இலங்கைப் பிரசினையில் இந்தியத் தலையீடு : அபாயங்கள்
என்னுடைய முந்தைய பதிவைப் படித்த அனானி ஒருவர், என்னுடய நிலைப்பாடு தவறானது என்று கூறி, ஒரு நெடிய மின் அஞ்சல் அனுப்பியிருந்தார். இந்திய தேசியம், இந்து மக்களின் உரிமைகள் இவற்றில் என் போன்றே அக்கறை கொண்டுள்ளதாகத் தம்மைப் பற்றிக் கூறிக்கொண்ட அவர் எழுப்பிய சில வாதங்கள் மிகவும் சிந்தனைக்குரியதாக இருந்தன. அவர் கேட்டுக்கொண்டபடி, அவர் அனுமதி பெற்று அவரது கருத்துக்களை அப்படியே கீழே தருகிறேன்.இந்தப் பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு Anonymous Author என்ற பெயரில் அவர் தமது பதில்களைத் தர வேண்டுகிறேன். ஓவர் டூ அனானி.
அன்புள்ள ஜடாயு,
இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தலையிட வேண்டும் என்பதும், இலங்கையில் அவதிப் படும் தமிழர்கள் இந்துக்கள் என்பதானால் இந்தியா தலையிட்டு இந்தப் பிரச்சினையினால் அல்லல் படும் இந்துக்களைக் காக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு இந்தியாவுக்கு இருக்கிறது என்றும் கூறுகிறீர்கள். மேலும் பிராபகரன் ஒரு நல்ல இந்துவாக இருப்பதனால் அவர் தலைமியிலானதொரு தனி ஈழம் மூலமாக இந்தியாவுக்கு எவ்விதப் பங்கமும் வந்து விடாது என்றும் , அப்படிப் பட்ட ஒரு தனி ஈழம் ஒரு முழுமையான இந்து நாடாக அமையும் என்பதும் உங்களைப் போன்ற இந்து நலம் விரும்பிகளின் எண்ணமாகவும் இருக்கிறது என்று கருதுகிறேன். இதையே வெளிப்படையாகச் சொல்லாமல் தனி ஈழம் அமைந்தால் அது இந்தியாவுக்கு இயற்கையான ஒரு தோழனாக இருக்கும் என்று வை கோபால் சாமி தனது ரீடிஃப் நேர்முகத்தில் கூறியுள்ளார். இந்துக்களின் நலனில் எனக்கும் உங்களளப் போலவே பெருத்த அக்கறையும், இலங்கையில் பரிதவிக்கும் சகோதரர்களுக்கு அமைதியானதொரு தீர்வு கிட்டி அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் அனைத்து உரிமைகளுடன் வாழ வேண்டும் என்ற அக்கறையும் முற்றிலும் உண்டு என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். நான் உங்களுடன் கருத்து வேறு படுவது இலங்ககத் தமிழர் பிரச்சினையில், இந்தியாவின் தலையீடு எந்த அளவுக்குள் இருக்க வேண்டும் என்பதில்தான். பின்வரும் எனது பதிவில் எனது அச்சங்களையும், சந்தேகங்களளயும், கருத்துக்களையும் தெரிவித்துள்ளேன். இலங்கைப் பிரச்சினையில் புலிகளுக்கு இந்தியா உதவ வேண்டும் என்ற உங்களைப் போன்ற இந்து/இந்திய நலனில் அக்கறை கொண்ட தேசீயவாதிகள் அனைவரும் எனது கேள்விகளில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டு எனது சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கலாம்.
இந்தியா ஏன் இலங்கைப் பிரச்சினையில் தலையிடக் கூடாது என்கிறேன் ?
1983 உங்களுக்கு எந்த அளவு நினைவு இருக்கும் என்பது தெரியவில்லை. நான் அப்பொழுது படித்து முடித்து விட்டு வேலைக்குச் செல்ல ஆரம்பித்த நேரம். துடிப்பான இளைமைப் பருவம். தமிழ் நாடே பற்றி எரிந்து கொண்டிருந்தது. தமிழ் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கும், உணர்ச்சிக் கொந்தளிப்பாக இருந்த நேரம் அது, தீவட்டி ஊர்வலம், கொடும்பாவி எதிர்ப்பு என தமிழர்களின் உணர்ச்சிகள் உச்சகட்டமாகத் தூண்டப் பட்டதொரு காலம். மிக எளிதாக தமிழர்களின் உணர்வவத் தூண்டி ஒரு பெரிய கலவரத்தைத் தூண்ட முடியும் என்று நிரூபிக்கப் பட்ட சமயம். சும்மா தீக்குச்சியைக் கொளுத்திப் போட்டால் பற்றிக் கொண்டு எரியும் காலம். அப்படி ஒரு உணர்ச்சி பூர்வமான கொந்தளிப்பு, அதன் பின்னர் எந்தவொரு பிரச்சினைக்காகவும் தமிழ் நாட்டில் உருவாகவில்லை. 1991ல் நடந்த ஒரு படு கொலை, இலங்ககத் தமிழர்கள் மேல் இருந்த அத்தனை நல்லெண்ணத்தையும், நேசத்தையும், பரிதாப உணர்வையும் அப்படியே தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டது, அதே தமிழகம் பற்றி எரிந்தது, மீண்டும் உணர்ச்சிக் கொந்தளிப்பு, இந்த முறை தொப்புள் கொடி உறவு என்று சொந்தம் கொண்டாடிய அதே இலங்கைத் தமிழர்களின் மீது ஆவேச வெறுப்பாக மாறியது.
