Thursday, April 12, 2007

இந்துமதம் பற்றி காந்திஜி கருத்துக்கள், காந்தி-ஈவேரா (கற்பனை?) உரையாடலின் பின்னணியில்

சென்ற திண்ணை (ஏப்ரல் 5,2007) இதழில் தாஜ் என்பவர், மிகவும் கஷ்டப் பட்டு தேடி எடுத்ததாகக் கூறி காந்திஜி மற்றும் ஈவேராவுக்கு இடையே நடந்த “சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த” உரையாடல் என்பதாக ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

முதலில் இந்த உரையாடலின் நம்பகத்தன்மை பற்றி நிறைய கேள்விகள் உள்ளன. காந்திஜியின் வாழ்க்கைக் குறிப்புக்கள், அவர் எழுதிய தொகுதி தொகுதிகளாக உள்ள நூல்களில் எதிலும் இது பற்றி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. காந்திஜியின் நூல்கள், அவர் வாழ்க்கை பற்றிய மற்ற முக்கிய நூல்கள் பலவும் உள்ள, மும்பை சர்வோதய மண்டல் அமைத்திருக்கும் http://www.mkgandhi.org/ இணைய தளத்தில் EVR, Ramasamy, Ramaswamy, Periyar போன்ற எந்தச் சொல் இட்டுத் தேடினாலும் ஒரு விடையும் கிடைக்கவில்லை.

இது பற்றி காந்திய இலக்கியத் தொகுப்பில் எந்த பதிவும் இல்லாத நிலையில், இந்த சந்திப்பின் காந்திஜி தரப்பு மிக மோசமாக பலவீனப்பட்டிருப்பதாக நினைத்துக் கொண்டு திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள, திரிக்கப்பட்ட பிரச்சார மலினம் இது என்றே தோன்றுகிறது. ஈவேராவின் பகுத்தறிவு சிஷ்யகேடிகள் இத்தகைய பிரசார மலினங்களை தொழில்முறை நிபுணத்துவத்தோடு செய்பவர்கள் என்பதால் இது இன்னும் உறுதியாகிறது.

இத்தகைய பின்னணியுடன் இந்த உரையாடலை நோக்கினால் கூட, எனக்கென்னவோ, காந்தி இந்த உரையாடலை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல், ஒரு குழந்தையிடம் (உண்மையில், சமயம் ஆன்மிகம் சமூகம் பற்றிய எந்த சரியான புரிதலும் இல்லாத ஈவேரா என்ற கோமாளியிடம்), விளையாட்டாய் பேசுபவர்போலத்தான் கையாண்டுள்ளதாகத்தான் தெரிகின்றது. அவருடைய கட்டுரைகளில் இருக்கும் ஒரு தீவிரம், தெளிவு இந்த உரையாடலில் இல்லை. அவர் பேசியதாக வரும் கருத்துக்களும் வேறு பல இடங்களில் அவர் சொல்லியிருப்பதுடன் இயைவதாயில்லை.

காந்திஜியின் கருத்துகள் மாறிக்கொண்டிருந்தவை என்பது உண்மையே. அதனால் இங்கு மையமாகப் பேசப் பட்ட இந்துமதம் மற்றும் பிராமணர்கள் பற்றிய அவரது கருத்துக்களின் சில கீற்றுகளையாவது படித்தால் தான் இந்த விஷயத்தில் அவரது நிலைப்பாடு பற்றிய சரியான சித்திரம் கிடைக்கும்.

காந்தீய சூழலில் நான் வளர்ந்த எங்கள் வீட்டில் “கீதா மாதா” புத்தகத்தை மிக மரியாதையாக மேலே வைத்திருப்போம். அந்த புத்தகத்தை திறந்தவுடன் முதல் வரி: “கீதை எனக்கு வெறும் பைபிள் மட்டுமல்ல, வெறும் குரான் மட்டுமல்ல, ஞானத்தை வாரி வழங்கும் அன்னை” (கீதா மேரே லியே கேவல் பாய்பில் நஹி ஹை, கேவல் குரான் நஹி ஹை, வோ க்யானதாயினீ மாதா ஹை). இந்து மதம் பற்றி காந்திஜி கொண்டிருந்த பெருமிதத்திற்கு இந்த ஒரு வாசகமே சான்று.




