Friday, November 10, 2006

சபரிமலையை வளைக்க கிறிஸ்தவ மிஷநரிகள் சதித்திட்டம்

மலையின் சுற்றுப்புறங்களிலுள்ள பெரிய ரப்பர் மற்றும் தேயிலைத் தோட்டங்களை வாங்கி அங்கு மதமாற்ற மையங்களை நிறுவுவது. ஜயமாலா விவகாரம், தந்திரி விவகாரம் இவற்றைத் தூண்டிவிட்டதன் அடுத்த கட்டமாக சபரிமலை ஆலயம் மற்றும் ஐயப்பன் வழிபாடு பற்றிய அவதூறான பொய்களைக் கிளப்பி விட்டு, இந்த ஆலயத்தின் பக்தர்களில் பெரும்பான்மையாக இருக்கும் ஏழை,எளிய மக்களின் சமய நம்பிக்கைகளைக் கேலிக்குரியதாக்கி, மதமாற்றம் செய்வதற்கான சூழலை உருவாக்குவது. மதமாற்ற வெறிபிடித்த கேரள மிஷநரிகள் தீட்டியுள்ள பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதி தான் இது.

கேரளாவில் நன்கறியப்பட்ட மதமாற்றி (evangelist என்பதற்கு சரியான தமிழ்ச்சொல் இதுதான்) நிறுவனமான Gospel For Asia (GFA) திருவல்லாவுக்கு அருகிலுள்ள மஞ்சாடியைத் தலைமையகமாகக் கொண்டது. சமீபத்தில் ஹாரிசன் மலையாளம் லிமிடெட் என்கிற தோட்டக் கம்பெனியிடமிருந்து 3500 ஏக்கர் பரப்பளவுள்ள "எரிமேலி எஸ்டேட்" என்னும் எஸ்டேட்டை 65 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது.

சபரிமலை புனிதப் பயணத்தின் நுழைவாயில் எரிமேலி என்பது எல்லாருக்கும் தெரியும். வேடன் உருவில் கிராத வேஷ மூர்த்தியாக ஐயப்பன் குடிகொண்ட திருத்தலம் இது. மகர விளக்கு சமயம் இங்கு நடக்கும் பேட்டை துள்ளல்கள் மிகப் பிரபலமானது, சபரிப் பயணத்தின் ஒரு முக்கியமான அங்கம்.எரிமேலியில் இவ்வளவு பெரிய நிலத்தை வாங்கியிருக்கும் மிஷநரிகள் தீட்டியுள்ள திட்டம் மிகத் தந்திரமானது. இதில் 500 ஏக்கர் நிலத்தை அரசின் கிராம முன்னேற்றத் திட்டங்களுக்காக வழங்குவது. இப்படிச் செய்வதன் மூலமாக, சபரிமலையில் உனக்கு என்ன வேலை என்று கேட்பவர்கள் வாயை அடைக்கலாம். அரசுத் திட்டம் என்பதால் அரசே சில கட்டமைப்பு சமாசாரங்கள் (சுகாதார மையம், பள்ளி, சுயதொழில்) உருவாக்கும் - அதை வைத்தும் ஜோராக மதமாற்ற வேலைகள் நடத்தலாம். இந்த 500 ஏக்கர் தவிர அக்கம்பக்கத்து ஏரியாவையும் அரசுப் பணத்திலேயே கொஞ்சம் டெவலப் செய்து, வெளிநாட்டிலிருந்து வரும் கோடிக்கணக்கான டாலர்களை நேரடியான மதமாற்ற நடவடிக்கைகளுக்கு மட்டும் செலவழிக்கலாம். கேரளாவின் இடதுசாரி அரசு, சோனியா ஆட்டுவிக்கும் மத்திய அரசு இந்த இரண்டு சிறுபான்மை சேவக அரசுகளும் இதைக் கண்டு கொள்ளாமலிருப்பது மட்டுமல்ல, ஆதரவும் அளிக்கும்!

