Thursday, February 08, 2007

காவிரி தீர்ப்பு: கர்நாடகத்தின் நிலைப்பாடுகள்

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அனேகமாக எதிர்பார்த்தது போலவே வந்தாயிற்று. தீர்ப்பு வந்த அன்று தென் கர்நாடகம் முழுவதும், குறிப்பாக பெங்களூரில் பதட்டம் நிலவியது; சில இடங்களில் போக்குவரத்து தடைபட்டது; ஆனால் எந்த விதமான கலவரங்களும் நடைபெறவில்லை. 1991ல் இது போன்ற தீர்ப்பின் போது தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப் பட்ட வன்முறை போன்று இந்த முறை கண்டிப்பாக நடக்க விடக் கூடாது என்பதில் அரசு மிக உறுதியாக நின்றது. காவல் படைகள் குவிப்பு மற்றும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியது இவை மூலம் தற்போதைய ஜனதாதள, பா.ஜ.க கூட்டணி அரசு இதை முழுமையாக சாதித்து விட்டது என்றே சொல்லவேண்டும். பல மாநிலங்களில் கலவரங்கள் அதே இடங்களில் கட்டுக்கடங்காமல் மீண்டும் மீண்டும் முளைத்து வருகையில் கர்நாடக அரசும், மக்களும் உணர்ச்சிக் கொந்தளிப்பு எளிதாக வெளிப்படக் கூடிய இந்தத் தருணத்திலும் கடமை உணர்வுடன் அமைதி காத்தது பாராட்டத் தக்கது. பெங்களூர் கேபிள் தொலைக்காட்சி விநியோகஸ்தர்கள் தமிழ் தொலைக் காட்சி சேனல்களைத் துண்டித்திருப்பதும், திரையரங்குகள் தமிழ்ப் படங்களை நிறுத்தியிருப்பதும் கொஞ்சம் மனக் கசப்பு தரும் விஷயங்கள். ஆனாலும், பெரிய அளவிலான தமிழர் எதிர்ப்பு உணர்வு இப்போது இல்லவே இல்லை என்பது நிம்மதி தரும் விஷயம்.

தீர்ப்பு வந்தவுடன் தமிழக அரசியல்வாதிகள் உடனே “எங்களது நீண்ட நாள் கோரிக்கைகள் நியாயமானவை என்று நிரூபிக்கப் பட்டு விட்டது” என்று அகமகிழ்ந்தனர். கர்நாடக அரசியல்வாதிகள் “இந்தத் தீர்ப்பு பெரும் துரோகம் இழைத்து விட்டது” என்று கொதித்தனர். ஆனால், கர்நாடகத்தின் சார்பாக வாதிட்ட இந்தியாவின் தலைசிறந்த சட்ட வல்லுனர் ஃபாலி எஸ். நரிமன், தீர்ப்பு திருப்தி தரும் வகையில் உள்ளது என்று குறிப்பிட்டார். பிரபல கலைஞரும், கன்னட எழுத்தாளருமான கிரீஷ் கர்னாட் “நாம் பரஸ்பரம் ஒப்புகொண்டு அமைக்கப் பட்ட இந்த நடுவர் மன்றத்தின் தீர்ப்பை ஏற்று அமல் படுத்துவது தான் சரியானது” என்று அறிக்கை வெளியிட்டு பல கன்னட இயக்கங்களின் கடுப்பை சம்பாதித்திருக்கிறார். தஞ்சை விவசாயிகள் சங்கத் தலைவர் ரங்கநாதன் “தேவைக்குக் குறைவாக உள்ள காவிரி நீரைப் பங்கிடுவது என்பது பற்றாக் குறை பட்ஜெட் போடுவது போன்ற விஷயம். எல்லாத் தரப்பினரையும் திருப்திப் படுத்துவது சாத்தியமே இல்லை. நாங்கள் கேட்ட அளவு தண்ணீர் கிடைக்காவிட்டாலும் தீர்ப்பை வரவேற்கிறோம்” என்றார். “இரண்டு நாட்கள் எங்கள் வீட்டில் தண்ணீர் வரவில்லை, இதுல தமிழ்நாட்டுக்கு வேற தண்ணி குடுக்கணுமா? இது அக்கிரமம்” என்ற வகையில் இந்தப் பிரசினையின் தலையும் வாலும் புரியாத பெங்களூர் சாஃப்ட்வேரிணிகள் ஆங்கிலத்தில் பொரிந்தார்கள். “பெங்களூரிலேயே ஒரு கன்னடருக்கு மூன்று தமிழ் ஆட்கள் என்கிற மாதிரி இருக்காங்க. கர்நாடகத்துக்கு உரிய தண்ணீரில் பெரும்பங்கையும் அவங்க தான் குடிக்கிறாங்க. விவசாயிக்கு என்ன பிரயோசனம்?” என்று மாண்டியா விவசாயி ஒருவர் குமுறினார்.காவிரி நதியின் பிறப்பிடம், தலைக்காவேரி