“சனாதன தர்மத்தைப் பின்பற்றும் ஒரு இந்துவாகவே என்னை அடையாளப் படுத்திக் கொள்கிறேன். ஏனெனில், வேதங்கள், உபனிஷதங்கள், புராணங்கள் மற்றும் இந்து சாஸ்திரங்களின் பெயரில் எவை உண்டோ அவற்றின் மீதும் மற்றும் அவதாரங்கள், மறுபிறவி மீதும் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். இப்பொழுது வழக்கில் உள்ள திரிக்கப் பட்ட மோசமான வடிவில் அல்லாமல், வேதங்களின் அடிப்படையில் மட்டும் உள்ள வர்ணாசிரம தர்மத்தை நான் மதிக்கிறேன். பசுப் பாதுகாப்பில் முழு நம்பிக்கை உண்டு. உருவ வழிபாட்டிலும் நம்பிக்கை இல்லாமல் இல்லை”
- யங் இந்தியா, ஜூன் 10, 1921

“என் மதம் இந்து மதம். என்னைப் பொறுத்தவரை இது மனிதகுலத்தின் மதம், எனக்குத் தெரிந்த எல்லா மதங்களில் உள்ள ஆகச்சிறந்த கருத்துக்கள் அனைத்தையும் உள்ளடக்கிய மதம்”

“கிறித்தவத்தின் சில விஷயங்களைப் போற்றினாலும், என்னால் கிறித்துவத்துடன் அடையாளப் படுத்திக் கொள்ள முடியாது. நான் அறிந்த இந்துமதம் முழுவதுமாக என் ஆன்மாவைத் திருப்தி செய்கிறது. என் இருப்புக்கு முழுமை தருகிறது. மலைப்பிரசங்கத்தில் கிடைக்காத ஆறுதல் கீதையிலும், உபநிஷதங்களிலும் எனக்குக் கிடைக்கிறது. மலைப் பிரசங்கத்தில் உள்ள ஒரு ஆழ்ந்த கருத்து தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதல்ல. ஆனால் மனம் திறந்து சொல்கிறேன் : எப்போது ஐயங்கள் என்னை அச்சுறுத்துகின்றனவோ, ஏமாற்றங்கள் என் முகத்தில் அறைகின்றனவோ, தொடுவானில் ஒரு ஒளிக் கீற்றாவது தோன்றும் சாத்தியம் கூட இல்லாது போகிறதோ, அந்தத் தருணத்திலும் கீதையிடம் வருகிறேன், என் மனத்திற்கு அடைக்கலம் தரும் ஒரு சுலோகத்தைக் காண்கிறேன். கட்டுப் படுத்தமுடியாத அந்தத் துயரத்திற்கு நடுவிலும் புன்னகைக்கத் தொடங்குகிறேன். என் வாழ்க்கை முழுவதும் புறத் துயரங்களால் சூழப் பட்டிருந்தும், அவை என்மீது எந்த காயத்தையும், வடுக்களையும் ஏற்படுத்த முடிவதில்லை என்றால், கீதையின் மகத்தான உபதேசங்களுக்குத் தான் இதற்காகக் கடமைப் பட்டுள்ளேன்”
- யங் இந்தியா, 6-8-1925, p274.

