ஸ்ரீகுருஜி பற்றிய சில தகவல்களை சென்ற பதிவில் அளித்திருந்தேன். ஸ்ரீகுருஜி மற்றும் இந்துத்துவம் பற்றி சில கேள்விகளை ராஜ்வனஜ் தமிழ்ப் பதிவுகளில் எழுப்பியுள்ளதாகக் கேள்வியுற்று போய்ப் பார்த்தேன். கந்தைப் பழைய, செல்லாக் காசான அவதூறுகளைத் தூசி தட்டி எடுத்திருக்கிறார்.
இந்துத்துவம் என்ற அரசியல், சமூக கருத்தியல் மட்டுமல்ல, இந்துமதம், இந்துப் பண்பாடு பற்றியே மோசமான, எதிர்மறைப் பார்வைகள் கொண்ட நிலைப்பாடு இவர் போன்ற ஆசாமிகளுடையது.. ஸ்டாலின் போன்ற மனிதகுல எதிரிகளான சர்வாதிகாரிகளை இன்றும் ஆராதனை செய்து வருபவரிடம் குருட்டுத் தனமான பாசிச சிந்தனை தவிர வேறு என்ன எதிர்ப்பார்க்க முடியும்?
1. நாஜி, ஹிடலர் பற்றி குருஜி கருத்துக்கள்
1939-ல் சங்கத் தலைவர் ஆவதற்கு முன்பு "ஒரு கன்னி முயற்சி" என்று குருஜி கோல்வல்கரே குறிப்பிட்டு எழுதிய "We the nationhood" புத்தகத்தில் இருக்கும் ஜெர்மனி, ஹிட்லர் பற்றிய ஒரு பாரா மேற்கோளை வைத்து சீதாராம் யெச்சூரியும், என். ராமும் 90-களில் குருஜியின் இந்துத்துவ ரோல் மாடல் ஹிட்லர் என்பதாகக் கட்டிவிட்ட ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் மிகக் குறுகிய காலம் வாழ்ந்தது, அப்போதே அம்பலப் படுத்தப் பட்டும் விட்டது.
we the nationhood என்ற இந்த நூலின் கடைசி பதிப்பு 1947-ல் வந்தது, அதன் பிறகு சங்கமும், குருஜியுமே ஒப்புதல் அளித்து இந்த நூல் முழுதுமாகத் திரும்பப் பெறவும் பட்டது.
இது ஒரு கீழ்த்தரமான மேற்கோள் மோசடி (கொஞ்சம் நாகரீக மொழியில் quote mining) தவிர வேறொன்றுமில்லை. குருஜி பற்றிய விக்கிபீடியா பக்கத்திலேயே பேராசிரியர் கொன்ராய்ட் எல்ஸ்ட் இந்த மோசடி பற்றி எழுதிய Was Guru Golwalkar a Nazi என்ற கட்டுரையின் சுட்டி உள்ளது.
.. Such attacks have been debunked by Koenraad Elst as politically motivated misrepresentations and quote mining. He asserts that discussion of this quote must be made in the proper context and that Golwalkar never endorsed the actions of the Nazi regime:[2]
"Note that Golwalkar's text mentions "racial purity" as Germany's concern but does not "make a plea" for it, and that he never described Hitler as "a source of inspiration.That alleged Golwalkar quotations turn out to be excerpted from the invective of his critics, is symptomatic of Hindutva-watching in general: first-hand information is spurned in favour of hostile second-hand claims made by unscrupled commentators. In most journalistic and academic publications on Hindutva, the number of direct quotations is tiny in comparison with quotations from secondary, hostile sources... If we do not just focus on the selected quotation (as we are led to do by those who made the selection in the first place), but read the whole book, we find that Golwalkar is definitely not asking the Hindus to emulate Nazi Germany."[2]
He further asserts that Hindutva groups have largely renounced the book where such quotes were made, including Golwalkar himself. It hasn't been published since 1948 and that basically, it is a tool to vilify/ harass those who subscribe to Hindutva.[3][4]
இது பற்றிய முழு அலசலையும் பேரா. எல்ஸ்டின் மேற்குறிப்பிட்ட கட்டுரையில் காணலாம். குறிப்பாக இந்த புத்தகம் முதலில் வந்த 1930-களிலும் அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் ஹிட்லர், ஜெர்மனி பற்றிய கருத்துக்கள் இப்படித் தான் இருந்தன என்று குறிப்பிடும் எல்ஸ்ட், இதன் பிறகு ஆர்.எஸ். எஸ். இயக்கத்தின் எந்த நூலிலும் நாஜிகள் பற்றிய எந்தக் குறிப்புமே இல்லை என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.