சன் நெட்வொர்க் குழுமத்தை சேர்ந்த கன்னட உதயா டி.வி. ஒருவிதமான தர்ம சங்கடத்திற்கு ஆளாகியிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. தீர்ப்பு வந்த திங்கட்கிழமை அன்று “உதயா வார்த்தெகளு” (உதயா செய்திகள்) சேனலில் விவசாய, கிராமத் தலைவர்களைப் பேட்டி கண்டு இந்த தீர்ப்பு எப்படி ஒருதலைப் பட்சமானது என்று ரொம்ப மெனக்கெட்டு விளக்கினார்கள். “ஏற்கனவே கர்நாடக அரசியல் வாதிகள் சாதுரியம் இல்லாமல் இருக்கும் நிலையில் இப்போது மத்தியில் காங்கிரஸ் எதிர்க்கட்சி வேறு. தமிழக அரசியல் வாதிகள் தேசிய அரசியலில் புகுந்து கலக்கும் ஜித்தர்கள். இது தான் இத்தகைய பாரபட்சமான தீர்ப்புக்கு வழிவகுத்தது” என்று பல கன்னட பொதுமக்கள் கருதுகிறார்கள். “ராஜகீய இச்சா சக்தி இல்லா” (அரசியல் முனைப்பு இல்லை) என்று தொலைக்காட்சிகளில் பலர் குறைப் பட்டுக் கொண்டார்கள்.

மொத்தத்தில் கர்நாடகம் ஒரு பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறது. ஐந்து தொகுதிகளும் ஆயிரம் பக்கங்களும் உள்ள இந்தத் தீர்ப்பைப் படித்துப் புரிந்து கொண்டு அதன் ஒவ்வொரு அம்சங்களையும் விளக்கும் கடினமான வேலையே இப்போது தான் ஆரம்பித்திருக்கிறது. அதற்குள் எதிர்ப்பு, மேல்முறையீடு, மறுவிசாரணைக்கான உடனடி கோரிக்கை என்று மும்முரமாக வியூகங்கள் வகுக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன. “தமிழகத்துக்கு 410, கர்நாடகத்துக்கு 270 தான்” என்று எண்ணிக்கை விளையாட்டை வைத்து உணர்ச்சிகள் தூண்டப் படுகின்றன. இதுநாள் வரை அமலில் இருந்த இடைக்காலத் தீர்ப்பின் படி வருடத்திற்கு 205 டிஎம்சி கன அடி தண்ணீர் (மேட்டூர் நீர்த்தேக்கத்தில் அளவீடு) கர்னாடகம் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று இருந்தது. இப்போது 192 டிஎம்சி கன அடி தண்ணீர் (பில்லி குண்டுலு நீர்த்தேக்கத்தில் அளவீடு) படி வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வந்திருக்கிறது. இடையில் உள்ள 60 கி.மீ நிலப்பரப்பில் சேகரமாகும் 25 டிஎம்சி கன அடி தண்ணீரையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், இந்த இறுதித் தீர்ப்பின்படி கர்நாடகம் ஏற்கனவே தரக் கடமைப் பட்டுள்ளதை விட அதிகம் தர வேண்டியது 12 டிஎம்சி கன அடி (192+25-205) தண்ணீர் தான்! இதற்குத் தான் இந்தப் பாடு! ஆனால் “கர்நாடகம் கேட்ட 465 கிடைக்கவில்லை, இது அநியாயம்” என்ற ரீதியில் பிரசாரம் நடக்கிறது.

