இலங்கைப் பிரசினையில் இந்தியத் தலையீடு : அபாயங்கள்
என்னுடைய முந்தைய பதிவைப் படித்த அனானி ஒருவர், என்னுடய நிலைப்பாடு தவறானது என்று கூறி, ஒரு நெடிய மின் அஞ்சல் அனுப்பியிருந்தார். இந்திய தேசியம், இந்து மக்களின் உரிமைகள் இவற்றில் என் போன்றே அக்கறை கொண்டுள்ளதாகத் தம்மைப் பற்றிக் கூறிக்கொண்ட அவர் எழுப்பிய சில வாதங்கள் மிகவும் சிந்தனைக்குரியதாக இருந்தன. அவர் கேட்டுக்கொண்டபடி, அவர் அனுமதி பெற்று அவரது கருத்துக்களை அப்படியே கீழே தருகிறேன்.இந்தப் பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு Anonymous Author என்ற பெயரில் அவர் தமது பதில்களைத் தர வேண்டுகிறேன். ஓவர் டூ அனானி.
அன்புள்ள ஜடாயு,
இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும் என்பதும், இலங்கையில் அவதிப் படும் தமிழர்கள் இந்துக்கள் என்பதானால் இந்தியா தலையிட்டு இந்தப் பிரச்சினையினால் அல்லல் படும் இந்துக்களைக் காக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது என்றும் கூறுகிறீர்கள். மேலும் பிராபகரன் ஒரு நல்ல இந்துவாக இருப்பதனால் அவர் தலைமியிலானதொரு தனி ஈழம் மூலமாக இந்தியாவுக்கு எவ்விதப் பங்கமும் வந்து விடாது என்றும் , அப்படிப் பட்ட ஒரு தனி ஈழம் ஒரு முழுமையான இந்து நாடாக அமையும் என்பதும் உங்களைப் போன்ற இந்து நலம் விரும்பிகளின் எண்ணமாகவும் இருக்கிறது என்று கருதுகிறேன். இதையே வெளிப்படையாகச் சொல்லாமல் தனி ஈழம் அமைந்தால் அது இந்தியாவுக்கு இயற்கையான ஒரு தோழனாக இருக்கும் என்று வை கோபால் சாமி தனது ரீடிஃப் நேர்முகத்தில் கூறியுள்ளார். இந்துக்களின் நலனில் எனக்கும் உங்களளப் போலவே பெருத்த அக்கறையும், இலங்கையில் பரிதவிக்கும் சகோதரர்களுக்கு அமைதியானதொரு தீர்வு கிட்டி அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் அனைத்து உரிமைகளுடன் வாழ வேண்டும் என்ற அக்கறையும் முற்றிலும் உண்டு என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். நான் உங்களுடன் கருத்து வேறு படுவது இலங்ககத் தமிழர் பிரச்சினையில், இந்தியாவின் தலையீடு எந்த அளவுக்குள் இருக்க வேண்டும் என்பதில்தான். பின்வரும் எனது பதிவில் எனது அச்சங்களையும், சந்தேகங்களளயும், கருத்துக்களையும் தெரிவித்துள்ளேன். இலங்கைப் பிரச்சினையில் புலிகளுக்கு இந்தியா உதவ வேண்டும் என்ற உங்களைப் போன்ற இந்து/இந்திய நலனில் அக்கறை கொண்ட தேசீயவாதிகள் அனைவரும் எனது கேள்விகளில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டு எனது சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கலாம்.
இந்தியா ஏன் இலங்கைப் பிரச்சினையில் தலையிடக் கூடாது என்கிறேன் ?
1983 உங்களுக்கு எந்த அளவு நினைவு இருக்கும் என்பது தெரியவில்லை. நான் அப்பொழுது படித்து முடித்து விட்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்த நேரம். துடிப்பான இளைமைப் பருவம். தமிழ் நாடே பற்றி எரிந்து கொண்டிருந்தது. தமிழ் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கும், உணர்ச்சிக் கொந்தளிப்பாக இருந்த நேரம் அது, தீவட்டி ஊர்வலம், கொடும்பாவி எதிர்ப்பு என தமிழர்களின் உணர்ச்சிகள் உச்சகட்டமாகத் தூண்டப் பட்டதொரு காலம். மிக எளிதாக தமிழர்களின் உணர்வவத் தூண்டி ஒரு பெரிய கலவரத்தைத் தூண்ட முடியும் என்று நிரூபிக்கப் பட்ட சமயம். சும்மா தீக்குச்சியைக் கொளுத்திப் போட்டால் பற்றிக் கொண்டு எரியும் காலம். அப்படி ஒரு உணர்ச்சி பூர்வமான கொந்தளிப்பு, அதன் பின்னர் எந்தவொரு பிரச்சினைக்காகவும் தமிழ் நாட்டில் உருவாகவில்லை. 1991ல் நடந்த ஒரு படு கொலை, இலங்ககத் தமிழர்கள் மேல் இருந்த அத்தனை நல்லெண்ணத்தையும், நேசத்தையும், பரிதாப உணர்வையும் அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டது, அதே தமிழகம் பற்றி எரிந்தது, மீண்டும் உணர்ச்சிக் கொந்தளிப்பு, இந்த முறை தொப்புள் கொடி உறவு என்று சொந்தம் கொண்டாடிய அதே இலங்கைத் தமிழர்களின் மீது ஆவேச வெறுப்பாக மாறியது.
ஆக தமிழர்களை எளிதில் உணர்ச்சி வசப்படுத்த வைக்கலாம், அறிவு ரீதியாக இல்லாமல் , உணர்ச்சி ரீதியாக அவர்களை எந்தவொரு மாபெரும் போராட்டத்துக்கும் தூண்டலாம் என்பதை அறுபதுகளில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமும்,
83ல் நடந்த இலங்கைத் தமிழர் ஆதரவு போராட்டங்களும், ரரஜீவ் கொலைக்குப் பின்னர் நடந்த உணர்ச்சிக் கொந்தளிப்புகளுமே சாட்சி. தமிழக மக்களை எளிதில் உணர்ச்சி பூர்வமாக தூண்டி விடலாம் என்பதை அரசியல்வாதிகள் சரியாகப் புரிந்து கொண்டனர். 1983-91 வரை விடுதலைப் புலிகளும், பிற இலங்கைப் போராளி அமைப்புகளும் தமிழ் நாட்டில் சர்வ சுதந்திரத்துடன் வலம் வந்தனர். அந்தக் காலத்தில் தி க, நெடுமாறன் , பெருஞ்சித்திரனார் போன்ற ஒரு சில பலவீனமான அமைப்புகள் தவிர வேறு தனித் தமிழர் பிரிவினைவாத அமைப்புகள் பலம் பெற்றிராத நேரம். பா ம க, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்புகள் பலம் பெற்றிராத காலம்.
அப்படிப் பட்ட தீவீர தமிழர் அமைப்புகள் இல்லாத சமயத்திலேயே தமிழ் நாட்டில் எளிதாக உணர்ச்சி பூர்வமான ஒரு சூழலை எளிதாக உருவாக்க முடிந்தது என்றால் இன்றய சூழலில், எந்த அளவுக்குத் தமிழ் நாட்டில் வன்முறையானதொரு போரரட்டத்தை இந்திய அரசினை எதிர்த்தோ அல்லது இந்திய ஒருமைப்பாட்டை எதிர்த்தோ தூண்ட முடியும் என்பதை சற்று எண்ணிப் பாருங்கள். தமிழக மக்கள் பொதுவாக அமைதியானவர்கள், ஆனால் அவர்கள் ராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்ற மனநிலை உடையவர்கள். தனித்தமிழ் நாடு நோக்கம் கொண்ட அமைப்புகள் சிறிதாக இருப்பினும் கூட அவர்களின் வன்முறை சார்ந்த போராட்டத்தைக் கண்டு அஞ்சி அதற்கு மொளனமான ஆதரவு காட்டினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஆக இந்திய இறையான்மையை எதிர்த்தும், தனித் தமிழ் நாட்டுக்கு ஆதரவு கோரியும் ஒரு மாபெரும் வன்முறைப் போராட்டத்தை ஆரம்பிப்பதும், துண்டுவதும் அதைத் தொடர்ச்சியாக நடத்தி தமிழ் நாட்டை ஒரு காஷ்மீர் போலவோ, அஸ்ஸாம் போலவோ, ஒரு வடகிழக்கு மாநிலம் போலவோ ஆக்க அதிக நேரம் பிடிக்காது என்ற உண்மையை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டு, இதை நான் ஏதோ தனித்தமிழர் அமைப்புகளின் மீது உள்ள வெறுப்பினால் மிகைப் படுத்திக் கூறுவதாக நினைத்தால் தயவு செய்து இன்றைய ரீடிஃ பேட்டியில் கோபலசாமி என்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதி எத்தனை முறை தமிழகம் காஷ்மீராக மாறும் என்று எச்சரிக்கை விடுகிறார் என்பதை உற்று நோக்குங்கள். தமிழகத்தில் தினமும் நடக்கும் ஒரு நெடுமாறன் கூட்டத்திற்கோ ஒரு தி க கூட்டத்திற்கோ சென்று கேளுங்கள், நான் சொல்வதில் ஒரு அணு கூட மிகைப் படுத்துதல் இல்லை என்பது புரியும். தி மு க, அதிமுக இந்தக் கும்பலில் இணையா விட்டாலும் கூட வெறும் பா ம க, வி சி, ம தி மு க போன்ற அமைப்பில் உள்ளவர்கள் மட்டுமே இப்படிப் பட்ட ஒரு வன்முறைச் சூழலை உருவாக்கி அதற்கு பிற அமைப்புகளின் ஆதரவவ எளிதாகப் பெற்று விட முடியும் என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு மேலே படியுங்கள்.
