Thursday, February 01, 2007

டாடாவின் இரும்புக் கரங்கள்: இந்தியாவின் பெருமிதம்

"என்ன சொல்லுகிறீர்கள்? டாடாக்கள் இந்தியாவில் பிரிட்டிஷ் தரத்திற்கு இரும்பு எஃகு தயாரிக்கப் போகிறார்களா? அப்படி நடந்தால், அவர்கள் தயாரிக்கும் ஒவ்வொரு இரும்புத் துண்டையும் சாப்பிடுவேன் என்று பந்தயம் வைக்கிறேன்" என்று 1907ஆம் ஆண்டு சவால் விட்டார் அப்போதைய பிரிட்டிஷ் இந்திய ரயில்வே துறைத் தலைவர் சர் ஃபிரடெரிக் அப்காட். டாடா வணிகக் குழுமத்தைத் தொடங்கிய பாரதத் தாயின் தவப் புதல்வர் ஜாம்ஷ்ட்ஜி டாடா இந்த எள்ளல்களைக் கண்டு அயரவில்லை. இதற்கு முன் 1899ஆம் ஆண்டிலேயே ஒரு பத்திரிகையில் எழுதினார்: “நமது இளைஞர்கள் ஐரோப்பாவின் தலைசிறந்த நிறுவனங்களுக்குச் சமமாக அவர்கள் களத்திலேயே நிற்க வல்லவர்கள் என்று நிரூபித்து வருவகிறார்கள்; அது மட்டுமல்ல, இந்த நிறுவனங்களை வீழ்த்தவும் நம்மால் முடியும்”.





காலச் சக்கரம் சுழல்கிறது, கனவு மெய்ப்படுகிறது. 2006 : இந்தியாவில் பிறந்த லட்சுமி நிவாஸ் மித்தல் தலைமையில் இயங்கும் மித்தல் ஸ்டீல் ஐரோப்பாவின் பிரம்மாண்டமான இரும்புத் தொழில் கம்பெனியான அர்செலர் நிறுவனத்தை பல சர்ச்சைகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் இடையில் வாங்கி கையகப் படுத்தியது. 2007 தொடக்கம்: இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம், நார்வே உள்ளிட்ட நாடுகளில் இரும்பாலைகள் கொண்ட “கோரஸ்” என்ற ஐரோப்பாவின் மிகப் பெரிய இரும்புத் தொழில் நிறுவனத்தை டாடா குழுமம் சி.எஸ்.என். என்ற வேறொரு பன்னாட்டு நிறுவனத்தை ஏலத்தில் தோற்கடித்து வாங்கியுள்ளது பற்றிய செய்தியை எல்லாரும் படித்திருப்பீர்கள். இதற்காக டாடா நிறுவனம் தரும் விலை ரூ. 53,000 கோடி மட்டுமல்ல, முதலீட்டாளர்கள் மற்றும் வளர்ந்து வரும் தங்கள் நிறுவனத்தின் எதிர்காலம் முழுவதையுமே துணிந்து பணயம் வைத்துள்ளது. சாகசத்தை விழையும் தீரர்களின் வரிசையில் டாடா குழுமத் தலைவர் ரதன் டாடா இணைந்திருக்கிறார். தன்னையும் விடப் பெரிய அளவு உள்ள வணிக நிறுவனத்தை வாங்கும் துணிச்சல், அதை நன்கு நிர்வகித்து நடத்தி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இவற்றால் உந்தப் பட்ட டாடா ஸ்டீல் நிறுவனம் புதிய இந்தியாவின் கனவுகளையும், நம்பிக்கைகளையும் பிரதிபலிக்கிறது.

