Friday, October 27, 2006

கீதை உலகளாவிய மானேஜ்மென்ட் வழிகாட்டி: பிஸினஸ்வீக்

உலகப்புகழ் பெற்ற வணிக இதழ் பிஸின்ஸ்வீக் இந்த வாரம் Karma Capitalism என்ற இந்தக் கட்டுரையை வெளியிட்டுள்ளது.

..Times have changed since Gordon Gekko quoted Sun Tzu in the 1987 movie Wall Street. Has the Bhagavad Gita replaced The Art of War as the hip new ancient Eastern management text?

இப்படித் தொடங்கும் இந்தக் கட்டுரை சென்னையைச் சேர்ந்த சுவாமி பார்த்தசாரதியின் உரைகளைக் கேட்கத் திரண்டிருந்த நியூயார்க் நகரின் பெரும் பிஸினள் தலைகளைப் பட்டியலிடுகிறது.

உடலையும், மனத்தையும் கட்டுக்குள் வைத்திருக்குமாறு ஞானத்தை நம்முள் வளரச் செய்ய வேண்டும் என்று இந்த 80-வயது பெரியவர் கூறுவது,

"விசையுறு பந்தினைப் போல் உள்ளம் வேண்டிய படி செல்லும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன், நித்தம் நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன்"

என்னும் பாரதியின் வரிகளை நினைவுபடுத்துகிறது.

.. the lanky 80-year old scribbled the secrets to business success ("concentration, consistency, and cooperation") on an easel pad. The executives sat rapt. "You can't succeed in business unless you develop the intellect, which controls the mind and body," the swami said in his mellow baritone.

பெரிய வணிக நிறுவனங்கள் பாரத தத்துவ சிந்தனையின் கருத்துக்களிலிருந்து உந்துதல் பெற பெரும் ஆர்வம் காட்டி வருவதாகவும், கீதை போன்ற இந்து மத நூல்களிலிருந்து மேற்கோள்கள் மேனேஜ்மெந்த் வட்டாரங்களில் காணக் கிடைப்பதாகவும் கட்டுரை கூறுகிறது..

Big Business is embracing Indian philosophy. Suddenly, phrases from ancient Hindu texts such as the Bhagavad Gita are popping up in management tomes and on Web sites of consultants..

வார்டன், ஹார்வர்ட் போன்ற அமெரிக்காவின் பெரும் பல்கலைக் கழகங்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர்கள், மற்றும் அவர்களது கருத்துக்கள் பெரிதும் கவனிக்கப் படுகின்றன.. விஜய் கோவிந்தராஜன், சி.கே.ப்ரஹ்லாத், ராம் சரண் இந்த பேராசிரியர்கள் GE போன்ற மிகப் பெரிய கம்பெனிகளின் தலைவர்களுக்கே ஆலோசனை வழங்கக் கூடியவர்கள். கீதை காட்டும் பாதை எப்படி இன்றைய பிஸினஸ் உலகிலும் வழிகாட்டுதலை அளிக்க முடியும் என்பதையும் இந்தக் கட்டுரையில் விளக்கியிருக்கிறார்கள்.

புதுமை படைத்தல் (innovation) நிபுணர் விஜய் கோவிந்தராஜன், தன் கருத்துக்களின் கரு இந்துத் தத்துவ சிந்தனையிலிருந்தே வருவதாக் கூறுகிறார்.

Vijay Govindarajan, a professor at Dartmouth College's Tuck School of Business whose books and consulting for the likes of Chevron (CVX ) and Deere & Co. (DE ) have made him a sought-after innovation guru, links his theories directly to Hindu philosophy. He helps companies figure out how to stop reacting to the past and start creating their own futures through innovation.

இந்தியத் தத்துவ சிந்தனைகளின் வீச்சுக்கும், ஆழத்திற்கும் அவற்றின் உலகளாவிய பான்மைக்கும் இது இன்னொரு எடுத்துக்காட்டு.

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
- திருவாசகம்

9 comments:

வேந்தன் said...

கேட்க ரொம்ப பெருமையா இருக்குங்க!

SnackDragon said...

// சுவாமி பார்த்தசாரதியின் + //
//கீதை உலகளாவிய மானேஜ்மென்ட் வழிகாட்டி: பிஸினஸ்வீக் //


கேக்கவே பிரமாதமாக் இருக்கிறது. இப்போதைக்கு முட்டிக்கொள்கிறேம் :(((

Kannabiran, Ravi Shankar (KRS) said...