1983ல் எங்கள் வீட்டின் அருகே பல வீடுகளில் விடுதலைப் புலிகள் தங்கியிருந்தனர். இடுப்பில் துப்பாக்கி சொருகிக் கொண்டு பைக்கில் அங்கும் இங்கும் போய் வருவார்கள். நமது போலீசாரிடம் கூட சாதாரண தருணங்களில் இடுப்பில் துப்பாக்கியைப் பார்த்திராத எங்களுக்கு சர்வ சாதாரணமாக இடுப்பில் துப்பாக்கியுடன் திரியும் புலிகளைக் கண்டு ஒரு வித அச்சம் ஏற்பட்டது. ஆனால் வேலை வெட்டியில்லாத இளைஞர்களுக்கோ அவர்கள் ஹீரோவாகத் தெரிந்தனர். அவர்களிடம் இவர்கள் எடுபிடிகளாக வேலை செய்தனர். தமிழ் நாட்டில் துப்பாக்கியுடன் திரிவது சாதாரணமானதொரு கலாச்சாரமாக மாறியது. மெதுவாக அவர்களது அடாவடிகள் பல இடங்களில் தலை தூக்கின. போலீசார் மொளனம் காத்தனர். தமிழ் நாட்டின் சூழல் மெதுவாக மாறிக் கொண்டிருந்தது. சென்னை பாண்டி பஜாரில் வெளிப்படையாகத் துப்பாக்கிச் சண்டை நடந்தது. மீனம்பாக்கம் விமானநிலையத்தில் குண்டு வெடித்தது. இந்த சூழல் எம் ஜி யாரின் உடல் நலம் கெட்ட பொழுது கொஞ்சம் தொய்ந்தாலும், மீண்டும் அவர் மறறவுக்குப் பின் வந்த கருணாநிதி ஆட்சியில் உச்சகட்டம் அடைந்தது. பத்மநாபாவையும் 13 பேரையும் கொன்ற சிவராசன் எவ்விதத் தடையுமில்லாமல் இலங்கை செல்ல முடிந்தது. அவனைத் தடுக்கத் துணிந்த கான்ஸ்டபிள் சுட்டுக் கொல்லப் பட்டார். எஸ் பி சஸ்பெண்ட் செய்யப் பட்டார். அவன் மீண்டும் வந்தான் அடுத்த முறை அது ராஜீவின் கொலையில் முடிந்தது. இது ஒரு சுருக்கமான வரலாறு. ஜடாயு, உங்களைப் போன்றவர்களுக்கு இதன் தாக்கம் தெரியாததால் விடுதலைப் புலிகளால் தமிழ் நாட்டில் ராஜீவ் கொலையைத் தவிர வேறு உபத்திரவம் கிடையாது என்று அப்பாவித்தனமாக எழுத முடிகிறது.
பங்களாதேஷ் யுத்தத்தில் வெற்றி கண்ட இந்திராவுக்கு அது போன்ற சாகசங்களில் தொடர் நாட்டம் ஏற்பட, பிந்தரன்வாலே, விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புக்களுக்கு வெளிப்ப்டையாக இந்திய ராணுவ பயிற்சி போன்றவற்றை கொடுக்க ஆரம்பித்தார். வன்முறை இருபுறமும் கூர்மையானதொரு ஆயுதம், அதைத் தேவையில்லாமல் பிரயோகித்தால் அது பயன்படுத்தியவரையே தாக்கி விடும் என்ற உண்மையை அவர் தனது கடைசி மூச்சின் போதுதான் புரிந்து கொண்டார். அவர் செய்த முட்டாள்தனங்களின் விலையை அவரது உயிராகவும், பின்னர் அவரது மகனது உயிராகவும் கொடுக்க நேர்ந்தது. இலங்கை என்பது இந்தியாவுக்கு அதிக அளவில் தொந்தரவு கொடுக்காத ஒரு சிறிய நாடு என்பதையும், பங்களாதேசம் போலவே இலங்கையைப் பிரிக்க நினனத்தது எவ்வளவு அபத்தமானதொரு காரியம் என்பதையும் அவருக்குப் புரிவதற்கு முன்பாகவே அவரது மற்றொரு தவறு அவரைப் பலி வாங்கியது.
தனது அன்னன துணிந்த ஆபத்தான சாகசங்களால் அவரது உயிர் போயிற்று என்பதைக் கூட உணர முடியாத முட்டாள் அரசியல்வாதி ரரஜீவ் காந்தில் பக்கத்து வீட்டுச் சண்டையில் மூக்கை நுழைத்தன் விளைவை அனுபவித்தவர். 1991 ராஜீவ் கொலை. நான் ராஜீவ் காந்தியின் ரசிகன் கிடையாது. என்னைப் பொருத்தவரை அவர் ஒரு முட்டாள். இலங்கைப் பிரச்சினையில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்தது, உரிய அறிவு இல்லாமல் , அனுபவம் இல்லாமல் எல்லை தாண்டிய பிரச்சினையில் சிறுபிள்ளளத் தனமாக ஆணவப் போக்கில் நடந்து கொண்டது, இந்திய ராணுவத்தை அனுப்பி அவர்களை பக்கத்து வீட்டுக்காரன் சண்டையில் பலி கொடுத்து, அவர்கள் சேர்ந்து கொண்ட பின் எதிர்க்க இயலாமல் கைகளைக் கட்டிப் போட்டது போன்ற முட்டாள்தனமானங்களின் மொத்த உருவம் ராஜீவ் காந்தி. அதற்கான விலை அவர் உயிர்.
ராஜீவுக்குப் பின்னர் வந்த நரசிம்ம ராவும், வாஜ்பாயும் சுதாரித்துக் கொண்டனர். முந்தைய உயிர் இழப்புக்கள் அவர்களுக்கு நல்ல பாடமாக அமைந்தன. எந்த அளவுக்கு தலையிட வேண்டும் என்பதை புரிந்து கொண்டனர். ஆனால் அவர்களிடம் உரிய ஆளுமையும், சுய பலமும் இருந்தது. இப்பொழுது மீண்டும் ஒரு முதுகெலும்பில்லாத மனிதரின் ஆட்சி. இத்தாலிக் காரரின் தலையீடுகள் என்று இந்தியா ஒரு சிக்கலான தருணத்தைக் கடந்து வரும் பொழுது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பிரிவினைவாதக் கும்பல்களோ, இதன் மூலம் இன்னும் ஒரு வடகிழக்கு மாநிலங்களின் சூழலை தெற்கிலும் உருவாக்க முடியுமான என மிஷனரிகளும் முயல்கின்றன. இந்தச் சதித் திட்டங்கள் எல்லாம் இந்திய தேசிய அமைப்புகளும், உங்களைப் போன்ற தேசாபிமானிகளும் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை என்றே கருதுகிறேன். அதனால் தான் இந்த நீண்ட மடல்.
ரரஜீவ் காந்தியின் கொலைக்குப் பின் தமிழர்களை உணர்வு பூர்வமாக தட்டி எழுப்பக் கூடிய எந்தவொரு தீவீரமான பிரச்சினையும் இந்தப் பிரிவினை சக்திகளுக்கு கிட்டவில்லை. அதற்கான சந்தர்ப்பம் கனியக் காத்திருக்கின்றனர். இருந்தாலும் இலங்கைத் தமிழர்கள் மீது உள்ள அனுதாபம் இன்னுமொரு முறை உணர்ச்சிபூர்வமான கிளர்ர்சியாக உருவெடுக்குமா என்பது சந்தேகமே. தி மு க வின் தலைமைக் குடும்பத்துக்கு வேறு ஒரு ஆதாயம் கொடுக்கும் பிசினஸ் சன் டி வி சாம்ர்ஜ்யத்துடன் கிட்டி அவர்களள உலகப் பணக்காரர்கள் வரிசையில் கொண்டு வைத்து விட்டது. இப்படி ஒரு பணம் கொழிக்கும் வியாபாரம் ஒன்று பட்ட் இந்தியாவில்தான் சாத்தியம் என்பதும் புரிந்து விட்டதால், இனிமேலும் பிரிவினன வாத அரசியலில் லாபம் கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்ட கருணாநிதி இனிமேலும் மொழி, இனம் மூலம் மக்களை தூண்டும் அரசியலை அவ்வளவாக விரும்ப மாட்டார். பெரியாறு அணையில் தண்ணீர் வராவிட்டாலும் காவிரி காய்ந்தாலும் அவருக்கு ஒரு பொருட்டல்ல, அதனால் போராட்டம் ஏதும் நடத்தி தனது டி வி வியாபாரத்துக்குப் பங்கம் வந்து விடக் கூடாது என்பது ஒன்றே குறியாக இருக்கிறார். ஆனால் இதர பிரிவினைவாத சக்திகளுக்கு அதன் அரசியல் எதிர்காலமே தனித் தமிழ் நாடு கேட்பதிலும் தமிழ் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விடுவதிலுமே அடங்கி உள்ளது. அது போலவே மற்றொரு வடகிழக்கு மாநில சூழலை உருவாக்க மிஷினரி சக்திகளும் காத்துக் கிடக்கின்றன. அவர்களுக்கு இந்து விரோத இந்திய விரோத பிரிவினனவாத சக்திகள் ஒரு இயற்கையான கூட்டாளியாக அமைகின்றனர். இந்த பிரிவினைவாத அரசியலுக்கு இந்து அமமப்புகளும், இந்திய தேசியத்தில் நம்பிக்கையுள்ள கட்சிகளும் ஏன் துணை போக வேண்டும் ?