ஒரு பெரிய சஸ்பென்ஸ் திரைப்பட முடிவு போல பெரும் திகிலுடன் வணிக ஊடகங்களால் பேசப் பட்ட இந்த ஏலத்தின் கடைசிச் சுற்று நேற்று முடிவடைந்தவுடன் டாடா நிறுவன முக்கியஸ்தர்களின் முகத்தில் ஒளிர்ந்த அந்தப் பரவசம். தலைமையகம் பாம்பே ஹவுசிலும், ஜாம்ஷெட்பூர் டாடா நகரிலும், தொழிலாளர்கள் மற்றும் யூனியன்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்! முதலாளித்துவம், வர்க்கப் போராட்டம், புடலங்காய் எல்லாம் காற்றில் கரைய டாடா நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் ஒருவருக்கொர்வர் தழுவிக் கொண்டு இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். “டாடா கோரஸ் ஜிந்தாபாத்” என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது.

இதன் மூலம் உலகின் முதல் 5 இரும்புத் தொழில் நிறுவனங்களின் பட்டியலில் டாடா-கோரஸ் இடம் பிடிக்கிறது; இந்தியாவின் மிகப் பெரிய வணிகக் குழுமம் என்கிற கிரீடத்தை ரிலையன்சிடமிருந்து டாடா தட்டிப் பரிக்கிறது. பிர்லா, ரிலையன்ஸ் தலைவர்கள் மற்றும் பல தொழிலதிபர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் இந்த வரலாற்று சாதனையைப் பற்றிப் பெருமையுடன் பேசினர். அசூயையோ, பொறாமையோ அல்ல, ஒரு சக இந்தியக் கம்பெனியின் சிகரம் தொடுதலை வாழ்த்தும் பாங்கு அதில் தென்பட்டது.

“இரும்பினால் ஆன தசைகள், எஃகு நரம்புகள், அதனுள் இடியை உண்டாக்கும் இதயம் ; இவையே எதிர்கால இந்தியாவிற்குத் தேவை” என்றார் சுவாமி விவேகானந்தர். டாடா ஸ்டீல் நிறுவனம் மற்றும் டாடா குழுமம் எடுத்திருக்கும் இந்தப் பெரும் முயற்சிகள் ஒவ்வொரு இந்தியனையும் தோள் தட்ட வைக்கின்றன என்றால் மிகையில்லை.

ஒளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா!

23 comments:

Santhosh said...

கலக்கலான செய்தி ஜடாயூ. இந்தியா ஒளிரத்தொடங்கிவிட்டது :))..

Anonymous said...

டாட்டா பிர்லா ஜிந்தாபாத் !!

மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ளுவோம். சக இந்தியராக உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் !

டாட்டாகளால் ஆரம்ப காலம் முதல் நமது நாடு அடைந்துவரும் பலன்கள் எண்ணில.

இந்தியாவில் முதன் முதலில் மிகச் சிறந்த விமான சேவையை ஆரம்பித்தவர்கள் டாட்டாக்கள்தான். உலகின் மிகச் சிறந்த விமான சேவை நிறுவனமாக அறியப்படுகின்ற சிங்கப்பூர் விமான சேவையை ஆரம்பித்து வைத்தவர்களும் இந்திய விமான சேவை நிறுவனத்தாரே !

(பிறகு அரசாங்கம் அதை தன் கையகப்படுத்தி நாசம் செய்துவருவது வேறு கதை.)

அது மட்டுமல்ல, இந்தியாவெங்கும் மிகச் சிறந்த மருத்துவமனைகள், ஆராய்ச்சிக்கூடங்கள், வேலைவாய்ப்புக்கள், உலகின் மிக மிக மரியாதைக்குரிய கல்வி மற்றும் அறிவியல் தலங்கள் ஆகியவற்றை ஆரம்பித்து வைத்ததும் அவர்கள்தான்.

டாட்டாக்களால் ஆரம்பித்து வைக்கப்பெற்ற இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸையன்ஸில் கல்வி பெற்ற பாக்கியம் எனக்கிருப்பதால் இந்த வெற்றியில் ஒரு தொடர்புணர்வு சார்ந்த சந்தோஷமும் எனக்குள்ளது :-) !

இத்தகைய செயல்களில் டாட்டாக்களை தூண்டியது யார் தெரியுமா?

எத்தனையோ தொழிற்சாலைகளை மூடவைத்து தொழிலாளர்களின் வாழ்வை அழித்த நம்மூர் கம்யூனலிஸ்ட்டுக்களினால் துதிக்கப்படும் கார்ல் மார்க்ஸா?

