும் சலுகையும் அதிகம். எனினும் வெள்ளையரின் முழு ஆட்சியை சுமார் 200 இந்து மதம் எப்படி தாங்கியது ?

இந்த 200 ~ 250 ஆண்டுகளிக் ஏன் இந்தியர் எல்லோரும் கிறித்துவர் ஆகிவிடவில்லை ? அல்லது இந்து மதம் ஏன் அழிந்துவிடவில்லை ?

1950களில் கூட இந்துக்கள் எப்படி 80%க்கும் மேல் இருந்தனர் ?

3. கடந்த 10 ... 20 ஆண்டுகளில், தமிழ் நாட்டில் எத்துனை தமிழ் இந்துக்கள் இன்னபிற மத்ததவரால் கொல்லப் படடு அல்லது தாக்கப் பட்டு இருக்கிறார்கள் ?. இத்தகைய கேஸ்கள் எத்துனை கேஸ்கள் கோர்ட்டில் இருக்கின்றன ?

அதேசமையம் எத்துனை விவாகறத்து [இந்து ஆண் vs இந்து பெண்] கேஸ்கள் கோர்ட்டில் நடக்கின்றன ? கோர்ட்டில் தங்கிஇருக்கின்றன ?

யாருமே மத வெறியால் தாக்கப்பட / கொல்லப்படவில்லை என்று வாதிக்க வரவில்லை. இரண்டு பட்டியல்களையும் [இஸ்லாம் Vs இந்து, மற்றும் இந்து Vs இந்து, ஆகிய இரண்டு பட்டியல்களையும்] இடுங்கள் என்றே கூறுகிறேன்

இஸ்லாம் 1000 வருடம் முன்பு இங்கே வந்தது ... 100 வருடம் முன்பு இதை செய்தது, துருக்கியல் இது நடந்தது, 20 வருடம் முன்பு கிறித்துவம் அதை செய்தது என்று சொல்லி சொல்லி சாகும் வேளையில், நம் வீட்டில், அதாவது இந்துக்களில் வீட்டில், நித்தம் நித்தம் என்ன நடக்கிறது என்று சற்றே சிந்திக்கவும்

இன்று இந்து குழந்தைகளை விட இந்து முதியோரே அனாதைகளாய் நிற்கின்றனர்

- முதியோர் இல்லங்கள் நிறம்பி வழிகின்றன

- மருமகள் விரட்டிவிட்டாள் என்று தெருவில் நிற்போர் ...

- அனாதைகளான அருமை பெற்றோர்,

- அனாதைகளாய் போன நேற்றைய இந்தியா....

இவர்களில் இந்துக்களே அதிகம்
Family courtக்கு ஒரு முறை விஜயம் செய்யுங்கள். இந்து கேஸ்கள் அத்துனை, முஸ்லீம் கேஸ்கள் எத்துனை என்று தெரியும்...

சிந்திப்பீர்...செயல் படுவீர்

நான் எந்த மதத்துக்கும் சப்பை கட்டு கட்ட வரவில்லை. எனக்கு தென்படும் உண்மை நிலையை எழுதுகிறேன்

நான் ஒரு இந்து, அதனால் தான் இதை எழுதுகிறேன்

ஞாயமான, ஆபாசமற்ற வாத்தை எதிர் நோக்கி நிற்கிறேன்

நண்பன்
விநாயக்