மத்தியில் வலுவில்லாத ஒரு அரசு செயல்படும் இன்றைய சூழலில், 1983 ஏற்பட்ட எழுச்சி இப்பொழுது பிரிவினைவாத சக்திகளுக்குத் தேவைப் படுகிறது. அதற்கு கிறிஸ்துவப் பாதிரியார்களின் ஆசிகளும் பரிபூரணமாகக் கிடைக்கின்றன. அதை உருவாக்க விகடன் போன்ற பத்திரிகககள் தலை கீழாக முயல்கின்றன. விகடன் போன்ற பத்திரிகைக்கு
தமிழ் நாட்டின் நலன்களில் அக்கறை கிடையாது. தமிழ் நாடு நாளைக்கு போதை மருந்து சந்தையாக மாறினாலோ, மற்றொரு காஷ்மீராக மாறினாலோ அவர்களுக்கு மேலும் வியாபாரமே. மக்களின் உணர்ச்சியைத் தூண்டுவதன் மூலம் தனது பத்திரிகையின் பிராமண இமேஜ் மறந்து போய் அதிக பிரதிகள் விற்பனையாக வேண்டும் அவ்வளவுதான். ஆனால் அப்படி ஒரு தனித் தமிழ் நாடு உருவாகுமானால் இதே விகடன் பத்திரிகை காணாமல் போய் அதன் உரிமையாளர்கள் தமிழ்நாட்டை விட்டே உயிருக்கு பயந்து ஓட வேண்டி வரும் என்ற சிறிய உண்மையைக் கூட உணர முடியாமல் அவர்களது வியாபாரப் பேராசை கண்ணை மறைக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு திரட்டும் வண்னம் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டு விகடன் போன்ற பத்திரிகைகள் தமிழ் நாட்டு மக்களுக்கு கடும் துரோகம் விளைவிக்கின்றன. அப்படிப் பட்ட பத்திரிகைகளுக்குத்தான் வியாபார நோக்கம் என்றால் இந்து அமைப்புகள் ஏன் இந்த பிரிவினை நோக்கம் சார்ந்த அரசியலை ஆதரிக்க வேண்டும் ?
இன்று இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தமிழர்களுக்கு ஆதரவு நிலை எடுக்குமானால் அதனால் முழு முதல் பயனும் அனுபவிக்கப் போகிறவர்கள் விடுதலைப் புலிகளே. இந்தியா தலையிட்டு எடுக்கும் எந்த முடிவும் தமிழர்களின் சர்வாதிகாரத் தலைமமயின் நன்மையில்தான் முடியும்., இன்று வேறு எவ்வித ஜனநாயக தமிழ் அமைப்புகளும் இல்லாத நிலையில், இலங்கைத் தமிழர் ஆதரவு என்றாலே அது பாசிச சக்திகளின், அவர்களுக்கு மறைமுகமாக ஆதரவு தரும் பிரிவினை சக்திகளைத்தான் ஆதாயப் படுத்தும். அதனால் என்ன என்ன விளைவுகள் தமிழ் நாட்டில் ஏற்படும் ? இன்று தனித் தமிழர் அமைப்புகள் முன்னெப்போதையும் விட பலமுள்ளதாய் இருக்கின்றனர். பா ம க, விடுதலைச் சிறுத்தைகள் , தி க, ம தி மு க போன்ற அமைப்புகள் நிதி ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் பலமுள்ள அமைப்பாகத் திகழ்கின்றன. அவர்களுக்கு அவர்களது அபிமானிகளின் உணர்ச்சிகளளத் தக்க விதத்தில் தூண்டி விட ஒரு சிறிய பொறி தேவையாக உள்ளது. ராஜீவ் காந்தியின் கொலையினால், பொது மக்களளின் ஆதரவு அது போன்ற உணர்ச்சி ரீதியான எழுப்பல்களளப் புறக்கனித்து மழுங்கிக் கிடக்கிறது. இந்த அமைப்புகளுக்கு இந்திய அரசின் ஒரு கண் சிமிட்டல் கிடைத்தால் போதும், மீண்டும் பொது மக்களின் உணர்வுகளை அப்பாவி இலங்கைத் தமிழர் ஆதரவு என்ற போர்வையில் விடுதலைப் புலிகளின் ஆதரவாக மாற்ற பத்திரிகைகளும், பா ம க போன்ற கட்சிகளும் காத்துக் கிடக்கின்றன.
அந்தப் பொறியைக் கிளப்பத் தடையாக இருப்பது மத்திய அரசின் ரா போன்ற அமைப்புக்களும், நாராயணன் போன்ற அதிகாரிகளுமே. அது போன்ற ஒரு உணர்ச்சி பேரலையை மிக எளிதாக எழுப்பி விடலாம். இலங்கை ராணுவத்தை தக்க விதத்தில் தூண்டி அவர்கள் பதிலடி கொடுக்கும் இடத்தில் குழந்தைகளையும் பெண்களளயும் வவத்து பலிகடாவாக்கி தமிழர்களின் பரிதாபத்தை எளிதாகப் பெற்று விடலாம். இந்திய அரசு மட்டும் கண்டு கொள்ளாமல் இருக்குமானால் அந்தச் சிறு பொறியை பற்ற வைத்து விடலாம். அதன் பின்னர் புலிகள் தமிழ்நாட்டுக்குள் மீண்டும் தங்கு தடையின்றி நடமாடலாம். அப்படி புலிகளின் தங்கு தடையில்லாத தளமாக தமிழ் நாட்டைக் கொணர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கோபாலசாமி, ராமதாஸ், திருமாவளவன் போன்ற பிரிவினைவாதிகளும், புலிகளுக்கு ஆதரவு தரும் சர்ச் அமைப்புகளும் தலை கீழாக நிற்கின்றன. அவர்களுக்குத் தேவையான அந்த ஆதரவு மத்திய அரசிடம் இருந்து இதுவரை கிட்டவில்லை. நாளைக்கே பி ஜே பி தலைமியிலான அரசொன்று அமையுமானால் அதன் மூலமாகவும் கிட்டி விட இந்து அமைப்புகள் துணை போய் விடக் கூடாது.
அப்படியொரு ஆதரவு விடுதலைப் புலிகளுக்குக் கிட்டி அவர்கள் தமிழ் நாட்டில் சுதந்திரமாக உலவ முடியும் நிலமை வருமானால், பழைய 1983 போல் இந்த முறை தமிழ் நாடு அமைதியாக இருக்காது. வி சி, பா ம க, நெடுமாறன் போன்ற அமைப்புக்களும், புலிகளுக்கு உதவப் போகிறோம் என்ற போர்வையில் துப்பாக்கி பயிற்சி பெறுவார்கள். எல்லோர் கைகளிலும் அருவாளுக்குப் பதிலாக ஒரு துப்பாக்கி இடம் பெறும், அதிகம் வேண்டாம் சில லட்சம் இளைஞர்களுக்கு இந்தத் துப்பாக்கிகளும் ராக்கெட் லாஞ்சர்களும் கிடைத்தாலே போதுமானது இந்தப் போராட்டத்தை இலங்கையில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வர. மற்றுமொரு காஷ்மீர், மற்றுமொரு வட கிழக்கு தமிழ் நாட்டில் நிகழ அதிக நேரம் எடுக்காது. அதைத்தானே மிஷினரிகள் விரும்புகிறார்கள். அதனால்தானே இந்து ஆதரவாளர்களை விட மிஷனரி அமைப்புகள் இவர்களுக்கு விருப்பமுள்ளவையாக இருக்கின்றன.
புலிகள் தங்களது முக்கிய நிதி ஆதாரமான போதை மருந்துக் கடத்தலை தமிழ் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு நடத்துவார்கள். தனித் தமிழ் நாடு போராளிகள் அதற்கு ஏஜெண்டாக மாறுவார்கள். கடந்த 40 ஆண்டுகால திராவிட அரசுகளினால் குடிக்கும் வழக்கம் வந்தது போல் தமிழக இளைஞர்கள் போதை மருந்துக்கு அடிமமயாவார்கள்.
ரரக்கெட் லாஞ்சரில் இருந்து, விமானம் வரை தமிழ்நாட்டிலேயே தயாரிக்கப் பட்டு தமிழ் நாடு மற்றொரு பால்ஸ்தீனமாகும். புலிகளுக்கு தனி ஈழம் கிட்டி விட்டால் அதை தக்க வைத்துக் கொள்ள இந்திய மத்திய அரசின் தலையீடு இல்லாத ஒரு தனித் தமிழ் நாடு தேவைப் படும். ஆதலால் புலிகள் தனித் தமிழ் நாடு போராளிகளுக்கு ஆதரவு அளித்து தமிழ் நாட்டை மற்றுமொரு காஷ்மீராக மாற்ற முயல்வார்கள். அது நிச்சயம் நடக்கும். இன்று புலிகள் எங்களுக்கு அப்படியொரு நோக்கம் இல்லையென்று வெளியில் சொன்னாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரிவினைவாதிகள் அந்தத் திட்டத்தை மறைக்க முயல்வதேயில்லை. தனி ஈழம் கிட்டிய அடுத்த நிமிடமே தனித் தமிழ் நாட்டுக்கானதொரு போர் ஆரம்பித்து விடும்.