“எனது அச்சம் இது தான் – இந்து மதம் பொய் என்று இப்போதைக்கு கிறித்தவ நண்பர்கள் வெளிப்படையாகச் சொல்வதில்லை. ஆனால் அவர்களது மனதில் இந்துமதம் தவறானது, தாங்கள் நம்பும் கிறித்தவ மதமே உண்மை என்ற எண்ணங்களை வளர்த்து வருகிறார்கள். இப்போது நடக்கும் கிறித்தவ (மதமாற்ற) முயற்சிகளையெல்லாம் பார்க்கும்போது, இந்துமதத்தின் அடிப்படையை வேரறுத்துவிட்டு அங்கு வேறு ஒரு மதத்தை நிறுவப் பார்ப்பது தான் அவர்களது நோக்கம் என்பது புரியும்” – ஹரிஜன், மார்ச் 13, 1937.

“என்னிடம் மட்டும் சட்டம் இயற்றும் அதிகாரம் இருந்தால், எல்லா மதமாற்றங்களையும் நிறுத்தி விடுவேன். இந்து குடும்பங்களில் ஒரு மிஷநரியின் வருகை என்பது குடும்பத்தைக் குலைக்கும் செயல்; உடை, ஒழுக்கம், மொழி, உணவு உள்பட கலாசாரத்தையே மாற்றும் செயல் என்றே ஆகிவிட்டிருகிறது”- ஹரிஜன், நவம்பர் 5, 1935.

இந்துமதம் பற்றிய காந்திஜியின் பல கருத்துக்களுக்கும், பார்க்க: http://www.mkgandhi.org/epigrams/h.htm

இதே போன்று, பிராமணர் பற்றியும் காந்திஜி பலவிதமான கருத்துக்களைக் கொண்டிருந்தார்.

“பிராமணர்களின் அழிவில் பிராமணரல்லாதார் உயர்வதை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டேன்” - காந்திஜி படைப்புகள் தொகுப்பு, XXVI-331

“பிராமணீயத்தின் மீது நான் பெருமதிப்பு கொண்டுள்ளேன் – இதன் மூலம் தானாகவே ஏற்றுக் கொள்ளும் வறுமையையும், தெய்வீக அறிவுத் தேடலையும் தலைமுறை, தலலமுறையாக ஒரு குழு பின்பற்றுகிறது அல்லவா?” - டி.ஜி. டெண்டுல்கரின் “மகாத்மா”, 3-195

“பிராமணர்களிடத்தில் வேண்டுமானால் உங்கள் கோபத்தைக் காட்டுங்கள். ஆனால் ஒருபோதும் பிராமணீயத்தின் மீது அல்ல” - டி.ஜி. டெண்டுல்கரின் “மகாத்மா”, 2-283.

பிராமணர், பிராமணீயம் பற்றிய காந்திஜியின் பல கருத்துக்களுக்கும், பார்க்க: http://www.mkgandhi.org/epigrams/b.htm

“இந்து மதத்திலும், இந்திய கலாசாரத்திலும் சாதி முதலிய சீர்கேடுகளைத் தவிர வேறு என்ன உள்ளது?” என்று இங்கே ஈவேரா கேட்டது போலக் காழ்ப்புணர்ச்சியுடன் கேட்பவர்களை காந்திஜி கடுமையாக விமர்சித்திருக்கிறார். இத்தகைய கருத்துக்கள் கொண்டு பின்னாளில் வெளிவந்த பல நூல்களுக்கு முன்னோடியான கேதரின் மாயோவின் “மதர் இந்தியா” (1927) பற்றிய கருத்தைக் கேட்ட போது “சாக்கடையை நோண்டுபவரின் பதிவு” (Drain Inspector's Report”) என்ற ஒரே சொல்லால் அதனை நிராகரித்தார். ஈவேரா எழுதிய எந்தப் புத்தகத்தைக் காட்டியிருந்தாலும், காந்திஜி கண்டிப்பாக இதையே தான் கூறியிருப்பார் , சந்தேகமில்லை. வரலாற்றில் அதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது, அவ்வளவு தான்.