பச்சை நெருப்பாய் மனித வளங்களை ஆக்கிரமித்த இடங்களிலெல்லாம் அழித்துக் கொண்டு செல்லும் ஜிஹாதியர்களால் துதிக்கப்படும் முகம்மதுவா?

என்னை பின்பற்றாதவன் நரகத்திற்குப் போவான் என்று சொல்லியதால் தொடர்ந்து நடந்துவரும் புனித விசாரணைகளின் புனித நூல் தந்த கிருத்துவமா?

தன்னுடைய உடம்பின் சுகம் மட்டுமே பிரதானம், அதற்காக எத்தகைய இழிவானவர்களையும் ஆதரித்து அவர்களின் விருப்பங்களை நிறைவேற்ற உண்மைகளை திரித்து அன்பான ஹிந்துக்களை "பகுக்கும்" வேலையைச் செய்துவரும் "அறிவு" கொண்டலையும் "பகுத்தறிவாளர்களா?".

இல்லை. இல்லை. இல்லை.

உலகின் ஆன்மீகக் குண்டலினியை தட்டி எழுப்பிய பகவான் ஸ்ரீ ராமக்ருஷ்ணரின் சீடரும், ஹிந்துத்துவவாதத்தை அருளியவருமான நம் ஸ்வாமி விவேகானந்தரே.

பாரதம் பயனுற இதுபோன்ற பல்வேறு செயல்களை செய்யுமாறு டாட்டாவிற்கு ஆசி அருளினார் ஸ்வாமிஜி. அவரின் ஆசிகளால் பணத்தால் ஏழையான எத்தனை இந்தியருக்கு வாழ்க்கையில் வளமை வந்திருக்கிறது பார்த்தீர்களா?

வலைப்பதிவு அன்பர்களுக்கு மற்றொரு கேள்வியை இங்கு முன் வைக்கிறேன்:

விவேகானந்தரால் தூண்டப்பட்டு சமூக சேவை செய்யத் துவங்கிய மற்றொரு அமெரிக்க தனவந்தர் யார் என்று தெரியுமா?

(க்ளூ: இந்தியாவில் டாட்டாவைப் போல அமெரிக்காவிற்கு அவரே செல்வத்தின் அடையாளம்.)

ஜடாயு said...

கிள்ளி,

வருக வருக. நல்வரவு!

// டாட்டாக்களால் ஆரம்பித்து வைக்கப்பெற்ற இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸையன்ஸில் கல்வி பெற்ற பாக்கியம் எனக்கிருப்பதால் இந்த வெற்றியில் ஒரு தொடர்புணர்வு சார்ந்த சந்தோஷமும் எனக்குள்ளது :-) ! //

ஐ.ஐ.எஸ்.சி. படைப்பா நீங்கள்?? மெத்த மகிழ்ச்சி. இன்றும் பெங்களூரில் ஆட்டோக் காரர்கள் உள்ளிட்ட பொது மக்களுக்கு டாடா இன்ஸ்டிட்யூட் என்றால் தான் தெரியும்.

டாடாவிற்குத் தூண்டுதல் அளித்தவர்கள் யார் என்ற கேள்விகளில் உண்மையின் ஒளி பீறிட்டெழுகிறது. அருமை!

// உலகின் ஆன்மீகக் குண்டலினியை தட்டி எழுப்பிய பகவான் ஸ்ரீ ராமக்ருஷ்ணரின் சீடரும், ஹிந்துத்துவவாதத்தை அருளியவருமான நம் ஸ்வாமி விவேகானந்தரே. //

ஆம், நானும் இது பற்றி படித்திருக்கிறேன்.. ஜே.ஆர்.டி.யின் வாழ்க்கை வரலாற்றில் என்று ஞாபகம்.

ஸ்வாமி விவேகானந்தருக்கு நீங்கள் தந்திருக்கும் அடைமொழி அருமை. இந்து எழுச்சியின் நாயகர் அவரே!

Anonymous said...