தமிழ் நாட்டையும் சேர்த்து ஒரு அகண்ட தமிழகம் படைத்து விட்டால் இலங்கையினால் விடுதலைப் புலிகளை ஒன்றும் செய்ய இயலாது. இந்தியாவினாலும் தமிழ் நாட்டை திரும்பப் பெற இயலாது. தமிழ் நாட்டில் இருந்து வட இந்தியர்கள், கன்னடர்கள், மலையாளிகள் அடித்து துரத்தப் படுவார்கள். அதன் பின்னர் பிராமணர்கள் அழிக்கப் படுவார்கள் அல்லது நாடு கடத்தப் படுவார்கள். இதைத்தான் இன்று நாம் வட கிழக்கு மாநிலங்களில் சந்தித்து வருகிறோம். நாகாலாந்தில் வீட்டுக்குள் கூட தீபாவளி கொண்டாட முடியாத நிலைமை அதே நிலமை தமிழ் நாட்டுக்குள் வர அதிக நேரம் பிடிக்காது. தமிழ் நாட்டின் இன்றைய பிரிவினைவாத சக்திகள் அனைத்துமே இந்து எதிர்ப்பாளர்கள் என்பதும், நாத்திகர்கள் என்பதும், சர்ச் ஆதாரவாளர்கள் என்பதும் உள்ளங்கக நெல்லிக் கனி. அவர்களுக்கு சர்ச்களின் பணமும் கிடைக்கும் பொழுது தமிழ் நாட்டில் இருந்து இந்து மதம் விரைவில் வெளியேற்றப் படும். இன்றைக்கு புலிகளுக்கு கொடுக்கும் ஆதரவு நாளைக்கு ஒரு தனிக் கிறிஸ்துவ தமிழ் நாட்டின் அஸ்திவாரம் என்பதை நாட்டுப் பற்றுள்ள ஒவ்வொரு இந்து அமைப்புகளும் உணர வேண்டும்.
இந்தியாவில் இருந்து ஒரு காஷ்மீரையோ, ஒரு நாகலாந்தையோ, ஒரு அருணாச்சலப்பிரதேசத்தையோ விட்டுக் கொடுக்க எந்தவொரு தேச பக்தியுள்ள இந்தியனாவது ஒத்துக் கொள்வானா ? அப்படி இருக்கும் பொழுது இலங்கக மட்டும் ஏன் தன் நிலப் பரப்பை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று இந்து ஆதரவாளர்கள் எதிர்பார்க்க வேண்டும், நமக்கென்றால் வெண்ணை, இலங்கைக்கென்றால் சுண்ணாம்பா ? அப்படி என்ன இந்தியாவின் ரியல் எஸ்டேட் உசத்தி, இலங்கையின் ரியல் எஸ்டேட் தாழ்த்தி ? அந்தந்த நாட்டுக்கு அதன் அதன் நிலப் பரப்பு முக்கியம். அதில் தலையிட இந்தியாவுக்கும், அதில் தலையிட வேண்டும் என்று சொல்ல எந்தவொரு இந்திய அமைப்புக்கும் உரிமையில்லை. இன்று நாம் தனி ஈழத்தை ஆதரிப்போமாயின் எந்த முகத்தை வைத்துக் கொண்டு காஷ்மீரப் பிரச்சினையில் பாக்கிஸ்தானை எதிர்க்க முடியும் ? இரட்டை வேடமாகி விடாதா, நமது கோரிக்கக. இலங்கையை தமிழர்களுக்கு சகல உரிமைகளளயும் கொடுக்கச் சொல்லி நாம் தாராளாக வற்புறுத்தலாம், தேவை ஏற்பட்டால் அதன் கைகளை முறுக்கி, பொருளாதாரத் தடைகளை விதித்து நிர்ப்பந்திக்கலாம் அதை விடுத்து, இலங்கைப் பிரிவினைக்கு நாம் எந்த விதத்திலும் துணை போகக் கூடாது. இந்து அமைப்புகள் இதில் உறுதியாக இருக்க வேண்டும், பாம்புக்குப் பால் வார்க்கக் கூடாது, நம் தலையில் நாமே மண்ணை வாறிப் போட்டுக் கொள்ளக் கூடாது.
புலிகளைப் பொருத்தவரை அவர்களுக்கு இந்து அபிமானம் என்றெல்லாம் ஏதும் கிடையாது என்பதும், மிஷனரிகள் மூலமாகவோ, தாலிபான் மூலமாகவோ தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்த இயலுமானால் தாராளாமாக அது போன்ற அழிவு சக்திகளுடன் கை கோர்த்துக் கொள்ள தயங்க மாட்டார்கள் என்பதை கீழ்கண்ட தளத்தைப் படித்தால் புரிந்து கொள்ளலாம்.
http://freetruth.50webs.org/D4g.htm#Terrorism
http://www.christianaggression.org/item_display.php?type=ARTICLES&id=1113838580
ஆகவே புலிகள் இந்து ஆதரவாளகளாக இருப்பார்கள் என்ற நினைப்பில் அவர்களுக்கு இன்று நாம் ஆதரவு கொடுப்போமாயின் முதலுக்கே மோசம் விளையும் என்று எச்சரிக்கிறேன்.
இந்திய அரசு இலங்கைப் பிரச்சினையில் இன்னும் ஒரு முறை புலிகளுக்கு ஆதரவான நிலல எடுக்குமானால், இந்தியா தமிழ் நாட்டை பத்து வருடங்களுக்குள் மொத்தமாக இழந்து விடக் கூடிய ஆபத்து இருக்கிறது. இது வெற்றுப் பூச்சாண்டி அல்ல, நிதர்சனம், இந்தத் தருணத்திற்காகவே தமிழ் நாட்டின் பல குள்ள நரிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. பாரதமாதா தன் தலையை மட்டும் அல்ல இரு கைகளையும், இழந்தது போதாமல் தன் வலங்கால் தொடங்கி பாதம் வரையும் இழப்பாள். நான் இங்கு சொன்னது எதுவும் மிகைப் படுத்தப் பட்டது அல்ல. நெடுமாறன் போன்றவர்கள் மிக வெளீப்படடயாக பொதுக்கூட்டங்களில் பேசும் விஷயம் தான். இணையத்தில் பலரும் வெளிப்படையாக எழுதியவைதான். அதற்கான தருணம் கனியக் காத்திருக்கின்றனர். அதனால் பலனடையப் போவது விடுதலைப் புலிகள் மட்டுமல்ல, இந்தியப் பிரிவினையைத் தூண்ட எதையும் செய்யத் தயங்காத மிஷினரிகளும், முல்லாக்களும், கம்னியுஸ்டுகளும் கூடத்தான். அவர்களுடன் நாமும் துணை போக வேண்டுமா என்பதுதான் என் கேள்வியே. நிச்சயமாக அப்பாவி இலங்கைத் தமிழர்கள் புலிகளுக்கும், சிங்கள அரசுக்கும் நடுவே கிடந்து அல்லல் படுவது பரிதாபத்துக்குரியதே. அவர்களுக்கு இந்திய அரசு எப்படி உதவி செய்யலாம் ?
1. இலங்கை அரசுடன் கண்டிப்பாக பேசி, இன்று தமிழ் நாடு இந்தியாவில் அனுபவிக்கும் உரிமைகள் போன்றதானதொரு மாநில அமமப்புக்கு உடனடியாக அவர்களை சம்மதிக்க வைக்க வேண்டும். அது போன்ற அமைப்பை கண்காணிக்கும் உரிமையை பெற வேண்டும்.
2. அப்படி இலங்கை அரசை ஒத்துக் கொள்ள வவத்தவுடன், சிங்கள ராணுவத்துக்கு உதவி புலிகளை பூண்டோடு அழிக்க வேண்டும். தீவீரவாதிகளின் கைகளில் துப்பாக்கி இருக்கும் வரை தன் நிலையில் இருந்து இறங்கி வர இலங்கை முன்வராது. புலிகளின் தீவீரவாதப் பற்கள் பிடுங்கப் பட வேண்டும்.
3. பின்னர் கடும் நிபந்தனைகளள விதித்து ஒரு சமஷ்டி தமிழ் மாநிலத்தை ஏற்படுத்தச் செய்ய வேண்டும் அந்த தமிழ் மாநிலத்தில் தமிழர்களுக்கான அனைத்து உரிமைகளளயும் இலங்கை அரசு அளிப்பதைக் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.
