கார்த்திகை விளக்கீடு: மன இருள் மாய்ப்போம்!
அந்தி நேரம். கதிரவன் மறைந்து கொண்டிருந்தான். “எனக்குப் பிறகு யார் இந்த உலகிற்கு ஒளிதரப் போகிறீர்கள்?” என்று கவலையுடன் கேட்டான். நிலவு இருந்தது, நட்சத்திரங்கள் இருந்தன, எல்லாம் அமைதியாக இருந்தன. ஒரு சிறு மண் அகல், அதன் சுடர் காற்றில் அசைந்து கொண்டிருந்தது. தன் தலையை நிமிர்த்திச் சொன்னது “நான் இருக்கிறேன், சூரிய தேவா!”
- ரவீந்திர நாதத் தாகூரின் ஒரு கவிதை
அகல் விளக்குகள் ஏற்றி அதன் ஒளியில் அகிலம் முழுதும் நிறைந்திருக்கும் பேரொளியை உணரும், வழிபடும் நம் தொன்மைத் திருநாள் கார்த்திகை தீபம்.
சங்க காலத்தைச் சேர்ந்த பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான “கார் நாற்பது” என்னும் நூலில் உள்ள ஒரு பாடல் -
நலமிகு கார்த்திகை நாட்டவர் இட்ட
தலைநாள் விளக்கின் தகையுடைய ஆகிப்
புலமெல்லாம் பூத்தன தோன்றி சிலமொழித்
தூதொடு வந்த மழை
“தோழி, கார்த்திகைத் திருநாளன்று நாடெங்கும் விளக்குகள் பூத்தன போல் காடெங்கும் தோன்றிப் பூக்கள் பூத்தன, மழையும் வந்தது” (தலைவன் வரும் கார்காலமும் வந்தது என்பது குறிப்பு).
இதன் மூலம் இந்த தெய்வீகத் திருநாளின் தொன்மையை அறியலாம். சைவமும், வைணவமும் செழித்து வளர்ந்த காலகட்டங்களிலும் இத்திருநாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. நாம் ஏற்றும் தீபங்கள் அக இருள் அகற்றும் தெய்வீக ஞானத்தின் உருவகங்கள் என்பதையும் பல பாடல்கள் உணர்த்தும்.
“விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக்குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளைக்கை விளக்க வல்லார்க்கு
விளக்குடையான் கழல் மேவலுமாமே”
என்ற திருமந்திரப் பாடலின் ஆழ்ந்த தத்துவப் பொருள் அறிந்து, உணர்ந்து, அனுபவிக்கத் தக்கது. அகல்,எண்ணெய், திரி, சுடர் என்று பலவாறாகத் தோன்றும் விளக்கு என்பது ஒளியில் ஒன்றுபடுவது போல, பலவாறாகத் தோன்றும் பிரபஞ்சமும், ஜீவனும் பரம்பொருளான சிவத்தில் அடங்கும் என்பது இதன் உட்பொருள்.
“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா, நன்புருகு
ஞானச் சுடர்விளக்கேற்றினேன், நாரணர்க்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்”
என்று ஆழ்வார் அற்புதமாகத் தனது ஞான விளக்கு பற்றிக் கூறுகிறார்.
தமிழகம் மற்றும் பாரதத்தின் பல பகுதிகள் போலவே, இலங்கை ஈழத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்தத் திருநாளைப்பற்றி சகோதரர் அகிலன் சுவையாக எழுதியுள்ளார்.http://agiilankanavu.blogspot.com/2006/12/blog-post.html. இதிலே இப்படி ஒரு கேள்வியையும் கேட்டிருக்கிறார்."இன்றைக்கு விளக்கீடு என்றதும் எனக்கு உடனே ஞாபகம் வந்தது இதுதான். விளக்கீடு என்றால் கார்த்திகை தீபம் ஏற்றுவது. அதான் அதை தமிழ் நாட்டில் எப்படி சொல்வார்கள் என்று தெரியவில்லை ஆனால் ஈழத்தில் இதுதான் அதன்பெயர்."
தமிழ்நாட்டிலும் இதன் தொன்மையான பெயர் விளக்கீடுதான், அதனாலேயே இந்தப் பதிவுக்கு அப்படியே தலைப்பிட்டேன். சென்னை திருமயிலைக்கு திருஞானசம்பந்தப்பெருமான் வந்தபோது, என்றோ அரவம் தீண்டி மாண்ட பூம்பாவை என்ற பெண்ணின் சாம்பல் வைத்த குடத்தை முன்வைத்துசிவபெருமானை வணங்கி மீண்டும் உயிர்ப்பித்து எழுப்பிய பதிகத்தில் அந்நாளில்தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்ட பண்டிகைளின் பட்டியல் இருக்கிறது. இதிலே உள்ள அழகிய ஒரு பாடல் –
“வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச்சரத்தான் தொல் கார்த்திகைநாள்
தளத்தேந்திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்”
இப்பாடலில் வளையணிந்த அழகிய பெண்கள் விளக்கேற்றியது குறிப்பிடப் படுகிறது.