ஜடாயு,

இந்தியா நெஞ்சை நிமிர்த்தும் இந்த செய்தி பற்றி தமிழ்ப் பதிவில் எழுதியதற்கு மிக்க நன்றி.

இந்தியாவின் தொழில் வரலாற்றில் இந்த சம்பவம் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியது. சந்தேகமே இல்லை.

Anonymous said...

ஜடாயு, நல்ல பதிவு.

கிள்ளி வளவன், விவேகானந்தருக்கும் டாடாவுக்கும் தொடர்பு உண்டு என்பது நான் அறியாத செய்தி.. இதைத் தந்ததற்கு மிகவும் நன்றி. இது பற்றி கூகிளில் தேடியதில் டாடா ஸ்டீல் வெப் சைட்டிலேயே அது பற்றிய விஷயம் கிடைத்தது.

http://tatasteel.com/company/vivekananda.asp

சுவாமி விவேகானந்தருக்கு ஜாம்செட்ஜி டாடா எழுதிய கடிதம் இந்தத் தளத்தில் உள்ளது. ஆன்மிக அரசர், தொழில் மன்னர் இரண்டு பேருமே இந்தியாவின் தவப் புதல்வர்கள் தான். இவர்களை நினைவூட்டியதற்கு மிக்க நன்றி.

Anonymous said...

Dear Jadayu,

This news is creating waves of rapture across India's Business circles! I am very happy that somebody is writing abt this in Tamil blogs too.

Greetings.
- S P Ramadurai

ஜடாயு said...

வருகைக்கு நன்றி சந்தோஷ், கோபால் மற்றும் ராமதுரை அவர்களே.

கங்காதரன், டாடா ஸ்டீல் சுட்டி தந்ததற்கு மிகவும் நன்றி.

Anonymous said...

Hi Jadayu,
nice post,the ans for Killi Valavan's question is Rockefeller of Standard Oil
regards
krishna

bala said...

//இந்தியாவின் தொழில் வரலாற்றில் இந்த சம்பவம் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியது. சந்தேகமே இல்லை.//

ஜடாயு அய்யா,

மிகப் பெரியா சாதனை தான் இது.இந்தியாவுக்கு டாடா போன்றவர்களால் தான் பெருமையே,தவிர மஞ்ச துண்டு,ப்ராகஷ் கரத் போன்ற கேவலமான அரசியல் வாதிகளால் அல்ல.'என்னைப் பொருத்தவரை டாடா அவர்கள் சாதனை,நம்ம வ உ சி அய்யா செய்து காட்டிய சாதனை போல பிரம்மாண்டமானது.

பாலா

arunagiri said...

சர்வதேச ஸ்டீல் உற்பத்தியில் குறிப்பிடத்தக்க பங்கை கைக்கொண்டுள்ள இன்னொரு இந்தியர் லஷ்மி மிட்டல். ஐடியில் மட்டுமல்லாமல் எஃகு உற்பத்தி போன்ற மூலப்பொருள்கள் துறையிலும் இதன்மூலம் உலகத்தின் கவனத்தைத் தன்பக்கம் திருப்பியிருக்கிறது இந்தியா.

1800-இன் துவக்கங்கள் வரை இந்திய எஃகு பிரிட்டிஷ் எஃகைவிடத் தரம் மிகுந்ததாகவே உலகில் மதிக்கப்பட்டது. எஃகுத் துறையின் மீது பல கட்டுப்பாடுகளையும் வரிகளையும் கொண்டு வந்து ஒரு நூற்றாண்டுக்குள் அந்தத்துறையையே நாசமாக்கியது பிரிட்டிஷ் அரசு. ஆனாலும்கூட 1900-இன் தொடக்கங்களில் மீண்டும் துளிர்விடத்தொடங்கியது இத்துறை. டாடாவுக்கு உத்வேகம் தந்தது அப்போது பரவிக்கொண்டிருந்த ஸ்வதேஷி என்ற தாரக மந்திரம். முதல் உலகப்போரில் பிரிட்டிஷ் அரசுக்கும் நேச நாடுகளுக்கும் எஃகு ஹெல்மெட்டுகள், ஆர்மர்ட் வாகனங்கள் ஆகியவற்றை சப்ளை செய்தது டாடா ஸ்டீல் கம்பெனி. அவற்றின் தரம் அப்போதைய வைஸ்ராய் ("மாண்டெகு- ஷெம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள்" புகழ்) ஷெம்ஸ்போர்டால் மிகவும் சிலாகிக்கப்பட்டது.

