Friday, February 02, 2007

வீர ரசம் பொங்கும் ஜடாயு நடனம்: இந்தோனேசியாவிலிருந்து

ராமாயணம் பற்றி யூ-ட்யூபில் தேடிக் கொண்டிருக்கையில் கிடைத்தது இந்த இந்தோனேசியாவின் பாரம்பரிய நடனம் (பாலி / ஜாவா பகுதிகளைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று ஊகிக்கிறேன்).




எட்டே நிமிடங்களில் ராமகாதையின் ஜடாயு படலத்தை உணர்ச்சி மயமாகச் சித்தரித்திருக்கிறார்கள்.

ஆரம்பத்தில் ஜடாயு நுழைந்தவுடன் ஆடும் தாண்டவம் அருமை. தோள்களைக் குலுக்கிக் கொண்டு முகத்தில் கொடூரத்தை வெளிப்படுத்தும் ராவணன்.. சீதையாக வரும் பெண்ணின் முகத்தில் தான் என்ன அழகு, என்ன ஒரு grace! அதுவும் ஜடாயு சிறகொடிந்து விழுந்ததும் அவளது முக பாவங்கள்! யுத்தக் காட்சியில் வீர ரசம் கொப்பளிக்கிறது. ராம லட்சுமணர்கள் ஜடாயுவைக் கண்டதும் ஆற்றாமை பொங்க அவன் சொல்லும் செய்திகளில் ஆழ்ந்த அபிநயங்கள். கடைசியாக ராம-லட்சுமணர்கள் வீழ்ந்த கழுகரசனுக்கு அஞ்சலி செய்து வணங்கும் காட்சி பரவசமூட்டுகிறது.

"கைவழி நயனம் செல்ல, கண்வழி மனமும் செல்ல" என்ற பரத இலக்கணத்தைப் போலவே மிகவும் நுணுக்கமான ஹஸ்த முத்திரைகள் இந்த நடனத்திலும் உள்ளன. நடனம் முழுவதும் discrete பகுதிகளாக இல்லாமல் காட்சிகள் அலை அலையாக தொடர்ந்து வருகின்றன..

ராமாயண பாத்திரங்களின் ஒப்பனைகள் அற்புதம். ராம-லட்சுமணர்கள் அம்பறாத் துணியைச் சேர்த்துக் கட்டியிருக்கும் கம்பீரம்! ஜடாயுவின் சிறகு ஒப்பனையின் கலை நயம் வெகு நேர்த்தி.

இனிமையான பின்னணி இசை இந்திய செவ்வியல் இசையின் சாயலுடன் ஜலதரங்க ஒலியை நினைவூட்டுகிறது. பாடல்கள் மேற்கத்திய ஓபரா போன்று பாடப் பட்டாலும், வார்த்தைகள் மற்றும் பாடல் வரிகளில் சில சம்ஸ்கிருத ஒலிகள் தெளிவாகத் தெரிகின்றன. (ஜாவா, பாலித் தீவின் மொழிகளில் ஏராளமான சம்ஸ்கிருதச் சொற்கள் உள்ளன என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது).

ராமாயண காவியம் இன்றும் இஸ்லாமிய நாடு என்று தன்னை அழைத்துக் கொள்ளும் இந்தோனேசியாவில் அழியாமல் உயிர்த்துடிப்புடன் இருப்பது பெரிய விஷயம். இந்த நாடகங்களில் நடிப்பதையும், பார்ப்பதையும் அங்குள்ள கலை, கலாசாரத்தில் ஆர்வமுள்ள மக்கள் பெரும் பாக்கியமாகக் கருதுகிறார்கள். இந்த கலாசார பொக்கிஷம் வரும் காலங்களிலும் பாதுகாக்கப் படும் என்றே நம்புவோம்.

8 comments:

ஜடாயு said...

பின்னூட்ட பரிசோதனை.

கால்கரி சிவா said...

மிக அழகான நடனம். ஆடுபவர் தாங்களோ? )))

Muse (# 01429798200730556938) said...

இந்தோனேஷியா ஹிந்து மதத்தவர்களின் நாடாக இருந்து, இஸ்லாத்திற்கு மாறிவிட்ட அவச்செயல் நடந்த நாடு. என்ன இருந்தாலும் ஹிந்து மதத்தின் அழகியலை விலக்கிவிட முடியுமா? ஏனெனில் அழகியல் நாட்டம் என்பது மனித சுபாவம் அன்றோ?

ஆகவே இஸ்லாத்திற்கு மாறிய பின்னரும் இது போன்ற கலைகளை விடாமல் அவர்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள். இதை அந்த நாட்டிலுள்ள இஸ்லாமிய தீவிரவாதிகள் எதிர்த்து வருகிறார்கள். கடுமையாக.