இந்த GFA அமைப்பின் தலைவனான கே.பி.யோஹனன் என்ற மதமாற்ற வெறியன் ஏழை மக்களை ஏய்த்து மதமாற்றும் வித்தைகளில் தேர்ந்தவன். சுனாமி நிவாரணத்திற்காக என்று போன இடத்தில் தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பிக்க, அங்கு தங்கள் எல்லா உடைமைகளையும் இழந்தும் தன்மானத்தை இழக்காத இந்துக்களால் செருப்படி வாங்கித் திரும்பின இவனது கூட்டங்கள். இது பற்றி தினமலர் பரபரப்பு செய்தி வெளியிட்டது நினைவிருக்கலாம்.

இது மட்டுமல்ல, சபரிமலைப் பயணத்தின் இன்னொரு முக்கிய மையமான பத்தினம்திட்டாவுக்கு அருகில் லாஹா எஸ்டேட் என்ற இன்னொரு மிகப்பெரிய எஸ்டேட்டையும் இதே மதமாற்றி நிறுவனம் வாங்குவதற்காக பேரம் பேசிக் கொண்டிருக்கிறது.

மகர விளக்கு சமயம் பக்தர்கள் இரண்டு முக்கியப் பாதைகள் வழியாக மலை மேல் செல்ல வேண்டும். ஒன்று எருமேலி வழியாகச் செல்லும் பெருவழி. இன்னொன்று பத்தினம்திட்டா, பம்பை வழியாகப் போகும் பாதை. இந்த இரண்டு பாதைகளும் மேற்குறிப்பிட்ட எஸ்டேட்டுகளுக்கு உள்ளாகத் தான் போகவேண்டும். ஐயப்ப சுவாமியின் பூங்காவனத்தை சுற்றி வளைக்க என்ன செமத்தியான திட்டம்! மிஷநரின்னா மிஷநரிதான்!

இந்த சதித்திட்டத்திற்கெல்லாம் பணம்? 2000-01 ஆம் ஆண்டுக் கணக்குப் படியே GFA-க்கு மட்டும், வெளிநாட்டிலிருந்து மட்டும் வந்த தொகை 12 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ! மொத்தமாகக் கேரளாவுக்கு வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து வந்த 75 மில்லியன் அமெரிக்க டாலர்களில் 90% கிறிஸ்தவ மதமாற்றி நிறுவனங்களுக்குத் தான் போய்ச் சேர்ந்துள்ளது. இன்னும் எத்தனை எஸ்டேட்டுக்களை இப்படி வாங்கப் போகிறார்களோ, அது கடவுளுக்கே வெளிச்சம்!

கவிஞர் கண்ணதாசன் முதல் நடிகர் நம்பியார் வரை, பெரிய மனிதர்கள் முதல் அன்றாடங்காய்ச்சிகள் வரை அனைவருக்கும் சமய, ஆன்மீக நிம்மதி தரும் சன்னிதியாக ஐயப்பனின் திருக்கோவில் விளங்கி வருகிறது. சைவம் வைணவம், கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் பற்றும் நாட்டார் தெய்வங்கள் சார்ந்த தொன்மை வழிபாடு இவை அனைத்தையும் ஆன்மீக நூலிழையில் இணைப்பது ஐயப்ப வழிபாடு. அதன் மையம் சபரி மலை. இந்த அற்புதமான சமய மரபை அழித்தொழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு ராப்பகலாக வேலை செய்யும் மதமாற்ற வெறியர்கள் கடவுளின் ஊழியக் காரர்கள் அல்ல, அவர்கள் பாஷையிலேயே சொல்லப் போனால் சாத்தானின் சந்ததியினர்.

ஐயப்ப பக்தர்களும், அனைத்து இந்துக்களும் இந்த ஆக்கிரமிப்பு முயற்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். எழுமின் ! விழிமின்!

செய்தி உதவி:
http://www.haindavakeralam.org/PageModule.aspx?PageID=2230&SKIN=C

22 comments:

ஜடாயு said...

test

Anonymous said...

வள்ளலார் ஜோதிய பாப்பான் லவட்ட பாத்தானே அதைப் பத்தியும் ஒரு பதிவு போடுங்க ஜடாயு!

முத்து(தமிழினி) said...

//மலையின் சுற்றுப்புறங்களிலுள்ள பெரிய ரப்பர் மற்றும் தேயிலைத் தோட்டங்களை வாங்கி அங்கு மதமாற்ற மையங்களை நிறுவுவது.//

சட்டப்படி இதில் என்னங்க பிரச்சினை? இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாட்டில் ஏன் இதை இந்துக்கள் விலைக்கு வாங்கக்கூடாது?