இந்து தர்மத்தின் சமய ஒருமையைப் பறை சாற்றும் திருநாள் கார்த்திகை.
“அறுசமய சாத்திரப் பொருளோனே
அறிவில் அறிவால் உணர் கழலோனே
குறுமுனிவர் ஏத்தும் முத்தமிழோனே
குமரகுரு கார்த்திகைப் பெருமாளே”
என்று கார்த்திகைப் பெண்டிர் எடுத்து வளர்த்த கந்தப் பெருமானை அருணகிரியார் பாடி மகிழ்வார். சிவபெருமான் அருட்பெரும்ஜோதியாக தரிசனம் தரும் திருநாள். ஞானப் பேரொளி உமையையும், தீப லட்சுமியையும் திருவிளக்கில் போற்றும் நாள். திருமால் திரிவிக்கிரமனாக அவதரித்து மாவலியைப் பாதாளத்தில் அமிழ்த்திய நாள். பரணி தீபம், திருவண்ணாமலை தீபம், சர்வாலய தீபம் என்று எல்லா ஆலயங்களிலும், பட்டி தொட்டிகள் தோறும் கொண்டாடப் படும் திருநாள் இது. சிறு சிறு குடிசைகள் கூட விளக்குகளால் அலங்கரிக்கப் படும் நாள் இது.
மகாகவி பாரதி எழுதுகிறார்:
கார்த்திகையில் கார்த்திகை நாள் கார்மேனிக் கமலக் கண்ணன் கொடியவரைக் கடிந்தடக்கிய நாள். உலகினில் கொடுங்கோலர்கள் கொட்டத்தைக் கருணாநிதியான கடவுள் அடக்கிய நாள்… பாரதர்கள் வெந்துயர்களையும் பரந்தாமன் விரட்டிய நாள். ஆரியர்களின் ஆண்மை அவனியில் பொலிந்திடு நாள். வானவரும் தானவரும் வருத்தம் நீங்கி வாழ்க்கை நிலையின் வனப்பை எய்திய நாள். மறமிடர்ப்படுக்கப் பட்ட மகிமைப் பெருநாள். அறம் தழைத்தோங்க ஆரம்பித்தத ஆனந்தத் திருநாள். தீபச் சோதியால் தேவாலயத்தை நிரப்பிடு நிகரில் திருநாள். வாணவேடிக்கையும், மாவலியாட்டும் மலிந்திடு நாள். பாரத மக்கள் ஸ்ரீ பகவானருள் பெற்ற நாள். கிருபாநிதிக் கடவுள் கருணை பொழிந்திடு நாள். பார் உவந்த உத்தமத் திருநாள் கார்த்திகையில் கார்த்திகை நாளே.
(நன்றி: மகாகவி பாரதியின் உரைநடை வரிசை – சிந்தனைகள், பக்கம் 28, மணிமேகலைப் பிரசுரம்)
இத்திருநாளில் நாம் ஏற்றும் தீபங்கள் புற இருளை அகற்றுவது போல், ஞானம் என்ற பேரொளி நம் மன இருளை மாய்க்க வேண்டும். “மனத்து இருளேதுமின்றி” என்று அபிராமி அந்தாதியும், “மனத்திருள் மூழ்கி கெடலாமோ” என்று திருப்புகழும் சுட்டுவது இதைத் தான்.
உலகில் இருள் என்பது எப்போதும் இருப்பது, அதனாலேயே அதை அழிக்கும் ஒளியின் தியானமும், நினைவும் எப்போதும் தேவைப்படுகிறது. இன்று நாம் காணும் வன்முறைகளுக்கும், கொடூரங்களுக்கும் காரணமாகவும், அழிவு மற்றும் ஆக்கிரமிப்பு சக்திகளின் பின்னணியிலும் இருப்பது இந்த மன இருள் தான். திண்ணை (அக்டோபர் 19,2006) இதழில் இருளும், மருளும், இஸ்லாமும் என்ற கட்டுரையில் திரு. நேசகுமார் இந்தக் கருத்தை மிக அற்புதமாக விளக்குகிறார். அதை அப்படியே கீழே தருகிறேன்.
