Thursday, April 05, 2007

ஸ்ரீகுருஜி கோல்வல்கர் - 1

இந்து சமுதாயம் முழுவதும் ஒன்றிணைந்து, சென்ற வருடம் துவங்கி மார்ச்-2007 வரை ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் இரண்டாவது தலைவர் ஸ்ரீகுருஜி கோல்வல்கர் நூற்றாண்டு விழாவை "சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்க விழாவாக" நாட்டின் பல பகுதிகளில் அனுசரித்தது. லட்சக் கணக்கான மக்கள் பங்கு கொண்ட ஆயிரக்கணக்கான சேவை முகாம்கள், கருத்தரங்குகள், எல்லா சாதி மக்களும் வேற்றுமை மறந்து தங்கள் இந்து அடையாளத்தை முன்னிறுத்தி கொண்டாடிய சமூக விழாக்கள் இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் பரவலான வெகுஜன் விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கின்றது.

கோல்வல்கர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட ஆர்.எஸ்.எஸ் மாநில அளவில் ஏற்படுத்திய குழுவில் இசைஞானி இளையராஜா, கவிஞர் வாலி, தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் ஆர். அன்பழகன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன்,காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் காந்தி, , தமிழக விவசாயிகள் சங்கத்தலைவர் இ.ஆர்.குமாரசாமி, கோவை சிறுதுளி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் வனிதா மோகன், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து, பிரபல எழுத்தாளர் பிரேமா நந்தகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் ஆர். எஸ். எஸ்ஸையும் கோல்வல்கரையும் நன்கு அறிந்து கொண்டவர்கள். அதனால்தான் கோல்வல்கர் நூற்றாண்டு விழாக் குழுவில் மகிழ்ச்சியோடு இடம்பெற்றார்கள்.குழந்தை முருகன்கள், பின்னணியில் குருஜி


தீவிரவாதம், பொருளாதார முன்னேற்ற சவால்கள், சாதிப்பூசல்கள் போன்ற பல பிரசினைகள் நாட்டு மக்களை அச்சுறுத்தி வரும் இந்தச் சூழலில் இந்திய தேசியம், இந்துத்துவம், சமுதாய ஒற்றுமை இந்தக் கருத்துக்களுக்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒரு மாபெரும் தலைவரின் நினைவும், கருத்துக்களும் இந்த சவால்களை நாம் உறுதியுடன் எதிர்கொள்ள உதவும். அதனால், இவை வெறும் கொண்டாட்டங்கள் மட்டும் அல்ல.
குருஜி ராமகிருஷ்ண மடத்தில் தங்கி பயின்று ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடி சீடரான சுவாமி அகண்டானந்தரிடத்தில் சன்னியாச தீட்சை பெற்றவர். தமது குருவின் ஆணைப்படியும், முழு அனுமதியுடனும், ஆசியுடனுமே அவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணைந்தார். குருஜி கோல்வல்கரின் ஆன்மிக சிந்தனையும், பரந்த உள்ளவும், சேவை மனப்பான்மையும் அவரது குருநாதராலேயே பாராட்டப் பட்டது.
மதுரையில் நடந்த கோல்வல்கரின் 50 வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தலைமை தாங்கினார். அப்போது பேசிய முத்துராமலிங்க தேவர் கோல்வல்கரை தன்னலம் கருதாத மாபெரும் தலைவர் என்று வர்ணித்தார்.
சுதந்திரமான சிந்தனையுடன் பலரும் வியக்கும் விஞ்ஞானியாக திகழ்ந்த ஜி.டி.நாயுடு கோல்வல்கருக்கு மிகவும் நெருங்கிய நண்பராக விளங்கினார், கோல்வல்கரை கோவைக்கு அழைத்து பல நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார் ஜி.டி. நாயுடு. எனக்கு கடவுளிடத்திலும், மற்ற விஷயங்களிலும் நம்பிக்கை இல்லை ஆனால் கோல்வல்கரை நம்புகிறேன். அவரது நாமம் இந்த பாரத நாட்டை காக்கும் என்று நம்புகிறேன் என்று கோல்வல்கரை பற்றி ஜி.டி. நாயுடு கூறியிருக்கிறார்.
1973ல் கோல்வல்கர் மறைந்த போது நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத அவருக்கு நாடாளுமன்றத்தில் அஞ்சலி செழுத்தப்பட்டது. அப்போது பேசிய பிரதமர் திருமதி இந்திரா காந்தி ஸ்ரீகோல்வல்கர் தேசிய வாழ்வில் தனது தனித்தன்மை வாய்ந்த ஆற்றலினாலும், ஈடுபாட்டின் தீவிரத்தினாலும் மதிப்புக்குரிய நிலையை எய்தினார் என்று புகழ்ந்துரைத்தார்.
ஸ்ரீ குருஜி கோல்வல்கர் இந்து சாம்ராஜ்ஜியத்தின் பிரதமர் என்று தமிழ் இலக்கிய உலகில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்த தீபம் நா.பார்த்தசாரதி குறிப்பிடுகிறார். பிரபல எழுத்தாளர் தமிழ்வாணன் கோல்வல்கரை இரண்டாவது காந்தி என்று புகழ்ந்துள்ளார். கவியோகி சுத்தானந்த பாரதியார் கோல்வல்கர் மறைந்தபோது காபி ராகத்தில் ஒரு இரங்கற்பாவையே வடித்தார்.
திண்ணையில் புதுவை சரவணன் எழுதிய குருஜி கோல்வல்கர் - சில தகவல்கள், காந்தம் போல் எல்லோரையும் கவர்ந்தவர் கோல்வல்கர் ஆகிய கட்டுரைகளில் ஸ்ரீகுருஜி பற்றிய பல அருமையான தகவல்கள் உள்ளன.

