1962 போர்த் தியாகிகளுக்கு அஞ்சலி : "யே மேரே வதன் கே லோகோ"
நம் தேசத்தின் முப்படைகளின் பெருமை பேசும் பதிவை நடத்தி வரும் சமுத்ரா அவர்கள் Aye Mere Watan Ke Logo - லதா மங்கேஷ்கர் என்ற பதிவைப் போட்டிருக்கிறார். அப்போதைய பிரதமர் நேருவின் கையாலாகாத தனத்தையும் மீறித் தாய்நாட்டைக் காக்க உயிர்வீட்ட நம் படைவீரர்களின் நினைவுக்கு அஞ்சலி செலுத்தும் பதிவு. அப்பதிவில் இப்படிக் கேட்டிருந்தார் -
".. அது போகட்டும் இந்த போரின் போது மறைந்த வீரர்களுக்கு தேசிய அளவில் அழியா நினைவு சின்னம் என்று எதாவது உண்டா என்றால் அதுவும் இல்லை.1962 ஆம் அண்டு நமது ஜவான்கள் செய்த தியாகங்களை மக்களுக்கு நினைவுபடுத்த ஒரே ஒரு சின்னம் இருக்கிறது.மங்கேஷ்கர் பாடிய ஏ மேரே வதன் கே லோகோன் என்ற பாடல் தான் அது.
எனக்கு ஹிந்து புரியும், ஆனால் மொழிபெயர்க்கும் அளவுக்கு பத்தாது. அதனால் ஹிந்தி வரிகளை இங்கே எழுதிவிடுகிறேன், உங்களில் யாராவது மொழிபெயர்த்து தந்தீர்கள் என்றால் விக்கிபிடீயாவில் போடலாம் என்று நினைக்கிறேன்"
இதோ எனது மொழிபெயர்ப்பு. பாடலைக் கேட்பதற்கான உரல் சமுத்ராவின் பதிவில் உள்ளது -
என் தேசத்து மக்களே
உரத்து முழங்குங்கள்
இன்று நம் எல்லாருக்கும் நன்னாள் என்று
நம் அன்புக்குரிய மூவர்ணக் கொடியை
வீசிப் பறக்க விடுங்கள்
எல்லையில் உயிர்விட்ட நம் வீரர்கள்
அவர்களையும் மறவாமல் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்
வீடு திரும்பாமலேயே போய்விட்ட அந்த வீரர்கள்
அவர்களையும் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்
என் தேசத்து மக்களே
கண்களில் கொஞ்சம் கண்ணீர் விடுங்கள்
அந்தத் தியாகிகளின் பலிதானத்தை
கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்
நம் இமயத்தில் காயம் பட்டது
நம் சுதந்திரத்தை அபாயம் சூழ்ந்தது
தங்கள் மூச்சு உள்ள வரை
போரிட்டார்கள் அவர்கள்
தலை வணங்காமல் அமர பலிதானம் செய்து
தங்கள் உடல்களைத் துறந்தார்கள்
அந்தத் தியாகிகளின் பலிதானத்தை
கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்
நாம் நாட்டுக்குள்
தீபாவளி கொண்டாடிக் கொண்டிருக்கையில்
அவர்கள் எல்லையில் தங்கள் குருதியை வார்த்து
ஹோலி விளையாடினார்கள்
நாம் வீடுகளில் அயர்ந்திருக்கையில்
அவர்கள் குண்டடி பட்டார்கள்
அந்த இளைஞர்கள் உன்னதம் பெற்று விட்டார்கள்
அவர்களின் இளமையும் உன்னதம் பெற்று விட்டது
அந்தத் தியாகிகளின் பலிதானத்தை
கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்
அவர்களில் இருந்தார்கள்
சீக்கியன் மராட்டியன்
கூர்கா மதராசி
ஆனால் அந்தப் போரில் மறைந்த ஒவ்வொரு வீரனும்
பாரதவாசி
அந்த மலைச் சிகரங்களில் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தமும்
ஹிந்துஸ்தானத்தின் ரத்தம்
அந்தத் தியாகிகளின் பலிதானத்தை
கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்
உடல்களில் ரத்தம் வழிந்தும்
கைகளில் பிடித்தனர் ஆயுதம்
பத்து எதிரிகளைக் கொன்றான் ஒரு வீரன் #
ஆயினும் உடல் தளர்ந்து உயிர் பிரியும் வேளை
சொல்லிச் சென்றார்கள்
“எம் தேச மக்களே, மகிழ்ச்சியாக இருங்கள்” என்று
எப்பேர்ப்பட்ட நேசம் அவர்களுக்கு நம் மீது
எப்பேர்ப்பட்ட பாசம் நம் மண் மீது
அந்தத் தியாகிகளின் பலிதானத்தை
கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்
அவர்களை நீங்கள் மறக்கக் கூடாது
அதற்காகவே இந்தப் பாடல்
வாழ்க பாரதம்
வாழ்க பாரதப் படைகள் !