ஆக தமிழர்களை எளிதில் உணர்ச்சி வசப்படுத்த வைக்கலாம், அறிவு ரீதியாக இல்லாமல் , உணர்ச்சி ரீதியாக அவர்களை எந்தவொரு மாபெரும் போராட்டத்துக்கும் தூண்டலாம் என்பதை அறுபதுகளில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமும்,
83ல் நடந்த இலங்கைத் தமிழர் ஆதரவு போராட்டங்களும், ரரஜீவ் கொலைக்குப் பின்னர் நடந்த உணர்ச்சிக் கொந்தளிப்புகளுமே சாட்சி. தமிழக மக்களை எளிதில் உணர்ச்சி பூர்வமாக தூண்டி விடலாம் என்பதை அரசியல்வாதிகள் சரியாகப் புரிந்து கொண்டனர். 1983-91 வரை விடுதலைப் புலிகளும், பிற இலங்கைப் போராளி அமைப்புகளும் தமிழ் நாட்டில் சர்வ சுதந்திரத்துடன் வலம் வந்தனர். அந்தக் காலத்தில் தி க, நெடுமாறன் , பெருஞ்சித்திரனார் போன்ற ஒரு சில பலவீனமான அமைப்புகள் தவிர வேறு தனித் தமிழர் பிரிவினைவாத அமைப்புகள் பலம் பெற்றிராத நேரம். பா ம க, விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அமைப்புகள் பலம் பெற்றிராத காலம்.
அப்படிப் பட்ட தீவீர தமிழர் அமைப்புகள் இல்லாத சமயத்திலேயே தமிழ் நாட்டில் எளிதாக உணர்ச்சி பூர்வமான ஒரு சூழலை எளிதாக உருவாக்க முடிந்தது என்றால் இன்றய சூழலில், எந்த அளவுக்குத் தமிழ் நாட்டில் வன்முறையானதொரு போரரட்டத்தை இந்திய அரசினை எதிர்த்தோ அல்லது இந்திய ஒருமைப்பாட்டை எதிர்த்தோ தூண்ட முடியும் என்பதை சற்று எண்ணிப் பாருங்கள். தமிழக மக்கள் பொதுவாக அமைதியானவர்கள், ஆனால் அவர்கள் ராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன என்ற மனநிலை உடையவர்கள். தனித்தமிழ் நாடு நோக்கம் கொண்ட அமைப்புகள் சிறிதாக இருப்பினும் கூட அவர்களின் வன்முறை சார்ந்த போராட்டத்தைக் கண்டு அஞ்சி அதற்கு மொளனமான ஆதரவு காட்டினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. ஆக இந்திய இறையான்மையை எதிர்த்தும், தனித் தமிழ் நாட்டுக்கு ஆதரவு கோரியும் ஒரு மாபெரும் வன்முறைப் போராட்டத்தை ஆரம்பிப்பதும், துண்டுவதும் அதைத் தொடர்ச்சியாக நடத்தி தமிழ் நாட்டை ஒரு காஷ்மீர் போலவோ, அஸ்ஸாம் போலவோ, ஒரு வடகிழக்கு மாநிலம் போலவோ ஆக்க அதிக நேரம் பிடிக்காது என்ற உண்மையை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டு, இதை நான் ஏதோ தனித்தமிழர் அமைப்புகளின் மீது உள்ள வெறுப்பினால் மிகைப் படுத்திக் கூறுவதாக நினைத்தால் தயவு செய்து இன்றைய ரீடிஃ பேட்டியில் கோபலசாமி என்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதி எத்தனை முறை தமிழகம் காஷ்மீராக மாறும் என்று எச்சரிக்கை விடுகிறார் என்பதை உற்று நோக்குங்கள். தமிழகத்தில் தினமும் நடக்கும் ஒரு நெடுமாறன் கூட்டத்திற்கோ ஒரு தி க கூட்டத்திற்கோ சென்று கேளுங்கள், நான் சொல்வதில் ஒரு அணு கூட மிகைப் படுத்துதல் இல்லை என்பது புரியும். தி மு க, அதிமுக இந்தக் கும்பலில் இணையா விட்டாலும் கூட வெறும் பா ம க, வி சி, ம தி மு க போன்ற அமைப்பில் உள்ளவர்கள் மட்டுமே இப்படிப் பட்ட ஒரு வன்முறைச் சூழலை உருவாக்கி அதற்கு பிற அமைப்புகளின் ஆதரவவ எளிதாகப் பெற்று விட முடியும் என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு மேலே படியுங்கள்.