'.. இன்று இஸ்லாத்தை மற்றவர்கள் புரிந்து கொள்ளாதபடிக்கு , காண்போரின் மனங்களையும் மயக்குவது இந்த இருட்தன்மைதான் . இந்தியத் தத்துவங்கள் , மரபுகள் இந்த இருள் என்றென்றும் இருக்கும் என்கின்றன .
ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா
ஒளியுளோர்க்குஅன்றோ ஒழியாது ஒளியும்
ஒளியுருள் கண்டகண் போலவே றாயுள
ஒளியிருள் நீங்க உயிர்சிவம் ஆமே !
- திருமந்திரம் - 1819.
***
சுழல் போன்று வந்து மீண்டும் மீண்டும் நம்மை ஆக்கிரமித்துக் கொள்வது இந்த இருள். இந்த இருளுக்கும் மருளுக்கும் தொப்புள் கொடி உறவு உண்டு. இஸ்லாத்தின் மிகப்பெரிய பலம் இந்த மருட்சிதான். ஆன்மீக ரீதியான மருட்சியானது இறைவன் பற்றிய மிரட்டல்களிலிருந்து தொடங்கி, நரகம் பற்றிய அச்சுறுத்தல்களால் பின்பற்றுபவர்களின் மனதை மருள வைக்கிறது. இது போதாதென்று, இதைக் கண்டு மருளாதவர்களை மிரட்டவே ஃபிஸிக்கலாக வன்முறையை பிரஸ்தாபிக்கின்றது இஸ்லாம். இந்த மன மருட்சி, மனதின் சிந்தனையை மூடி மறைத்துக் கொள்கிறது. இஸ்லாமிய வரலாற்றை உற்றுக் கவனித்தால், ஆரம்பத்தில் முகமதுவும் இதே மனநிலையில் இருந்தது தெரியவரும். வானத்தை மறைத்துக் கொண்டு ஆயிரம் இறக்கைகளுடன் தோன்றித் தம்மை இறுக்கிப் பிடித்து பேயடித்தவனின் நிலைக்குக் கொண்டுபோன ஜிப்ரீலின் மீது முகமதுவுக்கு பயம் ஏற்பட்டது. தற்கொலைக்குக் கூட முயன்றார் முகம்மது. பிறகு, தம்மை எதிர்த்தவர்கள் வன்முறையை மேற்கொண்டபோது எதிர்த்துத்தாக்கத் தைரியமில்லாமல் பயந்துபோய் ஊரை விட்டு ஓடினார்(விவேகானந்தர் இதுகுறித்து ஓரிடத்தில் எழுதும்போது, இப்படி எதிர்க்க வழியில்லாமல் வன்முறையை ஏற்பவர்கள் வாய்ப்புக் கிடைத்தவுடன் மற்றாவர்கள் மீது அதே வன்முறையை திணிப்பார்கள் என்று தெரிவிக்கின்றார்). இப்படி மருள் இருளாய் மாறி முகமதுவின் மனதைக் கைப்பற்றிக் கொண்டதுபோலவே, அவரது அடியார்களையும் காலம்காலமாய்ப் பற்றிக் கொண்டு வாழ்ந்து வருகிறது.
இந்த இருளுக்கும், இதனிலிருந்து மீள மனித குலம் தம்மிலிருக்கும் உயரியசக்தியை விழிப்புணர்வை துணைக்கழைத்து மேற்கொள்ளும் போரே தேவ-அசுர யுத்தமாக இந்தியப் பெருங்கதைகளில் சித்தரிக்கவும் படுகிறது . மனித மனத்தின் விழிப்புணர்வின் உச்சமானதொரு தன்மையை இறைவன் இறங்கி அசுரர்களை எதிர்கொள்வதாக புராணங்கள், கதைகள், வழக்குகள் சித்தரிக்கின்றன. மாட்டுத் தலயுடன் கொண்ட சிந்திக்கா அசுரனை வீழ்த்தும் சக்தியை ஒரு இந்துவாக நம்மில் பலர் வணங்கியிருப்போம்.
சிறுவயதில் நான் அடிக்கடி சிந்தித்ததுண்டு. எப்படி அசுரர்களும் அதே கடவுளை வணங்குகின்றனர் . அசுரர்களுக்கு ஏன் இறைவன் வரங்களை வாரி வழங்குகின்றார் ? அது எப்படி அசுரர்கள் ஏக இறைவனை மட்டுமே வணங்கி உலகங்களையெல்லாம் விடு விடுவென்று ஆக்கிரமித்து விடுகின்றனர் . அது ஏன் கடைசியில் எல்லோரும் இறைஞ்சிய பின்னரே இறைவன் இறங்கி வருகின்றார் - இது போன்ற பல கேள்விகளுக்கு இன்று புலப்படும் விடை, இதெல்லாம் குறியீடுகள் என்பதே. அசுரத்தன்மை என்பது நமது மனத்தின் பின் கதவுகள் தாம். கடவுள் கீழிறங்கி வருவது என்பது கடைசியில் நமக்குள் ஏற்படும் விழிப்புணர்வுதான்!"