குருஜி ஹிட்லரை அழிவு சக்தியாகவே கண்டார். இதைப் பல இடங்களிலும் கூறியுள்ளார். உதாரணமாக, The Christians committed all sorts of atrocities on the Jews by giving them the label “Killers of Christ”. Hitler is not an exception but a culmination of the 2000-year long oppression of the Jews by the Christians."[5]
யூதர்கள் தங்கள் தேசிய அடையாளத்தை முன்னிறுத்தும் முகமான Zionist இயக்கங்களையும், இஸ்ரேலின் உருவாக்கத்தையும் குருஜி புகழ்ந்தார் -
"The Jews had maintained their race, religion, culture and language; and all they wanted was their natural territory to complete their Nationality"[6]
சொல்லப் போனால், இடதுசாரி முகாம்கள் கூட இந்த வாதங்களை இப்போது மூட்டை கட்டி விட்டன. அண்மையில் 'தி இந்து' நடுப்பக்கத்தில் வந்த ஒரு வழக்கமான இந்துத்துவ விரோத அர்ச்சனை ஒன்றில் ராமச்சந்திர குஹா இந்தப் பழைய அவதூறூகளைப் பற்றி மூச்சுக் கூட விடவில்லை. குருஜி பேசியது மனுவாதம், பிராமணீயம் என்று புது டிராக்கில் வசவுகளைத் தொடங்கியிருக்கிறார்!
சுவாமி விவேகானந்தரது இஸ்லாம் பற்றிய கருத்துக்களை எழுதிய என் பதிவில், அவர் கூறிய எதிரெதிர் கருத்துக்களையும் நான் கொடுத்திருந்தேன் என்பதை இங்கு நினைவு கூர வேண்டியிருக்கிறது. ஆனால், கூகிளில் தட்டினால் உடனே கிடைக்கக் கூடிய ஒரு விடையைப் பற்றிக் கூட யோசிக்காமல், மிகப் பழைய பொய்களை இவர்கள் சுழற்சி செய்கிறார்கள்! இந்த எல்லா விவாதங்களும் குருஜி பற்றிய விக்கிபீடியா பக்கத்திலேயே இருக்கிறதே. இதைக் கூட பார்க்க மறுக்கும், அறிவு சார் நேர்மை இல்லாத ராஜ்வனஜ், தில் இருந்தால் பதில் சொல்லுங்கையா ஆ ஊ என்று சவடால் விடுவதைப் பார்க்கும்போது சிரிப்புத் தான் வருகிறது.
2. இந்துக்கள் அல்லாத மாற்று மதத்தினர் பற்றி குருஜி கருத்து:இதுபற்றிய அவதூறும் இணையம் உட்பட பல தளங்களில் தீவிரமாக விவாதிக்கப் பட்டு இன்னொரு வகையான மேற்கோள் மோசடி என்று புறந்தள்ளப் பட்டு விட்டது.
சர்ச்சைக்குரிய மேற்கோளின் உண்மை வடிவம் (எல்ஸ்ட் கட்டுரையில் இருந்து) :
"From this standpoint, sanctioned by the experience of shrewd old nations, the foreign races in Hindusthan must either adopt the Hindu culture and language, must learn to respect and hold in reverence Hindu religion, must entertain no idea but those of the glorification of the Hindu race and culture, i.e. of the Hindu nation, and must lose their separate existence to merge in the Hindu race; or may stay in the country, wholly subordinated to the Hindu Nation, claiming nothing, deserving no privileges, far less any preferential treatment -- not even citizen's rights." (We, p.47-48/p.55-56)ஆனால், இதை ராஜ்வனஜ் இவ்வாறு எடுத்துரைக்கிறார் -
"ஜெர்மானிய தேசிய எழுச்சியின் மூலமாக நமக்குக் கிடைத்த அனுபவம் சொல்வது என்னவென்றால், இந்நாட்டில் வாழும் இந்துக்களல்லாதவர்கள் கட்டாயமாக இந்து கலாச்சாரத்தையும், மொழியையும் ஏற்றுக் கொள்ளவதோடு இந்து மதத்தை மதிக்கவும் வேண்டும். இந்த நாடு இந்து நாடு என்பதை அல்லாது வேறொன்றையும் அவர்கள் ஆதரிக்கக் கூடாது. இந்த பூமியின் பழமையான கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்வதோடு இதன் மேல் ஆழமான அன்பும் பக்தியும் செலுத்த வேண்டும். ஒரே வார்த்தையில் சொல்வதானால்; ஒன்று அவர்கள் அந்நியர்களாக விலகிவிடவேண்டும் அல்லது இந்து தேசியத்திற்கு உட்பட்டு அடங்கி ஒடுங்கி நடக்க வேண்டும்"இதில் ஜெர்மானிய எழுச்சி பற்றி எங்கே வருகிறது? அந்த நூலில் 20 பக்கங்களுக்கு முன்பே அந்த ஜெர்மனி பற்றிய மேற்கோள் முடிந்து விட்டது! இந்த மேற்கோள் பற்றிய மிக விரிவான அலசலும் மேற்குறிப்பிட்ட எல்ஸ்ட் கட்டுரையுல் உள்ளது. இந்த மேற்கோள் கண்டிப்பாக "இன அழிப்பு" என்பது பற்றி பேசவில்லை என்று எல்ஸ்ட் அறுதியிட்டுக் கூறுகிறார்.