1983ல் எங்கள் வீட்டின் அருகே பல வீடுகளில் விடுதலைப் புலிகள் தங்கியிருந்தனர். இடுப்பில் துப்பாக்கி சொருகிக் கொண்டு பைக்கில் அங்கும் இங்கும் போய் வருவார்கள். நமது போலீசாரிடம் கூட சாதாரண தருணங்களில் இடுப்பில் துப்பாக்கியைப் பார்த்திராத எங்களுக்கு சர்வ சாதாரணமாக இடுப்பில் துப்பாக்கியுடன் திரியும் புலிகளைக் கண்டு ஒரு வித அச்சம் ஏற்பட்டது. ஆனால் வேலை வெட்டியில்லாத இளைஞர்களுக்கோ அவர்கள் ஹீரோவாகத் தெரிந்தனர். அவர்களிடம் இவர்கள் எடுபிடிகளாக வேலை செய்தனர். தமிழ் நாட்டில் துப்பாக்கியுடன் திரிவது சாதாரணமானதொரு கலாச்சாரமாக மாறியது. மெதுவாக அவர்களது அடாவடிகள் பல இடங்களில் தலை தூக்கின. போலீசார் மொளனம் காத்தனர். தமிழ் நாட்டின் சூழல் மெதுவாக மாறிக் கொண்டிருந்தது. சென்னை பாண்டி பஜாரில் வெளிப்படையாகத் துப்பாக்கிச் சண்டை நடந்தது. மீனம்பாக்கம் விமானநிலையத்தில் குண்டு வெடித்தது. இந்த சூழல் எம் ஜி யாரின் உடல் நலம் கெட்ட பொழுது கொஞ்சம் தொய்ந்தாலும், மீண்டும் அவர் மறறவுக்குப் பின் வந்த கருணாநிதி ஆட்சியில் உச்சகட்டம் அடைந்தது. பத்மநாபாவையும் 13 பேரையும் கொன்ற சிவராசன் எவ்விதத் தடையுமில்லாமல் இலங்கை செல்ல முடிந்தது. அவனைத் தடுக்கத் துணிந்த கான்ஸ்டபிள் சுட்டுக் கொல்லப் பட்டார். எஸ் பி சஸ்பெண்ட் செய்யப் பட்டார். அவன் மீண்டும் வந்தான் அடுத்த முறை அது ராஜீவின் கொலையில் முடிந்தது. இது ஒரு சுருக்கமான வரலாறு. ஜடாயு, உங்களைப் போன்றவர்களுக்கு இதன் தாக்கம் தெரியாததால் விடுதலைப் புலிகளால் தமிழ் நாட்டில் ராஜீவ் கொலையைத் தவிர வேறு உபத்திரவம் கிடையாது என்று அப்பாவித்தனமாக எழுத முடிகிறது.
பங்களாதேஷ் யுத்தத்தில் வெற்றி கண்ட இந்திராவுக்கு அது போன்ற சாகசங்களில் தொடர் நாட்டம் ஏற்பட, பிந்தரன்வாலே, விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புக்களுக்கு வெளிப்ப்டையாக இந்திய ராணுவ பயிற்சி போன்றவற்றை கொடுக்க ஆரம்பித்தார். வன்முறை இருபுறமும் கூர்மையானதொரு ஆயுதம், அதைத் தேவையில்லாமல் பிரயோகித்தால் அது பயன்படுத்தியவரையே தாக்கி விடும் என்ற உண்மையை அவர் தனது கடைசி மூச்சின் போதுதான் புரிந்து கொண்டார். அவர் செய்த முட்டாள்தனங்களின் விலையை அவரது உயிராகவும், பின்னர் அவரது மகனது உயிராகவும் கொடுக்க நேர்ந்தது. இலங்கை என்பது இந்தியாவுக்கு அதிக அளவில் தொந்தரவு கொடுக்காத ஒரு சிறிய நாடு என்பதையும், பங்களாதேசம் போலவே இலங்கையைப் பிரிக்க நினனத்தது எவ்வளவு அபத்தமானதொரு காரியம் என்பதையும் அவருக்குப் புரிவதற்கு முன்பாகவே அவரது மற்றொரு தவறு அவரைப் பலி வாங்கியது.