அனைவருக்கும் கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்!
19 comments:
அருமை ஜடாயு அவர்களே! விளக்கீடு பற்றிய சம்பந்தர் பாடலை நினைவு படுத்தியமைக்கு மிக்க நன்றி.
- யாழ்ப்பாணன்
களப்பிரர் காலத்தை திராவிட நாட்டின் இருண்ட காலம் என்பார்கள். அந்த இருட்டை முதலில் அடித்துத் துரத்தியவர் திருநாவுக்கரசர். அவருக்கு தூண்டுதலாக இருந்தது அவர் தமக்கையார் திலகவதியார்.
அதே காலகட்டத்திலேயே அந்த இருள் போய் அரேபியாவைச் சூழ்ந்து கொண்டது. நபி மேல் இறங்கிய வஹிக்கு சர்டிபிகேட் கொடுத்து அவரைத் தூண்டிவிட்டவரும் ஒரு பெண்தான். அவர் மனைவியான கதீஜா அம்மையார்.
இதெல்லாம் வளைக்கை மடநல்லார் கையால் நடந்தவைதான். அதனால்தான்
ஆவதும் பெண்ணாலே!அழிவதும் பெண்ணாலே!
மிக்க நன்றி யாழ்ப்பாணன் அவர்களே. அருமையான பெயர் உங்களுடையது.
// அந்த இருட்டை முதலில் அடித்துத் துரத்தியவர் திருநாவுக்கரசர். அவருக்கு தூண்டுதலாக இருந்தது அவர் தமக்கையார் திலகவதியார்.
அதே காலகட்டத்திலேயே அந்த இருள் போய் அரேபியாவைச் சூழ்ந்து கொண்டது //
மிக நன்றாக சொல்லியிருக்கிறீர்கள் அறிஞர் அனானி அவர்களே.
// இதெல்லாம் வளைக்கை மடநல்லார் கையால் நடந்தவைதான். அதனால்தான்
ஆவதும் பெண்ணாலே!அழிவதும் பெண்ணாலே! //
ஆமாம். எல்லாம் அந்த மாயை சக்தியின் விளையாட்டு தான்.
கார்த்திகை திருநாள் வாழ்த்துக்கள். உலகெங்கும் இருள் நீங்க அசுர சக்திகளின் ஆக்கிரமிப்பு அகல நாமும் ஏற்றி வைப்போம் அகல் விளக்குகள். ஜடாயு ஐயா அருமையான கருத்துகள். காலத்திற்கு பொருத்தமான விளக்கங்கள்.
"அந்த இருட்டை முதலில் அடித்துத் துரத்தியவர் திருநாவுக்கரசர்."
நல்ல observation. திருநாவுக்கரசர் என்ற பெயர் பின்னால் வந்தது. அவருக்கு அம்மா அப்பா வைத்த பெயர் மருள்நீக்கியார். என்ன பொருத்தமான பெயர் பாருங்கள். இந்த மருளைத்தான் நீக்கி அரேபியாவுக்கு பார்சல் செய்துவிட்டாரோ!
// நல்ல observation. திருநாவுக்கரசர் என்ற பெயர் பின்னால் வந்தது. அவருக்கு அம்மா அப்பா வைத்த பெயர் மருள்நீக்கியார். என்ன பொருத்தமான பெயர் பாருங்கள். //
அனானி, அருமையான விளக்கம்.
// இருள் நீங்க அசுர சக்திகளின் ஆக்கிரமிப்பு அகல நாமும் ஏற்றி வைப்போம் அகல் விளக்குகள். //
நன்றி நீலகண்டன். அகல - அகல் சொல்லாட்சி நன்றாக இருக்கிறது.
கார்த்திகை பற்றிய அருமையான தகவல்களைத் தந்ததற்கு நன்றி.
// இந்த இருளுக்கும், இதனிலிருந்து மீள மனித குலம் தம்மிலிருக்கும் உயரியசக்தியை விழிப்புணர்வை துணைக்கழைத்து மேற்கொள்ளும் போரே தேவ-அசுர யுத்தமாக இந்தியப் பெருங்கதைகளில் சித்தரிக்கவும் படுகிறது . மனித மனத்தின் விழிப்புணர்வின் உச்சமானதொரு தன்மையை இறைவன் இறங்கி அசுரர்களை எதிர்கொள்வதாக புராணங்கள், கதைகள், வழக்குகள் சித்தரிக்கின்றன. //
தேவ அசுர விளக்கம் பற்றிய ஆழ்ந்த விளக்கம். அசுரன் என்பது கிறித்தவ மதத்தில் வருவது போல சாத்தான் அல்ல. அது அக்ஞானம் அல்லது மன இருள் தான் - இந்தக் கருத்தை தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்.
