Friday, November 03, 2006

தீந்தமிழில் தென் ஆரிய நாட்டு வளம்

அங்கே பதவி நீக்கங்கள் இல்லை
வந்தவர்கள் பாவ நீக்கம் ஆகும்
நெருக்கடி தெருக்களில் இல்லை
சென்னெல்லும் கரும்பும் போட்டியிட்டு வளரும் வயல்களிடையில் தான்
கூட்டமாய்த் தூங்கித் துவளுவது அரசு அலுவலகங்கள் அல்ல
மரங்களில் மாம்பழங்கள்
பணவீக்கத்தால் குலையும் பராரிகள் இல்லை
முலைவீக்கத்தால் பொலியும் மாதர்களே உண்டு
குண்டுகள் வெடித்து உயிர்த் தொல்லை இல்லை - மலர்ச்
செண்டுகள் நிறைக்க வெடித்திடும் முல்லை
ஏங்கி இளைக்கும் சோகரசம் இல்லை
ஓங்கி ஒலிக்கும் நன்முரசம் உண்டு
அது
கழக இருள் கவிந்த "காரிய" நாடல்ல
கடவுள் அருள் நிறைந்த தென் ஆரிய நாடு!

சொன்னது
சாதீய வெறியேற்றும் ஏச்சப்பர் அல்ல
சைவத்தமிழ்த் திரிகூட ராசப்பர்
அடுக்குமொழி வீசும் தேள் கொடுக்கு அல்ல
அழகு தமிழ் பேசும் கவிராயர் மிடுக்கு.

நீங்கக் காண்பது சேர்ந்தவர் பாவம்
நெருங்கக் காண்பது கன்னலிற்செந்நெல்
தூங்கக் காண்பது மாம்பழக் கொத்து
சுழலக் காண்பது பூந்தயிர் மத்து
வீங்கக் காண்பது மங்கையர் கொங்கை
வெடிக்கக் காண்பது கொல்லையின் முல்லை
ஏங்கக் காண்பது மங்கல பேரிகை
ஈசர் ஆரிய நாடெங்கள் நாடே

(திருக்குற்றாலக் குறவஞ்சி - குறத்தி நகர்வளம் கூறியது)

மேலும் சொல்லுகிறார் -


ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
வாடக் காண்பது மின்னார் மருங்குல்
வருந்தக் காண்பது சூலுளை சங்கு
போடக் காண்பது பூமியில் வித்து
புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து
தேடக் காண்பது ந்ல்லறம் கீர்த்தி
திருக்குற்றாலர் தென் ஆரிய நாடே

பாரதி சொல்லுகிறார் -

தேனார் மொழிக்கிளாய் தேவியெனக்கு ஆனந்தம்

ஆனாள் பொன்னாட்டை அறிவிப்பாய் - வானாடு

பேரிமய பெற்பு முதல் தென்குமரி ஈடாகும்

ஆரிய நாடென்றே அறி.

.. ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக!

23 comments:

ஜயராமன் said...

ஆரியர்கள் என்பது ஒரு மரியாதை தரும் அடைமொழிச்சொல். கலைஞர் என்கிற வார்த்தை போல.

ஆரியர்கள் நிறைந்திருந்த தமிழகம் மிகவும் எழிலும், மதிப்பும் பெற்றிருந்ததில் வியப்பென்ன.

தங்கள் பதிவுக்கு நன்றி

Vajra said...

ராஜ ராஜ சோழன் கூட தன்னை ஆரியன் என்று சொல்லிக் கொண்டதாகப் படித்த நினைவு.
..
ஒரு சில பேரை எவ்வளவு சொன்னாலும் திருத்த முடியாது. மேலும் அவர்களைத் திருத்துவது நம் வேலையல்ல.

எனக்கு கவுண்டர் ஒரு படத்தில் அடிக்கு டயலாக் தான் ஞாபகம் வந்துத் தொலையுது...

"ஒன்ன மாதிரி தமிழ்னாட்டுல 60 லட்சம் பேர் இருக்காங்க...அவிங்களத் திருத்துரது என் வேலை கிடையாது..."

so, the truth will remain as it is.

Anonymous said...

ஆரியதிராவிட இனவாதம் மாக்ஸ்முல்லர் போன்ற கிறித்துவ வெறியர்களால் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு, வீரமாமுனிவர் என்ற பாதிரி, ஏசுவையே ஆரியமைந்தன் என்றுதான் தேம்பாவணியில் பாடுகிறார்.

ஜடாயு said...