மென்பொருள் துறையில் கோடிக்கணக்கில் ஈட்டி இந்து மதத்தின் மேல் பற்றுள்ள அமெரிக்க பெங்களூர் இந்துக்கள் பணம் போடலாமே?

//ஜயமாலா விவகாரம், தந்திரி விவகாரம் இவற்றைத் தூண்டிவிட்டதன் அடுத்த கட்டமாக சபரிமலை ஆலயம் மற்றும் ஐயப்பன் வழிபாடு பற்றிய அவதூறான பொய்களைக் கிளப்பி விட்டு,//

ஓ...இதெல்லாம் இவனுங்க சதியா? புதிய கோணமா இருக்கே...:))இது நல்ல காமெடிங்க ஐடாயு..

//இந்த GFA அமைப்பின் தலைவனான கே.பி.யோஹனன் என்ற மதமாற்ற வெறியன் ஏழை மக்களை ஏய்த்து மதமாற்றும் வித்தைகளில் தேர்ந்தவன். சுனாமி நிவாரணத்திற்காக என்று போன இடத்தில் தங்கள் வேலையைக் காட்ட ஆரம்பிக்க, அங்கு தங்கள் எல்லா உடைமைகளையும் இழந்தும் தன்மானத்தை இழக்காத இந்துக்களால்//

அடப்பாவிகளா இழவு வீட்டுல மதமாற்றமா? செருப்பால அடிச்சாங்களா...குட்...

கால்கரி சிவா said...

ஏன் ஜடாயு ஏன்? நாம் என்ன செய்தோம் இவர்களுக்கு. ஏன் இவர்களுக்கு நம்மீது இவ்வளவு ஆத்திரம்.

இந்த ஆப்ரகாமிய மதத்தினரின் இந்த ஆதிக்க மனபான்மைதான் ப்ரச்னைகளுக்கு காரணம்

ஜடாயு said...

// சட்டப்படி இதில் என்னங்க பிரச்சினை? இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாட்டில் ஏன் இதை இந்துக்கள் விலைக்கு வாங்கக்கூடாது? //

கண்டிப்பாக. வாங்குவது இருக்கட்டும் -இது போன்ற இந்து-விரோத சக்திகளுக்கு விற்பதையாவது தவிர்க்க வேண்டும். இது பற்றிய விழிப்புணர்வை ஊட்டுவதற்காகவே மீடியா இருட்டடிப்பு செய்யும் இந்தச் செய்திகள் வெளிவரவேண்டும்.

// ஓ...இதெல்லாம் இவனுங்க சதியா? புதிய கோணமா இருக்கே...:))இது நல்ல காமெடிங்க ஐடாயு.. //

பணிக்கர் பணம் வாங்கிய விவகாரம் இன்னும் கொஞ்ச நாளில் வெளிவரப் போகிறது. பொறுத்திருங்கள்.

ஜடாயு said...

// இந்த ஆப்ரகாமிய மதத்தினரின் இந்த ஆதிக்க மனபான்மைதான் ப்ரச்னைகளுக்கு காரணம் //

உண்மை. இந்த ஆதிக்க மனப்பான்மை தான் இன்று உலகத்தை ஒரு அபாயகரமான இடமாக்கி வைத்திருக்கிறது.

ஜடாயு said...

// வள்ளலார் ஜோதிய பாப்பான் லவட்ட பாத்தானே அதைப் பத்தியும் ஒரு பதிவு போடுங்க ஜடாயு! //

அனானியே, விஷயம் என்ன என்பதைத் தெளிவாகக் கூறவும். என்ன செய்தி இது??

Anonymous said...

ஜடாயூ

ஒரு முக்கியமான சதித் திட்டத்தை அறியத் தந்தமைக்கு நன்றி.