காவிரி நதி பாயும் நிலப் பரப்பு தமிழகத்தை விட கர்நாடகத்தில் அதிகம். ஆனால் நதி நீரால் பயன்பெறும் டெல்டா பிரதேசம் என்று கணக்கிட்டால் கர்நாடகத்தை விட தமிழகத்தில் அதிகம் : “சோழ வளநாடு சோறுடைத்தாகிய” காலங்களிலிருந்து இதற்கு வரலாற்றுக் காரணங்கள் உண்டு. மொத்த நீரை, பயன்பெறும் டெல்டா பிரதேசங்களின் விகிதத்திற்கு ஏற்றபடி பங்கிட வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் தான் இந்த தீர்ப்பு தரப் பட்டுள்ளது. தமிழக டெல்டாப் பகுதிகளில் உள்ள நிலத்தடி நீர் அளவு 128 டிஆம்சி கனஅடியையும் சேர்க்க வேண்டும் (ஆனால் கர்நாடக நிலத்தடி நீர் அளவை சேர்க்க வேண்டாம்!) என்று கர்நாடக விவசாயிகள் தரப்பில் வைத்த வாதம் எடுபடவில்லை. மேலும், இந்தத் தண்ணீரை வைத்துக் கொண்டு குருவை, சம்பா என்று வருடத்திற்கு இரண்டு பயிர் செய்கிறார்கள் என்று கர்நாடக விவசாயிகள் தமிழக விவசாயிகள் மீது புகார் சொல்கிறார்கள். “ஏற்கனவே பெருமளவில் கிடைக்கும் மழைநீரை சேமிக்காமல் தமிழகம் கடலில் கொட்டுகிறது, அதே சமயம் கர்நாடகத்திலிருந்தும் தண்ணீர் வேண்டும் என்று அடம் பிடிக்கிறது. கர்நாடகம் தரும் தண்ணீரில் பெரும்பகுதியும் விவசாயத்திற்கு அல்ல, கடலில் தான் போய்ச் சேரும்” : இந்தக் கருத்தும் பல கர்நாடக விவசாயிகளிடம் உள்ளது. இதற்குத் தீர்வாக, கர்நாடகத்தோடு சண்டை போடுவதை நிறுத்திவிட்டு, கல்லணை என்ற பழைய அணைக்கட்டு மட்டுமன்றி வேறு சிறு அணைகளையும் தமிழ்நாடு உருவாக்கி காவிரி நீர் கடலில் போய் வீணாவதைத் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள். இதில் உண்மை உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை.கல்லணை, திருச்சி

பதினேழு வருடங்கள் பல வல்லுனர்களின் சிந்தனை மற்றும் விவாதங்களின் அடிப்படையில் வழங்கப் பட்டிருக்கும் இந்தத் தீர்ப்பு, கர்நாடகத்தில் பெரிய அளவு எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு என்ன தான் தீர்வு? “தமிழகத்திற்கு சொட்டுத் தண்ணீர் கூடத் தரவேண்டாம்” என்று தீர்ப்பு வந்தால் தான் கர்நாடகம் முழுமையாகத் திருப்தி அடையும் என்றால், அது மிகவும் கவலைக்குரிய விஷயம். நம்மிடம் இருக்கும் குறைந்த அளவு வளங்களை தேசிய சிந்தனையுடன் இருசாராருக்கும் பெரிய பாதிப்பு ஏற்படாத வகையில் பங்கிட்டுக் கொள்வது தான் நடைமுறையில் சிறந்த வழி. இந்த நடுவர் மன்றம் அதைச் செய்திருக்கிறது என்று ஒப்புக் கொள்ளத் தடையாக இருப்பது காவிரியை வைத்து கர்நாடகத்தில் பின்னப் பட்டுள்ள வெகுஜன அரசியல் தான்.