4. அந்த மாநிலத்துக்கு கல்வி, அடிப்படை கட்டுமானம் போன்ற உதவிகளை நிர்மாணித்து, தன்னிறைவானதொரு மாநிலமாக மாற்ற சகல உதவிகளையும் அளிக்க வேண்டும். அதை பொருளாராத ரீதியில் சிங்கள அரசால் அலட்சியப் படுத்தி விட முடியாத ஒரு வலுவான மாகானமாக மாற்ற வேண்டும். அதன் பின்னர் நிலமை சமச் சீர் அடையும். நாளைய இந்தியா ஒன்று பட்டு பிரிந்து விடாமல் இருக்க வேண்டுமானால் இன்றைய இலங்கை ஒன்று பட்டு இருத்தல் அவசியம். பாரத மாதாவின் கண்களை நம் கைகள் கொண்டே குத்திட வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்.
ஜெய்ஹிந்த்
வந்தே மாதரம்.
24 comments:
testing..
Nice write up.
We should never play hypocritical in this game. We do not have any business to split another country based on anything anymore.
(What did we gain by splitting pakistan into two? Instead of one enemy, now we've got 2 enemies in Pak & Bangladesh.)
At the same time, we should not be a silent spectator as well. Already Pakistan & US are trying to gain an advantage by filling the void that India has left in Sri Lanka by trying to show as if they're helping the SL government. But all they are doing is to get a foothold in the southern tip of India. Think what ISI can do to TN if they get a foothold in SL. Consequences would be real bad to us.
So, we should be actively engaging both the parties and try to come up with a solution. But what would be that solution? No idea at all. :(
ஜடாயு அவர்களே, தயவு செய்து FONT, BACKGROUND எதாவது ஒன்றை மாற்றிவிடுங்கள்....படிக்க முடியவில்லை....
அனானி, இது போன்றே வேறு சிலரும் சொல்லியிருந்தார்கள். அவர்கள் எல்லாரது கோரிக்கையையும் ஏற்று, மிகவும் plain ஆன ஒரு template தேர்ந்தெடுத்து விட்டேன். screen size முழுவதையும் இந்த template பயன்படுத்துகிறது.
ஐயா.. புலிகளை அழிக்க வேண்டுமானால் தயவு செய்து இந்தியாவே அழிக்கட்டும்..
//சிங்கள ராணுவத்துக்கு உதவி புலிகளை பூண்டோடு அழிக்க வேண்டும்.//
சிங்கள இராணுவத்திற்கு உதவினால் யார் அழிவார்கள் என்று தெரியாதது போல நண்பர் நீள எழுதுகிறார்
இந்த மடலை எழுதியவர் புலிகளையும் ஈழத்தமிழ் மக்களையும் தனித் தனியாகப் பிரித்துப் பார்க்கத் தூண்டுகிறார்.
அத்தகய சூளல் இன்றய நிலையில் மிகவும் கஷ்டம் என்றாலும் There is hope. மாற்றமே உலக நியதி. ஈழத்தவர்கள் பெருவாரியாக ஜனநாயக எழுச்சி செய்தாலொழிய அவர்கள் முன்னேற வேறு வழி இல்லை.
The anonymous person is trying to fear monger against the Tamils. Tamil Tigers run a defacto state in Sri Lanka right now. They control 1/3 of the country. They have a police force, court system,banking system, school system(in Tamil).
They pay poor children to go to school. That's right! They pay 2000 rupees every month to the parents so they won't send the kids to work.
They also respect all religions. They have helped rebuild several of the Hindu temples which were destroyed by the Singhalese bombings.
They have a taxation process to get revenues. They don't need to smuggle drugs like the person above mentioned.
They also have a 1.2 million Tamil Diaspora in 15 western countries. It will only take a year for those Diaspora to build Tamil Eelam up.
Just remember there were several Diravidian kingdoms before the British arrived.
But right now there are 220 million Diravidians in this world and we don't have our own country! Look at all the other races!
Tamil Eelam would be the first Diravidian nation which will help bring Hinduism, Tamil and Tamil culture to the world.
No need to panic about the Fear monger above!
Ram Sathyanarayan
The person who wrote the above article has a "hidden" agenda.
Tamil National Alliance is a pro-Tiger political party. They have 22 MPPs in the Sri Lankan government.
Tamil Tigers are popular for discipline. There were several groups trained by Indian military in the 80s. Now all of them disappeared because they do not have an ideology or discipline.
Those are the people who were carrying guns in the public.
That won't happen again once Tamil Eelam is established. Because the Eelam Tamils will have a country and will behave like a proper country.
Tamil Eelam would be a Democratically elected Socialist nation.
Tamil Eelam will be declared very soon and Tamils are looking for help from their brothers and sisters.
Us letting them down right now would be a historical mistake.
Menan Kutty
// இன்று இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தமிழர்களுக்கு ஆதரவு நிலை எடுக்குமானால் அதனால் முழு முதல் பயனும் அனுபவிக்கப் போகிறவர்கள் விடுதலைப் புலிகளே. இந்தியா தலையிட்டு எடுக்கும் எந்த முடிவும் தமிழர்களின் சர்வாதிகாரத் தலைமமயின் நன்மையில்தான் முடியும்.,//
இன்றைய நிலைமையில் இந்தியா மட்டுமல்ல, யார் ஈழத்தமிழர்களுக்கு உதவ நினைத்தாலும் இதே நிலைமை தான்.
ஒருவேளை ஒரு பெரிய சக்தி தலையிட்டு சர்வாதிகாரத் தலைமையை ஒழிக்க வேண்டும் "ஈராக் போல" என்று எதிர்பார்க்கிறீர்களோ?
// இன்று வேறு எவ்வித ஜனநாயக தமிழ் அமைப்புகளும் இல்லாத நிலையில், இலங்கைத் தமிழர் ஆதரவு என்றாலே அது பாசிச சக்திகளின், அவர்களுக்கு மறைமுகமாக ஆதரவு தரும் பிரிவினை சக்திகளைத்தான் ஆதாயப் படுத்தும் //
இந்த பிரிவினை சக்திகள் எந்த ஒரு அரசியல், பொதுஜன சக்தியும் பெருமளவில் இல்லாதவை. தேசிய நீரோட்டத்திலுள்ள பெரிய அரசியல் கட்சிகள் ஒரு "மனித" பிரசினையாக இலங்கைத் தமிழர் ஆதரவு நிலைப்பாடு எடுத்தால் அதி பிரிவினைவாதிகளை செயலிழக்கச் செய்யும்.
// புலிகளுக்கு தனி ஈழம் கிட்டி விட்டால் அதை தக்க வைத்துக் கொள்ள இந்திய மத்திய அரசின் தலையீடு இல்லாத ஒரு தனித் தமிழ் நாடு தேவைப் படும். //
இதை எந்த ஆதாரத்தில் கூறுகிறார்கள்? தனி நாடு என்று ஒன்று உருவானால், உலக நாடுகள் அனைத்தும் அதௌ அங்கீகரிக்கும், இந்தியா உட்பட. அதனால் ஈழத்தைத் தக்க வைத்துக் கொள்ள இது அவசியம் என்ற கூற்று தவறு என்றே தோன்றுகிறது.
// இன்று புலிகள் எங்களுக்கு அப்படியொரு நோக்கம் இல்லையென்று வெளியில் சொன்னாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரிவினைவாதிகள் அந்தத் திட்டத்தை மறைக்க முயல்வதேயில்லை. தனி ஈழம் கிட்டிய அடுத்த நிமிடமே தனித் தமிழ் நாட்டுக்கானதொரு போர் ஆரம்பித்து விடும். //
இந்த அபாயம் ஓரளவுக்கு இருக்கிறது. வலுவான மத்திய ஆட்சி இல்லாவிட்டால், இது வளர்வதற்கும் வாய்ப்பு உண்டு. இந்த அபாயத்தை நாம் திறம்பட சமாளிக்க வேண்டுமேயன்றி நமது செயலின்மைக்குக் காரணம் ஆக்கக் கூடாது. இந்தியா ஒன்றும் செய்யாமலிருந்தால் அந்த இடத்தை வேறு ஒரு நாடோ அல்லது இந்தியாவுக்கு எதிரான ஒரு சக்தியோ எடுத்துக் கொள்வது இதே அளவு அபாயம் தான்.
// தமிழ் நாட்டின் இன்றைய பிரிவினைவாத சக்திகள் அனைத்துமே இந்து எதிர்ப்பாளர்கள் என்பதும், நாத்திகர்கள் என்பதும், சர்ச் ஆதாரவாளர்கள் என்பதும் உள்ளங்கக நெல்லிக் கனி. //
ஒத்துக் கொள்கிறேன்.
// இன்றைக்கு புலிகளுக்கு கொடுக்கும் ஆதரவு நாளைக்கு ஒரு தனிக் கிறிஸ்துவ தமிழ் நாட்டின் அஸ்திவாரம் என்பதை நாட்டுப் பற்றுள்ள ஒவ்வொரு இந்து அமைப்புகளும் உணர வேண்டும். //
இங்கு கொஞ்சம் மாறுபடிகிறேன். ஈழத்தமிழர்களில் பெரும்பாலோர் நாத்திகர்கள் அல்ல. தங்கள் சைவ இந்துப் பாரம்பரியத்தை மதிப்பவர்களே. இன்று ஒரு desperation காரணமாக மிசநரிகளின் ஆதரவை ஏற்றுக் கொள்ளவேண்டி வந்தாலும், தங்கள் மதத்திற்கு ஆபத்து என்று வரும்பொழுது அதைக் காக்க மிசநரிகளை எதிர்க்கவும் தயங்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.