மொத்தத்தில், “ஆ காந்தியையே மடக்கறாரு நம்ம பெரியாரு” என்று கழகக் கண்மணிகளின் சுய புல்லரிப்புக்கும், இன்னொரு சுய ஏமாற்றத்திற்கும் அல்லாது வேறு எந்த உருப்படியான விஷயமும் இந்த உரையாடலில் இல்லை என்றே கூற வேண்டும்.

இது பற்றிய நண்பர் அருணகிரியின் திண்ணைக் கட்டுரை மிக அழகாக எழுதப் பட்டுள்ளது. ஈவேரா வைத்ததாகக் கூறப் படும் கேள்விகளைக் கேள்வி கேட்கிறது. அதையும் படித்துப் பாருங்கள்.

11 comments:

கால்கரி சிவா said...

ஜடாயு, அந்த காலத்திலே இருந்து இந்த காலம் வரை இதே டெக்னிக்கா?. ஒருவரை திட்டுவது, மிரட்டி பணியவைப்பது திராவிடர்களின் தனித்தன்மை போலும்.

அருணகிரியும் அவருடைய கட்டுரையில் நல்லக் கேள்வி கேட்டுள்ளார். 1927 ல் நடந்த உரையாடல் 1948ல் வெளியிட்ட மர்மம் என்னவென்று.

கருணாநிதியின் டெக்னிக்கும் இதே. இறப்பதற்கு முன் அண்ணா இதை சொன்னார், இறப்பதற்கு முன் எம்.ஜி.ஆர் இதை சொன்னார் என இறந்தவர்களை சாட்சியாக அழைப்பது திராவிடர்களின் இன்னொரு டெக்னிக்

Thamizhan said...

சில ஜடங்களுக்கும் ஜல்ங்களுக்கும் நேர்மை என்றால் என்னவென்றே தெரியாத அளவுக்குத் திமிரும் ஆணவமுந்தாண்டவடுதைக் கண்டு சிலர் அசிங்கமாக எழுதுவதில் தப்பேயில்லை என்று நி்னைக்கத்தான் தோன்றுகிறது.
இது மற்ற மனிதர்களுக்காகக் கொடுக்கப் படும் செய்தி.
28-8-1927 'குடி அரசு' தலையங்கம்.

"முக்கியமாக மூன்று விஷயங்களைப் பற்றியேதான் மகாத்மாவிடம் நானும்,நமது நண்பரான திரு.எஸ்.ராமநாதனும் சம்பாஷித்தோம்.அதாவது,என்னுடைய அபிப்பிராயமாக மகாத்மாவுக்கு எடுத்துச் சொன்னதெல்லாம் இந்தியாவின் விடுதலைக்கும்,சுயமரியாதக்கும் மூன்று முக்கியமான் காரியங்கள் செய்து முடிக்கவேண்டுமென்றும்,அது முடிவுபெறாமல் நமது நாட்டுக்கு விடுதலை இல்லையென்றும் நாங்கள் முடிவு செய்திருக்கிறோம் என்பதாகச் சொன்னோம்.
அதாவது,ஒன்று காங்கிரஸ் என்பதை ஒழிக்க வேண்டியது.இரண்டாவது,ஜாதி
ஒழிக்கப்பட வேண்டும்.இதற்கு இந்து மதம் என்பதை ஒழிக்க வேண்டியது.மூன்றாவ்து,பார்ப்பன் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டியது என்பதாகும்.
இம்மூன்று விஷயங்களைப் பற்றியும் மகாத்மா சொன்ன சமாதானங்கள் எம்முடைய அபிப்பிராயத்தை மாற்றக்கூடியதாயில்லை யென்றும் சொல்லி மகாத்மாவிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு வந்து விட்டோம்"

நவசக்தி ஆசிரியராக திரு.வி.க 1-9-1939ல் புலவர் சாமி.சிதம்பரனார் எழுதிய 'தமிழர் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு" நூலுக்கு முன்னுரை எழுதுகிறார்.
"அகவுணர்வு வளர்ச்சிக்கு ஊற்று எது?அஞ்சாமை.அஞ்சாமைக்குத் தோற்றுவாய் எது? உரிமை வேட்கை.
உரிமை வேட்கை ஓங்க ஒங்க அஞ்சாமை எழுந்து பெருகும்.அஞ்சாமை பெருகப் பெருக அகவுணர்வு வளர்ந்துகொண்டே போகும்;அகவுணர்வு வளர்ச்சியினூடே பிறங்கி வருவது உண்மையும்,வாய்மையும்,மெய்மையும்
செறிந்த அறத்தொண்டு.