ஒரு அனானியின் மின் அஞ்சல்
-----
ஜடாயு,
முதலில் தந்த அந்த தாகூர் கவிதை ரொம்ப நல்லா இருந்ததுங்க.
இந்த மன இருளை நாம் மாய்க்க வேண்டும்னு கடைசில சொன்னதை, முதல்ல சொன்ன அந்த கவிதையோட சேத்து நெனச்சுப் பாத்தேன்.
நாமெல்லாம் அந்த அகல் விளக்கு மாதிரியாவது இருக்கோமா? தெரியல.
கார்த்திகைய வெச்சு ஒரு நல்ல சிந்தனயத் தூண்டிவிட்ட உங்களுக்கு நன்றி.
Jatayu,
It is interesting to know that Bharathiyar has written abt the Karthigai festival also. Thanks for the nice passage.
Nesakumar's quote at the end is very thought provoking.
கார்த்திகை பற்றி சுருக்கமாகவும், அழகாகவும், இன்றைய சூழலுக்குப் பொருத்தமாகவும் எழுதியிருக்கிறீர்கள். நன்றி.
இந்துமதம் வாருங்கள்
என் இனிய இஸ்லாமிய சகோதரர்களே!
மனித இனத்தைப் பற்றி இந்து மதத்தின் உயர்ந்த ரிஷிகளில் ஒருவர் கூறுகையில் ....
புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் ...செல்லாஅ நின்ற இத்தாவிர சங்கமத்துளெல்லாப் பிறப்பும்
..
என்று பரிணாமவியலை உணர்ந்து பாடுகிறார்.
இந்துமதம் என்பது மற்ற மதங்களைப் போல இன்று நேற்றுப் பிறந்த மார்க்கமல்ல.. மாறாக இந்த பேரண்டம் தோன்றிய போதே அதுவும் தோன்றி விட்டது. ஒவ்வொரு காலத்திலும் இந்தமதத்தில் பெரும் ரிஷிகளும் ஞானிகளும் தோன்றி அதனைப் பிரகாசிக்கச் செய்து வந்தார்கள். இனிமேலும் இந்த இந்துமதத்தில் இறையருள் பெற்றவர்கள் வருவார்கள். ஒரு சில மதங்களில் இவர்தான் இறுதியானவர் அவர்தான் இறுதியானவர் என்றும், இவரை அனுப்பிய பின்னர் இறைவன் தன் வாயை மூடிக்கொண்டுவிட்டான் என்றும் சொல்லி கற்காலத்திலேயே சமுதாயத்தை வைத்திருக்கவும் வன்முறையை வளர்க்கவும் முயல்வார்கள். அது போலன்றி, அணுவிலும் பேரண்டத்திலும் உறையும் வரையறுக்க முடியாத இறையை வரையறுக்க முடியாது என்றே ஒப்புக்கொள்ளும் இந்துமதம், சமுதாயத்தில் அல்லன நீக்கி நல்லன போற்றும் ஞானியரையும் ரிஷிகளையும் ஒவ்வொரு காலத்திலும் இறையருளால் பெற்றே வந்திருக்கிறது. ஒரு சிலர் இந்தியாவுக்கு மட்டுமே உரியது இந்துமதம் என்றும் கூறுவார்கள். அது உண்மையல்ல. அகிலத்தார் அனைவருக்கும் பொதுவான மார்க்கம் தான் இந்துமதம்.
அதாவது இப்பிரபஞ்சம் அனைத்துக்கும் ஒரே இறை தான், அது அணுவிலிருந்து அண்டம் வரை யாவிலும் வியாபித்துள்லது. அதனை வரையறுக்கவோ, ஒரு புத்தகத்துக்குள் அடக்கிவிடவோ முடியாது. அப்படி அடக்கிவிட்டேன் என்று கூறும் மார்க்கங்கள் அஞ்ஞானத்தில் விழுந்து கிடக்கும் மனிதனின் உற்பத்திகள் தானே?