// இன்று நாம் தனி ஈழத்தை ஆதரிப்போமாயின் எந்த முகத்தை வைத்துக் கொண்டு காஷ்மீரப் பிரச்சினையில் பாக்கிஸ்தானை எதிர்க்க முடியும் ? இரட்டை வேடமாகி விடாதா, நமது கோரிக்கக. இலங்கையை தமிழர்களுக்கு சகல உரிமைகளளயும் கொடுக்கச் சொல்லி நாம் தாராளாக வற்புறுத்தலாம், தேவை ஏற்பட்டால் அதன் கைகளை முறுக்கி, பொருளாதாரத் தடைகளை விதித்து நிர்ப்பந்திக்கலாம் அதை விடுத்து, இலங்கைப் பிரிவினைக்கு நாம் எந்த விதத்திலும் துணை போகக் கூடாது //
காஷ்மீர் பிரசினை எப்படி இதிலிருந்து வேறுபடுகிறது என்பதை என் ஒரிஜினல் பதிவிலேயே சொல்லியிருந்தேன்.
அனானி, இந்திய தேசியத்தின் மீது உங்களைப் போலவே பெரும் மதிப்பும் நம்பிக்கையும் கொண்டவன் நான். இது கொஞ்சம் அபாயம் நிறைந்த தலையீடு தான், ஆனாலும் செய்ய வேண்டியது. இத்தகைய தலையீடுகளை நாம் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளத்தில் செய்யத் தவறியதால் தான், இன்று இந்து மக்கள் இந்த எல்லா நாடுகளிலும் துன்பத்துக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள். நம் உற்ற நண்பனான நேபாள நாட்டில் கூட இந்திய எதிர்ப்பு விதையினை ஊன்றி வளர்க்கப் பெரும் முயற்சிகள் செய்யப் பட்டு வருகின்றன. இலங்கையும் நம் கையை மீறீப் போய்விடக் கூடாதே என்பதால் தலையீடு அவசியம் என்கிறேன்.
We Eelam Tamils respect our Language, culture and religion. Majority of Eelam Tamils are Hindu Saivists.
We can prove Mr. Anonymous. We have hindu temples all over the world thanks to the Eelam Tamils.
There are over 45 Hindu temples in Toronto, Canada alone. Because of us other Indians are starting to build temples as well(vaishnava temples).
Here are some proof:
http://www.thehindutemple.ca/BodyFrame.htm
http://www.monsoonjournal.com/files/MJ_Nov06_Web.pdf
Nanri,
Nadesalingam Sivakurunathan
Nadesalingam,
நன்றி. ஈழத் தமிழர்களின் சைவ இந்து உணர்வுகள் பற்றி எனக்கு ஐயம் ஏதும் இல்லை. மேலதிக தகவல்களுக்கு நன்றி. இந்த உணர்வு மேலோங்கி உலகெங்கும் வாழும் இந்து மக்கள் ஈழத் தமிழர் பிரசினையின் "இந்து" முகத்தைப் பார்க்க வேண்டும் என்றே விழைகிறேன்.
தமிழ் ஈழம் வேண்டும் என்று கோரும் இலங்கை வாழ் தமிழர்களையும் புலம் பெயர்ந்த தமிழர்களையும் புரிந்து கொள்வது கஷ்டமில்லை. ஆனால் தமிழ் ஈழத்துக்கு ஆதரவு தரும் இந்திய தமிழர்களை சற்று பாருங்கள். எப்படிப்பட்ட அணுகுமுறையை கொண்டிருக்கிறார்கள் என்பதை பாருங்கள்.
இந்தியாவில் தமிழர்களுக்கு காவிரியில் தண்ணீர் தரவில்லை, முல்லைப்பெரியார், போன்ற விஷயங்களையும் தமிழன் இழந்த இடங்கள் என்று பட்டியல் போடும் நெடுமாறன் போன்றோரும் ஈழத்துக்கு தீவிர ஆதரவு தருபவர்களாக இருக்கிறார்கள் என்பதை கவனிக்கலாம்.
தமிழன் இழந்த இடங்கள் என்று பட்டியல் போடும் நெடுமாறன் போன்றோர் தமிழன் ஆக்கிரமித்துள்ள இடங்கள் என்று டில்லி மும்பை, கல்கத்தா போன்ற இடங்களில் தமிழர்கள் பெருவாரியாக வாழும் இடங்களையும், கோலார் பெங்களூர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் பெருவாரியாக இடங்களை ஆக்கிரமித்து வாழும் தமிழர்களையும் தமிழர்கள் வெற்றி பெற்ற இடங்களாக கூறுவதில்லை.
அதுமட்டுமல்ல, பெங்களூர் போன்ற இடங்களில் தமிழர்கள் தாக்கபப்ட்டால், உடனே அதனை தமிழர்கள் பலியாடுகளாக வெட்டிக்கொல்லப்படுகிறார்கள் என்று பேசி தமிழர்கள் மத்தியில் வன்முறையை தூண்டவும் தயங்கமாட்டார்கள் இவர்கள்.
உலகெங்கும் சமாதானமாக வளர்ச்சிப்போக்கில், அறிவியல், பொருளாதாரம் வணிகம் ஆகிய துறைகளில் சிறந்து உலகமயமாகும் உலகில் தமிழர்கள் வெற்றிக்கொடி நாட்டுவது இவர்களது குறிக்கோள் அல்ல. தமிழர்களை குறுகிய நோக்கம் கொண்டவர்களாகவும், வெறியர்களாகவும், ஏழைகளாகவும், பலியாடுகளாகவும் வைத்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைவதே இவர்களது நோக்கம்.
இவர்கள் திராவிட முன்னேற்றகழகத்தின் அரசியலையே தொடர்ந்து நடத்துகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். கருணாநிதி இன்றைக்கும் தன்னை ஒரு விக்டிம் என்று பேசுவதை நிறுத்துவதில்லை. அவரது பேரப்பிள்ளைகள் உலகத்தின் பெரிய பணக்காரர்களில் உள்ளவர்களாக இருந்தாலும் தன்னை விக்டிம் என்று பேசுவதை நிறுத்துவதில்லை. ஏனெனில் அவ்வாறு பேசுவதன் மூலமாகத்தான் இன்றைக்கு இவ்வளவு பணத்தை தமிழர்களிடமிருந்து சுரண்ட முடிந்திருக்கிறது. அதே நோக்கில் நெடுமாறன் போன்றோரும் அவருக்குப் பின்னாலும் பலரும் முயற்சிப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது?
ஆகையால், இந்தியத்தமிழர்கள் ஈழத்தை ஆதரித்து பேசுவதை ஜாக்கிரதையாகத்தான் அணுகவேண்டும். ஈழம் வேண்டும் என்று பேசும் எல்லா இந்தியத்தமிழர்களும் துரோகிகள் அல்ல. ஆனால், இன்றைக்கு மிகவும் உரத்த குரலில் சத்தமிடும் நெடுமாறன் போன்றோர் இந்திய இறையாண்மைக்கும் தமிழ் மக்களின் நலவாழ்வுக்கும் எதிரிகள் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்.
--
தனி ஈழம் அமைவது போல ஒரு தீங்கு இலங்கை வாழ் சிங்களர்களுக்கும் இலங்கை வாழ் தமிழர்களுக்கும் இருக்க முடியாது. ஈழமும் சிங்களமும் நீண்ட வளைந்து நெளிந்து நீண்ட எல்லையை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். சிங்களர்கள் தாங்கள் தோற்று விட்டோம் என்ற நினைப்பில் தொடர்ந்து ஈழத்திடம் பகைமை பாராட்டுவார்கள். இன்று நம்பாத ஈழத்தவர் நாளை சிங்களர்களை நம்பிவிடப்போவதில்லை. இரண்டுபக்கமும் தொடர்ந்து தற்கொலை தாக்குதல்களும் அழிவும் தொடர்ந்து நடக்கும். தொடர்ந்து இரண்டு நாடுகளும் ராணுவத்தளவாடங்களுக்கு செலவழித்துக்கொண்டே இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ராணுவ தளவாடங்களுக்கு ஆகும் செலவினால் மக்கள் வளர்ச்சித்திட்டங்கள் கிடப்பில் போடப்படும். ஈழத்திலோ அல்லது இலங்கையிலோ ஏதேனும் வெளிநாட்டு காலனி அமைக்கப்படும். நார்வேயின் இந்திய பெருங்கடல் தளமாக ஈழம் ஆகும் என்று இன்றே பேசப்படுகிறது. போர்த்த்க்கிசியர்களிடம் இலங்கை கஷ்டப்பட்டதை மறந்துவிட்டார்கள் போலிருக்கிறது. நார்வேயோ அல்லது அமெரிக்காவோ இலங்கையில் உட்கார்ந்தால், அதனை கண்டு இந்தியா அஞ்ச வேண்டும். நார்வே ஈழத்தில் உட்கார்ந்தால், நார்வேக்கு பிடிக்காத ஒரு நாடு சிங்கள இலங்கையில் போய் உட்காரும். இரண்டு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து போர் நடக்கும். யாருக்கு லாபம் இதில்? யார் கொல்லப்படுவார்கள்? இலங்கை வாழ் தமிழரும் சிங்களர்களும்தானே?
தமிழ்மக்கள் இலங்கையில் கஷ்டப்பட்டார்கள், இன்றும் கஷ்டப்படுகிறார்கள் என்பதனை ஏற்றுக்கொண்டால், இதன் தீர்வு தனி ஈழம் மட்டுமே என்பது கட்டத்துக்கு வெளியே சிந்திக்க மறுப்பது.