தனது அன்னன துணிந்த ஆபத்தான சாகசங்களால் அவரது உயிர் போயிற்று என்பதைக் கூட உணர முடியாத முட்டாள் அரசியல்வாதி ரரஜீவ் காந்தில் பக்கத்து வீட்டுச் சண்டையில் மூக்கை நுழைத்தன் விளைவை அனுபவித்தவர். 1991 ராஜீவ் கொலை. நான் ராஜீவ் காந்தியின் ரசிகன் கிடையாது. என்னைப் பொருத்தவரை அவர் ஒரு முட்டாள். இலங்கைப் பிரச்சினையில் தேவையில்லாமல் மூக்கை நுழைத்தது, உரிய அறிவு இல்லாமல் , அனுபவம் இல்லாமல் எல்லை தாண்டிய பிரச்சினையில் சிறுபிள்ளளத் தனமாக ஆணவப் போக்கில் நடந்து கொண்டது, இந்திய ராணுவத்தை அனுப்பி அவர்களை பக்கத்து வீட்டுக்காரன் சண்டையில் பலி கொடுத்து, அவர்கள் சேர்ந்து கொண்ட பின் எதிர்க்க இயலாமல் கைகளைக் கட்டிப் போட்டது போன்ற முட்டாள்தனமானங்களின் மொத்த உருவம் ராஜீவ் காந்தி. அதற்கான விலை அவர் உயிர்.
ராஜீவுக்குப் பின்னர் வந்த நரசிம்ம ராவும், வாஜ்பாயும் சுதாரித்துக் கொண்டனர். முந்தைய உயிர் இழப்புக்கள் அவர்களுக்கு நல்ல பாடமாக அமைந்தன. எந்த அளவுக்கு தலையிட வேண்டும் என்பதை புரிந்து கொண்டனர். ஆனால் அவர்களிடம் உரிய ஆளுமையும், சுய பலமும் இருந்தது. இப்பொழுது மீண்டும் ஒரு முதுகெலும்பில்லாத மனிதரின் ஆட்சி. இத்தாலிக் காரரின் தலையீடுகள் என்று இந்தியா ஒரு சிக்கலான தருணத்தைக் கடந்து வரும் பொழுது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க பிரிவினைவாதக் கும்பல்களோ, இதன் மூலம் இன்னும் ஒரு வடகிழக்கு மாநிலங்களின் சூழலை தெற்கிலும் உருவாக்க முடியுமான என மிஷனரிகளும் முயல்கின்றன. இந்தச் சதித் திட்டங்கள் எல்லாம் இந்திய தேசிய அமைப்புகளும், உங்களைப் போன்ற தேசாபிமானிகளும் சரிவரப் புரிந்து கொள்ளவில்லை என்றே கருதுகிறேன். அதனால் தான் இந்த நீண்ட மடல்.
ரரஜீவ் காந்தியின் கொலைக்குப் பின் தமிழர்களை உணர்வு பூர்வமாக தட்டி எழுப்பக் கூடிய எந்தவொரு தீவீரமான பிரச்சினையும் இந்தப் பிரிவினை சக்திகளுக்கு கிட்டவில்லை. அதற்கான சந்தர்ப்பம் கனியக் காத்திருக்கின்றனர். இருந்தாலும் இலங்கைத் தமிழர்கள் மீது உள்ள அனுதாபம் இன்னுமொரு முறை உணர்ச்சிபூர்வமான கிளர்ர்சியாக உருவெடுக்குமா என்பது சந்தேகமே. தி மு க வின் தலைமைக் குடும்பத்துக்கு வேறு ஒரு ஆதாயம் கொடுக்கும் பிசினஸ் சன் டி வி சாம்ர்ஜ்யத்துடன் கிட்டி அவர்களள உலகப் பணக்காரர்கள் வரிசையில் கொண்டு வைத்து விட்டது. இப்படி ஒரு பணம் கொழிக்கும் வியாபாரம் ஒன்று பட்ட் இந்தியாவில்தான் சாத்தியம் என்பதும் புரிந்து விட்டதால், இனிமேலும் பிரிவினன வாத அரசியலில் லாபம் கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்ட கருணாநிதி இனிமேலும் மொழி, இனம் மூலம் மக்களை தூண்டும் அரசியலை அவ்வளவாக விரும்ப மாட்டார். பெரியாறு அணையில் தண்ணீர் வராவிட்டாலும் காவிரி காய்ந்தாலும் அவருக்கு ஒரு பொருட்டல்ல, அதனால் போராட்டம் ஏதும் நடத்தி தனது டி வி வியாபாரத்துக்குப் பங்கம் வந்து விடக் கூடாது என்பது ஒன்றே குறியாக இருக்கிறார். ஆனால் இதர பிரிவினைவாத சக்திகளுக்கு அதன் அரசியல் எதிர்காலமே தனித் தமிழ் நாடு கேட்பதிலும் தமிழ் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி விடுவதிலுமே அடங்கி உள்ளது. அது போலவே மற்றொரு வடகிழக்கு மாநில சூழலை உருவாக்க மிஷினரி சக்திகளும் காத்துக் கிடக்கின்றன. அவர்களுக்கு இந்து விரோத இந்திய விரோத பிரிவினனவாத சக்திகள் ஒரு இயற்கையான கூட்டாளியாக அமைகின்றனர். இந்த பிரிவினைவாத அரசியலுக்கு இந்து அமமப்புகளும், இந்திய தேசியத்தில் நம்பிக்கையுள்ள கட்சிகளும் ஏன் துணை போக வேண்டும் ?