உலக சமயங்களைக் கற்பதால் நாம் அடையும் பெரிய இலாபம் யாதெனில் சமயங்களுக்கு மத்தியில் எத்தகைய வேற்றுமைகள் இருந்த போதிலும் அனைத்திலுமே அடிப்படை உண்மை ஒன்றாக இருப்பதைக் காண முடிகின்றது. இந்த அடிப்படை உண்மையின் மூலம் ஏற்படும் ஒற்றுமையானது சமூகங்களுக்கிடையே ஏற்படுகின்ற குரோதம், விரோதம், துவேசம் ஆகியவற்றைப் போக்கி சாத்வீகத்தை உண்டாக்கி மனிதனை மனிதப் புனிதனாக ஆக்கும் நிலையைக் காண முடிகின்றது. தான் என்னும் அகங்காரத்தினை விலக்கி, தான் உருவாக்கிய மதம் என்னும் அகங்காரத்தை விலக்கி, தான் நம்பும் மதம் என்னும் அகங்காரத்தை விலக்கி, யாரை வணங்கினாலும் மனிதன் இறையையே வணங்குகிறான் என்ற பேருண்மையை உணர இந்து மதம் உணர வைப்பதன் மூலம், மதங்களுக்கு இடையேயான குரோதத்தையும், விரோதத்தையும் துவேசத்தையும் போக்குகிறது.
உண்மையில் மிகப் பெரும் சமயங்களில் ஒன்று இந்து சமயம். இதில் பல்வேறு பிரிவுகள் இருந்தாலும், முருகனை வணங்குபவர்கள் கணபதியை வணங்குபவர்களை வெட்டிக்கொலை செய்ததுமில்லை. கணபதியை வணங்குபவர்கள் விஷ்ணுவை வணங்குபவர்கள் மீது குண்டு வீசியதுமில்லை. விஷ்ணுவை வணங்குபவர்கள் காளியை வணங்குபவர்களது கோவிலின் உள்ளே சென்று சிலைகளை உடைத்ததுமில்லை. ஏன் எனில், எல்லா இந்துக்களும் அடிப்படையில் எந்த் உருவத்தில் இறைவனை வணங்கினாலும் வணக்கத்தை பெறுவது ஒரே இறைவனே என்ற பேருண்மையை அறிந்திருப்பதுதான். கல்வியை வேண்டுபவன் சரஸ்வதி என்ற உருவில் இறையை வணங்குகிறான். செல்வத்தை வேண்டுபவன் இலக்குமி என்ற வடிவில் இறையை வணங்குகிறான். மனிதனின் வேண்டுதல் மாறலாம். இறை மாறுவதில்லை என்பதை இந்து அறிந்திருக்கிறான்.
இருள் சேர் இருவினையும் சேரா இறைவன் என்று இந்துமத வேதங்கள் இறையை குறிப்பிடுகின்றன. நல் வினை தீவினை ஆகிய இரண்டுமே தொடாத இறையை இந்து மதம் கூறுகிறது. இறை வரையறைக்குள் வராது. வரையறுக்கவும் முடியாது.
இறை இதுதான் என்று நாம் வரையறுக்கும் எல்லா வரையறைகளும் இறையை கட்டுப்படுத்துகின்றன என்பதை இந்து ரிஷிகள் உணர்ந்திருக்கிறார்கள்.
தன்னை நம்பாதவர்களோடு தன்னை நம்புபவர்கள் போர் புரிய வேண்டும் என்று கடவுள் கூறியதாக ஒரு சில மதங்கள் கூறும். தனக்கு ஆடுகளை பலிகொடு என்று கடவுள் கேட்டதாக ஒரு சில மதங்கள் கூறும். நான் தான் கடவுள் என்னைப்பற்றி பலரிடம் எடுத்துச்சொல்லி அவர்களை என்னை கும்பிடச்சொல்லு என்று கடவுள் சொன்னதாக சில மதங்கள் சொல்லும். இப்படி மனிதனை இறைஞ்சும் கடவுள் கடவுளாக இருக்க முடியுமா? மனிதனுக்குத்தான் கடவுளின் தேவை இருக்கிறது. என்ன தேவையோ அந்த தேவை காரணமாக கடவுளை ஒரு உருவகப்படுத்திக்கொள்கிறான். சரஸ்வதியாக கடவுளை பார்ப்பவனுக்கு கடவுள் கல்வியை அளிக்கிறார். நீங்கள் யார்? உன் தந்தைக்கு நீங்கள் மகன், உங்கள் அண்ணனுக்கு நீங்கள் தம்பி. உங்கள் மகனுக்கு நீங்கள் தந்தை. உங்கள் மனைவிக்கு நீங்கள் கணவன். ஆள் ஒரே ஆள்தானே? ஒரு சாதாரண மனிதனான உங்களுக்கு இத்தனை முகங்கள் இருக்குமென்றால், இப்பேரண்டத்தை படைத்த,கற்பனைக்கும் எட்டாத இறைக்கு எத்தனை முகங்கள் இருக்கும்? சாதாரண மக்கள் நாம். அந்த பணிவுடன் தான் நாம் இறைக்கு திருமணம் செய்துவிக்கிறோம். பாடல்களை பாடுகிறோம். அது நம்மால் சந்தோஷப்படுகிறதா? அல்ல. நாம் சந்தோஷப்படுகிறோம். நம் சந்தோஷத்துக்காக இவற்றை செய்கிறோம். நம் சந்தோஷமே மக்களின் சந்தோஷமாக சமுதாயத்தின் சந்தோஷமாக விரிகிறது.