ஒரு எதேச்சதிகாரத்தை இரண்டு வகையில் எதிர்க்கலாம். ஒன்று, அந்த எதேச்சதிகாரத்திற்குள் வீழ்ந்து அதனுள்ளே வளர்ந்து பின் அந்த எதேச்சதிகாரத்திற்கு எதிர்க்கத் தேவையான பலம் வந்தவுடன் எதிர்ப்பது.

இதற்கு உதாரணமாக ஷியா, சன்னி, சூஃபி, ப்ராட்டஸ்டண்ட் சண்டைகளையும் போர்களையும் சொல்லலாம். எதேச்சதிகாரம் மேன் மேலும் வன்முறையைத் தூண்டும் என்பதால் அமைதியை வாழ்வுமுறையாக கொண்டவர்களும்கூட எதேச்சதிகாரத்தின் கூறுகளுக்கிடையே இயங்க வேண்டியிருப்பதால் எதேச்சதிகார முறையாளர்களாகவே மாறிவிடுகின்றனர்.

இரண்டாவது: எதேச்சதிகாரத்திற்குள் வீழாமல் இருக்க நடத்தும் போராட்டம். இதற்கு உதாரணம் உலகம் முழுமையும் ஹிந்துத்துவவாதிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் நடத்திவரும் போராட்டம். முகம்மதிய இன வெறியை எதிர்த்து, பின் கிருத்துவ மத வெறியை எதிர்த்து, பின் கம்யூனலிஸ்ட்டுக்களின் கருத்துருவாக்க வெறிகளை எதிர்த்து போராட்டம் தொடர்ந்து போய்க்கொண்டுதானிருக்கிறது. பலமுள்ளவர்களாக இத்தனை எதேச்சதிகாரர்களும் இருப்பதால் சாதி வெறியும், அடிமை மனப்பான்மையும், குழு மனப்பான்மையும் ஏற்பட்டுவிட்டது. இந்த பாலில் கலந்த கள்ளை விலக்க ஹிந்துத்துவ அன்னம் நடத்திவரும் போராட்டம்தான் ஆகப் பெரியது. ஆகக் கொடியது.

ஜடாயு said...

கால்கரி சிவா said...
// மிக அழகான நடனம். ஆடுபவர் தாங்களோ? ))) //

சிவா, நடனத்தை நான் ரசிப்பதோடு சரி... மற்றபடி வார்த்தைகளில் தான் நம் ஆட்டம் எல்லாம்.

ஜடாயு said...

// ஏனெனில் அழகியல் நாட்டம் என்பது மனித சுபாவம் அன்றோ?

ஆகவே இஸ்லாத்திற்கு மாறிய பின்னரும் இது போன்ற கலைகளை விடாமல் அவர்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள் //

உண்மை, உண்மை. நல்லவேளை - ஆடல், பாடலைத் தடை செய்த ஔரங்கசீப் போன்ற தாலிபானிய அரக்கர்கள் இந்தோனேசியாவை ஆளவில்லை. அதனால் இந்தக் கலை தழைத்துக் கொண்டிருக்கிறது !

// இரண்டாவது: எதேச்சதிகாரத்திற்குள் வீழாமல் இருக்க நடத்தும் போராட்டம். இதற்கு உதாரணம் உலகம் முழுமையும் ஹிந்துத்துவவாதிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் நடத்திவரும் போராட்டம். //

ஆழமான, சிந்தனையைத் தூண்டும் வரிகள்.

Anonymous said...

I am very sad to tell you that the Wahabi Mohmedan fundamentalism is gaining ground in Indonesia also and V S Naipal has recorded this in his book that deals with his revisit to the Mohmedan countries.
The present Indonesian regime is helpless and has started nodding to the dictates of Wahabi fundamentalists who insisit on all unArab are unMohmedan and that they deserve to be given up. We may soon find all remains of Hindu heritage in Indonesia are slowly vanshing from that landscape,as the Bamiyan Buddhas did in Afgan terrains. The attacks in Bali from time to time are the handiwork of local Wahabi elements, who declare Jehad on all unMohmedan characteristics.
Malarmannan

Anonymous said...

super!!!!!!

Thanks for linking

ஜடாயு said...

மலர்மன்னன் அவர்களே,

நீங்கள் சொல்வது மிகவும் துக்கம் தரும் விஷயம். வி.எஸ்.நய்பால் புத்தகம் (journey among believers..) பற்றிக் கேட்டிருக்கிறேன், படித்ததில்லை.

பாமியான் புத்தர்கள் கல்லில் செய்த சிலைகள், அவற்றை பீரங்கி கொண்டு தகர்த்தது இஸ்லாமிய ஜிகாதி மதவெறி. ஆனால் இவை மக்களின் உள்ளத்திலும், உயிரிலும் ஊறிய கலைகள். இவற்றைக் காப்பாற்றும் கடமை இந்தியர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள கலாசார ஆர்வலர்களுக்கும் உள்ளது.