.. The single oftest-quoted Hindutva statement in the whole Hindutva-watching literature is definitely the first one quoted above from Golwalkar's We, about non-Hindus being requested to "glorify" the Hindu culture, and otherwise "stay in the country" though "without privileges, not even citizen's rights". While certainly open to criticism, the meaning of this passage is by no means as terrifying and inhuman as the critics insinuate. It has nothing to do with genocide or ethnic cleansing, for it says explicitly that the non-Hindus "may stay in the country". Further, it says that the religious minorities must "not claim any privileges", something with which any democrat and secularist would wholeheartedly agree: privileges on the basis of creed are against the equality principle which is fundamental to the law system of a modern state. It is one of the absurdities of Indian "secularism" that it contains a number of communal inequalities in law:இதைத் தொடர்ந்து மதச்சார்பின்மை என்ற பெயரில் அரசியல் கட்சிகள் ஓட்டு வங்கிக்காக செய்து வரும் இஸ்லாமிய, கிறிஸ்தவ மத சலுகைகள் அனைத்தையும் பட்டியல் இடுகிறார் எல்ஸ்ட். சொல்லப் போனால் இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியர் அல்லாதவர்கள் எப்படி திம்மிகளாக (zimmi) வரி செலுத்தி அடிமைகளாக வாழவேண்டும் என்பது குறித்து ஷரியத் சட்டங்கள் கூறும் மிகக் கொடுமையான கருத்தாக்கங்களுக்கு முன்னால், குருஜியின் இந்த மேற்கோள் மிக மிக மென்மையானது தான். not even citizens rights என்று இங்கு குறிப்பிடுவது உட்பட.
ஆர். எஸ். எஸ். இயக்கத்திற்கு இப்போது 81 வருட வரலாறு உள்ளது. ஆனால் எந்தவிதமான உறுதியான, தொடர்ச்சியான ஆதாரங்களும் இல்லாமல் அதை எழுதிய ஆசிரியராலேயே திரும்பப் பெறப்பட்டுவிட்ட ஒரு பழைய நூலில் இருக்கும் ஒன்றிரண்டு மேற்கோள்கள் தான் அதன் கொள்கையைப் பிரதிபலிக்கிறது என்று திரும்பத் திரும்பக் கூக்குரல் இடுவது இந்துத்துவத்தை எப்படியாவது ஒரு "அரக்கத் தனமுள்ளதாக" சித்தரிக்க வேண்டும் என்ற இந்து விரோதிகளின் பரிதவிப்பையே காட்டுகிறது.
சங்க நிறுவனர் டாக்டர் ஹெக்டேவார் நூற்றாண்டு விழாவின் போது வெளியிடப்பட்ட தபால் தலை
3. சுதந்திரப் போராட்டம்:சங்கம் சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரசுடன் தோளோடு தோள் நின்று போராடியது. சங்க நிறுவனர்
டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவார் நாக்புர் காங்கிரஸ் தலைவராகவே பணியாற்றியிருக்கின்றார். இந்த காலகட்டத்தில் சிறு குழந்தையாக வளர்ந்து வந்த சங்கத்தின் பொறுப்பை அப்பாஜி ஜோஷி என்ற தலைவரிடம் ஒப்படைத்து விட்டு, 1931 ஒத்துழையாமை இயக்கத்தில் டாக்டர்ஜி நேரடியாகப் பங்கு கொண்டு சிறை சென்றார். 1934-ல் வார்தாவில் நடைபெற்ற சங்க பயிற்சி முகாமுக்கு மகாத்மா காந்திஜி வருகை புரிந்து, சாதி வித்தியாசம் பார்க்காமல் அனைத்து இளைஞர்களும் அங்கு ஒன்றுபட்டு பழகுவதைப் பாராட்டியும் இருக்கின்றார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்திலும் சங்க ஸ்வயம்சேவகர்கள் நேரடி பங்கு கொண்டனர்.