எத்தனையோ இடர்ப்பாடுகள், நேருவின் மண்ணாங்கட்டி சோஷலிசம், லைசென்ஸ் ராஜ் இவையெல்லாம் தாண்டித்தான் டாடா ஸ்டீல்ஸ் இந்த அளவு இன்று வளர்ந்துள்ளது. உள்ளார்ந்த தேசிய அர்ப்பணிப்புடன் பாரதத்துடன் தங்களை ஒருங்கிணைத்துக்கொண்டு உழைக்கும் சிறுபான்மையினருக்கு பாரதம் அள்ளித் தரும் வளமையின் அடையாளமாகவும் டாடாவின் இந்த வளர்ச்சியைக் குறிப்பிட முடியும்.

மிகவும் சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு விஷயம் டாடாக்களின் நேர்மை, தொழில்முறை எதிக்ஸ், அங்கு பணி புரியும் தொழிலாளர்களின் உணர்வு பூர்வ அர்ப்பணிப்பு, அந்த லாயல்டியை மதித்து ரிவார்ட் செய்யும் நிர்வாகம் ஆகியவை- இப்படி பெனவலண்ட் கேபிடலிஸம் என சொல்லத்தக்க முதலாளித்துவத்தின் பல நல்ல அம்சங்களை உள்ளடக்கி வளர்ந்திருக்கிறது டாடா ஸ்டீல்.

பங்குச்சந்தை டாடாவின் இந்த விரிவாக்கத்தைப் பரிவோடு பார்க்கவில்லைதான். ஆயினும் டாடாவின் செம்மையான மேலாண்மைத் திறன், எஃகுத்துறையில் நீண்ட கால அனுபவம் ஆகியவை இந்த விரிவாக்கத்தை வெற்றிகரமாகக் கொண்டு செலுத்த அவர்களுக்கு வெகுவாகக் கை கொடுக்கும் என்றே நம்புகிறேன்.

ஜடாயு said...

// எத்தனையோ இடர்ப்பாடுகள், நேருவின் மண்ணாங்கட்டி சோஷலிசம், லைசென்ஸ் ராஜ் இவையெல்லாம் தாண்டித்தான் டாடா ஸ்டீல்ஸ் இந்த அளவு இன்று வளர்ந்துள்ளது //

உண்மை, உண்மை. இவ்வளவு இன்னல்களுக்கு இடையிலும் தங்களது தார்மீகக் கோட்பாடுகளின் படியே தங்கள் பிஸினசை நடத்தியதும் குறிப்பிடத் தக்கது..

// பங்குச்சந்தை டாடாவின் இந்த விரிவாக்கத்தைப் பரிவோடு பார்க்கவில்லைதான். //

இந்த விரிவாக்கம் அனேகமாக உறுதி என்று தெரிய ஆரம்பித்ததும் டாடா ஸ்டீல் பங்குகள் 10% விழுந்துள்ளன. இன்னும் கொஞ்சம் கூட சரியலாம். ஆனால் இது கண்டிப்பாக தற்காலிகமானது தான் - இவ்வளவு பெரிய கம்பெனியை வாங்கும் செலவினம் கம்பெனி பாலன்ஸ் ஷீட்டை பாதிப்பதன் விளைவு.

ஆனால் நீண்ட கால நோக்குப் படி, டாடா ஸ்டீல் பங்குகள் தங்கம். நீங்கள் பங்கு முதலீட்டாளர் என்றால், ஒரு Tip: இந்த சரிவை வாய்ப்பாகப் பயன்படுத்தி டாடா பங்குகளை வாங்கிப் போடுங்கள். இன்னும் 5-6 வருடங்களிலேயே அந்த செல்வம் வளர்ந்திருப்பதைக் காண்பீர்கள்!