மத்தியில் வலுவில்லாத ஒரு அரசு செயல்படும் இன்றைய சூழலில், 1983 ஏற்பட்ட எழுச்சி இப்பொழுது பிரிவினைவாத சக்திகளுக்குத் தேவைப் படுகிறது. அதற்கு கிறிஸ்துவப் பாதிரியார்களின் ஆசிகளும் பரிபூரணமாகக் கிடைக்கின்றன. அதை உருவாக்க விகடன் போன்ற பத்திரிகககள் தலை கீழாக முயல்கின்றன. விகடன் போன்ற பத்திரிகைக்கு
தமிழ் நாட்டின் நலன்களில் அக்கறை கிடையாது. தமிழ் நாடு நாளைக்கு போதை மருந்து சந்தையாக மாறினாலோ, மற்றொரு காஷ்மீராக மாறினாலோ அவர்களுக்கு மேலும் வியாபாரமே. மக்களின் உணர்ச்சியைத் தூண்டுவதன் மூலம் தனது பத்திரிகையின் பிராமண இமேஜ் மறந்து போய் அதிக பிரதிகள் விற்பனையாக வேண்டும் அவ்வளவுதான். ஆனால் அப்படி ஒரு தனித் தமிழ் நாடு உருவாகுமானால் இதே விகடன் பத்திரிகை காணாமல் போய் அதன் உரிமையாளர்கள் தமிழ்நாட்டை விட்டே உயிருக்கு பயந்து ஓட வேண்டி வரும் என்ற சிறிய உண்மையைக் கூட உணர முடியாமல் அவர்களது வியாபாரப் பேராசை கண்ணை மறைக்கிறது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு திரட்டும் வண்னம் மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டு விகடன் போன்ற பத்திரிகைகள் தமிழ் நாட்டு மக்களுக்கு கடும் துரோகம் விளைவிக்கின்றன. அப்படிப் பட்ட பத்திரிகைகளுக்குத்தான் வியாபார நோக்கம் என்றால் இந்து அமைப்புகள் ஏன் இந்த பிரிவினை நோக்கம் சார்ந்த அரசியலை ஆதரிக்க வேண்டும் ?
இன்று இலங்கைப் பிரச்சினையில் இந்தியா தமிழர்களுக்கு ஆதரவு நிலை எடுக்குமானால் அதனால் முழு முதல் பயனும் அனுபவிக்கப் போகிறவர்கள் விடுதலைப் புலிகளே. இந்தியா தலையிட்டு எடுக்கும் எந்த முடிவும் தமிழர்களின் சர்வாதிகாரத் தலைமமயின் நன்மையில்தான் முடியும்., இன்று வேறு எவ்வித ஜனநாயக தமிழ் அமைப்புகளும் இல்லாத நிலையில், இலங்கைத் தமிழர் ஆதரவு என்றாலே அது பாசிச சக்திகளின், அவர்களுக்கு மறைமுகமாக ஆதரவு தரும் பிரிவினை சக்திகளைத்தான் ஆதாயப் படுத்தும். அதனால் என்ன என்ன விளைவுகள் தமிழ் நாட்டில் ஏற்படும் ? இன்று தனித் தமிழர் அமைப்புகள் முன்னெப்போதையும் விட பலமுள்ளதாய் இருக்கின்றனர். பா ம க, விடுதலைச் சிறுத்தைகள் , தி க, ம தி மு க போன்ற அமைப்புகள் நிதி ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் பலமுள்ள அமைப்பாகத் திகழ்கின்றன. அவர்களுக்கு அவர்களது அபிமானிகளின் உணர்ச்சிகளளத் தக்க விதத்தில் தூண்டி விட ஒரு சிறிய பொறி தேவையாக உள்ளது. ராஜீவ் காந்தியின் கொலையினால், பொது மக்களளின் ஆதரவு அது போன்ற உணர்ச்சி ரீதியான எழுப்பல்களளப் புறக்கனித்து மழுங்கிக் கிடக்கிறது. இந்த அமைப்புகளுக்கு இந்திய அரசின் ஒரு கண் சிமிட்டல் கிடைத்தால் போதும், மீண்டும் பொது மக்களின் உணர்வுகளை அப்பாவி இலங்கைத் தமிழர் ஆதரவு என்ற போர்வையில் விடுதலைப் புலிகளின் ஆதரவாக மாற்ற பத்திரிகைகளும், பா ம க போன்ற கட்சிகளும் காத்துக் கிடக்கின்றன.