"தமிழ்நாடு தமிழ்ருக்கே" என்றோரியக்கம் இப்பொழுது நாட்டிடைத் தோன்றியுள்ளது.அவ்வியக்கத்தை இராமசாமிப் பெரியார் நடாத்தி வருகிறார்.இது வருங்கால் நிலையுணர்ந்து கடனாற்றுவதாகும்.
சீர்திருத்தத் துறையில் ஈ.வெ.ரா. செய்துவரும் பணி நாடறிந்த தொன்று.
இன்னோரன்ன சிறப்புக்கள் பல் மிடைந்துள்ள வாழ்வினராகிய பெரியாரின் வரலாற்றைக்கொண்ட இத் தமிழ் நூலை நாடு பொன்னே போல் போற்றி ஏற்கும் என்பதில் அய்யமில்லை."
இதில் உள்ளவற்றைப் படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்,நடிப்பவர்கள் பற்றிப் பெரியார் என்றுமே கவலைப் பட்டதில்லை.

Anonymous said...

நீங்கள் சுட்டியுள்ள திண்ணை கட்டுரையில் 'இடிக்கப் பட்டுள்ள' ரவிக்குமார், விடுதலை சிறுத்தைகள் MLA-வா?

கூகிளில் தேடினால், countercurrents-ல் அவரது எழுத்துக்கள் -
http://www.countercurrents.org/
dalit-ravikumar020306.htm
http://www.countercurrents.org/
dalit-prasad230904.htm

திராவிடத்துக்கும் ராமசாமி நாயக்கருக்கும் நன்றாகவே வைத்திருக்கிறார்கள்.

ஜடாயு said...

// ஒருவரை திட்டுவது, மிரட்டி பணியவைப்பது திராவிடர்களின் தனித்தன்மை போலும். //

ஆமாம் சிவா. திராவிடர்கள் அல்ல, திராவிட, கழக கட்சிகளின் தனித்தன்மை.

கொஞ்சநாள் முன்பு ஒரு பின்னூட்டத்தில் தமிழ் வலை உலக செயல்பாடுகள் இந்த கழக அரசியலின் கூறுகளை அப்படியே பிரதிபலிப்பதாக சொலியிருந்தேன்.

ஜெயராமனை ஒரு ரவுடி கும்பல் மிரட்டி கையெழுத்து வாங்கி இருக்கும் சம்பவம் அதை மேலும் உறுதி செய்வதாகவே உள்ளது.

ஜடாயு said...

// இம்மூன்று விஷயங்களைப் பற்றியும் மகாத்மா சொன்ன சமாதானங்கள் எம்முடைய அபிப்பிராயத்தை மாற்றக்கூடியதாயில்லை யென்றும் சொல்லி மகாத்மாவிடம் உத்தரவு பெற்றுக்கொண்டு வந்து விட்டோம்" //

தமிழன், இது என்ன கூத்து?

இந்த விஷயங்களை காந்திஜி முற்றுமாக நிராகரித்து விட்ட பிறகு அவரது "உத்தரவு"க்கு என்ன வேலை? என்ன மதிப்பு? கழகக் கயமைத் தனத்துக்கு ஒரு எல்லையே இல்லையா?

ஜடாயு said...

// திராவிடத்துக்கும் ராமசாமி நாயக்கருக்கும் நன்றாகவே வைத்திருக்கிறார்கள். //

ரீஸன், அருமையான சுட்டி நீங்கள் அளித்தது. தகவலுக்கு நன்றி.