Anonymous said...

i am aasath

All of the Sons of Broker TATA ...

Do you know about South indian Bharisal ...

Or Do you know about VOC ...

You celebrate the man whom is the Contracter of East Indian Co.s' Soldier Mess while Pilashi battle.

While his support to suppress the Sepoy miniuity on 1857, they give our motherland of Outh to Broker & Vhebeeshnan TATA.

Pls listen the before history of Outh. They were fulfill the Bengal regiment. After their important contribution, British empire had demolish the regiment of bengal due to their rebelion culture.

Bharisal is the place of Bengal. From that city, many small merchants of india had organise the Shipping corporation for indian based export business which against England.

South indian Bharisal is Thoothukudi. VO chidhambaram whom is the lawyer of Dist. court had start as it is the bharisal but he collected the public share for this struggle. Pls compare TATAs issues today. Is it useful to MNCs or Indian Patriatism?

He is the THROGI of our freedom struggle.. i can proove with many points ang infinite grounds

ஜடாயு said...

அசத்,

உங்கள் பார்வை குறைபட்டது.

இங்கே வ.உ.சியை யாரும் பழித்துரைக்கவில்லை. அவரது தேச பக்திக்குத் தலைவணங்குகிறேன். பாரிசால் சுதேசிய முயற்சிகளையும் இவ்வாறே மதிப்பிடுகிறேன்.

இங்கே டாடா இரும்பில் செய்த ஹெல்மெட்டை பிரிட்டிஷ் வீரர்கள் முதல் உலகப் போரில் பயன்படுத்தியது பற்றியே அருணகிரி எழுதியிருக்கிறார். பிரிட்டிஷ் எதிர்ப்பு என்ற ஒற்றைச் சிந்தனையில் அது தவறு என்று முதலில் தோன்றலாம். டாடா அடிப்படையில் ஒரு வணிகர். தனது வணிக தர்மத்தின் படி அவர் செய்தது சரி என்று தான் மனச்சாட்சி உள்ள எவனும் சொல்லுவான். காந்திஜி, நேரு, நேதாஜி உள்ளிட்ட தேசியத் தலைவர்களும் அனைவரும் டாடாவைத் தேசபக்தர் என்றே கருதினர்.

இந்தியத் தொழில் துறையின் தந்தையை துரோகி என்று சொல்ல வருகிறீர்! இதற்கு மூளைச் சலவை செய்யப் பட்ட உமது இஸ்லாமிய வெறிதான் காரணமோ? ஒரிஜினல் பெயரில் வந்து உண்மை சொல்லவும்.

ஒருவேளை அந்த ஹெல்மெட் அணிந்த வீரர்கள் துருக்கி சுல்தானுக்கு எதிராக சண்டையிட்டு அவரைத் தோற்கடித்தது தான் டாடா மீதான உமது கோபத்துக்கு காரணமோ?

கோபிநாத் said...

guys create a fan club for Business Man and Follow them

Anonymous said...

i am aasath

Dont use the certificate of Gandhi and nehru to the patriots..
Did them support Bagath....?

Your fiction of history is clear.
But pls compare the sacrifice of VOC and TATA. Also compare their Confident about peoples also.

Tata gave the food for English soldier to defeat our 1857 Patriots. They hadn't partitioned by Religion on their battles. Tata gave his orinal face to the Indian Sepoys.

First world war had not started for Remove Sulthaan. It was told by not us only... read your roll-model Hitler also describe it.

So please give such freedom to ironed brain on youselves.

Gandhi had forgot to give the money to VOC which had collected from Tamiz peoples of South Africa. Do you kno it.

Anonymous said...

அசத்து (தமிழில் உங்கள் பெயரை இப்படித்தான் உச்சரிப்பார்கள் என்று நினைக்கிறேன்.) அவர்களே,

டாட்டாக்களும் பிர்லாக்களும் சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டதால் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் எதிர்ப்பை சம்பாதித்த விஷயங்கள் தெரியுமா?