இதற்கு தூபம் போடும் வகையில் இது பற்றிய செய்திகளை வெளியிடும் எல்லா ஊடகங்களும் (குறிப்பாக தொலைக்காட்சிகள்) இது ஒரு சமூக வளங்களின் பங்கீடு என்பதாக இல்லாமல், போர் முடிவு போலவும், கிரிக்கெட் ஆட்ட முடிவு போலவும் “பெரும் வெற்றி”, “படுதோல்வி” என்கிற போக்கில் சித்தரித்து வருகின்றன. ஆங்கில செய்தி ஊடகங்களில் இருப்பவர்கள் பெங்களூர் என்ற மாபெரும் உலகத் தொழில் நகரம் பற்றி அறிந்த அளவு தஞ்சை விவசாய பூமி பற்றி அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த தீர்ப்பு “பெங்களூரின் வளர்ச்சிக்கு எதிராக” இருப்பதாகவும் ஒருவிதமான பிம்பம் உருவாக்கப் படுகிறது, இது துரதிர்ஷ்டவசமானது. பெங்களூர் போன்ற ஒரு வளரும் நகரம் தன் தண்ணீர்த் தேவைகள் அனைத்திற்கும் காவிரியை மட்டுமே நம்பியிருக்காமல், மற்ற பெருநகரங்கள் போல குழாய் கிணறுகள் மற்றும் வேறு பல வழிகளில் தன் நீர்த்தேவைகளை நிறைவேற்ற முயலவேண்டும். தமிழகமும், கர்நாடக விவசாயிகளின் அச்சங்களைப் போக்கும் வகையில் சிறு அணைத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். இத்தகைய முயற்சிகள் தான் இந்தப் பிரசினைக்கு நிரந்தரத் தீர்வு காண வழிவகுக்கும்.

27 comments:

vidyasakaran said...

very well written!
Thanks!

Hari said...

நல்லதொரு அலசல். நல்லதொரு பதிவு

சென்ஷி said...

//“தமிழகத்துக்கு 410, கர்நாடகத்துக்கு 270 தான்” என்று எண்ணிக்கை விளையாட்டை வைத்து உணர்ச்சிகள் தூண்டப் படுகின்றன.//

உண்மைதான். வெறும் வாக்கு வங்கிக்காக மக்களை தங்கள் இஷ்டப்பட்ட படி வளைக்க முயலும் அரசியல்வாதிகளை திருத்த யாராலும் முடியாது. அதை மக்களும் புரிந்து கொள்ளாததுதான் கொடுமை.

சென்ஷி

raj said...

very good analysis.thanks and keep it up.

Raj.

Dr. Ramanna Kumar Mahishi said...

Though you argue saying that only 12 TMC more needs to be given from the already obliged amount of water, you have written from the Tamilian point of view. -- Remember that first of all we kannadigas are yet to accept even the 'obliged amount'.--

We Kannadigas suffer from sparsity of water for all purposes including farming of lands.

In your article you have miscontrued the people to believe that the area through which the water flows have problem sharing of water. The requirement of water in uththara karnataka is more than we can imagine.

Apart from water for cultivation we need water to drink. Kannadigas like us, the children of this soil, are suffering for water.

You might be familiar with Bangalore, but not Karnataka.

Please consider the other cases as well.

You can write in Tamil. I can read it, though I cannot write. Far far better compare to Tamils who give a damn to other languages, is it not :-) !.

Vajra said...

சரியான முறையில் விஷயத்தைச் சொல்லியுள்ளீர்கள். இதே போல் அச்சு மற்றும் தோலைக்காட்சி ஊடகமும் தெளிவாக செய்தியைச் சொன்னால் குழப்பம் குறையும், பிரச்சனை தீர வழிகள் பிறக்கும்.

உண்மையிலேயே, NDTV, CNN IBN, ஆஜ் தக், சன், ஜெயா, செய்திகள் பார்க்கையில் இதை அவர்கள் கிரிக்கெட் ஆட்ட முடிவு போல் சொல்லியதாகவே நானும் கருதுகிறேன்.

Arun said...

//..இந்தத் தருணத்திலும் கடமை உணர்வுடன் அமைதி காத்தது பாராட்டத் தக்கது..//

மிகவும் சரி. ஆனால் பொருத்திருந்து பாருங்கள். இங்கு Airshow நடக்கவிருப்பதால்தான் நிலமை சீராக உள்ளது. வரும் திங்களன்று (12-02-07) கடையடைப்பு மற்றும் போராட்டங்கள் (பந்த்)நடக்கவிருக்கின்றன. அதன் பிறகு அவர்களின் பொறுமையை பற்றிய கருத்துக்கள் மாறுமா என்று பார்ப்போம்.

