"அம்மா என்றால் அன்பு" : காலில் விழுந்த கருணாநிதி
அகில உலகையும் தன் அன்பால் அரவணைக்கும் அன்னை மாதா அமிர்தானந்தமயின் தமிழக விஜயம் பற்றி பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
நாகப் பட்டினத்தில், ஒரு தனி அமர்வில் தமிழ்க முதல்வர் கருணாநிதி அம்மாவின் காலில் விழுந்து வணங்கினார் என்று செய்தி வந்திருக்கிறது. அவரது துணைவியார் ராசாத்தி அம்மாளும் உடன் இருந்தார். அப்போது அங்கு இருந்த போலீஸ் தலைகள் இதைக் கண்டு பிரமிப்பில் ஆழ்ந்துள்ளன.
கலைஞர் கருணாந்தி பூர்வஜன்மத்தில் செய்த புண்ணியமோ என்னவோ, அன்னையின் அடிகளில் வீழும் பாக்கியம் அவருக்குக் கிடைத்து விட்டது.
நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து
நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய்! நின்னை உள்ள வண்ணம்
பேயேன் அறியும் அறிவு தந்தாய்! என்ன பேறு பெற்றேன்
தாயே! மலைமகளே! செங்கண் மால் திருத் தங்கச்சியே!
என்ற அபிராமி அந்தாதி நினைவுக்கு வருகிறது. "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்" என்ற கொள்கை முழக்கத்தில் ஊறிய கருணாநிதி, ஏழைகள் அம்மாவின் சிரிப்பில் இறைவனைக் காண்பதாகப் பேசியுள்ளார். அம்மா பராசக்தி! வாழவைக்கும் உன் புன்னகையின் சக்தி தான் என்னே!
செய்தி: அம்மாவின் சிரிப்பில் கவர்ச்சி: கருணாநிதி
நாகை மாவட்டத்தில் சுனாமி பாதித்த மீனவர்களுக்காக, அமிர்தானந்தமயி மடம் சார்பில், 9 கோடி ரூபாய் செலவில் 450 வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன. இந்த வீடுகளை அரசிடம் ஒப்படைக்கும் விழா நாகையில் நேற்று நடைபெற்றது. முதலமைச்சர் கருணாநிதியிடம் மாதா அமிர்தானந்தமயி தங்கநிற அடையாள சாவியை வழங்கி,முறைப்படி வீடுகளை ஒப்படைத்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர், கேராளத்தின் கடலோர கிராமத்தில் பிறந்த அம்மா நல்ல தொண்டுகளை செய்து வருகிறார் என்று பாராட்டினார். மேலும் 500 வீடுகளைக் கட்டித்தர மடம் தயாராக உள்ளது என மனு அளிக்கப்பட்டது. அதில், மடம் தயாராக உள்ளது என்பதற்குப் பதிலாக தாயாராக உள்ளது என இருந்ததை முதலமைச்சர் கண்டுபிடித்துவிட்டார். அதை அவர் குறிப்பிட்டு, கடிதத்தில் இருப்பதைப்போல அவர் தாயாராக இருந்து கேரள மக்களைப்போல தமிழக மக்களையும் காப்பாற்றவேண்டும் என்று கூறியது சுவாரஸ்யமாக இருந்தது.
மேலும், அவருக்க்கே உரித்தான பாணியிலும், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணுகிறார். இதைப் பார்ப்பதில் எனக்கு மகிச்சி. அவருடைய சிரிப்பில் ஒரு கவர்ச்சி இருக்கிறது. ஏழைகளுக்கு அந்தக் கவர்ச்சி பிடித்திருக்கிறது என்றார் கருணாநிதி.
அகிலம் முழுவதற்கும் தன் அன்புச் சிறகுகளின் நிழலில் ஆறுதல் தரும் அம்மாவின் அன்புக் கரங்கள் பற்றி "Darshan - The Embrace" என்று ஒரு ஆவணப் படத்தை டச்சு இயக்குனர் ஒருவர் எடுத்துள்ளார். (இந்த அருமையான படம் இந்தியாவில் பெரிய அளவில் திரையிடப் பட்டதாகத் தெரியவில்லை - யாருக்காவது தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்). இந்தப் படத்தைப் பார்த்துப் பரவசமடைந்த பிரெஞ்சு பிஷப் ஒருவர் "அம்மாவைக் காண என் மனம் துடிக்கிறது. மேற்குலகில் ஆன்மிகம் என்றால் என்ன என்பதையே நாம் மறந்து விட்டோம். அம்மா தன் அன்பால் அதனை நினைவூட்டுகிறார்" என்கிறார். ஈரானைச் சேர்ந்த ஷயீதா அம்மா ஆசி வழங்கியதும், நெகிழ்ந்து கண்ணீர் விடுகிறார். உலகெங்கும் பக்தர்கள் மணிக்கணக்கில் தவங்கிடந்து நின்று அம்மாவை தரிசிக்கின்றனர்.