நீங்கள் சொல்லுகின்றபடி உலகப்போர் வீரர்களுக்கு துப்பாக்கியும் ஆயுதங்களும் தயாரித்தது தவறென்றால் ஆங்கில அரசாங்கத்தில் இஸ்லாமியர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு வேண்டும் என்று போராடிய முஸ்லீம் லீக் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஆங்கில அரசாங்கத்திற்கு ஆதரவாக இந்தியாவை விலை பேசிய இஸ்லாமியர்கள் பட்டியல் நீளம் கின்னஸ் சாதனை படைக்குமே.

முஸ்லீம் லீக்கினால் வெளியிடப்பட்ட முதல் கட்டுரையின் சுருக்கமான நோக்கம் கீழே:

"To promote among the Mussalmans [Muslims] of India, feelings of loyalty to the British Government,"

காங்கிரஸிலிருந்து ஜின்னா முழுவதுமாக வெளியேறி, முஸ்லீம் லீக்கில் முழுவதுமாக உறுப்பினர் ஆனதற்கான காரணம் என்ன தெரியுமா? 1905ம் ஆண்டு ஹிந்துக்களையும் அவர்களால் சகோதரர்களாக இன்றுவரை கருதப்பட்டுவரும் இஸ்லாமியர்களையும் பிரித்த கர்ஸனின் வங்காளப் பிரிவினையை 1911ல் ஆங்கில அரசாங்கம் மறுபரிசீலனை செய்து அவற்றை ஒன்றாக இணைக்க முடிவு செய்ததுதான்.

ஹிந்துக்களும் முஸ்லீம்களும் நட்பு பாராட்டக்கூடாது என்பதற்காகவே தனது போராட்டத்தை நடத்தி வந்த நபிகள் நாயகம் வழித்தோன்றல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


"டைரக்ட் ஆக்ஷன் டே" என்று ஃபத்வா விதித்து இந்தியாவில் நடந்த மிகப் பெரிய கொலைவெறியாட்டத்திற்கு வித்திட்டவர்களைப் பற்றிய உங்களது கருத்து என்ன?

உங்களைப் போன்றவர்களால் ஹிந்துத்துவவாதியாக கருதப்படும் பால கங்காதர திலகரின் தமிழகத் தளபதிகளாய் விளங்கியவர்கள் மும்மூர்திகளான சுப்பிரமணிய பாரதியார், வ வே சு, மற்றும் வ உ சி.

இவற்றில் இவர்களில் ராமாயண விபீஷணருக்கு இணையான நற்குணங்கள் கொண்ட வ உ சி அவர்களின் பெயரை எழுதியதால் உங்களது மற்ற பாவங்கள் விலகின என்றாலும், கற்றுக்கொள்ளுதல் என்கின்ற ஒரு விஷயத்தை பெறுவதற்கு ஏதேனும் புண்ணிய காரியத்தை நீங்கள் செய்ய வேண்டி வரும்.

உங்களின் கணக்கின்படிப் பார்த்தால் ஆங்கிலேயர்களின் ஆட்சியில் அரஸாங்க வேலை செய்த முகம்மதியர்களும், ஆங்கிலேயரோடு வாணிகத் தொடர்பு வைத்து வளமாய் வாழ்ந்த முகம்மதியர்களும் சொந்த நாட்டை காட்டிக்கொடுத்த கபடர்கள் ஆவார்கள்.

வரலாற்றை திரித்துப் பேசி நயவஞ்சகத்திற்கு நாட்டை அழைத்துப் போவதற்கு ஏன் "பச்சை" துரோகம் என்கின்ற பெயர் வந்தது என்று இப்போதுதான் புரிகின்றது.

Anonymous said...

தமிழராய் பிறந்து தமிழில் எழுதத் தயங்கும் ஆசாத் அவர்களே,

http://ennam.blogspot.com தங்களுடையதா?

அங்கே தமிழில் அல்லவா கட்டுரைகள் உள்ளன. ஒருவேளை அது உங்களுடையது இல்லாமலிருக்கலாம்.

தங்களுடையதாக இருந்தால் மிக்க மனமகிழ்வோடு நீங்கள் அரபியில் எழுதியிருப்பீர்கள்.