ஆனால், பிரிட்டிஷாருக்கு எதிரானது என்ற ஒரே புள்ளியை மட்டுமே லட்சியமாகக் கொள்வதுடன் ஆர்.எஸ்.எஸ். ஒப்பவில்லை. காங்கிரசுக்கு தனது முழு ஆதரவையும் சுதந்திரப் போராட்ட காலத்தில் அளித்து வந்த டாக்டர்ஜி, "இந்துக்கள் ஒரு வலிமை வாய்ந்த தேசத்தை, சமூகத்தைக் கட்டியமைக்காத பட்சத்தில், பிரிட்டிஷாரை வெளியேற்றி விட்டால் நாம் சுதந்திரமாக, ஒரே தேசமாக இருப்போம் என்பதற்கு என்ன உத்தரவாதம்?" என்ற கேள்வியையும் எழுப்பினார். இந்தப் புள்ளியில் தான் இந்துத்துவம் காங்கிரசில் இருந்து வேறுபட்டது.
4. இந்துத்துவம் என்ற கலாசார தேசியத்தின் முழு வடிவம்ராஜ்வனஜ் கூறுகிறார் :
.. அது மட்டும் இல்லாமல் இப்போது அந்த சமயத்தில் சுதந்திரப் போராட்டத்தில் தியாகங்கள் பல செய்த தலைவர்களை, போராட்டக்காரர்களை சுவீகரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். மிகச் சரளமாக பகத்சிங்க், சுகதேவ், ராஜகுரு, ஆஸாத் போன்ற புரட்சியாளர்கள் படங்களைக் கூட அவர்கள் நிகழ்ச்சியகளில் பயன்படுத்துகின்றனர்.. இவர்கள் தவறாமல் பாடும் 'ஏகாத்மதா ஸ்தோத்திரம்' என்னும் பாடலில் குறிப்பிடப்படும் தலைவர்களில் ஹெட்கேவாரும், கோல்வால்கரும் தான் இவர்கள் அமைப்புடன் தொடர்புடைய விடுதலைப் போராட்ட காலத்தில் வாழ்ந்த தலைவர்கள்.இதில் ஏன் வயிற்றெரிச்சல் படவேண்டும்? இந்த தேசத்தின் நன்மைக்காகப் பாடுபட்ட எல்லா வீரர்களையும், தலைவர்களையும் இந்துத்துவம் போற்றுகிறது. ஏனென்றால் இயல்பாகவே இந்த தியாகிகளைப் போற்றும் உணர்வு இந்துத் துவத்தில் இருக்கிறது, அதனால் "சுவீகாரம்" தேவையில்லை.
ஆனால் உங்களுக்கு அது கண்டிப்பாக உபயோகப் படலாம். சுவாமி விவேகானந்தர் இந்திய தேசியத்தின் எழுச்சி நாயகர் - அவர் இந்திய மக்கள் அனைவருக்கும் உரியவர் தான். அவர் படத்தை ஏன் இடது சாரிகள் தங்கள் கூட்டங்களில் வைக்கக் கூடாது? ஒரு சம்பிரதாயத்திற்காகக் கூட இந்த "சுவீகாரத்தை" செய்ய மறுக்கும் இந்திய தேசிய விரோதிகளுக்கு இந்துத்துவம் பற்றி பேசவே அருகதை இல்லை என்பேன்.
சங்கம் தேசத் தலைவர்களை இப்படி "முகாம்" பார்த்து தெரிவு செய்வதில்லை, அதற்கு அவசியமும் இல்லை. அதனால் தான் ஏகாத்மதா ஸ்தோத்திரத்தில் ஆதிசங்கரரும் இருக்கிறார், அம்பேத்கரும் இருக்கிறார். வனவாசித் தலைவர் பிர்சா முண்டாவும் இருக்கிறார், காந்திஜி இருக்கிறார், முஸ்லீம் கவிஞர் ரஸ்கான் இருக்கிறார், அயர்லாந்தில் பிறந்து பாரதத்திற்காகவே வாழ்ந்து மடிந்த சகோதரி நிவேதிதா இருக்கிறார். பார்சி தாதாபாயும், கண்ணகியும், வள்ளுவரும், நாயன்மார்களும், ஆழ்வார்களும், துகாராமும், நாராயண குருவும் எல்லாரும் இருக்கிறார்கள். இதுதான் இந்திய கலாச்சாரத்தின் உண்மையான பிரதிபலிப்பு! இது தான் இந்துத் துவம். (மேலும் பார்க்க, என் திண்ணைக் கட்டுரை
கண்ணகி சிலை விமரிசனங்களில் ஏன் இந்து விரோதக் காழ்ப்புணர்ச்சி?)
தேசபக்தி என்ற இந்த உள்ளுணர்வு சிறிதும் இல்லாமல், தேசிய உணர்வு பேணும் இயக்கங்களைக் கிண்டல் செய்யும் வெட்கம் கெட்ட தனம் தான் குருஜி பற்றிய இத்தகைய விமரிசனங்களில் தெரிகிறது.