ஜடாயு சார், மிக அருமையாக எடுத்துக் கொடுத்திருக்கீங்க! நன்றி! வள்ளுவம் மற்றும் கீதை இரண்டும் பெரும் தங்கச் சுரங்கங்கள்; இவர்கள் தோண்டினாலும் முன்பு இந்தியாவைச் சுரண்டியது போல் சுரண்ட முடியாது; கொடுத்தாலும் குறையாத கொடையாயிற்றே! மா.சிவக்குமார் போன்ற பொருளாதார வல்லுநர்கள் இது பற்றி பதிவுகள் போட்டால் மிக நன்றாக இருக்கும்!

ஜடாயு said...

நன்றி கண்ணபிரான் அவர்களே. பாரதம் பொருளாதாரத்தில் முன்னேற முன்னேறத் தான் அதன் அறிவார்ந்த தத்துவச் சிந்தனைகளுக்கும் உரிய மதிப்பு கிட்டும் என்று நான் நம்புகிறேன். இந்தியர்கள் எப்படி இப்படி கில்லாடிகளாக இருக்கிறார்கள் என்ற மேற்குலகத்தின் வியப்பே, அவர்களைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

இல்லாரை எல்லாரும் எள்ளுவர், செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு.

(இங்கு செல்வம் என்பதை எல்லாவிதமான செல்வங்களாகவும் எடுத்துக் கொள்ளலாம், பொருட்செல்வம் மட்டுமல்லாமல்).


இதற்குக் காரணமான இந்திய சாதனையாளர்களின் சாதனைகள் தொடரட்டும்.

வஜ்ரா said...

//
மா.சிவக்குமார் போன்ற பொருளாதார வல்லுநர்கள் இது பற்றி பதிவுகள் போட்டால் மிக நன்றாக இருக்கும்!
//

Wishful thinking...

Hariharan # 03985177737685368452 said...

ஜடாயு,

திருக்குறளை ஏதோ இரண்டு மார்க்குக்கான மனனப்பகுதியாக மட்டும் பார்த்துப் படிக்கக் கற்றிருந்தால் கவலையே!

அம்மாதிரியே கீதையைக் கிள்ளுக்கீரையாக எண்ணுவதே பகுத்தறிவு என்ற சிந்தனை மனதை வளரவிடாமல் சீக்குப்பிடிக்கச் செய்யும்.

தினசரி அல்லது வாரம் ஒருமுறையாவது
திருக்குறள் படிக்க வேண்டும்.

கீதையின் அர்ஜுனன் மாதிரியே நாமெல்லாம் எப்போது எதை எப்படித் திறம்படச் செய்யவேண்டும் என்பதை அறியாமல் குழம்பிக் கிடக்கும்போது கீதையின் 18 அத்தியாயங்கள் தீர்வைச்சொல்கின்றன.

கீதையும் குறளும் தனிமனித முன்னேற்றத்திற்கு மிக மிக அவசியம்.

Anonymous said...

நல்ல பதிவு. அப்படியே இந்த link-யும் பாருங்க.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNH20061029132933&Title=Headlines+Page&lTitle=%D8d%A1V+%F9Nn%A7Ls&Topic=0

ஜடாயு said...

நன்றி ஹரி அவர்களே.

நீங்கள் கொடுத்த தினமணி சுட்டி தெரிவிக்கும் செய்தி புதுமையாக இருக்கிறது. இது உண்மையான அறிவியல் ஆராய்ச்சி என்று நிபுணர்கள் கருதும் பட்சத்தில் கண்டிப்பாக அங்கீகரிக்கப் பட வேண்டும்.

வேத சாஸ்திரங்களில் அது உள்ளது, இது உள்ளது என்று அடிப்படை இல்லாமல் கதை விடுபவர்களும் இருப்பதால் இந்த claim-ல் எந்த அளவு credibility உள்ளது என்று பரிசீலிப்பது முக்கியம்.

Anonymous said...

I am an Eelam Canadian Tamil. I lately joined in a government job in Canada. They have asked me to take and oath on Bible. I refused and asked for Bagavath Keethai and they provided that for me.

Canadian courts also provide Bagavath Keethai to take your oath after the many of the Tamils refused to take oath on Bibles.

Lets spread the wonders of Hinduism,
Gnanatharman