Anonymous said...

என்னங்க காவிரி எல்லாம் இப்ப விக்குமா?
டோண்டு மேட்டரில் பதிவு போடுங்க,ஹிட் ஆகும்.
ரெண்டு நாளாக அதுதான் செல்லிங்கு!!காவிரியில் தண்ணீர் வருவதா முக்கியம்,பின் மடல் செஞ்சுரிதானே முக்கியம்!!
உங்கள் பதிவு மிகவும் யதார்த்த நிலையை உரைத்தது.ஆனால் உப்புப் பெறாத சமாச்சரங்களுக்கு இருக்கும் வரவேற்பினை பார்க்கும் போது,படித்த,இளைய சமுதாயத்திடம் உள்ள நம்பிக்கை தளர்கிறது
அன்புடன்
பசும்பொன் பாண்டியன்
தாரவி
மும்பாய்

Kouthur Sriram said...

Well Done! A neat analysis of the current situation!
News Channel like TIMES NOW should stop interpreting in between lines and instigating the public.

ஜடாயு said...

கருத்து சொல்லிய அனைவருக்கும் நன்றி.


// மிகவும் சரி. ஆனால் பொருத்திருந்து பாருங்கள். இங்கு Airshow நடக்கவிருப்பதால்தான் நிலமை சீராக உள்ளது. வரும் திங்களன்று (12-02-07) கடையடைப்பு மற்றும் போராட்டங்கள் (பந்த்)நடக்கவிருக்கின்றன. அதன் பிறகு அவர்களின் பொறுமையை பற்றிய கருத்துக்கள் மாறுமா என்று பார்ப்போம். //

அருண், கண்டிப்பாக கர்நாடக மக்கள் அமைதி காப்பார்கள். ஏனென்றால் இந்த போராட்டம் நீதிமன்றங்களில் செய்ய வேண்டியது, வீதி மன்றங்களில் அல்ல என்று கன்னட இயக்கத் தலைவர்கள் உட்பட அனைவருக்கும் புரிந்திருக்கிறது. பந்த் கண்டிப்பாக வெற்றி பெறும், ஆனால் வன்முறை எதுவும் நடக்காது.

ஜடாயு said...

// டோண்டு மேட்டரில் பதிவு போடுங்க,ஹிட் ஆகும் //
// ஆனால் உப்புப் பெறாத சமாச்சரங்களுக்கு இருக்கும் வரவேற்பினை பார்க்கும் போது,படித்த,இளைய சமுதாயத்திடம் உள்ள நம்பிக்கை தளர்கிறது
அன்புடன்
பசும்பொன் பாண்டியன்
தாரவி
மும்பாய் //

பாண்டியன், சம்பந்தப் பட்ட நபரது வயதை அவரே பலதடவை குறிப்பிட்டு தான் இன்றும் இளைஞர் தான் எண்றும் கட்டியம் கூறிக் கொள்வார்.
அதனாலேயே அது இளைய தலைமுறை சார்ந்தது ஆகி விடாது :))

இளைய தலைமுறையில் பலர் துடிப்புடனும், சமூக அக்கறையுடனும் தான் உள்ளனர்.

ஜடாயு said...

ಡಾಕ್ತರ್ ರಾಮಣ್ಣಕುಮಾರ್ ಮಹಿಶಿ ಅವರೀ, ನಮಸ್ಕಾರಗಳು.

Dear Dr. Ramanna Kumar Mahishi,

THanks for your comments. I am pleasantly surprised that Tamil blogs caught your attention too!

// Though you argue saying that only 12 TMC more needs to be given from the already obliged amount of water, you have written from the Tamilian point of view. --//

Sir, Having lived in Bangalore for 7-8 yrs, I do have a sense of belongingness to Karnataka as well as Kannada.