வாழ்க பாரதம்
வாழ்க பாரதப் படைகள் !
ஜெய் ஹிந்த்!
ஜெய் ஹிந்த்!
[ # 18-நவம்பர், 1962 அன்று தாங்கள் மடிவதற்கு முன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீனப் போர்வீரர்களை அழித்தனர் குமாவ் படாலியனின் 13-சி பிரிவைச் சேர்ந்த 114 பாரத நாட்டு வீரர்கள். அவர்களது வீரத்தியாகம் குறித்தது இந்த வரி]
நம் படைவீரர்களின் அமர தியாகத்தை எண்ணிப் பார்க்கும் இந்த நேரத்தில் அருணாசலப் பிரதேசம் எங்களுடையது என்று சொல்லி வரும் சீன அரசின் அராஜகத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் மண்டையாட்டும் மன்மோகன் சிங்கையும், அன்று போலவே இன்றும் சீன எஜமானர்களுக்காக அதே போலக் குரைக்கும் இடதுசாரி நாய்களையும் பார்த்து இது தான் சொல்லத் தோன்றுகிறது -
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்
15 comments:
நல்ல பதிவு.
நல்ல பாட்டு.
நன்றிகள்.
நீங்கள் கொடுத்திருக்கும் தலைப்பு தவறாக தென்படுகிறது. சீன நாட்டு போர் வீரர்களை போற்றுவதைப்போல் அமைந்திருக்கிறது.
நன்றி மாசிலா அவர்களே.
// நீங்கள் கொடுத்திருக்கும் தலைப்பு தவறாக தென்படுகிறது. சீன நாட்டு போர் வீரர்களை போற்றுவதைப்போல் அமைந்திருக்கிறது. //
1962 Chinese War என்று ஆங்கிலத்தில் சொல்வதை அப்படியே எழுதியது தவறு. தலைப்பை மாற்றி விட்டேன்.
கடினமாக உழைத்து இந்தி பாடலை மொழி பெயர்த்து பகிர்ந்தமைக்கு நன்றி. இது போன்ற பாடல்களை இசை அமைத்து பள்ளிகளில் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே தேசப்பற்றும், வீரமும் ஊட்டி வளர்த்தால் நன்று.
// கடினமாக உழைத்து இந்தி பாடலை மொழி பெயர்த்து பகிர்ந்தமைக்கு நன்றி //
நன்றி. இது மிக எளிமையான பாடல், அதனால் மொழிபெயர்ப்பது கடினம் அல்ல.
// இது போன்ற பாடல்களை இசை அமைத்து பள்ளிகளில் குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே தேசப்பற்றும், வீரமும் ஊட்டி வளர்த்தால் நன்று. //
ஆம்.