தெய்வமென்றால் அது தெய்வம், வெறும் சிலை என்றால் வெறும் சிலைதான் என்று கண்ணதாசன் இந்துமதத்தின் ஆணி வேரை சொன்னார்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றுதான் திருமூலரும் சொன்னார்.
அசலன், அனாதி, ஆதி, ஏகன் என இந்துப் புராணம் இறைவனை அழைத்தாலும் அது இறைவனை எந்த உருவிலும் வணங்குவதை தடை செய்வதில்லை. தடை செய்வதன் மூலம் வன்முறையே பெருகும். நான் சரி நீ தவறு என்ற வாதமும் பிரதிவாதமுமே வரும். அது வன்முறையிலேயே முடியும். ஏனெனில், ஒரு சாதாரண மனிதனுக்கு பல முகங்கள் இருப்பதுபோல, இறைவனுக்கு எண்ணற்ற உருவங்களில் வணங்கினாலும் ஒரே இறைவனையே அத்தனை வணக்கங்களும் அடைகின்றன என்பதை இந்து ரிஷிகள் கூறி மக்களை வளப்படுத்தி சமுதாயத்தினை வளப்படுத்தியிருக்கின்றனர்.
இதனால்தான் இந்து மதத்தை சார்ந்த அம்பேத்கார், காந்தியடிகள் போன்ற பெரியவர்கள், ஞானிகள் இஸ்லாம் கிறிஸ்துவம் ஆகிய மதங்களை பாராட்டவும், அந்த மதங்களை நிறுவியவர்களை பாராட்டவும் அஞ்சியதில்லை. ஏனெனில், எந்த உருவில் வணங்கினாலும் இறை ஒன்றுதான் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால், அந்தந்த மதத்தினரோ, தங்கள் மதங்களை பரப்ப விளம்பரங்களாக அவற்றை பயன்படுத்திக்கொள்வதன் மூலம், தங்களது குறுகிய மனத்தையே காட்டுகிறார்கள்.
எனதன்பின் இஸ்லாமிய நண்பர்களே..
இந்து வேதம் உபநிஷதம், கீதை, திருமந்திரம், திருவாசகம், பிரபந்தம் போன்ற நூல்களில் கடவுளைப் பற்றிய அகமன வெளிப்பாடுகளுக்கும், பல உருவங்களில் இறையை வணங்கும் மக்களுக்கும் எந்த வித்தியாசங்களும் வேறுபாடுகளும், முரண்பாடுகளும் இல்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள். இந்து மூல நூற்களிலும், முந்தைய இந்து மத அறிஞர்களின் கூற்றுக்களையும் சற்று நேரமெடுத்து நீங்கள் படிக்க முன் வந்தால் நிச்சயம் உங்களுக்கு இவ்வுண்மை புலப்படும். அப்போது, தனது மதம் மட்டுமே உண்மையான மதம் என்று அறிவிலிகள் பேசுவதையும், தனது நிறுவனரிடம் மட்டுமே இறை பேசினார் என்று பீலா விடும் மதங்களையும் எளிதில் இனங்காண முடியும்.
தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
முடிவாக..
இந்து மதம் ஒர் அறிவுப் பூர்வமான பகுத்தறிவுக்கு ஏதுவான மார்க்கம். மனித சமுதாயம் இவ்வுலகில் சாந்தி சமாதானம் ஒற்றுமையுடன் வாழ்வதற்குரிய ஒரு முழுமையான வாழ்க்கைத் திட்டத்தினையே இந்து மதம் தன் அடிப்படையாக உலக மக்களுக்கு முன்வைக்கின்றது. இந்துக்கள் சிலரின் தனிப்பட்ட நடவடிக்கைகள் இந்து ஆன்மீக பாரம்பரியத்துக்கு மாற்றமாகக் கூட சில வேளை இருக்கக் கூடும். அதற்காக இந்து மதத்தைக் குறைகூற முடியாது.