//Remember that first of all we kannadigas are yet to accept even the 'obliged amount'.--//

Yes, I understand that and I think so did the tribunal. In this final verdict, I hear that they were not conditioned by previous judgements, but worked out the sharing from the scratch. The 'obliged amount' was quoted just for relative reference.

// We Kannadigas suffer from sparsity of water for all purposes including farming of lands. //

I fully understand and empathise with you. So are many parts of Tamil nadu too, including the famed "Rice bowl Districts" of Thanjavur belt.

// In your article you have miscontrued the people to believe that the area through which the water flows have problem sharing of water. The requirement of water in uththara karnataka is more than we can imagine. //

uththara kanna is an altogether different issue. Do you really think that Kaveri water can be taken northwards to Uththara kannada and utilised for irrigation and other purposes? I dont think anyone in Karnataka is thinking on these lines.

Uththara Kannada districts should ideally get water from the Krishna river regarding which there is an outstanding dispute bet' AP and Karnataka on raising Almatti dam height. The sad story is that the AP areas adjoining uththara kannada are also very dry and draught prone.

// Apart from water for cultivation we need water to drink. Kannadigas like us, the children of this soil, are suffering for water. //

Sir, THat does not mean that TN should not get its share, right? The situation is not very different in either TN.

Kaveri thaayi is the mother for both of us, Tamilians and Kannadigas. If there is shortage of her bounties, her motherly heart would share it equally with both her children and not favor one over the other, right?

// You can write in Tamil. I can read it, though I cannot write. Far far better compare to Tamils who give a damn to other languages, is it not :-) !. //

That is a sweeping generalisation Mahishi avare :))

Gopalan Ramasubbu said...

//காவிரி நதி பாயும் நிலப் பரப்பு தமிழகத்தை விட கர்நாடகத்தில் அதிகம்.//


I think it is wrong.Please read the article below :)

காவிரி பயணம் செய்யும் பாதை


கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையைச் சேர்ந்த பிரம்மகிரி மலையில், தலைக்காவிரி என்னும் இடத்தில் காவிரி தோன்றுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உற்பத்தி ஆகும் ஹேமாவதி, ஹேரங்கி, லட்சுமணதீர்த்தம், கபினி, சுவர்ணவதி போன்ற துணை நதிகள் கர்நாடகத்தில் காவிரியில் கலக்கின்றன. பீடபூமியின் உட்பரப்பில் தோன்றும் சிம்ஷா, அர்க்காவதி ஆகியவை காவிரியின் இடப் பக்கத்தில் சேருகின்றன.

கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியைக் கடக்கும்போது மேட்டூருக்குக் கீழே தெற்கு நோக்கி காவிரி திரும்புகிறது. பவானி, நொய்யல், அமராவதி போன்ற துணை நதிகள் கலக்கின்றன. பவானி நதி காவிரியுடன் இணைந்த பிறகு, காவிரியின் அகலம் விரிவு அடைகிறது. திருச்சியில் மேல் அணைக்கு மேற்புறத்தில் 2 கி.மீ. அளவுக்கு அது அகன்று, "அகண்ட காவிரி'யாகக் காட்சி தருகிறது.

மேல் அணையில் இரு பிரிவுகளாகப் பிரிந்து, வட பிரிவு கொள்ளிடம் என அழைக்கப்படுகிறது. கல்லணைப் பகுதியில் காவிரியிலிருந்து வெண்ணாறு பிரிகிறது. இவை இரண்டும் தொடர்ந்து பல கிளைகளாகவும், உட்கிளைகளாகவும் பிரிந்து, மொத்தம் 36 கிளை நதிகளாகப் பரவிப் பாய்கின்றன. இறுதியில் பூம்புகாருக்கு அருகே குறுகிய ஓடையாகக் கடலில் கலக்கிறது காவிரி.

மொத்தம் 800 கி.மீ. நீளம் உள்ள காவிரியில் 320 கி.மீ. கர்நாடகத்திலும், 416 கி.மீ. தமிழகத்திலும் ஓடுகிறது. இரு மாநிலங்களிடையேயான எல்லையாக 64 கி.மீ. தூரம் ஓடுகிறது.

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20070205122751&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0

ஜடாயு said...