இத்தகைய மாபெரும் தேசியத் தலைவர் பற்றியும் அவரது உரைகள், எழுத்துக்களில் உணர்த்திய தேசிய, இந்துத்துவக் கருத்தியல் பற்றியும் சில தவறான அவதூறுகள் இந்து விரோதிகளால் கூறப்படுகின்றன. அது பற்றி... அடுத்த பதிவில்.

10 comments:

dondu(#11168674346665545885) said...

ராஜாவனஜ் மற்றும் செந்தழல் ரவி அவர்கள் ஸ்ரீகுருஜி கோல்வல்கரைப் பற்றி இட்ட பதிவுகளில் நான் வைத்த பின்னூட்டத்தின் நகல் இதோ.

"//இவனுக்கு கம்யூனிஸம் ஏன் அபாயமாகத் தெரிய வேண்டும்? ஏன் இன்று வரை தோழர் ஸ்டாலின் மேல் வெறுப்பை உமிழ்கிறார்கள்? . ஹிஹி - நம்ம ஈரோட்டுக் கிழவன் இவர்களின் தேசிய நாயகனை செருப்பால் அடித்ததற்கே இவர்களுக்கு இன்னிக்கு வரை 'எங்கோ' எரிகிறதே.... இவர்களின் சர்வதேசிய நாயகனான ஹிட்லரை அவன் கோட்டைக்குள்ளேயே சென்று அவன் மென்னியை முறித்த பாட்டாளி வர்க்கத்தின் படைத்தலைவன் தோழர் ஸ்டாலின் மேல் வெறுப்பைக் கொட்டுவதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. உலகமே பாஸிஸத்தின் வெற்றியைக் கண்டு திகைத்து நின்ற வேளையில் பாட்டாளி வர்க்கத்தின் செம்படை தங்கள் வர்க்க இயல்பான வீரத்தை காட்டி மனிதகுலத்தின் எதிரிகளை முறியடித்தார்களே.. அது தான் இவர்களுக்கு கம்யூனிஸம் என்றாலே 'எங்கோ' மிளகாய் சொருகியது போல் இருக்கிறது.//
அப்படீன்னா உங்க மாண்புமிகு தலைவர், லட்சக்கணக்கிலே சொந்த நாட்டு மக்களையே குலக் என்று கூறி கொலை செய்வித்த ஸ்டாலினும் ஹிட்லரும் போட்ட ஒப்பந்தத்தை பத்தி ஏதாவது அறிவீர்களா? ஹிட்லரும் ஸ்டாலினுமா போலந்து நாட்டையே பிரிச்சு பங்கு போட்டுக் கொண்டார்களே அதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுதான் கம்யூனிசத்தின் வர்க்க வீரமா?

ஹிட்லர் பறிச்சதையாவது போலந்துக்கு யுத்தத்துக்கு அப்புறமா திருப்பிக் கொடுத்துட்டாங்களே, ஆனால் ஸ்டாலின் பறிச்சது இன்னிக்கு வரைக்கும் எள்ளுதானே. அந்த ஸ்டாலினா உங்கள் ஆதர்சத் தலைவர்?