அந்தப் பொறியைக் கிளப்பத் தடையாக இருப்பது மத்திய அரசின் ரா போன்ற அமைப்புக்களும், நாராயணன் போன்ற அதிகாரிகளுமே. அது போன்ற ஒரு உணர்ச்சி பேரலையை மிக எளிதாக எழுப்பி விடலாம். இலங்கை ராணுவத்தை தக்க விதத்தில் தூண்டி அவர்கள் பதிலடி கொடுக்கும் இடத்தில் குழந்தைகளையும் பெண்களளயும் வவத்து பலிகடாவாக்கி தமிழர்களின் பரிதாபத்தை எளிதாகப் பெற்று விடலாம். இந்திய அரசு மட்டும் கண்டு கொள்ளாமல் இருக்குமானால் அந்தச் சிறு பொறியை பற்ற வைத்து விடலாம். அதன் பின்னர் புலிகள் தமிழ்நாட்டுக்குள் மீண்டும் தங்கு தடையின்றி நடமாடலாம். அப்படி புலிகளின் தங்கு தடையில்லாத தளமாக தமிழ் நாட்டைக் கொணர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கோபாலசாமி, ராமதாஸ், திருமாவளவன் போன்ற பிரிவினைவாதிகளும், புலிகளுக்கு ஆதரவு தரும் சர்ச் அமைப்புகளும் தலை கீழாக நிற்கின்றன. அவர்களுக்குத் தேவையான அந்த ஆதரவு மத்திய அரசிடம் இருந்து இதுவரை கிட்டவில்லை. நாளைக்கே பி ஜே பி தலைமியிலான அரசொன்று அமையுமானால் அதன் மூலமாகவும் கிட்டி விட இந்து அமைப்புகள் துணை போய் விடக் கூடாது.
அப்படியொரு ஆதரவு விடுதலைப் புலிகளுக்குக் கிட்டி அவர்கள் தமிழ் நாட்டில் சுதந்திரமாக உலவ முடியும் நிலமை வருமானால், பழைய 1983 போல் இந்த முறை தமிழ் நாடு அமைதியாக இருக்காது. வி சி, பா ம க, நெடுமாறன் போன்ற அமைப்புக்களும், புலிகளுக்கு உதவப் போகிறோம் என்ற போர்வையில் துப்பாக்கி பயிற்சி பெறுவார்கள். எல்லோர் கைகளிலும் அருவாளுக்குப் பதிலாக ஒரு துப்பாக்கி இடம் பெறும், அதிகம் வேண்டாம் சில லட்சம் இளைஞர்களுக்கு இந்தத் துப்பாக்கிகளும் ராக்கெட் லாஞ்சர்களும் கிடைத்தாலே போதுமானது இந்தப் போராட்டத்தை இலங்கையில் இருந்து இந்தியாவுக்குக் கொண்டு வர. மற்றுமொரு காஷ்மீர், மற்றுமொரு வட கிழக்கு தமிழ் நாட்டில் நிகழ அதிக நேரம் எடுக்காது. அதைத்தானே மிஷினரிகள் விரும்புகிறார்கள். அதனால்தானே இந்து ஆதரவாளர்களை விட மிஷனரி அமைப்புகள் இவர்களுக்கு விருப்பமுள்ளவையாக இருக்கின்றன.
புலிகள் தங்களது முக்கிய நிதி ஆதாரமான போதை மருந்துக் கடத்தலை தமிழ் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு நடத்துவார்கள். தனித் தமிழ் நாடு போராளிகள் அதற்கு ஏஜெண்டாக மாறுவார்கள். கடந்த 40 ஆண்டுகால திராவிட அரசுகளினால் குடிக்கும் வழக்கம் வந்தது போல் தமிழக இளைஞர்கள் போதை மருந்துக்கு அடிமமயாவார்கள்.
ரரக்கெட் லாஞ்சரில் இருந்து, விமானம் வரை தமிழ்நாட்டிலேயே தயாரிக்கப் பட்டு தமிழ் நாடு மற்றொரு பால்ஸ்தீனமாகும். புலிகளுக்கு தனி ஈழம் கிட்டி விட்டால் அதை தக்க வைத்துக் கொள்ள இந்திய மத்திய அரசின் தலையீடு இல்லாத ஒரு தனித் தமிழ் நாடு தேவைப் படும். ஆதலால் புலிகள் தனித் தமிழ் நாடு போராளிகளுக்கு ஆதரவு அளித்து தமிழ் நாட்டை மற்றுமொரு காஷ்மீராக மாற்ற முயல்வார்கள். அது நிச்சயம் நடக்கும். இன்று புலிகள் எங்களுக்கு அப்படியொரு நோக்கம் இல்லையென்று வெளியில் சொன்னாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரிவினைவாதிகள் அந்தத் திட்டத்தை மறைக்க முயல்வதேயில்லை. தனி ஈழம் கிட்டிய அடுத்த நிமிடமே தனித் தமிழ் நாட்டுக்கானதொரு போர் ஆரம்பித்து விடும்.