// think it is wrong.Please read the article below :)

காவிரி பயணம் செய்யும் பாதை //
// இரு மாநிலங்களிடையேயான எல்லையாக 64 கி.மீ. தூரம் ஓடுகிறது.//

எல்லையாக 64 கி.மீ என்பது தவறும் குழப்படியும் ஆகும்.

வரைபடத்தில் பார்த்தால், எல்லைக் கோட்டை ஒட்டி நீளவாக்காக அல்ல, அதை வெட்டுவது போல் குறுக்காகத் தான் காவிரி ஓடுகிறது. எப்படியானாலும் நதி பாயும் இடம் எந்த மாநிலத்தில் உள்ளதோ, அந்த மாநிலத்திற்கு உரியதாகத் தான் அங்கே உள்ள நீளம் கணக்கிடப் பட வேண்டும். இப்படிப் பார்த்தால் வரும் கணக்கு கீழே:

(கேரளத்தில் பாயும் தூரம் தான் 64 கிமீ. இதைத் தான் நீங்கள் குறிப்பிடும் கட்டுரை தவறாகப் போட்டுள்ளது என்று நினைக்கிறேன்).

The river Cauvery runs for 381 km in Karnataka as against 357 km in Tamil Nadu and Karnataka contributes 425 tmc ft to Tamil Nadu’s 252 tmc ft to the volume of water collected in the valley. And yet, since Tamil Nadu has traditionally been cultivating in a substantially larger area than Karnataka,...

நன்றி: டெக்கான் ஹெரால்ட்
http://deccanherald.com/deccanherald/feb62007/index2351200726.asp

சிறில் அலெக்ஸ் said...

ரெம்ப நல்ல பதிவு ஜடாயு. ரெம்ப நன்றி. காவிரி பற்றி பல பதிவுகள் வரலியேன்னு குறைபட்டுக்கொண்டேன். இப்ப மகிழ்ச்சி.

:)

Reason said...

A tmc is a LOT of water - please read this realitycheck post - http://realitycheck.wordpress.com/2007/02/06/its-only-a-few-tmcft/

Not sure if your point about this award sharing water in proportion to the area is correct either - check this link - http://www.rediff.com/news/2007/feb/06guest.htm - Karnataka's share in the area is 41.23% and share in this award is 36.49%. Tamil Nadu's share in the area is 55.27% and share in this award is 56.62%.

ஜடாயு said...

சிறில், மிக்க நன்றி.

Reason, Thanks for the details.

The article argues that the ground water levels should have been taken into account, but I repose confidence in the tribunal based on the fact that there should have been sound scientific reasoning on why they did not inlcude it.

Again, if the Tanjore basin formers can produce 2 crops with just a little more water, its a lot of efficiency, right? .. compared to the Karnataka formers who produce only one crop a year with a similar share of water! So, maybe this is the reward for efficiency?

I think, in Karnataka Kaveri water is used much for non-agricultural uses (like to support a mammoth city like Bangalore) whereas in Tamil Nadu, the use is predominantly for agriculture. Maybe the tribunal took a decisive pro-farming stand while awarding the share???

சுந்தர் / Sundar said...

அருமை !

மதுசூதனன் said...

செத்த பாம்பை போட்டு இன்னமும் அடிக்கனுமா? கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்.


நதிநீர் பிரச்னையைப் பொறுத்தவரை நீதிமன்றத்தின் தீர்ப்பு நியாயமானது!

Dr. Ramanna Kumar Mahishi said...

Dear Mr. Jataayu,

Happy to know that you are learning Kannada, one of the beautiful languages in India.

I am sure that friendship will flourish when a person like me who has no necessity as such goes ahead and learn to read tamil, and a person like you who has every reason to learn this beautiful language come together.

About the Kaver issue: "Reason" has given a few points worth considering.

If you do not mind, the sentence you wrote requires some minor corrections.

For example, instead of "Doctor" it has been written as "Dacthar". But, please ignore them as you are better positioned and eager to learn this language than others.

I really appreciate your enthusiasm and respect for Kannadiga culture, as I do for the great Tamil culture, which I believe is the mother of all of us.

After all, we are Indians and humans.

Jai Hind !

ஜடாயு said...

சுந்தர், மது.. நன்றி.