இந்திய கம்யூனிஸ்டுகளையே எடுத்துக்குங்க. 1941 வரை பிரிட்டிஷாரை எதிர்த்தாங்க. அந்த ஆண்டு உக்ரேனை ஹிட்லர் ஆக்கிரமிச்சதும் தங்கள் எஜமானன் ஸ்டாலினுக்காக இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு விரோதியானதை அறிவீர்களா? அதே போல 1962-லே சீனாவை கண்டிக்க வக்கு இல்லாமல் நின்னாங்களே அது பத்தி ஏதாவது கருத்து?

இது பத்தியெல்லாம் நான் உங்களோட நேரில பேசினப்போ உடனே கம்யூனிஸ்டுகள் மேலும் உங்களுக்கு விமரிசனம் இருப்பதாகக் கூறினீர்கள். அதை சற்று எலாபொரேட் செய்ய முடியுமா?

மேலும், 1945 வரைக்கும் ஜப்பானோட ஒப்பந்தம் போட்டு அதுக்கெதிரா சண்டை போடாம அது தோற்கும் நேரத்தில் அதனோட தீவுகளைப் பறித்து கொண்டானே அந்த ஸ்டாலின் அதப்பத்தி என்ன சொல்லப் போறீங்க?

நீங்களும் ஆர்.எஸ்.எஸ்ஸிலே இருந்தவர்தானே. அப்ப நீங்களும் அவங்களுக்காக பேசியிருப்பீங்கத்தானே? அதே போல உங்களோட கம்யூனிச மயக்கம் தெளிஞ்சதும் நீங்க என்ன எழுதப் போறீங்க என்பதையும் பிழைத்துக் கிடந்தால் பார்க்காமலா போகப் போகிறேன்".

அன்புடன்,
டோண்டு ராகவன்

ஜடாயு said...

// ஹிட்லரும் ஸ்டாலினுமா போலந்து நாட்டையே பிரிச்சு பங்கு போட்டுக் கொண்டார்களே அதை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதுதான் கம்யூனிசத்தின் வர்க்க வீரமா? //

டோண்டு, சரியான கேள்வி. இது பற்றி 1980கள் இறுதியில் எல்லா ரஷ்ய "முரசு"களூமே வால்யூம்களாக செய்தி வெளியிட்டன. இந்த காலகட்டத்தில் வந்த ஸ்புட்னிக் இதழ்களில் இது வெட்ட வெளிச்சமாக்கப் பட்டது.

இன்று ஸ்டாலின் பக்தர்கள் புல்லரிப்பது போல ஒன்றுமே நடக்கவில்லை. இது தான் உண்மை.

சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி.

அரவிந்தன் நீலகண்டன் said...

ஜடாயு ஹிட்லரின் இனவெறிக்கு சற்றும் குறையாத வெறுப்பு போலந்து நாட்டு மக்களிடம் ஸ்டாலினுக்கு இருந்தது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க குருஜிக்கு வருகிறேன். அண்மைக்கால பாரதத்தின் வரலாற்றில் ஒரு அன்புள்ளமும் பரந்த மனப்பாங்கும் கொண்ட தலைவர்களில் ஒருவர் குருஜி. சீனர்களின் துரோகப்படையெடுப்பின் போது கம்யூனிச பிரியர் நேருவுக்கு இது வேண்டிய பாடம்தான் என பலர் குதுகாலித்தபோது, நேரு அரசுக்கு இந்த நெருக்கடியின் போது முழு ஒத்துழைப்பை நல்கவேண்டும் என கூறி ('வயம் பஞ்சாதிகம் சதம்') ஸ்வயம் சேவகர்களை களமிறக்கினார் குருஜி. பாரத இராணுவத்துக்கு அவர்கள் ஆற்றிய சேவை அபாரமாக இருந்தது. எந்த நேரு ஆர்.எஸ்.எஸ் கொடி பறக்க ஒரு இஞ்ச் நிலம் கூட என் அரசு அனுமதிக்காது என முழங்கினாரோ அதே நேரு ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்களை குடியரசு தின ஊர்வலத்தில் சிறப்பு அழைப்பாளிகளாக அணிவகுத்திட அழைத்தார். இராணுவமல்லாத பிரிவின் அணிவகுப்புகளில் சிறப்பாக இருந்ததற்காக அவர்கள் பரிசும் பெற்றனர். தீண்டாமை சாதியத்தை அழித்திடுவதில் குருஜி எடுத்துக்கொண்ட மகா அக்கறை அபரிமிதமானது. வாழ்வனைத்துமே தேசத்திற்கு அர்ப்பணித்த வேள்வி ஆகுதியாக வாழ்ந்த அம்மகானின் பெருமைகளை பதிவாக எழுதுவதற்கும் ஒரு புண்ணியம் செய்திருக்க வேண்டும். செய்திருக்கிறீர்கள் வணங்குகிறேன்.