தமிழ் நாட்டையும் சேர்த்து ஒரு அகண்ட தமிழகம் படைத்து விட்டால் இலங்கையினால் விடுதலைப் புலிகளை ஒன்றும் செய்ய இயலாது. இந்தியாவினாலும் தமிழ் நாட்டை திரும்பப் பெற இயலாது. தமிழ் நாட்டில் இருந்து வட இந்தியர்கள், கன்னடர்கள், மலையாளிகள் அடித்து துரத்தப் படுவார்கள். அதன் பின்னர் பிராமணர்கள் அழிக்கப் படுவார்கள் அல்லது நாடு கடத்தப் படுவார்கள். இதைத்தான் இன்று நாம் வட கிழக்கு மாநிலங்களில் சந்தித்து வருகிறோம். நாகாலாந்தில் வீட்டுக்குள் கூட தீபாவளி கொண்டாட முடியாத நிலைமை அதே நிலமை தமிழ் நாட்டுக்குள் வர அதிக நேரம் பிடிக்காது. தமிழ் நாட்டின் இன்றைய பிரிவினைவாத சக்திகள் அனைத்துமே இந்து எதிர்ப்பாளர்கள் என்பதும், நாத்திகர்கள் என்பதும், சர்ச் ஆதாரவாளர்கள் என்பதும் உள்ளங்கக நெல்லிக் கனி. அவர்களுக்கு சர்ச்களின் பணமும் கிடைக்கும் பொழுது தமிழ் நாட்டில் இருந்து இந்து மதம் விரைவில் வெளியேற்றப் படும். இன்றைக்கு புலிகளுக்கு கொடுக்கும் ஆதரவு நாளைக்கு ஒரு தனிக் கிறிஸ்துவ தமிழ் நாட்டின் அஸ்திவாரம் என்பதை நாட்டுப் பற்றுள்ள ஒவ்வொரு இந்து அமைப்புகளும் உணர வேண்டும்.
இந்தியாவில் இருந்து ஒரு காஷ்மீரையோ, ஒரு நாகலாந்தையோ, ஒரு அருணாச்சலப்பிரதேசத்தையோ விட்டுக் கொடுக்க எந்தவொரு தேச பக்தியுள்ள இந்தியனாவது ஒத்துக் கொள்வானா ? அப்படி இருக்கும் பொழுது இலங்கக மட்டும் ஏன் தன் நிலப் பரப்பை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று இந்து ஆதரவாளர்கள் எதிர்பார்க்க வேண்டும், நமக்கென்றால் வெண்ணை, இலங்கைக்கென்றால் சுண்ணாம்பா ? அப்படி என்ன இந்தியாவின் ரியல் எஸ்டேட் உசத்தி, இலங்கையின் ரியல் எஸ்டேட் தாழ்த்தி ? அந்தந்த நாட்டுக்கு அதன் அதன் நிலப் பரப்பு முக்கியம். அதில் தலையிட இந்தியாவுக்கும், அதில் தலையிட வேண்டும் என்று சொல்ல எந்தவொரு இந்திய அமைப்புக்கும் உரிமையில்லை. இன்று நாம் தனி ஈழத்தை ஆதரிப்போமாயின் எந்த முகத்தை வைத்துக் கொண்டு காஷ்மீரப் பிரச்சினையில் பாக்கிஸ்தானை எதிர்க்க முடியும் ? இரட்டை வேடமாகி விடாதா, நமது கோரிக்கக. இலங்கையை தமிழர்களுக்கு சகல உரிமைகளளயும் கொடுக்கச் சொல்லி நாம் தாராளாக வற்புறுத்தலாம், தேவை ஏற்பட்டால் அதன் கைகளை முறுக்கி, பொருளாதாரத் தடைகளை விதித்து நிர்ப்பந்திக்கலாம் அதை விடுத்து, இலங்கைப் பிரிவினைக்கு நாம் எந்த விதத்திலும் துணை போகக் கூடாது. இந்து அமைப்புகள் இதில் உறுதியாக இருக்க வேண்டும், பாம்புக்குப் பால் வார்க்கக் கூடாது, நம் தலையில் நாமே மண்ணை வாறிப் போட்டுக் கொள்ளக் கூடாது.