// ஆரியர்கள் என்பது ஒரு மரியாதை தரும் அடைமொழிச்சொல். கலைஞர் என்கிற வார்த்தை போல //

ஜயராமன், "தேவரனையர் கயவர்" என்ற குறள் என்னமோ ஞாபகம் வந்து தொலைக்கிறது :))

பின்னூட்டத்திற்கு நன்றி.

ஜடாயு said...

// ராஜ ராஜ சோழன் கூட தன்னை ஆரியன் என்று சொல்லிக் கொண்டதாகப் படித்த நினைவு. //

வஜ்ரா, இருக்கும். ராஜராஜன் வணங்கிய தெய்வத்தை "பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே" என்றூ மணிவாசகர் பாடினாரே !

// வீரமாமுனிவர் என்ற பாதிரி, ஏசுவையே ஆரியமைந்தன் என்றுதான் தேம்பாவணியில் பாடுகிறார். //

அப்படியா? இது நான் கேள்விப்படாத செய்தி ! நன்றி அனானியே.

தமிழ் ஆரியர் பெருமைகள் தொடரட்டும்.

Anonymous said...

அன்புள்ள ஜடாயு,

ஆம். ஏசுகிறித்துவே ஆரியன் என்றுதான் அழைக்கப் படுகிறார். அதுவும் தமிழில் முதலில் பாடப்பட்ட ஏசுகாவியத்தில்.

http://www.tamilchristians.com/modules.php?name=Content&pa=showpage&pid=20

சீரிய உலகம் மூன்றும் செய்து அளித்து அழிப்ப வல்லாய்,

நேரிய எதிர் ஒப்பு இன்றி நீத்த ஓர் கடவுள் தூய,

வேரிய கமல பாதம் வினை அறப் பணிந்து போற்றி,

ஆரிய வளன்தன் காதை அறம் முதல் விளங்கச் சொல்வாம் 1

இங்கே ஆரியன் என்பது ஏசுவின் இனமா அல்லது குணமா என்று தமிழ்மண ஆரியதிராவிட இனவியாதிகளே பதில் சொல்லட்டும்.

Sridhar Venkat said...

ஆரியன் என்றால் - noble அல்லது lord என்று சொல்கிறது wikipedia.

ஆரிய இனம் என்பது வேறு. மிகச் சமீபத்தில்தான் இது பரவலாக வழக்கில் வந்திருக்க வேண்டும்.

ஷாருக்கான் தனது மகனிற்கு 'ஆர்யன்' என்றுதான் பெயர் வைத்திருக்கின்றார்.

தமிழ்மணத்தின் மிகப் அதிகமாக புழங்கிய குறிச்சொல் என்ற பெருமையும் இருக்கலாம் :-)

Anonymous said...

ஜடாயு,

கழகத் தமிழிலேயே கண்மணிகளைச் சாடி இருக்கிறீர்கள். சர்ச்சைகள் தவிர்த்து, நீங்கள் தந்திருக்கும் குறவஞ்சிப் பாடல்கள் மிக நன்றாக இருக்கின்றன. நன்றி.

கங்காதரன்

Anonymous said...

I am not seeing any of those Dravidian fellas here. What do they say for such old Tamil verses that clearly extol "Arya" in the right sense of the word?

bala said...

//am not seeing any of those Dravidian fellas here. What do they say for such old Tamil verses that clearly extol "Arya" in the right sense of the word?//

Dear Anony,

You are not seeing any of the Kunjugals because these johnnies are value subtractors not value adders.

By nature and as taught by their masters they are deceitful and when facing the truth they exit;
These guys have a morbid and warped view of the world . In todays world, these Kunjugals are the most virulent and pathological racists,casteists and fascists.

bala

Anonymous said...

திரிகூட ராசப்பக் கவிராயன்கூட பாப்பான்தானாமே?

Anonymous said...

No! Kavirayar was a Tirunelveli Pillaimar. The irony is that his descendants have become Christians now. Perhaps they believed that Jesus was an Aryan. :-(

Anonymous said...

என்னங்க "ஆரிய" என்னும் சொல்லை out-of-context எடுத்து கதை விடுறீங்க? இங்கே அதன் அர்த்தம் "சிறப்புற்ற" என்பதாகும்.

அப்போ "சீர் மிகு நாடு" என்றால் "வரதட்சணை" உள்ள நாடு என்பீர்களா?

கொஞ்சம் யோசிச்சு பதிக்கலாமே...

ஜடாயு said...