கங்காதரன் said...

குருஜி கோல்வல்கர் பற்றிய பல தகவல்களைத் தந்ததற்கு மிக நன்றி ஜடாயு. சரவணன் கட்டுரைகள் இரண்டுமே மிக நன்றாக இருந்தன.

கோபால் said...

// தீவிரவாதம், பொருளாதார முன்னேற்ற சவால்கள், சாதிப்பூசல்கள் போன்ற பல பிரசினைகள் நாட்டு மக்களை அச்சுறுத்தி வரும் இந்தச் சூழலில் இந்திய தேசியம், இந்துத்துவம், சமுதாய ஒற்றுமை இந்தக் கருத்துக்களுக்காகத் தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒரு மாபெரும் தலைவரின் நினைவும், கருத்துக்களும் இந்த சவால்களை நாம் உறுதியுடன் எதிர்கொள்ள உதவும். //

முற்றிலும் உண்மை. குருஜி அவர்களின் தேசிய சிந்தனையுள்ள கருத்துக்களை நாடு முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டும்.

ஜடாயு said...

// வாழ்வனைத்துமே தேசத்திற்கு அர்ப்பணித்த வேள்வி ஆகுதியாக வாழ்ந்த அம்மகானின் பெருமைகளை பதிவாக எழுதுவதற்கும் ஒரு புண்ணியம் செய்திருக்க வேண்டும் //

ஆமாம் அரவிந்தன். சுவாமி விவேகானந்தர் தன் வாழ்நாளில் இருமுறை பாரத நாடு முழுவதையும் சுற்றி வந்தார். குருஜி சங்கத்தின் தலைவரான பின் 20-25 வருடங்கள் எத்தனையோ முறை நாடு முழுவதையும் சுற்றி வந்து எல்லா தரப்பு மக்களிடமும் கலந்து பழகினார் என்று படித்திருக்கிறேன்.

மக்களுக்காக, மக்களுடனே வாழ்ந்த மகாயோகி அவர்.

நம்நாடு said...

ஐயா,

தங்களின் இந்த அற்புதமான பதிவை கண்டு மனம் மிகவும் மகிழ்கிறது. குருஜியின் தியாக மனப்பான்மையில் ஒரு சிறு துளியாவது நம் இளைய சமுதாயத்திற்கு ஏற்குமானால் நம் தேசம் மட்டற்ற வளர்ச்சியும் கலாசார எழுச்சியும் பெறும் என்பதில் கொஞ்சமும் ஐயமில்லை.

Anonymous said...

சப்-சகாரா பாலைவனப்பகுதி குழந்தைகளை விட ஊட்டச் சத்து குறைவாக உட்கொள்ளும் குழந்தைகள் ஒரு பக்கம், புதிய பொருளாதாரக் கொள்ளையால் வாழ்விழந்த விவசாயிகள், நெசவாளிகள் ஒரு பக்கம், FDIயினால் பாதிப்படைந்த சிறு, குறு வணிகர்கள் ஒரு பக்கம், SEZஆல் நிலம் இழந்து நிற்கும் விவசாயிகளும்விவசாயக் கூலிகளும் ஒரு பக்கம்... உணவு தானிய இறக்குமதியால் பாதிப்படைந்த ஏழைமக்கள் ஒரு பக்கம்இப்படி நாட்டின் பெரும்பான்மையான மக்களைத் தாக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகளை கிடையில் போட்டு விட்டு செத்துப் போன இந்தக் E.V.Ramaswamy கிழவனைத் தூக்கி மனையில் வைத்து கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர் இந்த மிருகங்கள்.

பெரியார் திரைப்படத்துக்கு 90 Lakhs!

If he is your father you can give money....

Yes Exactly Matches the words ....

Publish this and answer ur opinion....

Sengappa Konar.
Edaiyar palayam, Kovai

Reason said...

It looks like the RSS is co-opting members of non-BJP political parties and social organizations in its mission. It need not rely only on BJP for a political voice for its social missions.

The BJP is matching the rest in family politics and OBC casteist politics. The opinion poll results from UP need not be accurate, but the trends that could lead to a total wipe out of both BJP and congress in India's largest state are undeniable.

We may not have even an excuse of a national political party.

Should RSS form a political party with discipline, well-defined rules, inner-party democracy, and without casteist and family politics?

gajapathi s/o valayapathi said...

//
If he is your father you can give money....
//

Exactly, They do not know who is their father. Thats why they need a common Father!! So, EV Rascal Naiakker is unanimously chosen in one of the DK mahanadu.