தனி ஈழம் வேண்டும் என்று கோரும் எல்லோரும் இந்தியாவின் இறையாண்மையை நாங்கள் கேள்வி கேட்கவில்லை என்று சொல்கிறார்கள்.
இந்தியாவில் தமிழர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று சொல்வதில்லை. இந்தியாவில் ராணுவ தளபதியாகவும், ஜனாதிபதியாகவும், பிரதமராகவும், மதிப்புக்குரிய மந்திரி பதவிகளிலும் தமிழர்கள் இருக்கிறார்கள் இருந்திருக்கிறார்கள். தமிழர்களுக்கு என்ன குறை இந்தியாவில். ஆனால், நெடுமாறன் போன்றவர்களும், சில இடதுசாரிகளும், சில திக துரோகிகளும் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக தமிழர்களை தூண்டிவிட்டு அதில் குளிர் காய தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.
ஆனால், இந்தியாவில் மூலை முடுக்கெல்லாம் வாழும் தமிழர்கள் இந்தியாவில் கொண்டிருக்கும் சுதந்திரம் அளப்பரியது என்பதை அறிந்திருக்கிறார்கள். இன்றைக்கு தமிழ் வாழ்வதும் வீழ்வதும், மத்தியில் யார் பிரதமராக இருக்கிறார் என்பதில் இல்லை. மூலை முடுக்கெல்லாம் வாழும் தமிழர்கள் கையில்தான் இருக்கிறது. அந்த வேலையை செய்ய அவர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. தமிழ்நாட்டில் முதலமைச்சரின் கையில் இருக்கும் அதிகாரம் அளப்பரியது. தமிழ்நாட்டின் தலைவிதி மட்டுமல்ல, இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் அளவுக்கு அவருக்கு அதிகாரம் இருக்கிறது. தமிழ்நாடு தொழில்மயமானது தமிழ் நாட்டு முதலமைச்சர்களின் முயற்சியில் தானே தவிர மத்திய அரசாங்கத்தின் முயற்சியில் அல்ல. அதே போலத்தான், காங்கிரஸ் ஆண்ட பிறகு லல்லு ஆண்ட பீகார் வளர்ச்சியில்லாமல் இருப்பது அந்த முதலமைச்சர்களின் கையில்தானே தவிர மத்திய அரசாங்கத்தின் கையில் அல்ல.
இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு உண்மையிலேயே மொழி, உரிமைகள் போன்ற சுதந்திரம் வேண்டுமெனில், அவர்கள் தாங்கள் இந்தியாவுடன் ஒரு மாநிலமாக இணைய விரும்புகிறோம் என்று சொல்லலாமே?
இலங்கை இரண்டு மாநிலங்களாக இந்தியாவுடன் இணைவதுதான் இலங்கை வாழ் மக்களுக்கு நல்லது. தனிக்காட்டு ராஜாவாக இருக்க விரும்பு ராஜப§க்ஷ, ஈழத்தலைவர்களுக்கு அது உவப்பானதாக இல்லாமல் இருக்கலாம்.
ஆனால், இலங்கையில் இருக்கும் சிங்களர்களுக்கும் தமிழர்களுக்கும் அதுதான் நல்லது.
இன்றில்லையேல் இன்னும் சில வருடங்களில் அதுதான் நடக்கும். அதனை யாராலும் தவிர்க்க முடியாது.
// Tamil Tigers are popular for discipline. There were several groups trained by Indian military in the 80s. Now all of them disappeared because they do not have an ideology or discipline.//
மேனன் குட்டி அவர்களே, disappeared என்றால் என்ன பொருள்? அவர்கள் மறைந்தார்களா இல்லை வேண்டுமென்றே கொல்லப் பட்டார்களா?
இப்போதிருக்கும் புலிகள் எல்லாருமே புது டீம் என்று சொல்ல வருகிறீர்களா? இது என்ன குழப்படி?
// Tamil Tigers run a defacto state in Sri Lanka right now. They control 1/3 of the country. They have a police force, court system,banking system, school system(in Tamil).
They pay poor children to go to school. That's right! They pay 2000 rupees every month to the parents so they won't send the kids to work. //
ஐயா, ஒரு நாட்டை / மானிலத்தை ஆள்வதில் அனுபவம் உள்ளவர்கள் புலிகள் என்று சொல்கிறீர்கள். இதே அளவு அனுபவம் வன்முறைத் தாக்குதல்களிலும், நரித்தனமான தந்திரத்திலும் கூட அவர்களுக்கு உள்ளது.
அனானியின் பயம் இலங்கையைப் பற்றியதல்ல என்று அவர் கடிதத்திலிருந்தெ தெரிகிறது. இத்தகைய ஒரு குழு இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எத்தகைய விளைவை உண்டாக்கும் என்பது பற்றியே கவலை.
// Already Pakistan & US are trying to gain an advantage by filling the void that India has left in Sri Lanka by trying to show as if they're helping the SL government. But all they are doing is to get a foothold in the southern tip of India. Think what ISI can do to TN if they get a foothold in SL. Consequences would be real bad to us. //
முதலில் வந்த அனானி அவர்களே, இலங்கை அரசி மட்டுமல்ல, புலிகளும் கூட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ ஆதரவை நாடும் சாத்தியம் உள்ளது என்று இந்தக் கடிதம் எழுதிய அனானி சொல்கிறார்.
அப்படி நடக்காது, நடக்கக் கூடாது என்றே நாம் நம்புவோம். புலிகள் கண்டிப்பாக ஜிகாதி தீவிரவாத, மத வெறியர்களுடன் இணைய மாட்டார்கள்.
// இந்தியாவில் ராணுவ தளபதியாகவும், ஜனாதிபதியாகவும், பிரதமராகவும், மதிப்புக்குரிய மந்திரி பதவிகளிலும் தமிழர்கள் இருக்கிறார்கள் இருந்திருக்கிறார்கள். தமிழர்களுக்கு என்ன குறை இந்தியாவில். //
சத்திய வாக்கு முல்லை அவர்களே. இதை உரத்துச் சொன்ன உங்களுக்கு மிக்க நன்றி.
// ஆனால், இந்தியாவில் மூலை முடுக்கெல்லாம் வாழும் தமிழர்கள் இந்தியாவில் கொண்டிருக்கும் சுதந்திரம் அளப்பரியது என்பதை அறிந்திருக்கிறார்கள். //
இந்திய தேசியம், ஜனநாயகம் இவை அளித்த கொடை இது!
// இன்றைக்கு தமிழ் வாழ்வதும் வீழ்வதும், மத்தியில் யார் பிரதமராக இருக்கிறார் என்பதில் இல்லை. மூலை முடுக்கெல்லாம் வாழும் தமிழர்கள் கையில்தான் இருக்கிறது. அந்த வேலையை செய்ய அவர்களுக்கு சுதந்திரம் இருக்கிறது. //
கண்டிப்பாக. 90-களில் தொடங்கிய பொருளாதார சீர்திருத்தம் மாநிலங்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதம். இதை நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கும் மாநிலங்கள் அனைத்தும் முன்னேற்றப் பாதையில் பீடு நடை போட்டுக் கொண்டிருக்கின்றன.
// இலங்கை இரண்டு மாநிலங்களாக இந்தியாவுடன் இணைவதுதான் இலங்கை வாழ் மக்களுக்கு நல்லது. //
ஆம். ஒரு உறுதியான, ஒன்றிணைந்த, வலிமை மிக்க இந்தியா இந்த சாத்தியத்திற்கு மேலும் வலு சேர்க்கும்.
சென்ற பதிவில் பின்னூட்டமிட்ட ஒருவர் ஏதோ போகிற போக்கில் இதைக் கேட்டார்.
இதற்கான வலுவான வாதங்களை யாராவது வைப்பார்களா என்று யோசித்தேன். தாங்கள் வைத்திருக்கிறீர்கள். அருமை, முல்லை அவர்களே.
// இன்றில்லையேல் இன்னும் சில வருடங்களில் அதுதான் நடக்கும். அதனை யாராலும் தவிர்க்க முடியாது. //
அப்படியே நம்புவோம். நல்லது நடந்தே தீரும்.
முல்லையின் வாதங்கள் மிகச்சிறப்பானவை
அப்படி நல்ல காரியம் நடந்தால், நாளை ஒரு ஈழத்தவர் இந்தியாவின் பிரதமராக ஆகலாம். துணை பிரதமராக அவரது தோழர் ஒரு சிங்களவர் இருக்கலாம். அவரது கட்சியின் தலைவராக ஒரு ராஜஸ்தானி இருக்கலாம்.
யாரறிவார்?
மனிதன் வகுத்துக்கொண்ட எல்லைகளை கடந்து ஒன்றே குலம் என்று இணையும் நாள் சிறப்பான நாளே!
யாருங்க இந்த முல்லை,
நீங்கள்ளாம் தி. க குண்டர்கள் ஈழத்தவர் ஆதரவு என்று சொல்லிக்கொண்டு சோசியலிச ஜல்லியை இறக்கும் போது எங்கே போனீர்கள் ?
All that is necessary for evil to succeed is that good men do nothing.