Dear Sri Mahishi,

// I am sure that friendship will flourish when a person like me who has no necessity as such goes ahead and learn to read tamil, and a person like you who has every reason to learn this beautiful language come together. //

Absolutely. I am all for Tamilians (and north Indians, Bengalis, Malayalis, Maharashtrians..everyone) living in Karnataka for long term to learn Kannada. It is very important.

// I really appreciate your enthusiasm and respect for Kannadiga culture, as I do for the great Tamil culture, which I believe is the mother of all of us.//

Great sir, Thank you!
Vande Mataram.

Anonymous said...

A Very timely and well balanced post, Jadayu.

Ram said...

Good analysis. Thank you.

ஜோ / Joe said...

ஜடாயு,
மிக பயனுள்ள பதிவு .மிக்க நன்றி!

கன்னட நண்பருக்கும் உங்களுக்கும் உள்ள இணக்கமான உரையாடல் மகிழ்ச்சியைத் தருகிறது.

Reason said...

I am not quite sure if an argument can be made regarding two crops in TN as efficiency and efficiency being awarded. Karnataka's catchment areas get only one monsoon (south west). TN gets water from KA during this monsoon and also a north east monsoon that KA can not benefit from. I have some more details in my post in my blog. Also, yesterday in the NDTV program someone mentioned that another inter-state river dispute took into account ground water availability. The legal process will continue regarding these issues and the issue of distress sharing. The politicians have left no scope for any political process.

That apart, there is a problem with monopoly of regional parties in Tamil Nadu - this creates an asymmetry. The intransigent attitude of these regional parties in inter-state disputes can lead to national parties in the neighboring states too getting into this vicious cycle. After preventing Karnataka from taking up any projects in Cauvery (that has been lifted in the final award), various DMKs and PMK are now doing a similar thing with Palar river - Demanding a fair share of water using political and legal means is legitimate - but threatening marches into a neighboring state to prevent projects - or even the idea of preventing neighboring states from doing a project - are pretty vicious. Unfortunately, looking at some tamil news portals, it looks like this trend is growing - people drawing vicarious pleasure from the way their TN ministers in central government are 'dealing' with railway officials from kerala or a medical director from andhra, for example.

An unrelated topic - I read Sri Malar Mannan's writings in Thinnai after seeing references in your blog. He appears to be a veteran journalist. I could not get a biodata online - do you have details? It might be even good if there is a wikipedia entry for him.

ஜடாயு said...

// Karnataka's catchment areas get only one monsoon (south west). TN gets water from KA during this monsoon and also a north east monsoon that KA can not benefit from. I have some more details in my post in my blog. //

Reason, Thanks for comments again.

So essentially you are saying that the tribunal should take ALL sources of water into account from both sides and not just the Cauvery river water. I see sound reason in this argument. Do you mean to say that this was not argued convincingly even by the Karnataka counsel, the eminet Fali S Nariman, before the tribunal?

Or iss this because then the tribunal's scope of things become too enlarged - they have to look at monsoon, ground water and what not? It gets too complex, right? So thats why they limited it just to the river water, I tend to think.

// After preventing Karnataka from taking up any projects in Cauvery (that has been lifted in the final award), //

Yes, this was the right judgement by the tribunal.

// but threatening marches into a neighboring state to prevent projects - or even the idea of preventing neighboring states from doing a project - are pretty vicious. //

Can't agree more. This is vicious. and regional parties are the main reason, as you rightly identified. I too wish that national parties play a larger and constructive role in TN politics.

// Unfortunately, looking at some tamil news portals, it looks like this trend is growing - people drawing vicarious pleasure from the way their TN ministers in central government are 'dealing' with railway officials from kerala //

This is Chauvinism to the core. Should be condemned. If this continues, the central ministers will soon lose credibility and might be even forced to step down. But they would have done the damage.

This is bad. Should be condemened by all people.

// He appears to be a veteran journalist. I could not get a biodata online - do you have details? //

Thats a good idea! once I asked him for the bio and he smilingly brushed it aside.

// It might be even good if there is a wikipedia entry for him.//

Good idea. Will talk to his fans.

Raghs said...

good post jatayu..

as some1 said, the discussion between you Dr Ramanna Maharishi is really good and gives us a hope!