இந்து மதம் எவரையும் அதனை ஏற்றுத்தான் ஆக வேண்டுமென வற்புறுத்துவதில்லை. மற்ற மதங்களை போல அமைதி மதம் என்று பேசிக்கொண்டே அடுத்தவர் வழிபாட்டு தளங்களில் குண்டு வைப்பதில்லை. இம் மார்க்கத்தில் பலவந்தம் கிடையாது என்று பேசிக்கொண்டே, இந்த மதம் தவிர வேறொன்று மனிதனிடமிருந்து ஒப்புக்கொள்ளப்படாது என்று முரண்பாடுடன் பேசுவதில்லை.
உங்களது வழிபாட்டை தடுக்காத ஒருவரின் வழிபாடு நிச்சயமாக இறைவனிடமே செல்லும் என்று ஒப்புக்கொள்ளும் அனைவரும் இந்துக்களே. மற்றவர்களது வழிபாட்டை தடுத்து தனது வழிப்பாட்டு முறையையே எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்று பேசும் மனிதர்கள் சமுதாயத்தின் மீது வன்முறையை திணிக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் பெயர் சொல்லாவிடினும் இந்துக்களே என்றாலும், அதிலுள்ள மேலான சிந்தனைகளையும், ஆன்மீக பாரம்பரியத்தையும், ஞானத்தையும் உலக மாந்தர் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என விரும்புகின்றது. அழைப்பு விடுக்கின்றது.
அன்புள்ள நண்பர்களே,
உங்கள் சிந்தனையைக் கொஞ்சம் தூண்டி விடுங்கள், உங்கள் பகுத்தறிவுக்கு வேலை கொடுங்கள். இந்தியாவில் மனிதர்கள் மலம் அள்ளுவதை கொண்டுவந்தவர்கள், அதற்கு காரணம் இந்துமதம் தான் என்று பிரச்சார மாயை செய்து உண்மையை மறைக்கப்பார்ப்பார்கள். அதன் மூலம், எங்கள் மார்க்கத்திலேயே ஆண்டான் அடிமை போன்ற வித்தியாசம் இல்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்து, 6 வயதுள்ள பெண் பிள்ளைகளை அடிமைப்படுத்தி நாலாந்தாராமாக 60 வயது கிழவனுக்கு மணம் செய்து கொடுப்பதையும், பள்ளி செல்லும் சிறுவன் இடுப்பில் குண்டு கட்டி மார்க்கத்துக்காக தற்கொலை செய்வதையும் நியாயப்படுத்தி பேசுவார்கள்.
இந்துமதம் வாருங்கள். இறை வழி சேருங்கள்.
// இது போன்ற பல கேள்விகளுக்கு இன்று புலப்படும் விடை, இதெல்லாம் குறியீடுகள் என்பதே. அசுரத்தன்மை என்பது நமது மனத்தின் பின் கதவுகள் தாம். கடவுள் கீழிறங்கி வருவது என்பது கடைசியில் நமக்குள் ஏற்படும் விழிப்புணர்வுதான்!" //
அருமையான வரிகள். நேசகுமார் அவர்களே, ஆன்மீக விஷயங்களிலும் உங்கள் புரிதல் மிக ஆழமானது, தெளிவானது என்று புரிகிறது.
Thiagu அவர்களே,
நீண்ட பின்னூட்டத்தில் பல நல்ல கருத்துக்களைச் சொல்லியதற்கு நன்றி. இவ்வளவு ஓபனாக இந்து மதத்துக்கு வாருங்கள் என்று அழைப்பு விடும் உங்கள் தைரியம் கண்டு ஒருவித மரியாதையே ஏற்படுகிறது.
உங்களை இதுவரை தமிழ்மணத்தில் பார்த்ததில்லை. யார் நீங்கள்?
// இந்தக் கட்டுரையை எனது பதிவில் பிரசுரிக்காததை இப்போதுதான் கவனித்தேன். உங்களின் கட்டுரை சிறப்பாக இருக்கிறது. //
நன்றி நேசகுமார். ஆம், அந்த "இருளும் மருளும்" கட்டுரையை நீங்கள் பதிவில் போடவில்லை. இப்போது கூட போடலாம், it is as relevant now as it was then.
// வேறொருவரை சம்பந்தப்படுத்தும் தொணியில் எழுதப்பட்டிருப்பதால் அதை நீக்குவது நல்லது என்று நினைக்கின்றேன். நீக்கினால் மகிழ்வேன். //
நீங்கள் சொல்வது சரி. அந்த மறுமொழி, அதற்கு நான் அளித்த மறுமொழி இரண்டையுமே நீக்கி விட்டேன்.
சரியான சமயத்தில் நல்லதொரு பதிவு, நன்றி.
Post a Comment