சபரி மலை கோடிக்கணக்கான ஏழை இந்துக்களின் நம்பிக்கை கேந்திரம். இங்கு பாப்பான் பெயரைச் சொல்லி ஜாதி பேதம் காட்டி பிரிவினை அரசியல் செய்து மதமாற்றம் செய்ய முடியாது, ஏனென்றால் இங்கு அரசனும் ஆண்டியும் சமம். ஆக வேறு என்ன செய்தால் இந்த ஐயப்பன் பக்தியியில் இருந்து அப்பாவி ஏழை மக்களைப் பிரிட்த்து தங்கள் மதமாற்ற வலையில் சிக்க வைக்கலாம் என்று வெறி பிடித்து அலைகிறது இந்த மதமாற்றக் கூட்டம்.

இங்கு உங்களைக் கேலி செய்து பின்னூடமிடும் கோடாரிக் காம்புகளுக்க்கு, இந்து வெறுப்பாளர்களுக்கு எல்லாமே கேலியும் கிண்டலுமாகத்தான் இருக்கும், இது போன்ற கைக்கூலிகளை வைத்துதான் மிஷனரிகள் பிளைப்பே ஓடுகிறது. பணிக்கர் விவகாரம் முழுக்க அம்பலமான பின்னாலும் அது ஐயப்ப சன்னிதானத்தின் முக்கியத்துவத்தை குறைக்கப் போடப் பட்ட ஒரு நாடகம் என்பது ஊரறிய வெளி வந்த பின்னும், பணிக்கர் மீது கேரள அரசாங்கம் நடவடிக்கை எடுக்க்க ஆரம்பித்த பின்னும் கூட ஒன்றுமே தெரியாதது போல ஒரு சில ஆசாமிகள் இங்கு கேள்வி கேட்கின்றனர். சுய அறிவுதான் கிடையாது என்று நினைத்தேன், இப்பொழுதுதான் தெரிகிறது பத்திரிகை படிக்கும் வழக்கமோ பொது அறிவோ கூட கிடையாது என்பது. கேரளாப் பணிக்கரின் சதி அனைத்து பத்திரிகைகளிலும் சந்தி சிரித்து இப்பொழுது அவர் மீது கேரள அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளது. உடன் நாடகம் ஆடிய ஜெயமாலாவே இப்பொழுது அப்ரூவர் ஆகி விட்டார். கொஞ்சம் பேப்பர் படித்து உண்மை என்ன என்பதை அறிந்து கொண்டிருந்தால் ஜடாய்விடம் கேனத்தனமாகக் கேள்விக் கேட்க்கத் தோன்றியிருக்காது.


சபரி மலையின் நீலி மலை அடிவாரத்தில் நிலக் கல்லில் உள்ள பம்பாநதிக் கரையில் இருந்துதான் கடைசி 6 மைல் பயணம் ஆரம்பிக்கிறது. அந்த இடத்தில் இடத்தை வளைத்துப் போட்டு ஒரு பிரமாண்ட சர்ச்சைக் கட்டியுள்ளனர் இந்த்ச் சண்டாளர்கள். ஆந்திராவில் உள்ள திருப்பதி மலையை கிறிஸ்துவனான ராஜசேகர ரெட்டி மூலம் சதி நடந்து வருகிறது. பணிக்கரை இந்தச் சதி வலை விரிக்க வைத்தது இந்த மதமாற்றப் பணமே. இந்தச் சதியின் உடந்தையான ஜெயமாலா ஒரு கிறிஸ்தூவ நடிகையே. மேலும் தந்திரி மீது அபவாதம் சுமத்த அவரை கட்டி வைத்து புகைப்படம் எடுத்ததும் ஒரு கிறிஸ்துவக் கும்பலே.

இதற்கு சபரி மலைக்குச் செல்லும் ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். கேரளாவில் இந்துக்கள் மைனாரிட்டி ஆகி விட்ட போதிலும் கம்னியூஸ்டுகளால் மூளைச் சலவை செய்யப் பட்ட போதிலும் இன்னும் கொஞ்சமாவது உணர்வுகள் மிச்சமிருக்கும் என்று நினைக்கிறேன். இந்தச் சதித் திட்டங்கள் முறியடிக்கப் பட வேண்டும். சபரி மலை முழுவதையும் தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப் பட வேண்டும்,

ஒரு மெக்காவிலோ, ஒரு ஜெருசலத்திலோ இப்படி ஒரு ஆக்கிரமிப்பு நடக்க அனுமதிக்கப் படுமா?