புலிகளைப் பொருத்தவரை அவர்களுக்கு இந்து அபிமானம் என்றெல்லாம் ஏதும் கிடையாது என்பதும், மிஷனரிகள் மூலமாகவோ, தாலிபான் மூலமாகவோ தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்த இயலுமானால் தாராளாமாக அது போன்ற அழிவு சக்திகளுடன் கை கோர்த்துக் கொள்ள தயங்க மாட்டார்கள் என்பதை கீழ்கண்ட தளத்தைப் படித்தால் புரிந்து கொள்ளலாம்.
http://freetruth.50webs.org/D4g.htm#Terrorism
http://www.christianaggression.org/item_display.php?type=ARTICLES&id=1113838580
ஆகவே புலிகள் இந்து ஆதரவாளகளாக இருப்பார்கள் என்ற நினைப்பில் அவர்களுக்கு இன்று நாம் ஆதரவு கொடுப்போமாயின் முதலுக்கே மோசம் விளையும் என்று எச்சரிக்கிறேன்.
இந்திய அரசு இலங்கைப் பிரச்சினையில் இன்னும் ஒரு முறை புலிகளுக்கு ஆதரவான நிலல எடுக்குமானால், இந்தியா தமிழ் நாட்டை பத்து வருடங்களுக்குள் மொத்தமாக இழந்து விடக் கூடிய ஆபத்து இருக்கிறது. இது வெற்றுப் பூச்சாண்டி அல்ல, நிதர்சனம், இந்தத் தருணத்திற்காகவே தமிழ் நாட்டின் பல குள்ள நரிகள் காத்துக் கொண்டிருக்கின்றன. பாரதமாதா தன் தலையை மட்டும் அல்ல இரு கைகளையும், இழந்தது போதாமல் தன் வலங்கால் தொடங்கி பாதம் வரையும் இழப்பாள். நான் இங்கு சொன்னது எதுவும் மிகைப் படுத்தப் பட்டது அல்ல. நெடுமாறன் போன்றவர்கள் மிக வெளீப்படடயாக பொதுக்கூட்டங்களில் பேசும் விஷயம் தான். இணையத்தில் பலரும் வெளிப்படையாக எழுதியவைதான். அதற்கான தருணம் கனியக் காத்திருக்கின்றனர். அதனால் பலனடையப் போவது விடுதலைப் புலிகள் மட்டுமல்ல, இந்தியப் பிரிவினையைத் தூண்ட எதையும் செய்யத் தயங்காத மிஷினரிகளும், முல்லாக்களும், கம்னியுஸ்டுகளும் கூடத்தான். அவர்களுடன் நாமும் துணை போக வேண்டுமா என்பதுதான் என் கேள்வியே. நிச்சயமாக அப்பாவி இலங்கைத் தமிழர்கள் புலிகளுக்கும், சிங்கள அரசுக்கும் நடுவே கிடந்து அல்லல் படுவது பரிதாபத்துக்குரியதே. அவர்களுக்கு இந்திய அரசு எப்படி உதவி செய்யலாம் ?
1. இலங்கை அரசுடன் கண்டிப்பாக பேசி, இன்று தமிழ் நாடு இந்தியாவில் அனுபவிக்கும் உரிமைகள் போன்றதானதொரு மாநில அமமப்புக்கு உடனடியாக அவர்களை சம்மதிக்க வைக்க வேண்டும். அது போன்ற அமைப்பை கண்காணிக்கும் உரிமையை பெற வேண்டும்.
2. அப்படி இலங்கை அரசை ஒத்துக் கொள்ள வவத்தவுடன், சிங்கள ராணுவத்துக்கு உதவி புலிகளை பூண்டோடு அழிக்க வேண்டும். தீவீரவாதிகளின் கைகளில் துப்பாக்கி இருக்கும் வரை தன் நிலையில் இருந்து இறங்கி வர இலங்கை முன்வராது. புலிகளின் தீவீரவாதப் பற்கள் பிடுங்கப் பட வேண்டும்.
3. பின்னர் கடும் நிபந்தனைகளள விதித்து ஒரு சமஷ்டி தமிழ் மாநிலத்தை ஏற்படுத்தச் செய்ய வேண்டும் அந்த தமிழ் மாநிலத்தில் தமிழர்களுக்கான அனைத்து உரிமைகளளயும் இலங்கை அரசு அளிப்பதைக் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.
4. அந்த மாநிலத்துக்கு கல்வி, அடிப்படை கட்டுமானம் போன்ற உதவிகளை நிர்மாணித்து, தன்னிறைவானதொரு மாநிலமாக மாற்ற சகல உதவிகளையும் அளிக்க வேண்டும். அதை பொருளாராத ரீதியில் சிங்கள அரசால் அலட்சியப் படுத்தி விட முடியாத ஒரு வலுவான மாகானமாக மாற்ற வேண்டும். அதன் பின்னர் நிலமை சமச் சீர் அடையும். நாளைய இந்தியா ஒன்று பட்டு பிரிந்து விடாமல் இருக்க வேண்டுமானால் இன்றைய இலங்கை ஒன்று பட்டு இருத்தல் அவசியம். பாரத மாதாவின் கண்களை நம் கைகள் கொண்டே குத்திட வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்.
ஜெய்ஹிந்த்
வந்தே மாதரம்.