ஈழத்தவர் இப்படி ஒன்றும் செய்யாமல் இருந்ததனால் தான் புலிகள் இன்று இப்படி சர்வாதிகார வெறியில் இருக்கிறார்கள்.
"தமிழ் நாட்டில் இருந்து வட இந்தியர்கள், கன்னடர்கள், மலையாளிகள் அடித்து துரத்தப் படுவார்கள். அதன் பின்னர் பிராமணர்கள் அழிக்கப் படுவார்கள் அல்லது நாடு கடத்தப் படுவார்கள்".
இதை ஒரு வெற்றுப் பிதற்றல் என்றுதான் நினைக்கிறேன். பழ.நெடுமாறன், ஈழம் குறித்து ராணி இதழில் எழுதிய ஒரு தொடர் கட்டுரையில்
பிராமணர்களும் புலிகள் படைப் பிரிவில் சேர்ந்து போராடுவதாய் எழுதியிருந்தார்.
எனவே புலிகள் பிராமணர்களுக்கு எதிராக
வன்முறையை கைக்கொள்வார்கள் என்பதற்கு எந்த முகாந்திரமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.
//இலங்கை இரண்டு மாநிலங்களாக இந்தியாவுடன் இணைவதுதான் இலங்கை வாழ் மக்களுக்கு நல்லது.//
முல்லை, நல்ல கனவு இது. இது நனவானல் இருவருக்கும் நல்லது.
இதனால் அடைந்த நன்மையைப் பார்த்து நேபாளம், பங்களாதேஷ் போன்ற நாடுகளும் இந்தியாவுடன் இணைய முன் வரலாம்.
நிற்க..
இந்த மாதிரி எழ்மை அண்மைநாடுகள் வியக்கும் அளவு இந்திய இறையாண்மை இருக்கவேண்டும். அதற்கு நம் அரசியல்வாதிகள் முயலவேண்டும்.
அந்த மாதிரி சிந்திக்காமல் சண்டை போட்டு ஊழல் செய்த அரசியல்வாதிகள் அதே மனநிலை கொண்ட அவர்களுடைய வாரிசுகளை மீண்டும் மீண்டும் அரசியலில் ஈடுபடுத்துகிறார்கள்..ம்ம்ம்ம்ம்ம்ம் இதெல்லாம் நடக்குமா
முரளிதரன்
உங்கள் பதிவுகள் ஒரு சிலவற்றைப் படித்து விட்டுத் தெளிவானவர் என்று அபிப்பிராயம் வைத்திருந்தேன். ஒரு நொடியில் போட்டு உடைத்து விட்டீர்கள். ராணி படிக்கும் ஆசாமியிடம் நான் தெளிவை எதிர்ப்பார்த்தது என் தவறுதான்.
பழ.நெடுமாறன் பேச்சுக்களையும் அவர் கருத்துக்களையும் நேரில் கேட்டிருக்கிறீர்களா, அவரை நன்கு அறிந்தவன் நான். சும்மா தனித் தமிழ் நாடு கேட்கும் பிரிவினைவாத ரவுடிகளைப் பற்றி ஒன்றும் அறியாமல் உளற வேண்டாம் உன்மை தெரியாமல் வெற்றுப் பிதற்றல் போன்ற வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்கு நெடுமாறன் போன்றவர்களின் உண்மையான திட்டங்களை தேவையென்றால் எடுத்துப் போடுகிறேன். அப்புறம் சொல்லுங்கள் யார் இங்கே பிதற்றுவது என்று.
நான் புலிகள் பிராமணர்களுக்கு எதிராக்கச் செயல் படுவார்கள் என்று எங்கு சொல்லியுள்ளேன் ? அரை குறையாகப் படித்து விட்டு என்னை வெற்றுப் பிதற்றல் என்று பிதற்றி இருக்கிறீர்கள். நான் குறிப்பிட்டது தமிழ்நாட்டின் புலி ஆதரவாள பிராமண எதிர்ப்பு இயக்கங்களான நெடுமாறன், தி க ராமகிருஷ்ணன், போன்றவர்களைப் பற்றி.
அநாநி ஆத்தர்
// இன்று புலிகள் எங்களுக்கு அப்படியொரு நோக்கம் இல்லையென்று வெளியில் சொன்னாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரிவினைவாதிகள் அந்தத் திட்டத்தை மறைக்க முயல்வதேயில்லை. தனி ஈழம் கிட்டிய அடுத்த நிமிடமே தனித் தமிழ் நாட்டுக்கானதொரு போர் ஆரம்பித்து விடும். //
இந்த அபாயம் ஓரளவுக்கு இருக்கிறது. வலுவான மத்திய ஆட்சி இல்லாவிட்டால், இது வளர்வதற்கும் வாய்ப்பு உண்டு. இந்த அபாயத்தை நாம் திறம்பட சமாளிக்க வேண்டுமேயன்றி நமது செயலின்மைக்குக் காரணம் ஆக்கக் கூடாது. இந்தியா ஒன்றும் செய்யாமலிருந்தால் அந்த இடத்தை வேறு ஒரு நாடோ அல்லது இந்தியாவுக்கு எதிரான ஒரு சக்தியோ எடுத்துக் கொள்வது இதே அளவு அபாயம் தான்.
தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்கள் அநியாயக்காரர்கள் என்பதால் விடுதலைப்புலி ஆதரவே அநியாயம் என்றாகிவிடாது.
விடுதலைப்புலிகளை யார் ஆதரிக்கிறார்கள் என்பதைவிட, விடுதலைப்புலிகள் யாரை ஆதரிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.
விடுதலைப்புலிகள் அப்பாவி தமிழர்களை வெறுக்கவோ, குண்டுவைக்கவோ செய்யவில்லை என்பதை கவனிக்கவேண்டும். மீடியாக்கள் காட்ட முயற்சி செய்வதுபோல அவர்கள் அநீதியானவர்களில்லை.
உண்மையில் உலக வரலாற்றில் ஒரு போராளி இயக்கம் இந்த அளவு தூய்மையுடன் இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
யாழ்;ப்பாணத்தில் இல்லாமல் விடுதலைப்புலிகளை இவ்வளவுதுராம் விளங்கி வைத்திருக்கிறீர்கள்.நானும் யாழ்பாணத்தவன்தான்.உண்மையில் விடுதலைப்புலிகள் அமைப்பு தொடங்கும் போது ஆரோக்கியமாவே இருந்தது.பின்புதான் அதற்குள் கடத்தலும் கொலையும் சர்வாதிகார போக்கும் புற்றுநோய் போலபரிவியது.நண்ப புலிகளின் போக்கு பற்றி ஒரு உதாரணம் மட்டும் கொடுக்கிறேன்.புலிகள் யாழ்பாணத்திற்கும் கொழும்புக்குமான வான்வழிப்போக்குவரத்தை நிறுத்தசொல்லி 1998 ம் ஆண்டு லயன் எயார் என்கிற தனியார் கம்பெனிக்கு கடிதம் அனுப்பினார்கள்.ஆனால் அந்தக்கம்பெனி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.விமானத்தில் பறந்துகொண்டிருந்தவர்கள் அனைவரும் யாழ்பாணத்தமிழர்கள் என்று நன்கு தெரிந்தும் அந்த விமானத்தை சுட்டுவீழ்த்தி அந்த விமானத்தில் பயணம்செய்த 40 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.தமது சர்வாதிகாரத்தை நிறைவேற்ற எதுவும் செய்யத்தயங்காதவர்கள் விடுதலைப்புலிகள்.தமக்கு எதிராக எழுதினார்கள் என்பதற்காக புலிகள் சுட்டுக்கொன்ற பத்திரிகையாளர்கள் எத்தனைபோர்.றாஜினி திரணகம..போன்றோர்.யாழ்பாண மக்களு;க்கு பொதுஅறிவு வளரக்கூடாது என்பதற்காகவே தொலைக்காட்ச்சி பார்க்க கூடாது என தடுத்தவர்கள் புலிகள்.எனது சுற்றத்தவரில் மட்டும் 5 பேர் விடுதலைப்புலிஅமைப்பில் இணைந்து பின் விலகியவர்கள்.நண்பா இவற்றையெல்லாம் உனது பதிவில் போடவேண்டாம்.நக்குகிற நாய்களுக்கு செக்கென்றால் என்ன சிவலிங்கம் என்றால் என்ன...துப்பாக்கிக்கு கண்ணில்லை நண்பா..
You can mail me to badboys.usa@gmail.com
இந்தியா இலங்கை சிங்கை பாகிஸ்தான் ஐரோப்பா அவுஸ்ரேலியா இந்த எல்லா நாட்டையும் அதாவது உலக நாடுகள் எல்லாவற்றையும் அமெரிக்கா வோடு இணைத்து விட்டோமானால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்து விடும். இலங்கையின் இனப்பிரச்சனை.. இந்தியாவின் வறுமைப் பிரச்சைனை.. பாகிஸ்தானின் காஸ்மீர் பிரச்சனை எல்லாமே தீர்ந்து விடும். முதலில் இந்தியா இணைந்தால் ஏற்படும் நல்ல விளைவகளைப் பார்த்துப் பின்னர் நேபாளாம் பூட்டான் ஆகிய நாடுகளும் இணையும்.
ஆகக் குறைந்தது காஸ்மீர் பிரச்சனையைத் தீர்க்க இந்தியாவை பாகிஸ்தானோடு இணைப்பது தான் சரியான தீர்வு
Post a Comment