ஜடாயு said...

நன்றி அனானி அவர்களே.

// இந்து வெறுப்பாளர்களுக்கு எல்லாமே கேலியும் கிண்டலுமாகத்தான் இருக்கும், இது போன்ற கைக்கூலிகளை வைத்துதான் மிஷனரிகள் பிளைப்பே ஓடுகிறது. //

ஆம். ஆனால் கிறிஸ்தவ மிஷநரி அதிகாரம் வளர்ந்தால் இப்படி யாரையும் கிண்டல் செய்யும் சுதந்திரம் கூடப் பறிபோய்விடும் என்று இந்தக் கைக்கூலிகளுக்கு என்று புரியுமோ தெரியவில்லை.

// இதற்கு சபரி மலைக்குச் செல்லும் ஒவ்வொரு ஐயப்ப பக்தரும் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். கேரளாவில் இந்துக்கள் மைனாரிட்டி ஆகி விட்ட போதிலும் கம்னியூஸ்டுகளால் மூளைச் சலவை செய்யப் பட்ட போதிலும் இன்னும் கொஞ்சமாவது உணர்வுகள் மிச்சமிருக்கும் என்று நினைக்கிறேன். //

கண்டிப்பாக. கேரளம் மட்டுமல்ல, தென்னிந்தியா முழுவதும் ஐயப்ப பக்தர்கள் உள்ளனர். மிஷநரிகள் இந்த இடத்தைக் குறிவைத்ததற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

மிஷநரிகளின் திட்டம் முறியடிக்கப் பட வேண்டும்.

Anonymous said...

//ஜயமாலா விவகாரம், தந்திரி விவகாரம் இவற்றைத் தூண்டிவிட்டதன் அடுத்த கட்டமாக //
மோகன் தந்திரியை நீக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக எழுப்பப்பட்ட உள் விவகாரம் தான் இது என்கிறார்கள்..

Anonymous said...

why you are creating problems with chrisitians

Anonymous said...

ஐயப்பா ஐயப்பா
அகத்தில் அமைதி
தா அப்பா.
அடுத்துக் கெடுக்கும்
பாவிகளை அகற்றி
நீயே எமைக் காத்திட்டப்பா.

மாசிலா said...

கொள்கைகாக நான் இந்து மதத்தை ஒதுக்குபவன்தான். இருந்தாலும் அடிப்படையில் பூர்வீக இந்தியன். இந்த கோணலில் நானும் இந்த மதமாற்ற பித்தலாட்டங்களுக்கு எதிப்பானவன். உங்கள் பதிவை வரவேற்கிறேன். இந்தியர்கள் அனைவரையும் உதவிக்கு அழைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இச்சதித்திட்டத்தில் பலியாகபோவது முக்கியமாக தலித்களாகவே இருப்பர் என படுகிறது. இதற்கு வழிவகுத்தது இந்து மதத்தினரே. அனைத்து தர மக்களையும் சகல மரியாதைகளுடன் மதித்து நடத்தி இருந்தால் இது போன்ற பிரச்சினைகளுக்கு இடமே இருந்திருக்காது.

என்ன செய்யலாம்?

ஜடாயு said...

// இந்த கோணலில் நானும் இந்த மதமாற்ற பித்தலாட்டங்களுக்கு எதிப்பானவன். உங்கள் பதிவை வரவேற்கிறேன். //

நன்றி மாசிலா அவர்களே. "கோணத்தில்" என்று சொல்ல வந்தது கோணலாகி விட்டது என்று நினைக்கிறேன். :)

// இச்சதித்திட்டத்தில் பலியாகபோவது முக்கியமாக தலித்களாகவே இருப்பர் என படுகிறது. //

முற்றிலும் உண்மை.