// என்னங்க "ஆரிய" என்னும் சொல்லை out-of-context எடுத்து கதை விடுறீங்க? இங்கே அதன் அர்த்தம் "சிறப்புற்ற" என்பதாகும். //

அதே அதே. தமிழில் 20-ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை "ஆரிய" என்பதற்கு இந்தப் பொருள் தான் இருந்தது. அதற்குப் பிறகு தான் கால்ட்வெல் பாதிரியார், மாக்ஸ் முல்லர் போன்ற புண்ணியவான்கள் ஆரிய இனவாதத்தைத் துவக்க, 'தன்மானத் தமிழர்கள்' கூட்டம் 2000 ஆண்டுகளாகத் தங்கள் முன்னோர்கள் "சிறப்புற்ற" என்று சொல்லிவந்த பதத்திற்கு வந்தேறிகள் என்ற் இனப் பட்டம் கொடுத்து இன்று வரை துவேஷ அரசியல் நடத்தி வருகிறது.

இதை, இதை உணர்த்துவதற்காகவே இந்தப் பதிவு.

இப்போது contex புரியும் என்று நினைக்கிறேன்.

அதனால் தான்
கழக இருள் கவிந்த "காரிய" நாடல்ல
என்று எழுதினேன். "திராவிட நாடல்ல" என்று எழுதவில்லை.

"திராவிட" என்ற் சொல்லின் உருவாக்கம்
தமிழ -> த்ரமிள -> த்ரமிட -> த்ரவிட என்பது. அதன் வேர்ச்சொல் தமிழ் என்னும் நிலம்,மொழி சார்ந்தது, இனம் சார்ந்ததல்ல.

இந்த வகையில் நான் ஒரு ஆரிய திராவிடன்.

"திராவிட" நாட்டை "ஆரிய" நாடாக்க சீரிய முயற்சிகளை நாம் செய்யவேண்டும்

ஜடாயு said...

// No! Kavirayar was a Tirunelveli Pillaimar. The irony is that his descendants have become Christians now. Perhaps they believed that Jesus was an Aryan. :-( //

ஹா ஹா ஹா!
வஜ்ரா, இந்த அனானி நீங்களா??

கவிராயரின் சந்ததியினர் கிறிஸ்தவரானார்கள் என்று இன்று அடையாளம் காட்ட முடியுமா?? ஆச்சரியமாக இருக்கிறதே! அந்த அளவுக்கு துல்லியமான வரலாறு இருக்கிறதா?

குமரன் (Kumaran) said...

//அதே அதே. தமிழில் 20-ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை "ஆரிய" என்பதற்கு இந்தப் பொருள் தான் இருந்தது. அதற்குப் பிறகு தான் கால்ட்வெல் பாதிரியார், மாக்ஸ் முல்லர் போன்ற புண்ணியவான்கள் ஆரிய இனவாதத்தைத் துவக்க, 'தன்மானத் தமிழர்கள்' கூட்டம் 2000 ஆண்டுகளாகத் தங்கள் முன்னோர்கள் "சிறப்புற்ற" என்று சொல்லிவந்த பதத்திற்கு வந்தேறிகள் என்ற் இனப் பட்டம் கொடுத்து இன்று வரை துவேஷ அரசியல் நடத்தி வருகிறது.

இதை, இதை உணர்த்துவதற்காகவே இந்தப் பதிவு.

இப்போது contex புரியும் என்று நினைக்கிறேன்.

அதனால் தான்
கழக இருள் கவிந்த "காரிய" நாடல்ல
என்று எழுதினேன். "திராவிட நாடல்ல" என்று எழுதவில்லை.

"திராவிட" என்ற் சொல்லின் உருவாக்கம்
தமிழ -> த்ரமிள -> த்ரமிட -> த்ரவிட என்பது. அதன் வேர்ச்சொல் தமிழ் என்னும் நிலம்,மொழி சார்ந்தது, இனம் சார்ந்ததல்ல.

இந்த வகையில் நான் ஒரு ஆரிய திராவிடன்.

"திராவிட" நாட்டை "ஆரிய" நாடாக்க சீரிய முயற்சிகளை நாம் செய்யவேண்டும்
//

நன்கு சொன்னீர்கள்.

ஜடாயு said...

நன்றி குமரன் அவர்களே.

Anonymous said...

//அதே அதே. தமிழில் 20-ம் நூற்றாண்டின் தொடக்கம் வரை "ஆரிய" என்பதற்கு இந்தப் பொருள் தான் இருந்தது.//
ஆரியர் என்று ஒரு இனம் ஜெர்மனி, இரான் முதல் இந்தியா வரை இருக்கும் ஒன்று.
தமிழில் அதே சொல்லுக்கு மேலும் ஒரு அர்த்தம் இருப்பதால், அந்த இனம் என்பது இல்லாமல் போகாது.
ஆங்கிலேயர்கள் இருந்த வரை அவர்களோடு identify செய்து கொள்ள ஆரிய இனம் இருந்தது என்று ஜல்லியடித்துவிட்டு, இப்பொழுதிய அரசியல் சூழ்நிலையில் அந்த concept சுமையாக இருப்பாதால் அதை இறக்கி வைக்கும் முயற்சி தான் இந்த argument.