அன்னை பராசக்தியின் இந்தத் திருஅவதாரம் கடையர்களையும் தன் கடைக் கண் பார்வையால் கடைத்தேற்றுகிறது. அம்மாவின் அளப்பரிய கருணை உலகத்தில் மறைந்து வரும் மானுடப் பண்புகளுக்கு மறுவாழ்வளிக்கிறது.
உள்ளம் உருகாதோ - பொய் ஆணவ
ஊனம் ஒழியாதோ
கள்ளம் தவிராதோ - அம்மா, பக்திக்
கண்ணீர் பெருகாதோ
வெள்ளக் கருணையிலே - இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ
விள்ளற்கரியவளே - அனைத்திலும்
மேவியிருப்பவளே
- மகாகவி பாரதி
15 comments:
பாரதியின் கட்டுரை தொகுப்புகளை படிக்க ஆவலாய் உள்ளேன். ஏதேனும் புத்தகம் உள்ளதா?
செல்வா,
செய்திக்கு நன்றி. கருணாநிதி யோகப் பயிற்சி பெற்று உடல், மன நலம் பெற்றது பற்றி பொதுமன்றில் பேசியிருப்பது நல்லது. இந்து மதத்தின் ஆதி குருபரர்களான ரிஷிகள் உருவாக்கிய யோகக் கலை, தியானம் இவை தனக்கு நன்மை நல்கின என்று ஒப்புக் கொண்ட கருணாநிதியின் நேர்மையைப் பாராட்டுகிறேன்.
அதுவும் அவர் இங்கே புகழாரம் சூட்டியிருக்கும் யோகபீடம் ஒரு "செக்யுலர்" யோகப் பயிற்சி நிலையம் அல்ல. பதஞ்சலி யோகத்தை பாரம்பரியமாகப் பயிற்றுவித்து வரும் யோகாசாரியார் உருவாக்கிய கேந்திரம் என்பதும் குறிப்பிடத் தக்கது.
இந்த யோகப் பயிற்சிகள் அவர் மனத்தில் இருக்கும் இந்து விரோத விஷத்தை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி விடும் என்று நம்புவோம்.
// Hari said...
பாரதியின் கட்டுரை தொகுப்புகளை படிக்க ஆவலாய் உள்ளேன். ஏதேனும் புத்தகம் உள்ளதா? //
ஹரி, "பாரதியார் கட்டுரைகள்" என்ற தலைப்பில் வானதி/நர்மதா மற்றும் வேறு சில பதிப்பகங்கள் வெளியிட்ட நூல்கள் உள்ளன. "பாரதியார் கதைகள்" என்ற அருமையான தொகுப்பும் கிடைக்கிறது..
இது தவிர "மகாகவி பாரதியின் உரைநடை வரிசை" என்று மணிமேகலைப் பிரசுரம் 7-8 சிறு தொகுதிகளை வெளியிட்டுள்ளது.
தகவலுக்கு நன்றி.
உங்களை போன்ற பதிவர்கள் கருணாநிதி அவர்களை பற்றி எழுதவேண்டிய அவசியமேயில்லை. பாரதியை பற்றியும், இன்ன பிற நல்ல விஷயங்களை பற்றியும் எழுதுங்கள்.
யாதுமாகி நின்றாய் காளி, எங்கும் நீ நிறைந்தாய்....
ஆஹா, தமிழ் நாட்டில் ஆன்மீக மணம் வீசுகிறதே. எங்கெங்கு நோக்கிலும் ஆன்மிகவாதிகள் முழங்கும் ஓம்கார நாதம் ஓங்கி ஒலிக்கட்டும். இந்தியா வல்லரசு அதில் தமிழ்நாடு நல்லரசு என்ற கனவு நனவாகட்டும்.
வாழ்க ஆன்மிகம்..வளர்க சனாதான தர்மம்..
//உள்ளம் உருகாதோ - பொய் ஆணவ
ஊனம் ஒழியாதோ
கள்ளம் தவிராதோ - அம்மா, பக்திக்
கண்ணீர் பெருகாதோ
வெள்ளக் கருணையிலே - இந்நாய் சிறு
வேட்கை தவிராதோ
விள்ளற்கரியவளே - அனைத்திலும்
மேவியிருப்பவளே
//
மறைந்த சங்கீத வித்வான் திரு மகாராஜபுரம் சந்தானம் அவர்களின் குரலில் பாரதியாரின் அற்புதமான பாடல். "மோகத்தை கொன்று விடு அல்லால்...."
இது இயற்கையின் பரிணாமம்.
கலைஞர் கருணாநிதி என்ன? இன்று தடாலடி அடிக்கும் பல நாத்திகர்கள்,பார்வை குறைந்து,கூண் விழுந்து நடக்க மூன்றால் கால் தேடி..
பிடிக்க ஒரு கரம் தேடுகையில்!!
இங்கு தான் வந்து விழ வேண்டும்.
இது காலத்தின் கட்டளை மட்டும் அல்ல,இயற்கையின் நியதி.