Anonymous said...

// ஆனால் தங்கள் கெடு-cum-விளக்கத்தில் கூறியுள்ள ஒரு வரி பிரச்சனையாக உள்ளது. "எமது செயற்பாடுகள் குறித்து தார்மீகக்காரணங்களுக்காக நாமே விரும்பினால்மட்டுமே தகவல்களைத் தாமாகவே எமது விதிமுறைகளுக்கமைய வந்திணைந்து கொள்ளும் பதிவர்களுக்குத் தரமுடியும்." தார்மீகக்காரணம் என தமிழ்மணம் எதைக்குறிப்பிடுகிறது? தார்மீகக்காரணத்துக்காக தமிழ்மண நிர்வாகிகள் விரும்பினால் உங்கள் விதிமுறைக்கொப்ப இணையும் பதிவர்களுக்கு எந்த தகவல்களை தருவீர்கள்? " //

You may want to consider removing tamizmanam javascript in your blog.

and please dont publish this comment.

Anonymous said...

ஜடாயு அவர்களுக்கு,

உத்தரவு பெற்றுக்கொள்ளுதல் என்றால் போய்விட்டு வருகிறோம் என்று விடைபெறுதல் ஐயா!( அதாவது Bye சொல்லுதல்)

உமக்குத் தமிழ் தெரியவில்லை. ஆனால் கயமைத்தனம் என்று திட்டுகிறீர்கள்!

ஐயோ என்னத்தச் சொல்ல!

Anonymous said...

மற்றவர்களுக்காக பின்னூட்டம் இட்டுள்ளவரே, உங்களுக்கு ஒரு கேள்வி:

"தமிழ்நாடு தமிழ்ருக்கே" என்றோரியக்கம் இப்பொழுது நாட்டிடைத் தோன்றியுள்ளது

இதைப் பற்றி ஈவேராவிற்கு ஏதாவது தெரியுமா?

அல்லது

தெரிந்தே அந்த காட்டுமிராண்டி கூட்டத்திற்கு தலைவரானார்?

தலைவர் மட்டுமல்ல தந்தையுமல்லவா ஆகியிருக்கிறார்?

அப்படியானால் பகுத்தறிவின்படி காட்டுமிராண்டிகளினை தோற்றுவித்தது ஈவேராவா?

பெங்களூர் American

Anonymous said...

பெங்களூர் American அவர்களுக்கு,

தமிழ்நாடு தமிழருக்கே என்ற இயக்கம் இப்போது தோன்றியதல்ல. இது ஒரு பழைய இயக்கத்தின் தொடர்ச்சி.

`தமிழ்நாடு தமிழருக்கே` என்பதில் என்ன காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டுவிட்டீர்கள்?

காந்தியாரைக் கூடத்தான் இந்தியாவின் தந்தை என்கிறார்கள். அப்படியானால் இந்தியர் அனைவருக்கும் அவர்தான் அப்பாவா என்று கேட்கிறோமா என்ன? அவர்களின் தொண்டைக் குறிக்கப் பயன்படுத்தும் வார்த்தைகள் அவை.

Anonymous said...

Tamilan: Jadayu may not know the right tamil. Probably he can aapreciate sanskrit.

Religion is a consumable. People should be free to consume which ever they like. Spiritualism, the strength of India, is beyond religion. People from all over the world appreciate indian spiritualism, including christians and jews. EVR's talked about justice and equality. That is definitely a hit for the group that was in the business of religion. Jadaayu may also be in the same business of religion.

All these neither improves BPL position of India nor dents spiritual strength of India.

Beware, Jadaayus of the world should not make a Gujarat out of Tamil Nadu. That is the duty of EVRs Deciples (Thanks Jadaayu for this word - though they wouldn't like).

Bangalore American: I have heard of Bangalore Tamils, Bangalore Telugus, Bangalore Malayalees. What is this Bangalore American?