அன்பு சகோதரரே,
நெஞ்சு நெகிழ்கிறது. கண்ணீரை வரவழைக்கும் வரிகள். நன்றி.
ஜெய் ஹிந்த்
வந்தே மாதரம்.
எங்கோ இமய சாரலில் பனிக்காற்றின் ஊடே உலவும் பாரத வீரனின் ஆன்மாவில்
வருடியிருக்கும் இவ்வரிகள்.
ஜடாயு,
மிக்க நன்றி அய்யா.
மிக சிறந்த மொழிபெயர்ப்பு....ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.
(இந்த பாடலை விக்கியில் இடம்பெற செய்யலாம் என்று இருக்கிறேன்...பார்க்கலாம்)
சி கம்பனி, 13 குமாவோன் வீரர்களை பற்றி தனியொரு பதிவாக போட ஆசை...ஆனால் நேரம் கிடைப்பது தான் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது...நீங்கள் எழுதினீர்கள் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
நானும் முடிந்தால் சீன ஜனாதிபதி ஊரை விட்டு போகும் முன்னர் எழுத முடியுமா என்று பார்க்கிறேன்.
மறுபடியும் நன்றி!
நன்றி சமுத்ரா, நீலகண்டன்.
// எங்கோ இமய சாரலில் பனிக்காற்றின் ஊடே உலவும் பாரத வீரனின் ஆன்மாவில்
வருடியிருக்கும் இவ்வரிகள். //
கண்டிப்பாக. அவர்கள் தியாகம் ஒவ்வொரு பாரதவாசியின் நெஞ்சிலும் நினைக்கப் பட வேண்டும்.
Testing comment-ping by Thenkoodu.com.
நெகிழ வைத்த பதிவு ஏனென்றால் எனது குடும்பத்தில் நான்கு இராணுவவீரர்கள் உள்ளனர்.தமிழகத்தில்
சரியானபடி உணரப்படாதது இராணுவ வீரர்களின் தியாகம்.நான் வடக்கே வசித்த நாட்களில், இந்த புரிதல் ஏற்பட்டது.
இந்த பதிவு வீரர்களின் தியாகத்திற்கு மரியாதை அளிப்பதாக உள்ளது.நன்றிகள்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.
நன்றி முரளிதரன் அவர்களே.
// நெகிழ வைத்த பதிவு ஏனென்றால் எனது குடும்பத்தில் நான்கு இராணுவவீரர்கள் உள்ளனர். //
பெருமைக்குரிய உங்கள் குடும்பத்திற்குத் தலைவணங்குகிறேன்.
"பெருமைக்குரிய உங்கள் குடும்பத்திற்குத் தலைவணங்குகிறேன்"
THANKS Mr.JADAAYU.VANDHE MAATHARAM.
WITH LOVE AND REGARDS,
B.MURALIDARAN.
விக்கியில் இடம்பெற வைப்பதா? விக்கிபிடியா என்ன விஜயபாரதமா?
// விக்கியில் இடம்பெற வைப்பதா? விக்கிபிடியா என்ன விஜயபாரதமா?
//
அனானி, புரியவில்லையே? இது ஆர்.எஸ்.எஸ். பாடல் இல்லை ஐயா, இந்தித் திரைப் படத்தில் வந்த லதா மங்கேஷ்கர் பாடிய தேசபக்திப் பாடல். நாடு முழுவதும் பிரபலமான பாடம்.
விஜயபாரதம் தேசபக்தி ஊட்டும் இதழ் என்பதில் சந்தேகமில்லை, அதனால் கூறுகிறீர்களோ?
எதற்கும் அடுத்த வார விஜயபாரதம் வாங்கிப் பாருங்கள், யார் கண்டது? இந்தப் பாடல் அதில் வரலாம் :))
அன்புள்ள அனானி,
விக்கியை பாருங்கள்.
முழு பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு கிடைக்கவில்லை. உதவுங்கள். :)
Post a Comment