// இதற்கு வழிவகுத்தது இந்து மதத்தினரே. அனைத்து தர மக்களையும் சகல மரியாதைகளுடன் மதித்து நடத்தி இருந்தால் இது போன்ற பிரச்சினைகளுக்கு இடமே இருந்திருக்காது //

ஒப்புக் கொள்கிறேன். அடிப்படையில் நன்மனம் கொண்ட இந்து மக்களின் மனத்தில் இருந்து சாதிப்பேயை ஒழிக்க வேண்டும். அதற்கான முயற்சிகளைச் செய்யும் இந்து இயக்கங்களை அனைத்து இந்துக்களும் ஆதரிக்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்., மாதா அமிருதானந்தமயி, மேல்மருவத்தூர் அடிகளார், ஆர்ட் ஆஃப் லிவிங், ஈஷா யோகா, ராமகிருஷ்ண மடம் போன்ற சமூக, கலாசார, சமய இயக்கங்கள் இந்த விஷயத்தில் குறிப்பிடத்தக்க சேவை செய்து வருகின்றன.

// இந்தியர்கள் அனைவரையும் உதவிக்கு அழைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். //

"அனைத்து இந்துக்களும்" என்பதை "அனைத்து இந்தியர்களும்" என்று படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ஜடாயு said...

இந்தச் செய்தியை வெளியிட்ட திண்ணை இதழுக்கு நன்ற் -

http://www.thinnai.com/?module=displaystory&story_id=20611166&format=html

Hariharan # 26491540 said...

அமர்நாத் பனிலிங்க சர்ச்சை, திருப்பதி ஏழுமலையான் ஏழுமலையில் ஐந்தை சுற்றுலாவுக்கு ஒதுக்க சர்ச்சை, சபரிமலை சர்ச்சை என்று இந்துக்கள் பெரும்பான்மையாக புனித யாத்திரை மேற்கொள்ளும் இடங்களில் இத்தாலிய சோனியா-வாடிகன் ஆசியுடன் நடக்கும் ஆன்மா அறுவடை மத வணிகக்கூத்து இது.

செக்க்யூலரிசம் என்பது இது தான்!

ஏற்கனவே கலப்படம் ஆகிவிட்ட இந்திய கலாச்சாரம் இப்படியே கண்டும் காணாமல் விட்டால் காணாமல் போய்விடும்! என்ன செய்யலாம்!

ஜயராமன் said...

ஜடாயு,

மிக நல்ல செய்திகளை தொகுத்தி வழங்கிய உங்களுக்கு நன்றி. இந்த செய்திகளை எல்லோரும் பாரபட்சம் இல்லாமல் அறிந்துகொள்வதன் மூலமே எல்லோருக்கும் விழிப்புணர்வு ஏற்படும்.

நன்றி

ஜடாயு said...

// இந்துக்கள் பெரும்பான்மையாக புனித யாத்திரை மேற்கொள்ளும் இடங்களில் இத்தாலிய சோனியா-வாடிகன் ஆசியுடன் நடக்கும் ஆன்மா அறுவடை மத வணிகக்கூத்து இது.

செக்க்யூலரிசம் என்பது இது தான்! //

நன்றி ஹரிஹரன் அவர்களே.

பார்ப்பதற்கு சாதாரண land-deal போலத் தோற்றமளிக்கும் இந்த எஸ்டேட் ஆக்கிரமிப்புகளுக்கிப் பின்னால் உள்ள சதித் திட்டத்தை எந்த ஊடகமும் சொல்லக் காணோம். ஆச்சரியம்!

ஜடாயு said...

// ஜடாயு,

மிக நல்ல செய்திகளை தொகுத்தி வழங்கிய உங்களுக்கு நன்றி. //

நன்றி ஜயராமன் அவர்களே.

somberi said...

this is how isreal was formed..first they bought lands and houses from Arabs then they chased them away from Jerusalem..now with the military might they are grabbing land every where at will..specially natural water sources are coming under Isreal...and christians are doing the same in India..now buying lands near important Hindu sites..then they will start fighting with local people..and then use "Human Rights and Secularism" to bar Hindus from visiting those places and finally take over....
History is being repeated...isn't this how Europeans conquered India before???

Cervantes said...

You are doing good servive Jatayu. Continue the good work.

Krishnan

Anonymous said...

Jataayu,

Fight the good fight over there.
Tamils from Eelam bought a land between a Mosque and a Church in Toronto, Canada and building a 15 million dollar Aiyappan temple.

Currently, there are 15,000 Aiyappa swamis wearing "maalai" in Toronto. Including several of my friends.

Lot of Canadias and Americans are getting attracted by Hinduism here.

Long live Hinduism,
Ezhilan