கல்யாண வீடு முதல் கருமாதி வீடு வரை அரசியல் நுழைப்பதில் கருணானநிதி சமர்த்தர்.வேண்டாத வெட்டி விமர்சனம் செய்வது எதிர்க்கட்சிகளை எள்ளி ந்கையாடுவ்து என்றால் கருணாநிதிக்கு மிகவும் பிடிக்கும். தியானத்தின் சிறப்பைப் பற்றி பேசும் போது கூட்டணி பற்றி பேசவெண்டிய தேவை என்ன?
// இந்தியா வல்லரசு அதில் தமிழ்நாடு நல்லரசு என்ற கனவு நனவாகட்டும். //
சிவா, அருமையான கோஷம். தமிழக அரசியல் கட்சி ஏதாவது இதைப் பிரபலம் செய்ய வேண்டும்.
// மறைந்த சங்கீத வித்வான் திரு மகாராஜபுரம் சந்தானம் அவர்களின் குரலில் பாரதியாரின் அற்புதமான பாடல். "மோகத்தை கொன்று விடு அல்லால்...." //
ஆமாம் ! வாகதீஸ்வரி (அல்லது பாகேஸ்ரீ) ராகத்தில் இந்த உள்ளம் உருக்கும் பாடலை அவர் குரலில் கேட்பது பரவச அனுபவம்!
// இங்கு தான் வந்து விழ வேண்டும். //
குமார், விஷ்ணுவின் ஆயிரம் நாமங்களில் "படுகுழி" என்பதும் ஒன்று :))
// இது காலத்தின் கட்டளை மட்டும் அல்ல,இயற்கையின் நியதி. //
நன்று சொன்னீர்.
// தியானத்தின் சிறப்பைப் பற்றி பேசும் போது கூட்டணி பற்றி பேசவெண்டிய தேவை என்ன? //
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்!
ஜடாயு ஐயா
கருணாநிதிக்கு ஏதோ நல்ல புத்தி வந்து விட்டது என்று சந்தோஷப் பட வேண்டாம். கருணாநிதிக்கு இந்துக்கள் ஓட்டுக்களும் தேவைப் படுவதாலும், கருணாநிதியின் இந்து எதிர்ப்பு ஒரு சிறுபான்மை இந்து ஆதரவாளகள் ஓட்க்குக்களையேனும் பாதிக்கும் வாய்ப்பை உளவுத் துறை மூலம் அறிந்ததால் அவர் போடும் களவாணித்தனமான வேடம் இதெல்லாம். கருணாநிதிக்கு தானும் தன் குடும்பமும் செழிப்பாக இருக்க வேண்டும் அதற்காக எது வேண்டுமானாலும் செய்வார் எந்த மேடை வேண்டுமானாலும் ஏறுவார். கருணாநிதி இந்துக்களின் நெம்பர் 1 எதீரி என்பதை என்றும் மறக்க வேண்டாம்.
அன்புடன்
ச.திருமலை
Karunanidhi: "Amma Is a Pearl Among Humans"
----------------
"The Tamil Nadu Government and its people are extremely happy at the way in which the Mata Amritanandamayi Math has gone about in wiping the tears from the eyes of those fishermen who lost their houses and belongings and even their families in the tsunami disaster of 2004," said Dr. M. Karunanidhi, the Honourable Chief Minister of Tamil Nadu at the beginning of Amma's program in Nagapattinam.
This was the third time that Amma had visited the tsunami-ravaged area—the first being in February of 2005, just two months after the disaster, and the second in December of that same year. In that time, the Math has completed 1,489 houses in the district.
Before Amma's program, Karunanidhi visited one of the villages reconstructed by the Ashram. Mentioning this fact in his speech, the CM said, "The houses are so good that even I felt like asking for one for myself. The houses are so well-built and so planned that they have become a boon to the beneficiaries."
Karunanidhi praised Amma's wisdom, love, compassion and selfless service. "Amma, I understand, was born in a fishing village called Parayakadavu by the seaside in Kerala. What does the ocean wash up on its beaches? Pearls. Amma is a pearl among humans: the Pearl of Wisdom, the Pearl of Compassion, the Pearl of Selfless Service and the Pearl of Love."
Karunanidhi then helped the Ashram distribute house keys to 10 recipients of the Ashram's tsunami-rehabilitation program, as well as pensions and sewing machines to various impoverished people. The house keys were symbolic of 420 houses the Ashram has recently completed in Keezhe Pattinacherry. The pensions were representative of the Ashram extending its Amrita Nidhi Pension program by 100 people in the area. And the sewing machines stood for 100 such machines the Ashram has given away in order to help poor women expand their financial horizons.
After the public function, Amma gave satsang, led everyone in the singing of bhajans, and guiding everything through a meditation and manasa puja.
Amma then gave darshan throughout the night—the majority of those coming for her embrace so that once again have a roof over their head only due to Amma's grace.
Karunanidhi holding Amma's hand -
http://photos.amritapuri.org/bharat/2007/nagai07.php?sn=1
Post a Comment