Anonymous said...

//
தமிழில் அதே சொல்லுக்கு மேலும் ஒரு அர்த்தம் இருப்பதால், அந்த இனம் என்பது இல்லாமல் போகாது.
//

யோய் வெட்டியா வாய்ச்சவடால் விடாதெய்யா...அது இருந்தது என்பதற்கு சாட்சியக்காமி...இல்லை என்பதற்கு எக்கச்செக்க ஆதாரம் வைக்கப்பட்டுவிட்டன.

//
ஆங்கிலேயர்கள் இருந்த வரை அவர்களோடு identify செய்து கொள்ள ஆரிய இனம் இருந்தது என்று ஜல்லியடித்துவிட்டு, இப்பொழுதிய அரசியல் சூழ்நிலையில் அந்த concept சுமையாக இருப்பாதால் அதை இறக்கி வைக்கும் முயற்சி தான் இந்த argument.
//

ஆம், அப்போது அடித்தவர்கள் தான் இப்போதும் அதை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். பதவி ஆசைக்காக.

அப்போது இருந்தே இதை எதிர்த்தவர்களாக அரவிந்தர், விவேகானந்தர், வீர சாவர்கர் போன்றோர் இருந்தனர் என்பதாவது உன் மரமண்டைக்குத் தெரியுமா ?

ஜடாயு said...

அனானியே,

// ஆரியர் என்று ஒரு இனம் ஜெர்மனி, இரான் முதல் இந்தியா வரை இருக்கும் ஒன்று. //

இந்தக் கருத்து முன்வைக்கப் பட்டதே 19ஆன் நூற்றாண்டின் இறுதியில் தான் - ஐரோபிய ஜெர்மானிய இனவெறியாளர்கள் தங்கள் யூத வெறுப்பை நியாயப் படுத்த. கிறிஸ்தவ மிசநரிகளும் எப்படி இதைப் பரப்ப்பினர் என்பதும் தெளிவாக சொல்லப் பட்டு விட்டது

// தமிழில் அதே சொல்லுக்கு மேலும் ஒரு அர்த்தம் இருப்பதால், அந்த இனம் என்பது இல்லாமல் போகாது. //

இதப் பார்றா! அது "மேலும் ஒரு அர்த்தம்: இல்லை, 1000 ஆண்டுகளாக இருந்து வந்த அர்த்தம். அதை மறந்து விட்டு ஐரோப்பிய வரலாற்றாசிரியர்களின் பொய்யையே வாந்தி எடுத்து வருவது காலனிய அடிமைத்தன சிந்தனையின் வெளிப்பாடே ஆகும்.

ஜடாயு said...

// அப்போது இருந்தே இதை எதிர்த்தவர்களாக அரவிந்தர், விவேகானந்தர், வீர சாவர்கர் போன்றோர் இருந்தனர் என்பதாவது உன் மரமண்டைக்குத் தெரியுமா ? //

நன்றி அடுத்த அனானியே. நான் சொல்ல வந்ததைச் சொல்லி விட்டீர்கள்.

முதல் அனானி, "ஆரியரும் தமிழரும்" என்ற சுவாமி விவேகானந்தரின் இந்தக் கட்டுரையைப் படிக்கவும் -
http://www.ramakrishnavivekananda.info/vivekananda/volume_4/writings_prose/aryans_and_tamilians.htm

எவ்வளவு தெளிவாக சுவாமிஜி ஆரிய இனவாதத்தை எதிர்த்தார் என்பது புரியும். இதே கருத்தைத் தான் தாகூர், பாரதி, அம்பேத்கார் முதலிய தலைவர்களும் மொழிந்தார்கள்.

// ஆங்கிலேயர்கள் இருந்த வரை அவர்களோடு identify செய்து கொள்ள ஆரிய இனம் இருந்தது என்று ஜல்லியடித்துவிட்டு //

முதல் அனானி, இதற்கு ஆதாரங்கள் எங்கே?

arunagiri said...

ஆரியக்கவிதைகள் அருமை ஜடாயு. அடிமைப்புத்திகளிடம் போய் ஆதாரம் கேட்கிறீர்களே, ஆதாரத்தையும் அறிவு நேர்மையையும் இருந்தால் வெளிக்காட்ட மாட்டார்களா? வச்சுகிட்டா வஞ்சன பண்றாங்க?

மாயவரத்தான்... said...

ஆரியன்னு சொன்னாலே அடிக்க வர்றாங்கண்னே!