Anonymous said...

aasath idamirunthu

mannikkavum. Thayavu seythu varalaatrai yarukkum theriyathu enak karuthi thirikkaatheergal.

Which loss is biggest ... probit from so-called republic indian country to Birla by gave the lodging to Broker Gandhi OR Loss his all property and years as pull the Chekku by VOC for against the British navigation company by peoples contribution...

Dont flame muslim league only ... congress (two parties also) support them for our dominian freedom. Is it correct or possible?

Gandhi, Savarkkaar, Vajpayee, Ettappan, Vijaya ragunatha thondaiman, Saraboji, Manmohan singh, Arcot nawab, Nizam, Meer Sathak, Poornayar also Throgis whom to ready to sell our nation. They have came from all religion like patriots.

Pls see the minutes book of Conres inaugration and press release of Gandhi while befor the day of hanging of Bagath. Is it better than anything..

Who had responsibility for Direct action day ... Fundamentalist of eversides or Democratics.. what is your openion about Best Bakery Victims whom demolished by HINDU DEMOCRATICS.

Dilak had start the struggle by the Vinayagaa Staues. Is it used to found democracy or Fundamentalism?

What is his writen plan after got freedom. Pls read the article of Thilak.

Dont join VOC with Va.Vae.Su Iyer and Bharathi. Last two were not democratic rebelion. They suppoerted VARNAASHRAMADHARMAA by their poem and ASHRAMAM. VOC had changing his faults like communist. He has notVhibeesnan. he is raavanan. Raman of freedom fight (Savargaar) asked apology for his participation of freedom struggle. But raavanan VOC started the Shipping company against them and initiate the Coral mill labours to Political strike in first time of India.

From 1833 Mechalaes sons came from FCs of Hindu and Higher class Muslims. They supported them for their daily wages. You may see this at the propagandaas of Congress also.

For his shiping company VOC lost his Membership of BAR counsil Subramanya Sive got Lebracy. Savarkar got bail from Andaman Jail

Anonymous said...

உபயம் : எக்கானாமிக் டைம்ஸ் என போட மறந்து விட்டீரே!!( முதல் பத்தி)

ஜடாயு said...

// உபயம் : எக்கானாமிக் டைம்ஸ் என போட மறந்து விட்டீரே!!( முதல் பத்தி) //

அனானி, இந்த விஷயம் டாடா வரலாற்றிலேயே உள்ளது. அன்றைய செய்தித் தாளில் முதல் பக்கத்தில் எகனாமிக் டைம்ஸ் இதைப் போட்டது சிறப்பு.

முதல் பத்தி மட்டுமல்ல, இந்தப் பதிவு முழுவதுவே எகனாமிக் டைம்ஸ் மற்றும் பல பிசினஸ் செய்தி ஊடகங்கள் தான் :)))

Anonymous said...

// டாடா அடிப்படையில் ஒரு வணிகர். தனது வணிக தர்மத்தின் படி அவர் செய்தது சரி என்று தான் மனச்சாட்சி உள்ள எவனும் சொல்லுவான் ///

typical bramin thinking. just like vallalar said 'they would be ready to do anyting as long as it brings them benefit'

Anonymous said...

//"பச்சை" துரோகம் என்கின்ற பெயர் வந்தது என்று இப்போதுதான் புரிகின்றது.
//

காலத்துக்கு தேவையான கண்டுபிடிப்பு . ( அன்னியாரின் குரல்வளை கவிதை போல ) அருமை கிள்ளிவளவன் .

கரு.மூர்த்தி

Anonymous said...

சரியான பதிலைச் சொன்ன க்ருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள். பரந்தாமரே, அல்வா அல்லது வெண்ணை எது வேண்டும்?

ராக் ஃபெல்லர் ஃபௌன்டேஷன் உருவாகக் காரணமானவரும் நம் விவேகானந்தரே.

இன்னும் ஒரு கேள்வி. அமெரிக்காவின் கல்வித் திட்டத்தை தீட்டியவரும்கூட ஒரு பக்கா ஹிந்துத்துவவாதிதான். அவர் யார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.